பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்

மகளே, தங்கையே, ஆணையும் படைக்கும் பெண்ணே உமக்குத்தான் அந்த வலி புரியும். அரசை விலக்கி வைத்துப் பார் வழி தெரியும். தண்டிக்க வழி தெரியும்.

பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அரசும் அதிகார வர்க்கமும் மானம் வெட்கம் பாராமல் அரணாக நின்று பாதுகாத்து வருவதை தமிழகமே காறி உமிழ்கிறது.

கிரிமினல் குற்றக்கும்பலின் ஆட்சியான அதிமுக அரசும் அதிகார வர்க்கமும் குற்றவாளிகளுக்குத் தண்டனையை ஒரு போதும் பெற்றுத்தராது. அரசை நம்பிப் பயணில்லை மக்கள் நாமே தண்டனை வழங்குவோம் என்ற அறைகூவல் விடுக்கும் வகையில் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர் மகஇக மையக் கலைக்குழுத் தோழர்கள்.

பாடல் வரிகள்:

விட்டுடுங்கண்ணா…
அண்ணா விட்டுடுங்கண்ணா…
நானே கழட்டிடுறேன் விட்டுடுங்கண்ணா…

ஒரு தங்கையின் கதறல்…
ஒரு மகளின் கதறல்…
பெண் இனத்தின் கதறல்…
ஏழு வருடம் இருநூறு அவலம்…
கேட்குது கேட்குது நீதி கேட்குது…
யார் கொடுப்பது தண்டனை?

ஆசிஃபாவின் குற்றவாளிக்கு காவி
கொடுத்தது வரவேற்பு…
அரியலூரில் நந்தினியை
சிதைத்தவனுக்குசாதிவெறி பாதுகாப்பு…
இந்தப் பொள்ளாச்சிக் கூட்டத்துக்கு
போர்வை அரசு.

யார் கொடுப்பது தண்டனை?
அரசா? போலீசா? கோர்ட்டா?
இல்ல ஆளுங்கட்சியா?

மகளே, தங்கையே,
ஆணையும் படைக்கும் பெண்ணே
உமக்குத்தான் அந்த வலி புரியும்.
அரசை விலக்கி வைத்துப் பார் வழி தெரியும்.
தண்டிக்க வழி தெரியும்.

முழுப் பாடலை கேட்க காணொளியைப் பாருங்கள்!

பகிருங்கள்!!

வினவு செய்திப் பிரிவு

படிக்க:
பொள்ளாச்சி கொடூரம் : தெருவில் நிறுத்தி தண்டனை கொடு ! தீவிரமடையும் மாணவர் போராட்டம் !!
பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

1 மறுமொழி

 1. பொள்ளாச்சி கொடூரம் என்பது நாடுமுழுவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது.சில மாதங்கள் முன்பு காஷ்மீரில் நடந்த குழந்தை ஆஷபாவை கொடூரமாக சிதைத்து ஆகட்டும் தலித் பெண்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் வன்கொடுமையாகட்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகளே பெண் வழக்கறிஞர்களிடம் நடந்துகொண்ட கீழ்த்தரமான பாலியல் சேட்டைகளாகட்டும் ராணுவ மற்றும் போலீஸ் நாய்கள் பெண்கள் மீது நடத்தும் பாலியல் வேட்டைகளாகட்டும்……
  பெண்கள் மீது குடும்ப உறுப்பினர்கள் தரும் பாலியல் தொல்லைகள்….
  இப்படி கோடிக்கணக்கான கொடூரங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது…. ஏன்?
  தூத்துக்குடி ஸ்டெர்லைட் கார்ப்பரேட் கம்பெனிக்காக பதினான்கு அப்பாவி மனித உயிர்களை எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு துள்ளத்துடிக்க நாயினும் கீழாக கருதி சுட்டுக்கொன்றது. இதில் மத்திய பா.ஜ.க அரசின் பங்கு மிகப்பெரியது…..
  இப்படி அரசின் அனைத்து துறைகளும் மக்களுக்கு எதிராக கொடூரமான முறையில் தொடர்ந்து நடக்கிறது….
  இதுதான் இந்த அரசு கட்டமைப்பு தோற்று மக்களின் பெறும் பகுயினர்க்கும் எதிராக உள்ளதை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது….
  இந்த தோற்றுப்போன அரசுகட்டமைப்பை அடித்து வீழ்த்தாமல் மக்களில் எவருக்கும் வாழ்வு இல்லை….
  மக்களுக்கே அதிகாரம்!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க