துவரை தனக்கு இருக்கும் நீரிழிவிற்கு சரியான மருந்து உட்கொண்டு சரியான உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவர், பக்கத்தில் ஒருவர் கூறினார் என மருந்துகளை எடுப்பதை நிறுத்திவிடுகிறார்.

நீரிழிவு முற்றுகிறது. காலில் புண் ஏற்பட்டு அது ஆறாமல் சீழ் வைக்கிறது. அடுத்த சில மாதங்களில் கால் அகற்றப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இறக்கிறார் அவர் இன்னும் ஒரு டைப் ஒன்று டயாபடிஸ் நோயாளி..

Insulinஇருபது வருடங்களாக சரியாக இன்சுலின் போட்டு சக்கரை அளவுகளை ஓரளவு சரியாக வைத்திருக்கிறார். ஆனால் பக்கத்துல ஒருத்தர் சொன்னார் என்று மருந்தில்லாமல் வைத்தியம் செய்யும் போலியிடம் சென்று இன்சுலின் போடுவதை பதினைந்து நாட்கள் நிறுத்துகிறார். நண்பர் வீட்டு விசேசத்தில் வைத்த பாயாசத்தை குடிக்கிறார். வீட்டுக்கு வந்தால் வயிறு சரியில்லை.

அதற்காக அவருக்கு மருந்தாக பவண்டோ தரப்படுகிறது. மீளாக் கோமா நிலைக்கு செல்கிறார். அத்தோடு அவர் கண் விழிக்கவே இல்லை.

இன்னும் ஒருவர் தனக்குண்டான ரத்த கொதிப்பு நோய்க்கு சரியாகவே ஆறு வருடங்களாக என்னிடம் மருந்துகள் எடுத்து பிரதிமாதம் காட்டி வந்தார்.
ஆனால் திடீரென அவர் என்னிடம் வருவது இரண்டு வருடங்களாக நின்றுவிட்டது.
சரி வேறு சிறந்த மருத்துவர் என்று தான் எண்ணும் மருத்தவரிடம் சென்றிருப்பார் என்றே நானும் நினைத்தேன். ஆனால் மீண்டும் இரண்டு வருடங்கள் கழிந்த பின் கால்கள் முகம் வீங்கி வந்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இது போன்று முகம் கால் வீங்கி மயக்கம் வந்து விட்டதாம். மதுரையில் பெரிய மருத்துவமனைக்கு சென்றால் கிட்னி செயலிழந்து விட்டது என்கிறார்களாம்.

blood-pressureநான் கேட்டேன் “ஏனய்யா நீங்கள் ரத்த கொதிப்புக்கு மருத்துவம் சரியாக பார்த்தீர்கள் தானே ?”

“இல்லை சார். ரத்த கொதிப்பு ஒரு நோயே இல்லை. அதற்கு மருத்துவம் தேவை இல்லனு பக்கத்துல ஒரு நண்பர் சொன்னாரு. அதோட உங்ககிட்ட வர்றத நிறுத்திட்டேன். வேற யாருகிட்டையும் போகல…”

அடுத்து இரண்டு வருடம் முன்பு இறந்த குழந்தையின் கதை.

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வயது குழந்தைக்கு வயிற்றுப்போக்கு வர அதை மருத்துவரிடம் காட்டாமல் வயிற்றம்மை என்று வீட்டிலேயே வைத்து சோறு தண்ணி கொடுக்காமல்.. குழந்தை தீபாவளி அன்று இறந்தது.

கேட்டால்.. வீட்டிற்கு பக்கத்தில் இருப்பவர்கள் இது அம்மை என்றும் இதற்கு வைத்தியம் பார்க்கக் கூடாது என்று கூறினார்களாம்.

படிக்க:
♦ நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் வாட்சப் வதந்திகள் !
♦ ஹீலர் பாஸ்கர் கைது – மற்ற மூடர்களை என்ன செய்யலாம் ?

இன்னும் பக்கத்து வீட்டு காரர்கள் கூறும் பல அறிவுரைகள் உங்கள் வாழ்க்கையை முடித்து விடக்கூடியதாகி விடும். ஆனால் எந்த கொலைக்கேசும் அந்த ஓசி அறிவுரை வழங்குவோர் மீது வருவதில்லை. ஆனால் இது போன்றவர்கள் தங்களால் இயன்றவரை மக்கள் தொகையை குறைத்து வருகிறார்கள்.

தங்களிடம் இருக்கும் முட்டாள்தனத்தை பிறரிடம் பரப்பிவிட்டு சமுதாயத்தை சிந்திக்கும் திராணியற்றதாக மாற்றுவதையே முழுநேர வேலையாக செய்து வருகிறார்கள்.

இவர்களிடம் இருந்து உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்களது மருத்துவம் சார்ந்த முடிவுகளை உங்கள் குடும்ப நல மருத்துவரிடம் / உங்கள் சிறப்பு நிபுணரிடம் கேட்டு முடிவு செய்வதே பாதுகாப்பானது. அறிவுக்கு உகந்தது.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.