கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம்!
கருத்தரங்கம்
நாள் : 03-08-2019, சனிக்கிழமை
நேரம் : முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
இடம் : டவுன் ஹால், பெங்களூரு
அறிமுக உரை:
வழக்கறிஞர் பாலன், பெங்களூரு.
சிறப்புரை :
தோழர் ஆனந்த் டெல்டும்டே,
புகழ்மிகு அறிஞர் மற்றும் செயல்பாட்டாளர்.
தோழர் மருதையன்,
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.
அனைவரையும் அழைக்கிறோம் !
அன்பார்ந்த நண்பர்களே,
ஹிந்து ராஷ்டிரம் அல்லது ஹிந்து தேசம் என்பதை இலக்காகக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளையான மோடியின் பா.ஜ.க பெனிட்டோ முசோலினி மற்றும் அடோல்ப் ஹிட்லர் ஆகியோரின் விருப்பார்வங்களின் மீது எப்பொழுதுமே ஒரு ஈர்ப்பைக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது பாரம்பரியமாகவே மேற்குக் கடற்கரைப் பிராமணர்களில் ஒரு பிரிவின் ரான சித்பவன் பிராமணர்கள் என்று அறியப்படுகிற வர்களால் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
1949 – லேயே ஆர்.எஸ்.எஸ் தனது அதிகாரப்பூர்வ செய்தி ஏடான ஆர்கனைசரில் மனு ஸ்மிருதியின் மீதான தனது பாசத்தையும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதான தனது வெறுப்பையும் பெரிய அளவில் வெளிப்படுத்தியதுடன் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கொள்கைகள் இந்தி யப் பண்பாட்டின் பகுதியாக இருக்கவில்லை என்றும் கூறியது. இந்திய நாட்டின் விடுதலையை எதிர் பார்த்துக் காத்திருந்த இந்திய மக்களுக்கு துரோகம் இழைக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது பிரிட்டிஷ் பேரரசை வெளிப்படையாகவும் மறை முகமாகவும் ஆதரித்தது. மேலும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கருணைக்காகக் கெஞ்சினார்கள்.
மகாத்மா காந்தி, வெறுப்பு மற்றும் சகிப்பின்மைக்கு எதிராகப் பேசினார். போராடினார். பாசிசத்தின் எழுச்சியை முன்னறிந்த டாக்டர் அம்பேத்கர், அதை எதிர்கொள்ளும் விதமாக அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார். ஆர்.எஸ்.எஸ் – ன் வகுப்பு வாதத்தை மெய்யாகவே கண்ணெதிரில் கண்ட பகத்சிங் அதற்கெதிராகக் கடுமையாகப் பேசியும் எழுதியும் வந்தார். ஒட்டுமொத்த விடுதலை இயக் கத்திலிருந்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விலக்கி வைப்பதாக உறுதி மொழி அளித்து பிரிட்டிஷ் மகாராணியிடம் தனது விடுதலைக்காகக் கெஞ்சிய சாவர்க்கரைப் போலல்லாது கருணையை எதிர்பாராமல் தூக்கு மேடைக்கு சென்றார்.
ஆர்.எஸ்.எஸ் இன்று காலம் கடந்து பழையதாகிப் போன இந்துத்துவத்தின் சாதிய நடைமுறைகளைப் போற்றுகிற வெள்ளைநிற மேலாதிக்கவாதிகளையும் இனவாதிகளையும் கொண்டிருக்கிறது. தங்களைத் தாங்களே சுயம் சேவக்குகள் என்று பெருமையுடன் அழைத்துக் கொள்ளும் ஆயுதப் பயிற்சி பெற்ற ஆறு லட்சம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. அதன் உறுப்பினர்களில் பிரதம மந்திரியும் அவரது அமைச்சரவையின் பெரும்பான்மையான அமைச்சர் களும் உள்ளடங்குவர்.
தற்காலத்தில் பரப்பப்பட்டுவரும் ஒடுக்குமுறைச் சைவ உயர்சாதி வெறி இந்துத்துவப் போக்கானது 1920-களில் அதன் கோட்பாட்டு வாதியான சாவர்க்கராலும், 1990-களிலிருந்து பா.ஜ.க மற்றும் அதன் கூட்டாளிகளாலும் பரப்பப்பட்டு வருவதன் உறவுத் தொடர்ச்சியே.
படிக்க:
♦ குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !
♦ என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !
குஜராத்தில் வணிகர்கள் மற்றும் தொழிலதிபர் களின் ஒரு பெரிய கூடுகையில் இந்தியாவின் பல்வேறு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரிகள் மோடியை அவர் களின் எதிர்காலப் பிரதமர் வேட்பாளராக வெளிப் படையாகவே அறிவித்துக் கொண்டார்கள். மோடி, அவரது முதலாவது ஆட்சிக் காலத்தில், பிரதம மந்திரியாகப் பதவி ஏற்க அதானியின் விமானத் திலேயே புது டெல்லிக்குப் பயணித்தார். சுருங்கக் கூறின், மோடியின் இந்தியா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நெருக்க மான ஒன்று. ஒரு சொல்லடையாய் மேற்கோளாய்ச் சொல்வதென்றால் – ‘பிரெஞ்சு ரஃபேல் ஒப்பந்தம் அம்பானிக்கு ; ஆஸ்திரேலிய தாமிரச் சுரங்க ஒப்பந்தம் அதானிக்கு.’
– இவைதாம் அவருடைய அரசாங்கத்தின் ஆகப் பெரும் சாதனைகள். இவைகளோடு கூட, எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும், அமைப்பு களையும் தனியார்மயம் ஆக்குவதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மோடியின் ஆட்சி ஒரு சிலரை உலகப் பெரும் பணக்காரர்களாக உருவாக்கியிருக்கிறது. எடுத்துக் காட்டாக, முகேஷ் அம்பானியின் சாம்ராஜ்யமானது 2014 ஆம் ஆண்டில் 23 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது 2018 இல் 55 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. கவுதம் அதானியின் சொத்துக்கள் 2014 ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது 2018 ஆம் ஆண்டில் 11.9 பில்லியன் அமெரிக்க டாலர்களானது. ராம்தேவின் பதஞ்சலி 2014 ஆம் ஆண்டில் வெறும் சிறு தொழில் முயற்சியாக இருந் தது 2018 ஆம் ஆண்டில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வளர்ந்தது.
ஆண்டு வரி வருவாயில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பெரும் பணக்காரர்களுக்கு சலுகை வழங்கப்பட்டு விடுகிறது. நாடு முழுவதும் குழாய் அமைத்து அனைவருக்கும் குடிநீர் வழங்க 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி போதுமானது. 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தைக் கொண்டு நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் நல்ல கழிப்பறை வசதி கிடைக்கச் செய்ய முடியும். நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பு வழங்க 0.32 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியே போதும். அனைவருக்கும் மூன்று வேளைகளுக்கும் உணவு வழங்க 0.85 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பணமும் அனைவருக்கும் கல்வி வழங்க 0.22 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் பணமும் போதுமானது.
படிக்க :
♦ ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு : மிரட்டும் ட்ரம்ப் ! பம்மிய மோடி !
♦ நமது அந்தரங்கம் அமெரிக்காவிற்குச் சொந்தமா ? சிறப்புக் கட்டுரை
உலகப் பல பரிமாண வறுமைக் குறியீட்டின்படி நாட்டின் மக்கள் தொகையில் 50 விழுக்காடு பழங் குடி மக்களும் 33 விழுக்காடு தலித்துகளும் 33 விழுக்காடு இஸ்லாமியரும் கடும் வறுமையில் வாழ்கிறார்கள். அதே வேளையில் 6 விழுக்காடு பார்ப்பனர்களும் பனியாக்களும் நாட்டின் அனைத்து செல்வ வளங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
உண்மையில் மோடியின் ஆண்டுகள் பாசிசத்தின் பண்பு ரீதியான வெளிப்பாடு : வெறி பிடித்த கும்பல், கார்ப்பரேட்டுகள் மற்றும் அரசதிகாரத்தின் ஒன்றிணைவு (பாசிசம் குறித்த முசோலினியின் விளக்கம்), ஆதரவற்ற சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தாக்குவது, மூட நம்பிக்கையை வளர்ப்பது, பல்கலைக் கழகங்களை அழிப் பது இப்படி எத்தனையோ. சங்க பரிவாரங்கள் வெறுப்பையும் சகிப்பின்மையையும் போதிப்பதன் மூலம் கொடிய விஷத்தைப் பரப்புகிறார்கள். கும்பல் படுகொலைகளையும் ஒரே ஆண்டில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 74 பேர் மத வெறியர்களால் கும்பல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்), போலி என்கவுண்டர் கொலைகளையும், சோடிக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு மற்றும் தேசத் துரோக வழக்குகளையும், இன்ன பிறவற்றையும் ஊக்குவிக்கிறார்கள்.
போராடும் மாணவர்களா? – தேச விரோதிகள். அரசுக் கொள்கைகளை விமர்சிப்பவர்களா? – நிச்சயம் துரோகிகள். மூடநம்பிக்கையைக் கேள்வி கேட்கும் பகுத்தறிவாளர்களா? – இழிவான பொறுக்கிகள் (அவர்களைச் சுட்டுக் கொன்றுவிடலாம்). எடுத்துக் காட்டு: தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம். எம். கல்புர்கி, கவுரி லங்கேஷ் மற்றும் பலர்.
திட்டக் குழு, தேர்தல் ஆணையம், ஜே.என்.யூ முதல் ஹைதராபாத் வரையான பல்கலைக்கழகங்கள், இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கல்வி நிறுவனம், தொழிலாளர் கல்வி நிறுவனங்கள், சமூக அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் மற்றும் பல அரசியல் சட்ட வழியில் அமைக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகள் ஒவ்வொன்றும் கலைக்கப்படுவதோடு படிப்படியாக அழிக்கப்படும் நிலையில் உள்ளன. அண்மைக்காலமாக, சில துதிபாடிகள் கத்துகிறார்கள்: நீங்கள் மோடியின் ஆதரவாளர் என்றால் தேசபக்தர் ; மோடிக்கு எதிரானவர் என்றால் தேசத் துரோகி நீங்கள் மோடிக்கு வாக்களிக்கவில்லை என்றால் நீங்கள் ஒரு பாகிஸ்தானியர்.
மேலே கூறப்பட்டவை 1934 முதல் 1945 வரை நடைபெற்ற நாஜி ஆட்சியானது ‘அரசின் எதிரி கள்’ என்று குறிக்கப்பட்டவர்களை எவ்வாறு குற்ற விசாரணைக்கு உட்படுத்தியது என்பதை நினைவு கூறும் படி செய்கிறது. தனது பகுதி யில் துண்டறிக்கை வழங்கிய ஒரு சுரங்கத் தொழிலாளி, முக்கிய நாஜிக்கள் குறித்து நகைச் சுவைத் துணுக்குகள் உருவாக்கிய ஒரு வங்கியாளர், ஹிட்லரைப் பற்றி அங்கதக் கவிதைகள் எழுதிய ஒரு ஒலித் தொழில் நுட்ப வல்லுநர், ஹிட்லரைப் பெயரால் விளித்து அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஒரு மனை விற்பனை முகவர் என இந்த எல்லாக் குற்றவாளிகளும் மிகப்பெரும் தேசத் துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.
இப்பிரசுரத்தை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் : fascism -bangaluru-leaflet
ஒரு புகழ்பெற்ற மனித உரிமைகள் வழக்குரைஞரும் அப்பணிப்புள்ள தொழிற்சங்க செயல்பாட்டாளரும் ஹார்வார்டு பல்கலைக் கழக உருவாக்கமுமான தோழர் சுதா பரத்வாஜ அவர்கள் சிறைவதைகள் அனுபவித்துக் கொண்டிருக்க, குண்டு வைத்து ஏதுமறியா அப்பாவிகளைக் கொன்ற பிரக்யா தாகூர் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபரோ நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். தோழர் சுதா பரத்வாஜப் போலவே நிறைய நாட்டுப் பற்றாளர்கள் சிறையில் தவிக்கிறார்கள். தற்போதுள்ள நிலைமையில் நாம் என்ன செய்யப் போகிறோம்? வாருங்கள்! நம்முடைய தாய் நிலத்தையும் அதன் மக்களையும் பாதுகாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ‘கார்ப்பரேட் மனுவாத பாசிசத்தை முறியடிப்போம்’ என்ற பதாகையை உயர்த்திப் பிடிப்போம். வாருங்கள்! கருத்தரங்கில் பங்கு பெறுங்கள் ! நாம் நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு அடிப்படை வாதத்தில் இருந்தும் வெறுப்பரசியலின் குற்றச் செயல் களில் இருந்தும் இந்தியாவை விடுவிக்க முன்னோக்கி அணிவகுத்து நடப்போம் !
ஒருங்கிணைப்பாளர்கள்,
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி,
பெங்களூரு.
தொடர்புக்கு 94480 48131
தோழர் N.ரமேஷ் 94484 85824,
தோழர் சி.ராஜன் 97412 40870,
தோழர் முஹம்மது ஷரீப் 95352 35865,
தோழர் A.செளரி 89046 41575,
தோழர் ருத்ரமூர்த்தி 90364 68373,
பெங்களூரு.