
அத்திவரதர் தரிசனத்தில் சராசரி மக்கள் சிலரை வி.வி.ஐ.பி வரிசையில் அனுமதித்ததாக ஒரு போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு கொதிக்கும் கலெக்டரின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்தது. கலெக்டரிடம் போலீஸ்காரர் மன்னிப்பு கேட்டு கெஞ்சும் காட்சியும் அதில் வருகிறது. மத உணர்வு நிரம்பிய ஒருவருக்கு கலெக்டரின் செயல் தவறில்லை என்று தோன்றலாம். ஆனால் அடிப்படை மனித அற உணர்வு நிரம்பிய ஒருவருக்கு நிச்சயம் ஒரு சிறு தவறுக்கு வழங்கப்படும் அதிகப்படியான தண்டனையாகத்தான் அது தோன்றும்.

அந்த போலீஸ்காரரின் செயலுக்கு அவரை கூனிக்குறுக செய்து அவமானப்படுத்தி உள்ளார், கலெக்டர். உச்சபட்சமாக அவருக்கு வழங்கப்படும் தண்டனையை அங்கேயே அறிவித்து மிரட்டுகிறார். கலெக்டரின் ஆவேசம் வீடியோ பதிவு செய்யப்பட்டு பின்னர் அது அதிகளவுக்கு பகிரப்படுவதால் கூடுதல் அவமானப்படுத்தலை அந்த போலீஸ்காரர் சந்தித்து வருகிறார்.
ஓரிரு வாரங்களுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் மாணவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கையை உடைத்தது போலீஸ். பின்னர் மாவு கட்டு போடப்பட்ட கரங்களுடன் மாணவர்கள் தோன்றும் வீடியோ காட்சி மாலையில் வெளியானது. சில சமூக வலைதள கணக்காளர்கள் குதூகலமாக அதை பரப்பினார்கள். சமூக வலைதளத்தில் அது பேசுபொருளாகவும் ஆனது. ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சமூக ஒழுங்கை மீறுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி விடுகையாக அது கருதப்பட்டது.

இந்த தண்டனைகளின் உள்ளியல்பு 18–ம் நூற்றாண்டு வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழைய தண்டனை முறையை ஒத்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரத்தை மக்கள் முன்னால் காட்சிப்படுத்துவதன் மூலம் மொத்த சமூகமும் குற்றமிழைக்க காத்திருப்பது போன்ற ஒரு எண்ணத்தை அது ஏற்படுத்துகிறது. தனக்கு விதிக்கப்பட்ட சமூக அந்தஸ்தை மீற நினைத்தால் என்ன நடக்கும் என்ற விளைவு பற்றிய எச்சரிக்கையை விடுக்கிறது. என்.டி.டி.வி வெளியிட்ட செய்தியின்படி தள்ளாட்டம் கொண்ட ஒரு முதிர்ந்த ஜோடியை தான் வி.வி.ஐ.பி வரிசையில் அந்த போலீஸ்காரர் அனுமதித்துள்ளார். நல்ல சமாரியன் செயல்தான் அது. அதற்கு சனாதன தர்மத்தில் எந்த மதிப்பும் இல்லை.

இயேசு சிலுவையில் ஏற்றப்பட்டது, சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதும் கூட மக்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட தண்டனை நிறைவேற்றம்தான். மத்தியகால தண்டனை முறையை நகைக்கும் ஒரு அங்கத சிறுகதையாக ஃபிராங்க் ஆர். ஸ்டாக்டனின் ‘பெண் அல்லது புலி?’–ஐ (The Lady or the Tiger) கொள்ளலாம். ஒரு அரைக்காட்டுமிராண்டி மன்னன் தனது ஆளுகைக்கு உட்பட்ட குடிமக்கள் செய்யும் தவறுகளை வித்தியாசமான முறையில் தீர்த்து வைப்பான். குற்றம் சாட்டப்பட்ட நபர் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். பின்னர் அந்த நபரின் வயது மற்றும் சமூக தகுதிக்கேற்ப ஒரு பெண் தேடப்படுவார். குற்றத்தின் தீவிரத்துக்கேற்ப புலியும் கொண்டு வரப்படும்.
தண்டனை நாளின் போது குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு மைதானத்துக்கு அழைத்து வரப்படுவார். மைதானத்தில் இரண்டு அறைகள் இருக்கும். சுற்றிலும் மக்கள் திரண்டிருப்பர். குற்றம் சாட்டப்பட்ட நபர் இரண்டு அறைகளில் ஒன்றை திறக்க வேண்டும். அவரின் அதிருஷ்டத்தை பொறுத்து பெண்ணோ? புலியோ? அறையிலிருந்து வெளிப்படுவார்/வெளிப்படும். ஒரு வேளை பெண் வெளியே வந்தால் அவளை மணந்து கொள்ள உரிமை உண்டு. அது குற்றமின்மையின் அறிவித்தலாக கொள்ளப்படும். ஒரு வேளை புலி வெளிப்பட்டால் அவருடைய ‘குற்றத்துக்கு’ உடனடி மரண தண்டனை கிடைத்ததாக கொள்ளப்படும். கூடியிருக்கும் மக்கள் இரண்டு விதமான தண்டனை அமலாக்கத்துக்கும் உரிய உணர்ச்சி வினையாற்றலை ஆற்றி விட்டு கலைந்து செல்வர்.

இது குழந்தைகளுக்கு சொல்லப்படும் விளையாட்டு கதையாக தோன்றினாலும் பதினெட்டாம் நூற்றாண்டு வரை மக்கள் முன்னிலையில்தான் கைதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கான பதிவுகள் இருக்கின்றன. 1757–ம் ஆண்டு ஃபிரான்சில் ராபர்ட் டேமியன்ஸ் என்ற முன்னாள் ராணுவ வீரர் 15–ம் லூயி மன்னனை நோக்கி ஓடி சென்று உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி சிறு காயத்தை ஏற்படுத்தினார். உடனடியாக கைது செய்யப்பட்ட டேமியன்ஸ் மீது இரண்டு விதமான கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ராஜ கொலை (regicide) மற்றும் தந்தை கொலை — parricide (மன்னன் குடிமக்களின் தந்தை என்பதால்) — குற்றச்சாட்டுகள் அவை.
தண்டனை நாளின் போது டேமியன்ஸின் கரங்களில் எரியும் மெழுகை ஏந்த செய்து பாரீஸ் தேவாலயத்திலிருந்து மரண கம்பம் வரை கட்டை வண்டியில் அழைத்து செல்லப்பட்டார். அங்கு மரண மேடையில் வைத்து அவரது கை, தொடை மற்றும் நெஞ்சு பகுதிகளிலிருந்து கூர்மையான இடுக்கி ஒன்றின் மூலம் சதை உருவப்பட்டது. துளையிடப்பட்ட உடல் பாகங்களில் சூடான எண்ணெய், கந்தகம் மற்றும் சுடுபசை ஆகியவை ஊற்றப்பட்டன. அதன் பின்னர் நான்கு குதிரைகள் அழைத்து வரப்பட்டன. மரண கம்பத்தில் கட்டிவைக்கப்பட்ட அவரது உடலிலிருந்து தசைநார்களை உருவும் பொருட்டு நான்கு குதிரைகளையும் அவர் உடலோடு பிணைத்து பின்னர் இயக்கப்பட்டன. அப்போது அவரது உடல் பாகங்கள் துண்டாயின. இவை அனைத்தும் மக்கள் முன்னிலையில் அரங்கேறின என்பது முக்கியமானது. குற்றம் புரியும் எண்ணத்திலிருந்து விடுபடும் ஆன்ம துப்புரவாக்கலாக அது அப்போது கருதப்பட்டது.

‘பெண் அல்லது புலி?’ சிறுகதையிலும் தண்டனை அமலாக்கத்துக்கு பிறகு கூடியிருக்கும் மக்கள் தங்கள் மனஅழுக்குகளை தூய்மைப்படுத்தி விட்டுச் செல்வர். மாணவர்களின் கைகளை உடைக்கும் போலீஸின் நடவடிக்கையை ஆதரிக்கும் நபர்கள் ‘தப்பு செய்யணும் என்ற எண்ணம் இனிமேல் யாருக்கும் வராதென்று’ கூறி நியாயப்படுத்துகின்றனர்.
ஐரோப்பாவில் மத்தியகால காட்டுமிராண்டி தண்டனை முறைகள் பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு படிப்படியாக கைவிடப்பட்டன. தண்டனை வழங்கல் நான்கு முக்கிய அளவுகளில் மாற்றம் அடைந்தது. 1) மக்கள் முன்னிலையில் தண்டனை வழங்குவது ஒழிக்கப்பட்டது. அது தனியாக, மக்களின் உணர்ச்சியை கிளறாத நடவடிக்கையாக பார்த்துக் கொள்ளப்பட்டது. 2) குற்றவாளியின் சமூகப் பொருளாதார மற்றும் வளர்ப்பு சூழல் தண்டனை வழங்கலின் போது கவனத்தில் கொள்ளப்பட்டது. 3) தண்டனையை நிறைவேற்றுவது நீதிபதியின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அதற்கென்று பணியமர்த்தபட்ட ஊழியர்கள், மருத்துவர்கள், உளவியலாளர்கள் என்று பல துறையினருடன் பகிரப்பட்டது. 4) தண்டனையின் நோக்கம் பழி வாங்குவது என்றில்லாமல் சீர்திருத்தம் மற்றும் புனர்வாழ்வு என்பதாக மாற்றப்பட்டது.

தற்போதைய நவீன கால தண்டனை முறையில் போலீஸ் வதை என்பது மறைமுகமாக தொடர்ந்தபடியேதான் உள்ளது. அவற்றின் கொடூரம் பற்றிய புரிதல் அனைவரின் நினைவுகளிலும் இருக்கிறது. என்றாலும் மக்கள் இந்த தண்டனை வழங்கலின் ஒரு பகுதியாக தங்களை இணைத்து சிந்திப்பது ஒரு புதிய போக்காக சமீபகாலத்தில் இருந்து வருகிறது. பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை பஜ்ரங் தள் மற்றும் ஏபிவிபி அமைப்பினர் கொண்டாடித் தீர்த்தனர். சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்களை மட்டுமே முன்வைத்து அஃப்சல் குருவுக்கு எதிராக தீர்ப்பெழுதிய நீதிபதி சொன்னது, ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சி இந்த வழக்கில் மரண தண்டனை மூலம்தான் திருப்தியுறும்’ என்றார்.
இயேசுவும் கூட சமூகக் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்தத்தான் கொல்லப்பட்டார் என்று கூற முடியும். ரோம ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து இயேசுவை விடுவிக்கவே விரும்பினான். இயேசுவிடம் எந்த குற்றத்தையும் அவன் காணவில்லை. அவனது மனைவியும் கூட இயேசு விடுவிக்கப்படுவதையே விரும்பினாள். ஆனால் அதற்கு மாறாக இருந்தது மதவாதிகளின் கூச்சல். மதவாதிகள் மற்றும் அவர்களால் தூண்டப்பட்ட மக்கள் முன்பு பிலாத்து ஒரு தெரிவுரிமையை வைத்தான். பஸ்கா பண்டிகைக்கு ஒருவரை விடுவிக்க வேண்டும். அதற்கு யாரை விடுவிக்கலாம் — இயேசுவையா? அல்லது குற்றங்கள் மிகுபுரிந்த பாரபாசையா? என்று முடிவு செய்யும்படி கோரினான். பாரபாசை விடுவிக்கவே கூடியிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இயேசுவை சிலுவையில் அறைய விரும்பும் மதவாதிகளின் கோரிக்கைக்கு பிலாத்து வேறு வழியில்லாமல் இணங்கினான்.
படிக்க:
♦ எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !
♦ காஷ்மீர் : இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள் !
மதப் பெரும்பான்மைவாதத்தின் பாதிப்புக்கு இந்திய சமூகத்தின் கூட்டு மனசாட்சி ஆளாகி வருவது சிறுபான்மையின மக்கள், தலித் மக்கள் மற்றும் சமூகப் படிநிலையில் கீழே இருக்கும் மக்கள் பிரிவினரின் நல்வாழ்வுக்கு மிகுந்த கேட்டை விளைவிக்கிறது. அத்தி வரதர் தரிசனத்தில் வி.வி.ஐ.பி. வரிசை மீதான அதீத அக்கறை, மத்தியில் இருக்கும் மதவாத ஆட்சியாலும், மாநிலத்தில் இருக்கும் பொம்மை ஆட்சியாலும் கலெக்டருக்கு வருகிறது. ஆட்சியாளர்கள் எவரேனும் வருகை புரியும்போது அவர்களுக்கு சிறிது அசவுகரியமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்விலிருந்து அது ஆவேசமாக பீறிட்டு வெளி வந்துள்ளது.

அந்த போலீஸ்காரர் ஓர் இஸ்லாமியராக இருந்தால் அவருடைய ‘கடமை மீறல்’ மாபெரும் சதியாக மாற்றப்பட்டிருக்கும். விசாரணை செய்யப்பட்டு அவர் கைதும் செய்யப்பட்டிருக்கலாம். உ.பி.யின் கோராக்பூர் மருத்துவமனையில் 2017–ம் ஆண்டு ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பல குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் குழந்தைகளின் உயிர்களை அப்போது காப்பாற்ற போராடிய குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கானுக்கு ஏற்பட்ட நிலைமை எண்ணிப் பார்க்கத்தக்கது.
மாணவர்களின் கையை உடைத்து மாவுக்கட்டு போட்டதை ஆதரிக்கும் உளவியல் மத்தியகால நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டிலிருந்து முழுமையாக நாம் விடுதலையாகவில்லை என்பதை காட்டுகிறது. ‘பெண் அல்லது புலி?’ சிறுகதையில் மன்னனை அரைக்காட்டுமிராண்டி என்று கதாசிரியர் குறிப்பிட்ட இடத்தில் அது சற்று நேர்மறை தன்மையில்தான் இருந்தது. தூரத்து லத்தீன் மற்றும் கிரேக்க தாக்கத்தால் கவித்துவ நீதியின் மேல் மன்னனுக்கு ஏற்பட்ட தாகத்தின் காரணமாக கொடூரமான தண்டனை முறையிலும் வெளிப்பட்ட சில நற்பண்புகளின் அடிப்படையில் அவ்வாறு அழைக்க முற்பட்டார்.
கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறாமல் இருக்க வயதான தம்பதியரை காலியாக இருந்த வி.வி.ஐ.பி வரிசையில் அழைத்து சென்ற போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்வதாக மிரட்டும் கலெக்டரிடம் என்ன அற உணர்வு அல்லது நேர்மறை அம்சம் உள்ளது?
ராஜ்
வரிச்சூர் செல்வம் என்கிற பிரபல ரவுடி இரண்டு கிலாே எடையுள்ள நகைகளை அணிந்நுக் காெண்டு விவிஐபி வரிசையில் சென்று அத்திக்கட்டை வரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தவர்களை கலெக்டர் இது பாேல கண்டித்தாரா …?
அவன் நகையெல்லாம் அனிந்து சென்றதால் ஏதாவது தேறும் என்று விட்டிருப்பார்கள்.
Foolish article…Collector has the power..
Ask police as an ordinary man that undue favour done to someone..
What will happen?
You will be roughly handled by the police..
This is the real situation..
Atleast collector has the power to correct them..
Don’t write such articles without knowing the real situation prevailing in TN
FRANCIS
Pa Su Manovannan Advocate
ஆட்சியர் ஆய்வாளரை திட்டி விட்டார் மொத்த போலீசும் ஆட்சியருக்கு எதிராக கூக்குரல் இட்டு ஆட்சியரை வசைபாடிவிட்டனர். இந்த வீடியோவிற்கு யாரை வசைபாடுவது???
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக அத்திவரதரை தரிசிக்க பல்வேறு மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தையும், அத்திவரதரின் பாதுகாப்பு பணியையும் ஆட்சியர் பொன்னையா அவர்கள் திறம்பட நடத்தி வருகிறார். இந்நிலையில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் சில பல பிரச்சனைகள் அனைத்தையும் சரிகட்டி நிர்வாகத்தை கையாள்வதில் சிரித்த முகத்தோடு குழந்தை முகத்தோடு கனிவோடு அணுகுபவர் ஆட்சியர் என்பது அனைவரும் அறிந்ததே!
ஆனால் கடந்த வாரம் ஒரு காவல் ஆய்வாளர் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயிலில் பணியில் இருந்தார் அப்போது அங்கு வந்த கலெக்டருடம் உரிய விஐபி பாஸ் இல்லாமல் நூற்று கணக்கானோரை போலீஸ் அதிகாரிகள் தரிசனம் செய்ய அழைத்து செல்வதாகவும் உரிய விஐபி பாஸ் வைத்திருந்தும் பல மணி நேரம் நாங்கள். காத்திருப்பதாகவும் இது குறித்து கேட்டால் முதலமைச்சர் என்ன பிரைம் மினிஸ்டர்கிட்ட கூட சொல்லு ஒரு ம…..ரும் புடுங்க முடியாது என போலீசார் அசிங்கமாக பேசுவதாக கூறினர்
கலெக்டர் ஆய்வு செய்வதை பார்த்த பாஸ் இல்லாமல் வந்தவர்கள் அருகில் உள்ள வீடுகளை நோக்கி சென்றனர்
கலெக்டர் அங்கிருந்த ஆய்வாளருடம் பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுப்பி குழப்பம் ஏற்படுத்தாதீர்கள் என எச்சரிக்கை செய்து விட்டு வசந்த மண்டபம் பகுதிக்கு ஆய்வு சென்றார்
கலெக்டர் திரும்பி வரும்போது யாரெல்லாம் பாஸ் இல்லாமல் உள்ளார்கள் என்பதை எச்சரிக்கை செய்தாரோ
அவர்களை
ஆய்வாளர் கூட்டம் கூட்டமாக முக்கிய பிரமுகர்கள் வாயிலில் பாஸ் இல்லாமல் அனுப்பிக் கொண்டிருந்தார். இதனை கண்ட ஆட்சியர் ஏற்கனவே நடந்த சம்பவம் மேலும் நேரிடையாக கண்ட காட்சியால் கொதித்தெழுந்த ஆட்சியர் ஆய்வாளர் மீது கோபமுற்று ஒரு சில கடுமையான வார்த்தைகளால் சாடினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்த காவலர்களும் ஆட்சியருக்கு எதிராக பல்வேறு கதைகளை கட்டவிழ்த்துவிட்டனர்.
ஆட்சியர் அவர்கள் நடந்த சம்பவம் தவிர்க்கமுடியாதது அதற்காக வருத்தமும் தெரிவித்து விட்டார்.
ஆனால் போலீசார் தங்களது அராஜகத்தை நிறுத்தியது போல் தெரியவில்லை இன்றும் பணத்தை பெற்றுக் கொண்டு சிலரை கூட்டம் கூட்டமாக அத்திவரதரை சந்திக்க அழைத்து செல்கின்றனர். வீடியோ ஆதாரத்தை இணைத்துள்ளோம். இதற்கு என்ன பதிலளிக்கபோகிறது காவல்துறை?
காவல்.துறையினர் மாவட்ட வாரியாக 5 நாட்கள் வீதம் ஷிப்டு முறையில் பணி செய்கின்றனர்
நகராட்சி நிர்வாகம் மின் வாரியம் வருவாய்துறை பொதுபணி துறை துப்புறவு தொழிலாளர்கள் என பல்வேறு துறையினர் 40 நாட்களுக்கும் மேலாக எந்த ஷிப்டு வேலையும் செய்யாமல் தொடர் வேலை செய்து வருகின்றனர்
மனசாட்சி உள்ள போலீசாருக்கு தெரியும் போலீஸ் உயர் அதிகாரிகள் அனுப்பினார்கள் என்ற ஒரே பொய்யை வைத்து பல லட்சம் பேரை பணம் வாங்கி கொண்டு பணியில் இருந்த டிஎஸ்பிக்கள் இன்ஸ்பெக்டர் கள் விஐபி தரிசனத்திற்கு முறைகேடாக அழைத்து வந்து எத்தனை லட்சம் பணம் சம்பாதித்தார்கள் என்பது
ஆட்சியர் எச்சரிக்கை செய்த பின்பும் அவர்கள் நிறுத்தாமல் முறைகேடுகளில் ஈடுபடுவது பெரும் வேதனை
ஆட்சியர் செய்ததை நியாயபடுத்த இந்த பதிவு இல்லை கடமை தவறிய ஆய்வாளரை ஆட்சியர் கண்டித்தார். அவர் நிர்வாகத்தில் தவறிழைத்ததால் கோபத்தில் உழிழ்ந்த வார்த்தைகள் ஆக போலீசார் சரியாக நியாயமாக நடந்து கொள்ளாமல் இருந்தால் ஆட்சியரிடம் திட்டு வாங்க வேண்டியதில்லை.
ஆட்சியர் சவாலான பணியை திறம்பட செய்ததற்கு பாராட்டுக்கள் நிச்சயம் உண்டு. 👏🏻👏🏻👏🏻💐💐💐
சில தினங்களுக்கு முன் குடந்தை பேருந்து நிலையத்தில் வடலூர் செல்லக் காத்திருந்தேன். போக்குவரத்துத் துறையினர் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், அன்று அக்கப்போர்வரத தரிசன பக்தர்கள் யாரும் இல்லை.
நான், நடத்துனரிடம், தைப்பூசம் அன்று ஏன் இந்த ஏற்பாடு களைச் செய்ய முடியவில்லை என்று கேட்டேன். அவர் பதில் சொல்ல வில்லை. சில மாதங்கள் முன் பொங்கல் விடுமுறையும் ஜோதி தரிசனமும் ஒன்றாகி கூட்ட நெரிசல் அதிகமாகிய போது இதே போக்கு வரத்து அதிகாரிகள் திமிராகப் பேசினர். ஆட்சியிலிருப்போர், எண்னத்தையே அரசு அதிகாரிகள் பிரதிபலிக்கின்றனர்.
காசு பணம் துட்டு அதிகாரம் இவைதான் இன்றைய நடைமுறை சட்டம்