“என் குழந்தையை நல்ல வாசகராக்க நான் எப்படி உதவுவது?” வாசிப்பு குறித்த ஆய்வை செய்யும் என்னிடம் சில பெற்றோர்கள் அவ்வப்போது கேட்கும் கேள்வி இது.

“உங்கள் குழந்தையுடன் சேர்ந்து படியுங்கள். புத்தகங்களை அவர்களுடன் சேர்ந்து ரசிப்பதானாலும் சரி, இணைந்து செய்யுங்கள். வாசிப்பு பழக்கத்தை கற்றுக்கொடுப்பது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆசிரியர்களிடம் கற்றுத்தருவதை விட்டுவிடுங்கள்” இதே ஆலோசனையைத்தான் அவர்களிடம் நான் கூறுவேன்.

அதிக செயல்திறன் கொண்ட ஆசிரியர்களின் கல்வியறிவு பயிற்சிகள் தொடர்பான எனது ஆய்வு, அதுபோலவே ஒரு பெற்றோராக எனது அனுபவங்களின் அடிப்படையில் இந்த பதிலை கூறுகிறேன்.

Reading Childrenசொற்களை படிப்பது, எழுதுவது, பேசுவது மற்றும் விளையாடுவதற்கான உறுதியான அடித்தளம் சிறு வயதிலேயே புத்தகங்கள் மீதான அன்பை வளர்க்கிறது. பின்நாட்களில் அந்தக் குழந்தையை வெற்றிகரமான வாசகராகவும் மாற்றுவதை உறுதியான சான்றுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஒரு குழந்தை படிக்கக் கற்றுக்கொள்ளாதபோது என்ன நேரும் அல்லது படிக்கத் திணறும்போது என்ன நடக்கும்? இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது. 8-ம் வகுப்பு மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே படிக்கின்றனர் அல்லது தர நிலைக்கு மேலே உள்ளனர்.

ஆசிரியர்களின் பங்கு :

நியூயார்க், ஒஹியோ, மிசோரி, மேரிலேண்ட் பகுதிகளில் உள்ள அதிக செயல்திறன் கொண்ட நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் வாசிக்க சிரமப்படும் மாணவர்களின் வாசிக்கும் திறனை அதிகரிக்க ஆசிரியர்கள் வெற்றிகரமாக உதவியுள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்திருக்கிறேன். அவர்களில் பலர் குழந்தைகளை பல முறை பத்திகளை படிக்க வைக்கின்றனர்.

இரண்டாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதிவரை படிக்கத் திணறுபவர்களை மேற்கண்ட செயல்முறை மேம்படுத்துவதாக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளைப் பொறுத்தவரை இது புதிய பாடல் வரிகளை கற்றுக்கொண்டு, பாடலைப் பார்த்து பாடுவதைப் போல. மீண்டும் மீண்டும் ஒரு பத்தியை படிக்கும்போது அவர்கள் அதை கவனிக்கிறார்கள், எழுத்துக்களை கண்களால் தொடரும்போது, புத்தகத்தில் உள்ள தொடர்களை தொடும்போது அவர்கள் அனுபவம் பெற்ற வாசகர்களாக மாறிவிடுகிறார்கள்.

கேட்பது, பார்ப்பது, தொடுவது போன்ற உணர்வுகளை செயல்படுத்துவதன் மூலம் அவர்களால் ஒரேமாதிரியான வார்த்தைகளை எளிதாகவும் வேகமாகவும் சரளமாகவும் வாசிப்பதை அதிகப்படுத்துகிறது. ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள், 15 நிமிடங்கள் தொடரும்போது, இந்த உத்தி சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தர அளவில் மில்லியன் கணக்கிலான குழந்தைகள் படிக்கமுடியாத நிலையில் இருக்கும்போது, இது முக்கியத்துவம் பெறுகிறது.

படிக்க:
நூல் அறிமுகம் : வைக்கம் போராட்ட வரலாறு
♦ குழந்தைகள் வாழ்க ! ஆரம்பப் பள்ளி கல்வி குறித்த புதிய தொடர்

ஆய்வின் பின்னணி :

உளவியல் நிபுணர் ராபர்ட் ஜி ஹெக்கிள்மேன் 1960-களில் மீண்டும் மீண்டும் படிக்கும் உத்தியை கண்டறிந்தார். இந்த உத்தியைப் பயன்படுத்தி பதின்பருவத்தினரின் வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த முனைந்தபோது, அவர்களின் தர நிலை மூன்றாவது நிலைக்கு சென்றதை அவர் ஆய்வின் முடிவில் கண்டார். வாசிப்பதில் பிரச்சினையுள்ள நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 24 மாணவர்களிடம் இந்த உத்தியை மீண்டும் மீண்டும் செயல்படுத்தினார் ஹெக்கிள்மேன்.

Reading-Children-Slider‘நரம்பியல் பதிவு உத்தி (Neurological Impress Method)’ என இதை பெயரிட்டு அழைத்த இவர் அளித்த 7.5 மணி நேர பயிற்சிக்குப் பிறகு மாணவர்கள் இரண்டு தர நிலையில் உயர்ந்திருந்தனர்.

2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் இதே முடிவை ஆய்வாளர்கள் கண்டனர். அதை அவர்கள் ‘இருமுறை வாசிப்பு உத்தி (Read Two Impress)’ என அழைத்தனர்.

இந்த புதிய பெயர், இந்த உத்தியில் செய்யப்பட்ட மாற்றத்தைக் கூறியது. தனக்குச் சொல்லித்தருபவர் படித்த பின், குழந்தைகள் ஒவ்வொரு பக்கத்தையும் சத்தமாகப் படிக்க வேண்டும். கூடுதலாக, இந்த உத்தி குழந்தைகள் சிறந்த வாசிப்பாளர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் வாசிப்பதில் கூடுதல் நேரத்தை செலவிடுகிறவர்களாகவும் மாற்றுகிறது.

குடும்பங்களை மேம்படுத்துதல் :

‘இருமுறை வாசிப்பு உத்தி’யில் இதுவரை குழந்தைகளின் குடும்பங்களை ஈடுபடுத்தியது இல்லை. அதோடு, இந்த முறையில் எந்த மாதிரியான நூல்களைப் பயன்படுத்தினால் மாணவர்களின் கலாச்சாரம் மற்றும் மொழியறிவில் அது பிரதிபலிக்கும் என்பது குறித்தும் ஆராயப்படவில்லை.

குடும்பங்களில் இந்த உத்தியை பயன்படுத்துவது எவ்வகையில் குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் என்கிற ஆய்வை நானும் ஜோஷ்வா மைக்கேல் மற்றும் கிரிஸ்டினா அக்கர்மேன் ஆகியோரும் இணைந்து செய்தோம். நார்த் ஈஸ்டர்ன் நகரத்தில் உள்ள பள்ளியில் பத்து வாரங்களுக்கு இந்த ஆய்வை மேற்கொண்டோம்.

இதிலும் சில பிரச்சினைகளை எதிர்கொண்டோம். உதாரணத்துக்கு, ஒரு குழந்தையின் பாட்டி, தனக்கே வாசிக்கும் பழக்கம் இல்லை என்னும்போது, நான் எப்படி என்னுடைய பேரக்குழந்தைக்கு உதவு முடியும் எனக் கேட்டார்.

அவருடன் சேர்த்து இருபத்தைந்து இரண்டாம் தர நிலையைச் சேர்ந்த குழந்தைகளின் உறவினர்கள் ஐந்து பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டனர்.

பயிற்சியில் கலந்துகொண்ட பலர் பலவித யோசனைகளையும் தெரிவித்தனர். இதையே பள்ளிகள் தோறும் முழு பள்ளிக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் பயிற்சியாக அளிக்கக்கூடாது என்ற முடிவையும் நாங்கள் எட்ட உதவியது இது.

இந்த ஆய்வின் முடிவில் குடும்பங்கள் சேர்ந்து புத்தகங்களை வாசிக்கும்போது, அது அவர்களுடைய கலாச்சாரத்திலும் மொழியிலும் பிரதிபலித்தது. அவர்கள் மேலும் ஒன்றாக இணைந்து வாசிப்பதில் மகிழ்ந்தனர். குழந்தைகள் சிறந்த வாசிப்பாளர்களாக மாறியதில் பெற்றோர் பெருமை கொண்டனர் என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

படிக்க:
மாணவர் கிருபாமோகன் நீக்கம் – அண்ணாமலை பல்கலை மாணவர்கள் போராட்டம் !
♦ சிதைந்த கால்களுடனும் போர்முனைக்குச் செல்ல விருப்பம் !

இருமுறை வாசிப்பு உத்தி முறை எப்படி செயல்படுத்தப்பட்டது ?

  • குழந்தைகளுக்கு சவாலாக இருக்கக்கூடிய வாசிப்பு நூல்களை தேர்ந்தெடுங்கள்.
  • குழந்தைகளின் கலாச்சாரம், மொழி மற்றும் ஆர்வங்களை பிரதிபலிக்கும் பத்திகளை வாசியுங்கள்.
  • உணர்ச்சிகரமாகப் படியுங்கள், அதை அவர்கள் கேட்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
  • பத்திகளை படிக்கும்போது, அவர்களின் விரலின் மீது உங்கள் விரலை வைத்து நகர்த்திக்கொண்டே படிக்க வையுங்கள்.
  • குழந்தைகளோடு சேர்ந்து நீங்கள் படியுங்கள். அதன் பின், அவர்களை அனைத்தையும் சத்தமாக படிக்க வையுங்கள்.
  • இதே உத்தியைப் பயன்படுத்தி மீண்டும் மீண்டும் பத்திகளை அல்லது கதைகளை படிக்க வையுங்கள்.
  • ஒவ்வொரு நாளும் ஒருமுறை வாரத்தின் அனைத்து நாட்களிலும் 10-15 நிமிடங்களுக்கு இதைச் செய்யுங்கள்.

கட்டுரையாளர் : Kindel Turner Nash மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியராக உள்ளார்.


தமிழாக்கம் :
அனிதா
நன்றி
: ஸ்க்ரால்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க