து ஏதோ புதிதாக தயாரிக்கப்பட்ட கல்விக்கொள்கை அல்ல. ஏற்கனவே 2000-ம் ஆண்டு வாஜ்ய்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா – அம்பானி தலைமையில் ஒரு கல்வி குழு அமைத்தது. அந்த குழு கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படைகள் இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மையமாக இருக்கின்றது. அதன்பின் 2014-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது டி.எஸ். சுப்ரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அது 2016-ல் வரைவு அறிக்கையை வெளியிட்டது. நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் இப்போது கஸ்தூரிரங்கன் குழு தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்து வெளியிட் டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள பல பரிந்துரைகள் கல்வியை சர்வதேச சந்தைக்கு திறந்துவிட வேண்டும் என்ற காட்ஸ் ஒப்பந்த அடிப்படையில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன.

… பல்தேசிய இனங்களின் மொழி இனம் கலாச்சாரம் அனைத்தையும் ஒழித்து கட்டிவிட்டு கல்வியை இந்திய பண்பாடு என்ற பெயரில் சமஸ்கிருதம் பண்பாட்டை புகுத்தி, இந்து, இந்தி, இந்தியா என்ற தனது நீண்ட கால கனவான இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாக கல்வியை பயன்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல். இன்னொரு பக்கம் பல இலட்சம் கோடி வணிகம் புரளும் இந்திய கல்விச் சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாட திறந்து விடுவது. பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கின்ற இந்த தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க வேண்டும். அது எந்த வடிவில் வந்தாலும் சரி முறியடிக்க வேண்டும்.

கார்ப்பரேட்டுகள், காவிகளின் நலனை ஒன்றிணைத்து ஒட்டு ரக வீரியத்தன்மையுடன் வரும் இந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து எமது பு.மா.இ.மு. – வும், பல்வேறு அமைப்புகள், இயக்கங்களும் போராட்டங்களையும், விவாதக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை குறித்து விமர்சனப்பூர்வமான கட்டுரைகளின் தொகுப்பாக இந்த சிறு வெளியீட்டைக் கொண்டு வருகிறோம்.

… பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற வகையில் ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு தேசிய கல்விக்கொள்கை என்பது இருக்க முடியாது, இருக்கக் கூடாது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். பெரும்பான்மை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட, தாய் மொழி வழியிலான, அறிவியல்பூர்வமான, இலவச – கட்டாயக் கல்விக்கல்வியை முன்னிறுத்தும் ஒரு மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கும் போராட்டமாக இதனை வளர்த்தெடுக்க வேண்டும். போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களையும், ஆசியர்களையும், உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைக்கும் தொடர் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த சிறுவெளியீட்டை கொண்டு வருகிறோம். பயன்படுத்துங்கள்! பரப்புங்கள்! நன்றி! (நூலின் முன்னுரையிலிருந்து)

அரசியலமைப்பு முன்னிறுத்தப்பட வேண்டிய இடங்களில், கையாளப்படும் மற்றொரு வார்த்தை ‘சமுதாயம்’ (community) (பக்.29). இதன்படி, கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் ‘சமுதாயத்தின் மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

இது தே.க. கொள்கை -2019 கூறும் சமுதாயம்’ என்பது என்ன என்ற கேள்வியைக் கேட்கத் தூண்டுகின்றது. சாதி, மதம் மற்றும் வர்க்கம் என்று பிளவுண்டு கிடக்கும் இந்தியச் சமூகத்தை ஒரு ஒற்றை சமூகமாகக் கட்டமைப்பது மிகவும் ஆபத்தானது. இது சமூகத்தின் ஆதிக்க சக்திகளின் பிடியில் பொதுக்கல்வி அடிமைப்பட்டுவிடும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக, தே.க. கொள்கை -2019-ன்படி, கல்வித் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வகையில், பள்ளி நிர்வாகக் குழுக்களில் (School Complex Management committees) சமுதாயம்’ முக்கியப் பங்கை வகிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது (பக். 173). இது மட்டுமல்லாமல், ஆரம்ப குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி (Early childhood care and education), கல்வி மற்றும் எண் அறிவுத் திறமைகளை மேம்படுத்துதல் (ப.எண். 57), கல்விக் கான உரிமையை நடைமுறைப்படுத்துதல் (பக். 67) போன்றவற்றிலும் ‘சமுதாயத்தின் பங்கு ஊக்குவிக்கப்படுகிறது.

மேலும், 6 – லிருந்து 8 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எந்த வகையான தொழிற்பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பதில் இந்த ‘சமுதாயம் ‘தான் பரிந்துரைகளைக் கொடுக்கும் (பக்.95). ஆரம்பக் கல்விபோல, உயர் கல்வித் துறைகளும் ‘சமுதாயத்துடன்’ இணைந்து செயல்படும் (பக்.202). இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், தே.க.கொள்கை -2019 கூறும் ‘சமுதாயம்’ ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், ஆதிவாசிகள், உடல் ஊனமுற்றோர், மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் பிரதிநிதித்துவத்தை கொண்டிருத்தல் முக்கியம். ஆனால் பிரதிநிதித்துவம் குறித்து எவையும் உறுதிப்படுத்தப்படவில்லை ஆகையால், தே.க.கொள்கை -2019 ஒரு ஒற்றைப் பார்வை கொண்ட ஆளும் வர்க்கத்தின் சாதியின் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ஒரு கல்வி முறையைத் திணிக்க முற்படும் செயலாகவே அமையும். (நூலிலிருந்து பக்.7-8)

இந்திய உயர் கல்வியைச் சர்வதேசமயமாக்குவது குறித்து அதாவது, சர்வதேசச் சந்தையோடு இணைப்பது குறித்து அறிக்கை விரிவாகப் பேசுகிறது. இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் 15% வெளிநாட்டு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு, வெளிநாட்டு பேராசி ரியர்களை இந்தியாவிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணியமர்த்துவது, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு சேர்ந்து ஆராய்ச்சி மற்றும் படிப்புகள் வழங்குவது – போன்ற பரிந்துரைகள் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக, வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உள்ள சட்ட ரீதியிலான தடைகளை அரசு நீக்க வேண்டும் என அறிக்கை கூறுகிறது. (பக்.12.4)

படிக்க:
ஆதிஷ் தசீர் : மோடியை எதிர்த்தால் குடியுரிமை ரத்து !
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

இவையனைத்தும் ஏற்கெனவே, உயர் கல்விச் சீர்திருத்தம் குறித்து காட்ஸ் ஒப்பந்தம் கூறியுள்ள பரிந்துரைகளாகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக மோடி அரசு செய்து வருகின்ற UGC மற்றும் MCI கலைப்பு, வெளிநாட்டு பேராசிரியர்களைப் பணியமர்துவது, NIRF, MOOCs, மேன்மைதகு நிறுவனங்கள் திட்டம் – ஆகியவை உயர் கல்வியை சர்வதேசப்படுத்துதல் என்ற நோக்கத்திலிருந்தே உருவாக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உயர் கல்வியில் அதிக லாபமீட்டுவது போல தெற்காசிய நாடுகளிலிருந்து அதிக மாணவர்களை இந்தியாவை நோக்கி ஈர்ப்பதன் வாயிலாக தனியார் கல்வி முதலாளிகள் அதிக லாபம் பெறவே அரசு இப்பரிந்துரைகளைக் கூறியுள்ளது. எனவே, இதை அனைவரும் நிராகரிக்க வேண்டும். (நூலிலிருந்து பக்.48)

நூல் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?
ஆசிரியர் : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

வெளியீடு : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
நெ-7, மாதாகோவில் நகர் முதல் தெரு, நொளம்பூர், சென்னை – 600 095.
தொலைபேசி எண் : 94451 12675
மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க