மிழர்களின் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்ற ஒரு வழக்காடல் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. அது தொடர்பான ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைகின்றது.

முதலில் தமிழர்களிடம்  ஆண்டு  என்றொரு  காலக்கணிப்பு முறை இருந்ததா?  எனப் பார்ப்போம். ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி ஆண்டு என வழங்கலாயிற்று. யாண்டு என்ற சொல்லானது தொல்காப்பியத்தின் முதற்பொருளான நிலம், பொழுது ஆகிய இரண்டையும் குறிக்கும். ‘யாண்டு’ என்ற சொல் இடம்பெற்ற சில பாடல்களைப் பார்ப்போம்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.” (குறள் 4)

இப்போது காலத்தைத் தெளிவாகக் குறிக்கும் யாண்டு என்ற சொல் இடம்பெற்ற சங்ககாலப் பாடலைப் பார்ப்போம்.

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்’ (குறு:57:1)

இப் பாடலில் ‘யாண்டு கழிந்தன்ன’ என்பது ‘அக்காலம் பல யாண்டுகள் கடந்தாற் போன்ற’ என்ற பொருளில் இடம்பெறுகின்றது. இந்த ஆண்டு தற்போதைய நாட்காட்டி ஆண்டு போன்றது (365.2425 days) என நான் கூறவரவில்லை, ஏனெனில் தற்போதைய நாட்காட்டி ஆண்டு (Gregorian calendar) நடைமுறைக்கு வந்தது சில நூற்றாண்டுகளிற்கு முன்புதான்.

ஏதோ ஒரு வகையான காலப்பகுதியினை யாண்டு எனச் சங்க காலத் தமிழர்கள் அழைத்துள்ளனர் என்பதுதான் இங்கு தெளிவாகின்றது. எனவே தமிழர்களிற்கு என ஒரு ஆண்டுக் கணிப்பு இருந்திருந்திருப்பின், அந்த ஆண்டிற்கு ஒரு தொடக்கமும் இருந்திருக்கும்.

யாண்டின் தொடக்கமாக தை மாதமே இருந்துள்ளது என்பதற்கு நேரடித் தரவுகள் சங்ககாலப் பாடல்களில் காணமுடியவில்லை என்றபோதும், அதற்கான இரு சான்றுகளை உய்த்துணரலாம்.

முதலாவதாக : தை மாதமளவிற்கு வேறு எந்தவொரு மாதமும் சங்ககாலப் பாடல்களில் சிறப்புப்படுத்தப்படவில்லை. (தை மாதச் சிறப்பின் 10% அளவிற்கு கூட வேறு எந்த மாதமும் சிறப்புப் பெறவில்லை). “தைத்திங்கள் தண்கயம் படியும்” (நற்றிணை 80) , “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” (குறுந்தொகை 196) என்பன உட்படப் பல சங்க காலப்பாடல்கள் தையினைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

இரண்டாவதாக : தை என்ற சொல்லிற்குச் சேர்த்தல் என்ற பொருளும் உண்டு (இரண்டு துணிகளை இணைத்து தைத்தல்). இங்கு ‘தை’ என்பது இரண்டு யாண்டுகளை (காலப்பகுதிகளை) இணைக்கின்றது. இவ்விரு காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டே தை மாதமே ஆண்டின் தொடக்கமாகவிருந்திருக்கும் என உய்த்தறியலாம்.

இதனைவிட, தை மாதமே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ள இயற்கைசார்ந்த இரு காரணங்களும் உண்டு. அவையாவன வருமாறு.

 1. அறுவடைக்காலம் : செல்வ வளம்பொருந்திய காலமே புத்தாண்டாகக் கொண்டாடப் பொருத்தமாகவிருந்திருக்க முடியும். (இன்று பலர் உழவுத்தொழிலில் தங்கியிராத நிலையில், இதன் எச்சமாகவே பொங்கல் மிகைப்பணம் (Bonus) அரசால் வழங்கப்படுகின்றது. அன்று அந்த வாய்ப்பு இல்லாமையால், அறுவடைக்காலமே பொருத்தமானதாகும்).
 2. காலநிலை: தை மாதத்தின் தண்மை (குளிர்மை) பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான காலப்பகுதியே யாண்டின் தொடக்கமாகக் கொள்ளப் பொருத்தமானதாகும். (மாறாக தாயகத்தில் சித்திரையில் கொளுத்தும் வெயிலே சுட்டெரிக்கும் காலப்பகுதி பொருத்தமானதாகக் காணப்படமாட்டாது.)

படிக்க :
இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – புதிய தொடர்
♦ ‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?

மேலும் எளிய மக்களின் வழக்காற்று மொழிகளிலும் கூட பழைய வரலாற்று எச்சங்களைக் காணலாம். அந்த வகையில், “தை பிறந்தால் வழி பிறக்கும் , “தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகா ராசன் பொங்கல் வரவேண்டும்” என்பன போன்ற சொல்லடைகளும் தை மாதத்தின் முதன்மையினைக் காட்டுகின்றன.

அண்மையில் இராமநாதபுரம் கீழக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் சில நூற்றாண்டுகளிற்கு முன்னர்வரைத் தையே புத்தாண்டாகக் கருதப்பட்டதனைக் காட்டுகின்றது. வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விஜயராமு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை தை மாதமே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது என்கின்றார் (சான்று – தினத்தந்தி 03-01-2019).

சித்திரை மாதக் கணிப்பீடு :

சித்திரைப் புத்தாண்டு கணிப்பீட்டு முறையானது சாலிவாகணன் என்ற அரசனால் (சிலர் கனிஷ்கன் என்கின்றனர்) கி.பி 78-ம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூறப்படுகிறது. இவ்வாறு அக் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட போதும், மக்களிடம் அந்தப் புத்தாண்டு வரவேற்புப் பெற்றிருக்கவில்லை என்பதனையே மேற்கூறிய கல்வெட்டுச் சான்றும், நாம் ஏற்கனவே பார்த்த வழக்காற்றுச் சான்றுகளும் காட்டுகின்றன.

கடந்த இரு நூற்றாண்டுகளிலேயே மதப் புராணங்கள் மூலம் சித்திரை, புத்தாண்டாக எளிய மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கூறப்பட்ட புராணக்கதை வேடிக்கையானது. அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392-ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

ஒருமுறை நாரதமுனிவர், ‘கடவுள்’ கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், “என்னுடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்” என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார்.

கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம். பின் ‘கடவுள்’ கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இதுதான் அந்தப் புராணக்கதை.  இதில் மேலும் வேடிக்கை என்னவென்றால் இவ் அறுபது ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சூத்திர ஆண்டுகளாம் (ஆண்டுகளில் கூட வர்ணப் பிரிவினை).

வேறு சிலர் வியாழனை அடிப்படையாகக்கொண்ட 60 ஆண்டுக் கணிப்பீட்டு முறையினையே, பிற்காலத்தில் புராணம் ஆக்கிவிட்டார்கள் எனக் கூறுவதுமுண்டு. இராசியினை அடிப்படையாகக் கொண்டு சோதிட விளக்கம் கூறுவோரும் உண்டு.

இன்னொரு சாரார் தொல்காப்பியப் பாடல் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆவணியினை புத்தாண்டாகக் கருதுவோருமுண்டு (இன்றும் சிங்க மாதமே (ஆவணி) மலையாளப் புத்தாண்டு : கொல்லமாண்டு). இத்தகைய குழப்பங்களைத் தீர்ப்பதற்காக 1935 -ம் ஆண்டில் தமிழறிஞர்கள் இணைந்து ஒரு தீர்வு கண்டிருந்தார்கள்.

படிக்க :
ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !
♦ சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !

குழப்பத்திற்கான அறிஞர்களின் தீர்வு :

இக் குழப்பத்திற்கு தீர்வு காணும்பொருட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1935 -இல் மறைமலை அடிகளார் தலைமையில் பல அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என முடிவு செய்திருந்தனர். பின்பு அதேபோன்று திருவள்ளுவரின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக்கூட்டி திருவள்ளுவர் ஆண்டு தமிழாண்டாகக் கொள்வது எனவும் அறிவித்திருந்தார்கள். இவ்வாறு  முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் சிலர் வருமாறு.

 • தமிழ்க்கடல் மறைமலை அடிகள்,
 • தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார்,
 • தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை,
 • சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை,
 • நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார்,
 • நாவலர் சோமசுந்தர பாரதியார்,
 • முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்,
 • பேராசிரியர் சா. நமச்சிவாயனார்,
 • உ.வே. சாமிநாத ஐயர்

தமிழில் புலமையும் காதலும் கொண்ட இந்த தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டுத் தமிழ் ஒன்றையே முதன்மைப்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு ‘தை முதலே தமிழ்ப் புத்தாண்டு’ எனும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இங்கு டாக்டர் மு.வ கூறுகின்றார் “முற் காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்” ( சான்று – 1988 கோலாலம்பூர் பொங்கல் மலர், மு.வ. கட்டுரை மீள் பதிப்பு ). இறையன்பர்களான மறைமலை அடிகள், திரு. விக, உ.வே.சா போன்றோர் முதல் இறை மறுப்பாளரான பெரியார் ஈ.வெ.ரா வரை தமிழின் பெயரில் ஒன்றுபட்ட வேளை அது.

தமிழ்நாடு அரசு, இதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது.  இருந்தபோதிலும், 2006-2011 இடைப்பட்ட கலைஞர் ஆட்சியிலேயே ‘தை முதல் தமிழ்ப் புத்தாண்டு’ ஆக அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழர்கள் தமது புத்தாண்டு மரபினைத் தொலைத்துவிட்டார்கள். அக் காலப்பகுதியில் ஈழத்திலும் தைமுதலே புத்தாண்டாக விடுதலைப்புலிகளால் தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. இங்கும் வரலாற்று  இன்னலாக புலிகளின் அழிவிற்குப் பிறகு அந்த முயற்சி தொடரப்படவில்லை.

அறிவியல் பொருத்தப்பாடு :

அரசியல், தமிழறிஞர்களின் அறிவிப்பு என்பன எல்லாம் போகட்டும், அறிவியல்ரீதியாக எந்தப் புத்தாண்டு பொருத்தம் எனப் பார்ப்போமா!

முதலாவதாக திருவள்ளுவர் ஆண்டானது எண்களில் வருவதனால் சிறப்பானது, மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீடானது ஒரே பெயர்களில் 60 ஆண்டுகளிற்கொரு முறை மறுபடியும் மீள வருவதனால் குழப்பகரமானவை. எடுத்துக் காட்டாக சுக்கில ஆண்டு என்றால், எந்தச் சுக்கில ஆண்டைக் கருதுவீர்கள். மேலும் இப்பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லாதிருப்பதுடன் அவற்றின் கருத்துக்கள் ஆபாசமானவை அல்லது எதிர்மறையானவை. (சுக்கில-விந்து, துன்மதி-கெட்டபுத்தி).

இரண்டாவதாக ஒருவரின் (திருவள்ளுவரின்) வாழ்க்கைக் காலத்தினை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீடானது அனைத்துலக நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றது. மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீட்டிற்கான நாம் ஏற்கனவே பார்த்த புராணக்கதையினை மதநம்பிக்கையாளரில் பெரும்பாலானோரே நம்பமாட்டார்கள். அதேபோன்று சித்திரைக்கணிப்பீட்டிற்குச் சொல்லப்படும் இராசிக்கணிப்பும் அறிவியலிற்கு முரணான புவிமையக் கொள்கையினை அடிப்படையாகக்கொண்டது.

படிக்க :
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
♦ சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்

மூன்றாவதாக, தைக் கொண்டாட்டமானது சங்க இலக்கியங்களினடிப்படையில் வரலாற்றுத் தொன்மையானதாகக் காணப்பட, மறபுறத்தில் சித்திரை ஆண்டுப் பிறப்பானது இடைக்காலத்தில் வெளியாரின் திணிப்பால் உள்நுழைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.

நான்காவதாக தைத்திருநாளானது மதசார்பற்றதாகக் காணப்படுவதால் எல்லாத் தமிழரும் கொண்டாடக்கூடியதாகவிருக்க, மறுபுறத்தில் சித்திரையானது இந்துக்களிற்கு மட்டுமே அதுவும் பார்ப்பன ஆதிக்கத்தினை ஏற்றுக்கொண்டவரிற்கே பொருத்தமானதாகக்  காணப்படுகின்றது.

இறுதியாக தைத்திருநாளானது தமிழரின் வாழ்க்கையுடன் இணைந்தும், உழவுத்தொழிலுடன் தொடர்பானதாகவும் காணப்படுகிறது.

முடிவுரை:

இதுகாறும் இலக்கியச் சான்றுகள், மக்களின் வழக்காற்றுச் சான்றுகள், கல்வெட்டுச் சான்று, அறிஞர்களின் முடிவு, அறிவியற் பொருத்தப்பாடு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தை முதலே தமிழ்ப் புத்தாண்டு எனப் பார்த்தோம்.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,  கிரிகேரியன் நாட்காட்டி (Gregorian calendar) சனவரி 15 ம் திகதியினைக் காட்டும், அந்த நாளே திருவள்ளுவர் ஆண்டு 2051 (2020+31) ஆகும் நாளன்றே (தை முதலே) தமிழ்ப் புத்தாண்டாகும்.

முடிவாக  தைத்திருநாள், தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு (தை) என்பன அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஆயிரமாயிரமாண்டு தமிழர் மத சார்பற்ற பண்பாட்டு நிகழ்வுகளே. பாவேந்தரின் பாடலுடன் இக் கட்டுரையினை முடிப்பதே சிறப்பானதாக அமையும்.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் , கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

-பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வி.இ.  குகநாதன்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

30 மறுமொழிகள்

 1. ஜூலியன் நாட்காட்டி படி, தை 1 தான் ஆண்டின் தொடக்கம். இதையும் எழுதியிருக்கலாம்.

 2. சுருக்கமாக கிறிஸ்துவ மிஷனரி கட்டுரையை அப்படியே திருப்பி எழுதி இருக்கிறீர்கள்.

  அமெரிக்கா அதிபர் டிரம்ப் நாங்கள் தாக்கப்பட்டால் ஈரானில் உள்ள கலாச்சார சின்னங்களை அழிப்போம் என்று மிரட்டல் விடுத்து இருக்கிறார். அமெரிக்கா அதிபர் ஏன் ஈரானிய கலாச்சார சின்னங்களை அழிப்போம் என்று சொன்னார் ? அது தான் ஒரு நாட்டின் ஆன்மா மீது விடுக்கப்படும் தாக்குதல்.

  அந்த மாதிரியான கலாச்சார தாக்குதலை தான் உங்களை போன்றவர்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். இதில் எந்த ஒரு பெருமையும் கிடையாது.

  தமிழ் மாதங்கள் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக கொண்டது அதனால் தான் தமிழ் மாதங்களை சூரிய மாதங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

  இராசிச் சக்கரத்தில் மேஷ இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.

  சூரியன் மேஷ இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.

  தை அறுவடை காலம், நம் நாட்டில் மட்டும் அல்ல உலகின் பல நாடுகளிலும் அறுவடை காலங்களை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகிறார்கள்.

  அறுவடை முடிந்து கையில் காசு இருக்கும் என்தால் தான் தை பிறந்தால் வழி பிறகும் என்று சொல்வார்கள்.

  கிறிஸ்துவர்களுக்கு தமிழ் கலாச்சாரம் பண்பாடு தெரியாது அதனால் அவர்களுக்கு தை பற்றியும் தெரியவில்லை சித்திரை பற்றியும் தெரியவில்லை.

 3. //அறுவடை முடிந்து கையில் காசு இருக்கும் என்தால் தான் தை பிறந்தால் வழி பிறகும் என்று சொல்வார்கள்.//

  அறுவடை முடிந்து பயிர்கள் பூத்து குலுங்கி விவசாயியின் வாழ்விலும், மக்களின் வாழ்விலும் எது மகிழ்வை கொண்டு வருகின்றதோ அதுவே தமிழ் புத்தாண்டு , அந்த வகையில் பார்த்தால் தமிழர்களுக்கு தை ஒன்றே தமிழ் புத்தாண்டாகும் .. மண்டையை பிளக்கும் சித்திரையை பஞ்சாங்க கோஷ்டிகள் தலையில் வைத்து கொள்ளட்டும்

 4. //அமெரிக்கா அதிபர் ஏன் ஈரானிய கலாச்சார சின்னங்களை அழிப்போம் என்று சொன்னார் ? அது தான் ஒரு நாட்டின் ஆன்மா மீது விடுக்கப்படும் தாக்குதல்…//

  அதையே தான் ஆரியர்கள் 2000 ஆண்டுகளாக தமிழர் வாழ்வை, கலாச்சாரத்தை செய்து கொண்டிருப்பதும் .. தமிழர்களின் அனைத்து பண்பாடு கலைகள் இலக்கியங்களை ஆரிய சமஸ்க்ருத மயமாக்கி , அவர்களுக்கு என்று ஒன்றுமே இல்லாமல் செய்தது தான் ஆரிய பார்ப்பனரின் 2000 ஆண்டுகள் வரலாறு அனைத்தும் … அதனை தான் மோடியின் நெருங்கிய பாசிச கூட்டாளி ஈரானை மிரட்டுவதெல்லாம்

  • உங்களை போன்ற கிறிஸ்துவர்களால் 2000 வருடங்களுக்கு மேல் சிந்திக்க முடிவதில்லை, அதனால் தான் எதற்கு எடுத்தாலும் 2000 வருடங்கள் என்று கிறிஸ்து பிறப்பின் அடிப்படையில் பார்க்கிறீர்கள் ஆனால் கிறிஸ்துவின் பிறப்பே உண்மையா என்பது இன்னும் நிரூபிக்கப்படாமல் இருக்கிறது.

   தொல்காப்பியத்தில் பிராமணர்கள் அவர்களின் கடமைகள் நான்கு வேதங்களை பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறார்கள் தொல்காப்பியம் என்ன வந்தேறிகள் இயற்றியதா அல்லது கிறிஸ்து பிறந்த பிறந்த பிறகு இயற்றப்பட்டதா ?

   கிறிஸ்துவ மிஷனரிகள் உலகம் முழுவதும் செய்து இருக்கும் அழிவை தான் உங்களை போன்ற ஆட்கள் மனசாட்சி உறுத்தலே இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

   அமெரிக்கா அதிபர் வெடிகுண்டுகள் மூலம் ஈரான் கலாச்சார சின்னங்களை அழிப்போம் என்று சொன்னதை நீங்கள் பொய் பிரச்சாரங்கள் மூலம் தமிழ் கலாச்சாரத்துக்கு செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

   அந்தளவுக்கு உங்களுக்கு தமிழ் மற்றும் தமிழ் கலாச்சாரம் மீது பற்று இருந்தால் முதலில் உங்களின் பெயரை தமிழ் பெயராக மாற்றி விட்டு பேசுங்கள். ஒரு வந்தேறி மதத்தின் கலாச்சாரத்தை பின்பற்றி கொண்டு எங்கள் தமிழ் கலாச்சாரத்தை பற்றி குறை சொல்ல தேவையில்லை.

   இன்னும் கொஞ்ச நாள் போனால் தொல்காப்பியத்திற்கு தமிழுக்கும் சம்பந்தம் இல்லை என்ற பொய்யை கூட பரப்ப ஆரம்பித்து விடுவீர்கள்.

 5. சூரியன் மேட இராசி, அசுவினி நட்சத்திரத்தில் புகும் நாளே சித்திரை ஆண்டுப் பிறப்பு என்கிறார்கள். அது தவறு. அதுவே வேனில் காலத்தின் தொடக்கம் என்கிறார்கள். இவை முழுதும் சரியல்ல. இன்று வேனில் காலம் மார்ச்சு 20 இல் தொடங்குகிறது. காரணம் புவி தனது சுற்றுப்பாதையில் சூரிய – சந்திர ஈர்ப்பினால் பின்னோக்கி (Precession of Equinoxes) நகர்கிறது. அண்ணளவாக 71.6 ஆண்டுகளில் ஒரு பாகை (ஒரு நாள்) பின்நோக்கி நகர்கிறது. ஆயிரம் ஆண்டுகளில் 14 நாள்கள் நகர்ந்துவிடுகிறது. இன்று இந்திய சோதிடக் கணிப்புக்கும் கிறகேறியன் காலக் கணிப்புக்கும் 24 நாள்கள் வேறுபாடு காணப்படுகிறது. இன்னும் 11,230 ஆண்டுகளில் இளவேனில் காலத்தில் சூரியன் மேடராசிக்குப் பதில் துலா இராசியில் புகுவார்! அதாவது மேட இராசிக்கு எதிர்ப்புறம் 180 பாகையில் காணப்படும் துலா இராசியில் புகுவார்.

 6. தை முதல் தான் தமிழரிற்குப் புத்தாண்டு.
  ஆரிய அடிவருடிகளிற்கே சித்திரை வருஷங்கள்.

 7. //ஒரு வந்தேறி மதத்தின் கலாச்சாரத்தை பின்பற்றி கொண்டு எங்கள் தமிழ் கலாச்சாரத்தை பற்றி குறை சொல்ல தேவையில்லை.//

  2000 வருடங்களாக புராணம் இதிகாசம் என்று தமிழர்களை ஏமாற்றி தமிழர்களின் பண்பாடுகளை எல்லாம் ஆட்டைய போட்ட வந்தேறி பார்ப்பானின் காலை கழுவி குடிப்பதை விட மதம் ஒன்று அவ்வளவு கேவலம் கிடையாது …

  //தொல்காப்பியத்தில் பிராமணர்கள் அவர்களின் கடமைகள் நான்கு வேதங்களை பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறார்கள் தொல்காப்பியம் என்ன வந்தேறிகள் இயற்றியதா அல்லது கிறிஸ்து பிறந்த பிறந்த பிறகு இயற்றப்பட்டதா ?//

  கடமையை தானே சொல்லி இருக்கிறார், மற்றபடி பிறப்பின் அடிப்படையில் பார்ப்பான் உயர்ந்தவன் என்றா சொல்லி இருக்கிறார் ..மேலும் தொல்காப்பியத்தில் பலரின் இடை செருகல்களும் இருக்கின்றன என்பது ஆராய்ச்சியாளர் கூற்று …

  • //மதம் ஒன்று அவ்வளவு கேவலம் கிடையாது//

   ஒரு உதாரணம் சொல்கிறேன்

   ராமச்சந்திர படையாட்சி – வட தமிழகத்தை சேர்ந்தவர், ஹிந்து மதம்,
   ராமச்சந்திர கவுண்டன் – கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர், ஹிந்து மதம்
   ராமச்சந்திர நாயர் – கேரளாவை சேர்ந்தவர், ஹிந்து மதம்
   ராமச்சந்திர ராவ் – ஆந்திராவை சேர்ந்தவர், ஹிந்து மதம்
   ராமச்சந்திர கவுடா – கர்நாடகாவை சேர்ந்தவர், ஹிந்து மதம்

   ஒருவரின் பெயரை வைத்தே அவரை பற்றி பல விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம்… ஆனால் Rebecca mary என்ற உங்களின் பெயரை வைத்து நீங்கள் இந்தியன் என்று சொல்ல முடியாது தமிழர் என்றும் சொல்ல முடியாது, நீங்கள் அமெரிக்கராகவும் இருக்கலாம், பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவராகவும் இருக்கலாம் அல்லது அபிரிக்கராகவும் இருக்கலாம்.

   கிறிஸ்துவம் உங்களின் அடிப்படை அடையாளத்தை அழித்து விட்டது, நீங்களும் தமிழ் அடையாளம் வேண்டாம் என்று சொல்லி தான் மேற்கத்திய மதத்திற்கு மாறி அந்த இனத்தின் அடையாளத்தை வைத்து இருக்கிறீர்கள்…

   மேலும் பல முறை சொல்லியிருக்கிறேன் ஹிந்து மதத்தின் வர்ணங்கள் ஒருவரின் குணத்தை அடிப்படையாக கொண்டது… அதற்கு பல ஆதாரங்கள் ஹிந்து வேதங்களிலேயே இருக்கிறது.

   ஒரே குடும்பத்தில் அண்ணன் பிராமனாகவும் தப்பி வைசியனாகவும் இருந்து இருக்கிறார்கள்.

   இன்றைய காலத்திற்கான உதாரணம் வேண்டும் என்றால் அண்ணன் ஆசிரியராகவும், தம்பி வியாபாரியாகவும் இருப்பது.

  • //தமிழர்களை ஏமாற்றி தமிழர்களின் பண்பாடுகளை எல்லாம் ஆட்டைய போட்ட வந்தேறி பார்ப்பானின்///

   பல கிறிஸ்துவர்கள் இது போல் பேசுவதை கேட்கிறேன். அது ஏன் நீங்கள் செய்து கொண்டு இருப்பதை எல்லாம் ஹிந்து மதத்தினர் மீது பழிபோட்டு மறைக்கிறீர்கள்…

   வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு நடைபயணம் போகிறவர்கள் காவி உடை அணிந்து கழுத்தில் ருத்திராட்ச மலை அணிந்து செல்கிறீர்கள், அந்த ருத்ராட்ச மலையில் சிலுவை

   காவி உடை என்பது ஹிந்துக்களின் அடையாளம் தானே, ஆனால் இப்போது கிறிஸ்துவர்கள் காவி உடை அணிந்து மாதா கோவிலுக்கு செல்வது எதை காட்டுகிறது….

   நீங்கள் தானே தமிழர்களின் அடையாளங்களை திருடி கொண்டு தமிழரின் கலாச்சாரம் பண்பாட்டை அழிக்க சதி செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

   உங்களின் தீய செயல்களை மறைக்க 2000 வருடங்களுக்கு முன்பு வந்தார்கள் பிராமணர்கள் அது இது என்று பொய்களை பரப்பி கொண்டு இருக்கிறீர்கள்.

   உங்களுக்கே கிறிஸ்துவர்கள் செய்வது வெட்கமாக இல்லையா ?

 8. //ராமச்சந்திர படையாட்சி – வட தமிழகத்தை சேர்ந்தவர், ஹிந்து மதம்,
  ராமச்சந்திர கவுண்டன் – கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர், ஹிந்து மதம்
  ராமச்சந்திர நாயர் – கேரளாவை சேர்ந்தவர், ஹிந்து மதம்//

  படையாட்சியும், கவுண்டனும் , நாயரும் தான் என்னுடைய அடையாளங்கள் என்றால் , அப்படி பட்ட இந்தியராக தமிழராக நான் இருக்க விரும்பவில்லை … இன்னும் சொல்ல போனால் சாதி வெறியர்களுக்கும் மத வெறியர்களுக்கும் என்றுமே தேசத்தின் இனத்தின் மீதி மொழியின் மீது பற்றுதல் இருக்கவே இருக்காது. ஆஷ் துறையை வாஞ்சிநாதன் எதற்காக கொன்றானோ அதற்காக வேண்டுமானால் மேற்சொன்ன இருவரும் போராடுவார்கள்.. அதற்க்கு இன்றைய பெரிய உதாரணம், இந்த நாட்டை, பாரத மாதாவை கூவி கூவி கூட்டி கொடுக்கும் பிஜேபி கட்சி ஒன்றே போதும்.. பார்பனியத்திடம் சிக்குண்ட தமிழர்களின் தனித்துவத்தை மீட்டெடுக்க நானும் முயன்று கொண்டிருக்கிறேன் அவ்வளவே ..

  • கிறிஸ்துவர்கள் என்றாலே பொய்கள் மற்றும் போலித்தனங்கள் தான் என்பதை நீங்களும் இப்போது நிரூபிக்கிறீர்கள்.

   கிறிஸ்துவத்தில் ஜாதிகள் இல்லையென்றால் பிறகு எப்படி தலித் கிறிஸ்துவர்கள், ஏன் தலித் கிறிஸ்துவர்களை தனியாக பிரித்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறீர்கள்.

   கிறிஸ்துவர்களின் போலித்தனம் மிக மிக கேவலமாக இருக்கிறது.

   முதலில் இந்த 2000 வருட கிறிஸ்துவ சிந்தனையில் இருந்து வெளியே வாருங்கள், கிறிஸ்துவ மிஷனரிகள் பரப்பி வைத்து இருக்கும் பொய்களை நம்பி எங்கள் நாட்டைன் மதத்தை பற்றி பொய்களை அவதூறுகளை பரப்ப வேண்டாம்.

  • நீங்கள் இந்தியராக தமிழராக இருக்க விரும்பவில்லை என்றால் பிறகு நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள் பேசாமல் இஸ்ரேல் பிரிட்டன் அமெரிக்கா செல்ல வேண்டியது தானே.

   அமெரிக்கா அதிபர் கூட பைபிள் டெஸ்ட் வைத்து அதில் பாஸ் செய்பவர்களுக்கு அமெரிக்கா குடியுரிமை கொடுக்கிறாராம் பேசாமல் அது போல் நீங்கள் அமெரிக்கா செல்லலாமே…

 9. //காவி உடை என்பது ஹிந்துக்களின் அடையாளம் தானே, ஆனால் இப்போது கிறிஸ்துவர்கள் காவி உடை அணிந்து மாதா கோவிலுக்கு செல்வது எதை காட்டுகிறது….//

  2000 ஆண்டுகளுக்கு முன் பவுத்தர்களிடம் இருந்து நீங்கள் காவியை திருடியதை காட்டுகின்றது அவ்வளவு தான். உடையை மட்டுமல்ல, தத்துவம் சித்தாந்தம் போன்ற அனைத்தையும் பவுத்த சமணத்திடம் இருந்து ஆட்டைய போட்டு தான் இந்து மதம் தன்னை வளப்படுத்தி கொண்டது என்பதையும் காட்டுகிறது. யாகத்தில் பலியிட்டு ஆடு மாடுகளை தின்ற பார்ப்பான் பவுத்தம் கொடுத்த செருப்படிக்கு பிறகு நெய்யும் வெண்ணையுமாக சைவ உணவிற்கு மாறியதை காட்டுகிறது .

  • கூச்சமே இல்லாமல் பச்சையாக ஹிந்து மத சடங்குளை உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் திருடி கொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் ஹிந்து மதத்தை பற்றி குறை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

 10. //கிறிஸ்துவத்தில் ஜாதிகள் இல்லையென்றால் பிறகு எப்படி தலித் கிறிஸ்துவர்கள், ஏன் தலித் கிறிஸ்துவர்களை ..//

  அட கோ மூத்திர குடிக்கியே …. கிருத்துவத்தில் எங்கே சாதிகள் சொல்லபட்டிருக்கிறது.. மனுதர்மம் போன்று பைபிளில் எங்காவது சாதி பற்றி குறிப்பு இருக்கிறதா ??? இங்கு இருக்கும் சாதி கட்டமைப்பில் கிறித்துவம் பவுத்தம் எதுவும் தப்பிக்கவில்லை அவ்வளவு தான்.

  //நீங்கள் இந்தியராக தமிழராக இருக்க விரும்பவில்லை என்றால் பிறகு நீங்கள் ஏன் இங்கே இருக்கிறீர்கள் பேசாமல் இஸ்ரேல் பிரிட்டன் அமெரிக்கா செல்ல வேண்டியது தானே.//

  உங்களை போன்று சாதியை ஏற்று கொண்டு பார்ப்பானுக்கு அடிமையாக இருக்கும் சூத்திரனாக இருப்பதை விட என் பெயர் எவ்வளவோ பரவாயில்லை என்றே சொல்லேவன் . .. முதலில் சொல்ல வருவதை சரியாக புரிந்து கொள்ளவும், முட்டாள் சங்கியே..

  • Matthew 10:34
   //Do not assume that I have come to bring peace to the earth; I have not come to bring peace, but a sword.//
   //Do you think I have come to bring peace to the earth? No, I have come to divide people against each other! 52 From now on families will be split apart, three in favor of me, and two against—or two in favor and three against.

   53 ‘Father will be divided against son
   and son against father;
   mother against daughter
   and daughter against mother;
   and mother-in-law against daughter-in-law
   and daughter-in-law against mother-in-law.’[a]”//

   உங்கள் கிறிஸ்துவம் மனிதர்களை இரண்டு வகைகளாக மட்டுமே பிரிக்கிறது ஒன்று நம்பிக்கையாளர்கள் அவர்களுக்கு மட்டுமே உரிமைகள் கொடுக்கப்படும், இன்னொரு பக்கம் நம்பிக்கையற்றவர்கள் அவர்களை மனிதர்களாக கூட கிறிஸ்துவம் பார்ப்பது இல்லை.

   இந்த பிரிவினையால் தான் பல கோடி அப்பாவி மக்களை உலகம் முழுவதும் கிறிஸ்துவம் கொன்று அழித்து இருக்கிறது.

   மற்ற கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகளை பற்றி (உங்களை போல்) பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி என்னமோ கிறிஸ்துவம் மட்டுமே உயர்ந்தது என்பது போன்ற பொய் பிம்பத்தை உருவாக்கி பூர்விக மக்களின் கலாச்சாரங்களை அழித்து அவர்களின் ஒற்றை கலாச்சாரத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள் (பிரேசிலில் இது நடந்து இருக்கிறது)

   கிறிஸ்துவம் இஸ்லாம் இரண்டுமே இந்த காரியத்தை செய்து இருக்கிறது.

   தற்போது கம்யூனிசமும் இது போன்ற ஒரு செயலை தான் செய்து கொண்டு இருக்கிறது.

   இந்த மூவருமே தங்களின் தீய செயல்களுக்கு ஏதோ ஒரு நியாயத்தை கர்ப்பித்து கொண்டு அழிவை சாதாரண மக்களுக்கு கொண்டு வருகிறார்கள்.

 11. //கூச்சமே இல்லாமல் பச்சையாக ஹிந்து மத சடங்குளை உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் திருடி கொண்டு இருக்கிறீர்கள்…//

  கூச்சமே இல்லாமல் , நீங்கள் பவுத்த சமணர்களிடம் இருந்து கோவில் அமைப்பது முதல் அனைத்தையும் திருடும் போது அவர்கள் திருடுவதில் என்ன தவறு ?? … பவுத்தத்திடம் இருந்து அஷ்டாங்க யோகங்களை களவாண்டு , அதனை வரலாற்றில் இல்லாத பதஞ்சலி பெயரில் போட்டு சொந்த கொண்டாடிய திருட்டு ஜென்மங்கள் நீங்கள் கிறித்தவர்களை பற்றி பேசுவது தான் கொடுமை கேவலம் ..

  மேலும், நீங்கள் இதே தளத்தில் பல பெயர்களில் உலா வரும் உரையாடும் ஒரு டுபாக்கூர் என்பது தெரியும் . ஒரு பெயர் மரியாதைக்காக மட்டுமே உங்களோடு பேசுகிறேன் .

  • நீங்கள் பேசுவது எப்படி இருக்கு தெரியும்மா ?

   பட்டப்பகலில் ஒரு வீட்டின் உள்ளே நுழைந்து கொள்ளையடித்து விட்டு, ஓடி போகும் போது வீட்டின் சொந்தக்காரர் திருடனை பிடித்து விட்டார் அப்போது வீட்டின் சொந்தக்காரரை பார்த்து அந்த பகல் கொள்ளையன் சொன்னானாம் நீ தான் திருடன்…

   உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் பேசுவது அந்த திருடன் பேசுவது போல் இருக்கிறது.

   உலகம் முழுவதும் கிறிஸ்துவம் இதை போன்ற இன மற்றும் கலாச்சார அழிவுகளை தானே செய்து இருக்கிறது… அதனால் உங்களை போன்றவர்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமோ மனசாட்சி உறுத்தலோ இருக்காது.

  • //நீங்கள் இதே தளத்தில் பல பெயர்களில் உலா வரும் உரையாடும் ஒரு டுபாக்கூர் என்பது தெரியும்//

   நீங்கள் செய்து கொண்டு இருப்பதை எல்லாம் நான் செய்கிறேன் என்று சொன்னால் எப்படி… நானே இந்த தளத்திற்கு வருவதை நிறுத்தி விடலாம் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்.

   • //நானே இந்த தளத்திற்கு வருவதை நிறுத்தி விடலாம் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்//
    என்ன மணிகண்டா.. பொசுக்குனு இப்புடி சொல்லிப்புட்ட..!
    ரெபெக்கா பஞ்சத்துக்கு சங்கி.. நீயோ பரம்பரை சங்கி…
    ரெண்டு பேரும் ஒரு ஓரமா வெளையாண்டுகிட்டு இருங்கப்பா..!

 12. நீங்கள் கிறிஸ்தவ மதத்தை பற்றி எவ்வளவு விமர்சித்தாலும் எனக்கு அதில் கவலை கிடையாது, ஏனென்றால் அது ஒன்றும் நான் கண்டுபிடித்த அல்லது உருவாக்கிய மதம் கிடையாது. விவாதம் என்கிற பெயரில் , மேலும் மேலும் இந்து மதத்தை நான் அசிங்க படுத்த விரும்பவில்லை, இந்து மதத்தின் தத்துவங்களும் எனக்கு பிடிக்கும். என்மீது அன்பும் அக்கறையும் கொண்ட நிறைய நண்பர்கள் இந்து மதத்தில் எனக்கு இருக்கிறார்கள். மேலும், யாருக்கு எந்த நாள் விருப்பமோ அன்று புத்தாண்டை கொண்டாடிவிட்டு போகட்டும். இதில் எந்த கலாச்சார அழிப்பும் திணிப்பும் கிடையாது..

  • பல கிறிஸ்துவ அமைப்புகள், வினவு கூட்டங்கள், திராவிட கழகம் உட்பட பலரின் முக்கிய நோக்கமே ஹிந்து மதத்தை அழிப்பது தானே, அதை பல கிறிஸ்துவ மதத்தலைவர்கள் மிக வெளிப்படையாக பேசியிருப்பது பல சமூக வலைத்தளங்களில் உள்ளது.

   கிறிஸ்துவம் உலகம் முழுவதும் செய்த அழிவை இப்போது தமிழர்களுக்கும் செய்து கொண்டு இருக்கிறது… கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமிய மதங்களில் உள்ள மாற்று மத சகிப்பின்மை மற்றும் வெறுப்பை மாற்றாத வரையில் உலகம் முழுவதுமே இவர்களால் வன்முறை வெறுப்பு மற்றும் பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

   இஸ்லாமியர்கள் செய்யும் தீவிரவாத செயல்கள் வெளியில் தெரியும் அளவிற்கு கிறிஸ்துவர்கள் செய்யும் பயங்கரவாத செயல்கள் தெரிவதில்லை…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க