கைபர் மற்றும் போலன் கணவாய் வழியாக நடந்த ஆரிய படையெடுப்பு என்பது பழைய செய்தி. ஒரு கையெழுத்தின் மூலமாகவே, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு எனும் முந்தைய தி.மு.க. அரசின் அரசாணையை கோபுரச் சின்னத்தால் ஒரு குத்து குத்தி கிழித்தெறிந்து விட்டது பார்ப்பனப் பேய். கருணாநிதியின் குறுகிய சுயநல நோக்கில் தமிழ்ப் புத்தாண்டு மாதத்தை மாற்றி விட்டதாகவும் ஒரு ஆணவ அறிக்கை விட்டது அந்தக் கொள்ளிவாய். ஆமாம் ஆமாம் என்று தலையாட்டவும் சில தமிழறிஞர்கள்.
கருணாநிதி போலித்தனமாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக அவர் சோறைத் தின்றால் நாம் வேறொன்றைத் தின்ன வேண்டுமா? கருணாநிதி கனிமொழி ஆண்டு என்றா மாற்றினார், திருவள்ளுவர் ஆண்டு என்றுதானே பேசினார்! திருவள்ளுவர் என்ன தி.மு.க.வா? என்று பார்ப்பனத் திமிரை எதிர்த்துப் பேச ஆளின்றி, மத உணர்வு மீட்கப்பட்டதில் பார்ப்பனக் கெடுப்பும், சைவக் கடுப்பும் சேர்ந்து கூத்தாடுகின்றது.
சித்திரைதான் ஆண்டுத் துவக்கம் என்று நெடுநல்வாடையிலே உள்ளது, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்லியிருக்கிறார், நக்கீரர் சொல்லியிருக்கிறார், பல்லாவரம் பஸ் ஸ்டாண்டில் ஒரு பார்ப்பன ஆவி சொன்னது என்று ஒரு கும்பல் ஆதாரங்களை அடுக்க, இல்லை இல்லை குறுந்தொகை, கலித்தொகை, நற்றிணை, புறநானூறு இவைகளிலெல்லாம் தைத்திங்கள் மரபு பற்றி குறிப்பு உள்ளது என தை மாதத்தைத் தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கமாக கொள்வோரின் ஆதாரம் முன்வைக்கப்படுகின்றன.
பஞ்சாங்கம் பார்த்து வேட்புமனுத் தாக்கல் செய்து, பஞ்சாங்கம் பார்த்து பதவி ஏற்று, பஞ்சாங்கம் பார்த்து வாய்தா வாங்கும் ஜெ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலும், அடிவருடிகளும் முன்னிறுத்தும் சித்திரையின் சிறப்புதான் என்ன? மேழம், அதாவது மேஷ ராசியில் சூரியன் நுழைவதுதான் சித்திரை, ஆண்டுப் பிறப்பு என்றும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகளும் நாரதனும் கிருஷ்ணனும் கூடிப் பிறந்தவை என்றும் ஆபாச, புராண அடிப்படையில் அமையப் பெற்ற பார்ப்பன இந்து மதம் ஆண்டுக்கணக்கை முன்வைக்கின்றது.
இதற்கு மாறாக பனிக்காலம் முடிவில் வெயில் துவங்கும் விவசாய உழைப்புக்கேற்ற தை மாதத்தை பருவ அடிப்படையில் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாக கருதும் மரபை தங்கள் பஞ்சாங்கப்படி செல்லாது எனக் கூறுவதற்கு பார்ப்பனக் கும்பலுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை. ஆடு, மாடு ஓட்டி வந்த ஆரிய இனத்துக்கு ஆட்டின் (மேஷம்) மீதான காதலும், அறுபது ஆண்டுகள் பிறந்த விதத்தில் பெருமையாகவும் இருந்தால் அவர்கள் குடுமியைத் தட்டிக் கொள்ளட்டும். அதற்காக ஆரியப் பார்ப்பனக் குப்பையை அடுத்தவர் தலையில் கொண்டு வந்து கொட்டி, ’இதுதான் தமிழ்ப் புத்தாண்டு! இவைதான் தமிழர் ஆண்டுகள்’ என்று திணிப்பதையும், தமிழினத்தின் உரிமையை மறுப்பதையும் நாம் அயோக்கியத்தனம், ஆதிக்கம் என்பதால் எதிர்க்க வேண்டும்.
தமிழினம் உள்ளிட்ட எந்தவொரு இனத்திலும் தோன்றிய காலந்தொட்டு பண்பாட்டு அம்சங்கள் சில தொடர்வதும், சில மருவித் திரிந்து மாறுநிலை கொள்வதும், சமூக வரலாற்றுச் சூழலுக்கேற்ப ஒன்றிலிருந்து ஒன்று எனப் புதிய பண்பாட்டு அடையாளங்கள் தோன்றுவதும் நடப்பதுதான். அந்த அடிப்படையில் தமிழினம் தனது பண்பாட்டு அடையாளங்களுடன் திருவள்ளுவர் ஆண்டு என்று ஒரு ஆண்டுக் கணக்கை முன்வைத்தால் திருவள்ளுவர் பிறந்த தேதி தெரியுமா? என நக்கலடிக்கிறார்கள் பார்ப்பனக் கும்பலும், அவர்களது பங்காளிகளும்.
இந்தக் கும்பல்தான் ராமன் பிறந்த இடம் இதுதான் என்றும், கடலுக்கடியில் ஒரு மணல் திட்டைக் காட்டி இது ராமர் பாலம் என்றும், ’இதற்கு அறிவியல் ஆதாரம் எல்லாம் காட்ட முடியாது, இது இந்துக்களின் நம்பிக்கை’ என்றும் தனது அயோக்கியத்தனத்தை அடம்பிடித்து சாதிக்கின்றது. தமிழ்ப் புத்தாண்டு தையா? சித்திரையா? என்ற பிரச்சினையில் நாம் பார்க்க வேண்டியது பார்ப்பன ஆதிக்கமா? இல்லை தமிழின உரிமையா? என்பதாகும். ஏனெனில் வரலாற்றிலும் சரி, தற்காலத்திலும் சரி தமிழினப் பண்பாட்டு அடையாளங்களைப் பார்ப்பன மத ஆதிக்கத்திற்கு கீழ்ப்பணிய வைக்க கட்டுக்கதை கட்டுவதும், தமிழினப் பண்பாட்டு அடையாளங்களைத் தாக்கி அழிப்பதும் ஆரிய மேலாதிக்கத்தின் தொடர் நடவடிக்கையாக உள்ளது.
இசுலாமோ, சமணமோ தங்களுக்கான மத (காலண்டர்) ஆண்டுகளை தமிழாண்டுகள் என்றோ, தமிழ்ப் புத்தாண்டு என்றோ சொல்வது கிடையாது. அவர்களுடைய மத ஆண்டுகளாகவே கடைபிடிக்கிறார்கள். அது போல பார்ப்பனக் கும்பல் சித்திரையை தங்களது மத ஆண்டாக போயஸ் கார்டனில் பொங்கல் வைத்து ஓ.பன்னீர் கிடா வெட்ட, சரத்குமார் கரகாட்டம் ஆட கொண்டாடிக் கொள்வது அவர்களது உரிமை. ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு என மத அடையாளத்தை முன்னிறுத்துவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழினம் மட்டுமல்ல எந்த ஒரு இனத்துக்கும் வரலாற்று வழியில் சிதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட சிறப்பான தமது பண்பாட்டுக் கூறுகளை முன்னிறுத்திப் பேணிக்காக்கும் ஜனநாயக உரிமை உண்டு. அந்த வகையில் மத அடிப்படையில் அல்லாமல், தமிழ் நிலத்தின் திணை மற்றும் சூழலியல் வாழ்வு அடிப்படையில் மொழி ரீதியாக முன்னிறுத்தப்படும் தை அறுவடை மாதத்தை ஆண்டுத் துவக்கமாகக் கொள்வதில் என்ன தவறு? தமிழினம் தன்னிலத்தில் தமக்கான ஆண்டை தையிலே தொடங்கினால் மேஷத்திற்கு என்ன மோசம் வந்தது? போய் ஜெயலலிதாவின் பட்டியில் அமைச்சர்களோடு அதுவும் சேர்ந்து அடைய வேண்டியதுதானே! ’இல்லை இல்லை இது ரொம்ப நாள் பழக்க வழக்கம் மாற்றக் கூடாது’ என்று பார்ப்பது சரியா?
கணவன் இறந்து விட்டால் மனைவியும் உடன்கட்டை ஏறுவதுதான் பாரப்பனப் பழக்க வழக்கம்; சக மனிதன் மேல் சாதி தீண்டாமை பார்ப்பது கூடத்தான் சமூகத்தில் பழக்க வழக்கம். அதற்காக இந்த அயோக்கியத்தனங்களை எப்படி ஆதரிக்க முடியாதோ, அதே போலத்தான் ஆரிய ஆண்டுப் பிறப்பையும், ஆண்டுக் கணக்கையும் தமிழ்ப்புத்தாண்டு என ஏற்க முடியாது. சித்திரை என்ற கணக்கின்படி பார்ப்பன மத ஆதிக்கம், வடமொழி ஆதிக்கம், ஆபாசக் கலாச்சாரம் ஆகியவைகளை அட்டியின்றி ஏற்பதை விட ஆண்டுத் துவக்கக் குறியீடாக தையை ஏற்பதில் தவறேயில்லை.
இப்படி ஏற்பதால் சித்திரையில் கிழிந்த தமிழன் வாழ்வை தை வந்து தைத்து விடும் என்று சொல்ல வரவில்லை. நோய் வந்து கிடப்பதால் ஒருவன் மானங்கெட்டு வாழ வேண்டுமா? என்றுதான் கேட்கிறேன். அரசியல், பொருளாதார இழிவுகளைப் போலவே பார்ப்பனப் பண்பாட்டு இழிவுகளையும் தொழிலாளி வர்க்கம் அனுமதிக்க முடியாது… அனுமதிக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். இடது, வலதுகள் போல ’எங்கே மேய்ந்தால் என்ன? வயிறு ரொம்பினால் போதும்’ என்று வாழ முடியாது. சூடு சொரணையுள்ள தொழிலாளி வர்க்கத்தால்தான் சொந்த விடுதலையைச் சாதிக்க முடியும் என்று கூறுகிறோம். அந்த வகையில் சித்திரை மாதத்து பத்தரை மாற்றுத் தங்கங்களாகக் காட்டிக் கொள்ளும் பார்ப்பன அடிவருடிகளையும் நாம் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும்.
கி.ஆ.பெ. விசுவநாதன் சொன்னார், மறைமலையடிகள் சொன்னார், நா.மு. வேங்கடசாமி நாட்டார், மு.வரதராசன், பாரதிதாசன் சொன்னார் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தமிழறிஞர்களைத் தவிர ”ஏன்? தமிழ்ப் பண்பாட்டுப்படி எங்களுக்கு தைதான்… இப்ப என்னாங்குற… ?” என்று எதிர்த்து வாதாட இவ்வளவு பெரிய தமிழ் வரவு செலவு நாட்டில் ஒரு தமிழறிஞனையும் காணோம். மறைமலையடிகள் அல்ல திருவள்ளுவரே திரும்ப வந்து சொன்னாலும் பார்ப்பனக் கும்பல் ஏற்பதற்கில்லை. ஏனெனில் அவர்களின் நோக்கம் தையை தகர்ப்பது மட்டும் கிடையாது. தொடர்ச்சியாக தமிழ் வழிபாட்டுரிமை, கருவறையில் தமிழ் பாடும் உரிமை, கோட்டூர்புரம் அண்ணா நூலகம் அழிப்பு, கோட்டையில் உள்ள பாரதிதாசன் செம்மொழி நூலகம் தகர்ப்பு என தமிழின அடையாளங்களையே அழிப்பதுதான்.
இது ஏதோ கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காக ஜெயலலிதா மாற்றுகிறார் என்று கருதுவது தவறானது. நோக்கியா, ஹூண்டாய் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுடன் ஏற்படுத்திய அரசு ஒப்பந்தங்களை கருணாநிதி கொண்டு வந்தார் என்று ஜெயலலிதா எதையும் நீக்கவோ, மாற்றவோ இல்லை. பன்னாட்டுக் கம்பெனி விசயத்தில் பார்ப்பனக் கம்பெனியும், திராவிடக் கம்பெனியும் ஒரே கூட்டணிதான். மற்றபடி இது பச்சையான பார்ப்பன மேலாதிக்கம் என்பதற்கு தையின் மீதான தாக்குதல் ஒரு வகை மாதிரி.
மாய்ந்து மாய்ந்து தமிழில் பாட்டெழுதி, தமிழில் பட்டிமன்ற கல்லா கட்டி (ஜெயலலிதாவின் சீலைப்பேன் கு. ஞானசம்பந்தனை விடுங்கள்), குடம் குடமாக தமிழ்த்தேனைக் குடித்து, ஜடம் ஜடமாக கல்விப்புலத்தில் கொட்டிக் கிடக்கும் தமிழறிஞன் ஒருவரும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களின் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிராக வாயே திறக்கவில்லை. தமிழைப் பேசிப் பிழைத்து, தமிழால் பதவியில் அமர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், ’உலகத்துக்கே தமிழாராய்ச்சி’ இப்படி பல வசதியான நாற்காலிகளில் ஆறு கால்களுடன் ஊர்ந்து கிடக்கும் மூட்டைப் பூச்சிகள் மொழி, இன உரிமைக்காக முணுமுணுக்கக் கூட இல்லாமல் ‘பாவத்தின் சம்பளத்தை’ மட்டும் பரிசுத்தமாக எண்ணிக் கொண்டிருப்பது மகா அயோக்கியத்தனம்.
மற்றவர்களை விடவும் மொழி, பண்பாட்டு விசயங்களை ஆய்ந்து அலசி, நுண்மான் நுழைபுலம் வாய்ந்த பேரறிஞர் பெருமக்கள், சமூகத்தில் தன் மொழி, பண்பாடு சார்ந்து ஒரு பாதிப்பு நேர்கையில் தன் வயிறை மட்டும் தடவிக் கொண்டு வாழ்வது கேவலமாகப் படவில்லையா? உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த தாளமுத்து நடராசன் உடம்பில் மொழியுணர்ச்சி தீயாய்ப் பரவியது. ”உணர்ச்சியற்ற உங்களுக்கு உடம்பில் தோல் எதற்கு?” எனத் தமிழறிஞர்களைப் பார்த்து அவர்களின் உணர்ச்சி கேட்பது போல் தெரிகின்றது. அதனால்தான் பெரியார் ஒரு சந்தர்ப்பத்தில் “வள்ளுவரை மன்னிக்கலாம். மற்ற எந்தப் புலவனையும் மன்னிக்க முடியாது. படிப்படியாக ஆயுள் தண்டனை, தூக்குத்தண்டைனை வரையிலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தன்மானமில்லாத தமிழ்ப் புலவர்கள்” என்று ஆவேசத்துடன் கூறினார்.
தைய.. தையா.. என்று பாட்டெழுதி பிழைப்பவர் முதல் தமிழாய்வு செய்து பெருவாழ்வு வாழும் கல்வித்துறை தமிழறிஞர்கள் வரை.. ’எவன்டா என் தை யில் கை வைத்தது!’ என்று முதுகெலும்போடு எழுந்து நின்று கேள்வி கேட்பார்கள் என்று வீதியைப் பார்த்தால், எல்லோர் வாயிலும் இலக்கணப் போலி சீல் வைத்துத் தொங்குகிறது. ’தமிழன் எங்கெல்லாம் போயிட்டான் தெரியுமா?!’ என்று சவடால் விடும் இந்தப் பேர்வழிகள் போயஸ் கார்டனைத் தாண்டி போக முடியாத மர்மம் என்ன..?! பெயரளவுக்கு ஒரு அறிக்கை விட்டால் கூட அந்த அம்மா ஒரு பெட்டி கேஸ் போடும் என்ற பயமா?… இல்லை தமிழ் செத்தால் பரவாயில்லை, தான் செத்தால் இருப்பதை அனுபவிக்க முடியுமா என்ற நயமா..? கல்வியா.. செல்வமா.. வீரமா.. என்று தமிழாய்ந்து விவாதித்து, கடைசியில் செல்வமே என சீல்பிடித்துப் போய் விட்டனர் தமிழறிஞர்கள்.
கவிப்பேரரசும், கோடம்பாக்கத்து குட்டி குட்டி சிற்றரசும், தமிழ்த்துறை தோறும் கோலோச்சும் தனியரசும் கொட்டிக் கிடக்கும் இந்த நாட்டில் தமிழ்ப் பண்பாட்டு உரிமை மீது தாக்குதல் தொடுக்கும் பார்ப்பன ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்க ஓர் ஆளில்லை என்பதோடு இந்தக் கேடுகெட்டத் தமிழறிஞர்கள் சாதாரண உழைக்கும் மக்களைப் பார்த்து, ’தமிழனுக்கு இன்னும் சொரணை வரல சார்… எல்லாம் கோழப்பசங்க..’ என்று பல சந்தர்ப்பங்களில் பேசுவது எவ்வளவு அயோக்கியத்தனம். ஜெயலலிதாவைப் பார்த்து… நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே… என்ற நக்கீரன் அளவுக்கு வேண்டாம், தமிழைப் பிசைந்து தின்று வயிறு வளர்த்த கடமைக்காவது எச்சில் கையால் காக்காய் விரட்ட வீதிக்கு வரக் கூடாதா?
இதை விடக் கேவலம் பார்ப்பன அம்மா தமிழன் தலையில் வடகம் பிழிந்தால் காக்காய் விரட்ட அல்லவா இவர்களிடம் போட்டா போட்டி… உண்மையில் தமிழறிஞர்கள் ஜெயலலிதாவுக்கு பயந்தவர்கள் என்பதை விட, இன்றைய உலகமய சொகுசில் எந்தவிதத்திலும் தன் குடும்பத்திலோ, உணர்விலோ தமிழ் மொழி, பண்பாடு அற்ற பிழைப்புவாதக் கும்பல் என்பதுதான் ஊரறிந்த உண்மை.
இருந்தாலும் நம் தமிழறிஞர்கள் நாம் சொல்லும் அளவுக்கு ஒன்றும் சும்மா கிடக்கவில்லை. ஜெயலலிதா ’சித்திரைதான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம்’ என உத்தரவு போட்டவுடன், பம்பரமாகச் சுழன்று சங்க இலக்கியங்களை அங்க அங்கமாகக் கழட்டி அதற்கு ஆதாரம் தேடிக் களைத்தே போய் விட்டார்கள். “அறம் செய விரும்பு” என்று பண்பாடு போற்றிய அவ்வையார் பெயரில் ஒரு விருதை “பணம் செய விரும்பு” என பள்ளிக்கூடம் கட்டிக் கொள்ளையடிக்கும் பத்மா சேஷாத்ரி திருமதி. ஒய்.ஜி.பி. க்கு கொடுத்தபோது, சொரணையோடு கைதட்டி சிவந்த கும்பலில் எத்தனை தமிழறிஞர்கள் பாருங்கள்… “நாயினும் கீழாய் தாழ்ந்து தாழ்ந்து நக்கிக் குடி! இதையே நல்லதென்று சொல்! பொட்டுப் பூச்சியே! புன்மைத் தேரையே!” என்ற பாரதிதாசனின் வரி ஏனோ ஞாபகத்திற்கு வந்து தொலைக்கின்றது.
___________________________________________
_________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
It is a known fact that the Hindu Relegion is not at all belonging to the Brahmin Community…excepting that nothing new in the article…
கட்டுரை அருமை.
மறுபடியும் பின்னூட்டமிடுகிறேன்…
உலகம் முழுதும் இதே கதை தான்…
நாம் தற்போது ‘ஆங்கில’ காலன்டர் என்று அழைக்கும் க்ரிகோரியன் காலன்டர் போப் க்ரிகோரியின் காலத்தில் வந்த ஒன்றாகும்…
அதை மத சார்பில்லாத கிருத்துவரல்லாதரும் உபயோகிக்கிறார்கள் / உபயோகப்படுத்தப்பட வைக்கப்படுகிறார்கள்…
ஆரிய படையெடுப்பு என்கிறீர்கள்..போர் நடந்ததாக எதாவது ஆதாரன் இருக்கிறதா?
வினவின் உண்மையான வாசகன் என்ற உரிமையில் சொல்கிறேன்…இந்த மாதிரி செத்த பாம்பை அடிப்பதை விட தற்காலத்தில் நடக்கும் கஞ்சிபுர தீண்டாமை வெறி போன்ற விசயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்…
veeranMay 24, 2012 at 7:08 pm Permalink
///இந்த மாதிரி செத்த பாம்பை அடிப்பதை விட ///
ஒரு வேளை செத்த பாம்பை வைத்து மக்களை ஏமாற்றி பணம் பண்ணுவதால், வினவு எழுதுகிறார்களோ? என்னவோ??
//ஒரு வேளை செத்த பாம்பை வைத்து மக்களை ஏமாற்றி பணம் பண்ணுவதால், வினவு எழுதுகிறார்களோ? என்னவோ??//
ஆரிய படையெடுப்பு கதையை வைத்து கழகக்காரர்கள் (கலகக்காரர்கள்?) பணம் பண்ணியுள்ளார்கள் என்பதென்னவோ உண்மை 🙂
ஆரிய படையெடுப்பு இல்லை என்பதே ஒரு கட்டு கதை.
அப்படி உண்மையாகவே இருந்தாலும் அது செத்த பாம்பு தான்…வெட்டி விவாதம் தான்…
பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ மக்கள் தமிழ் பேசினர் என்று சிலர் கூறுகின்றனர்…
அப்போ ஆரியன் யார்?
எவனா இருந்தா இன்றைய தேதியில் நமக்கென்ன?
திராவிட சொம்புகள் பலர் ஜாதியில் சத்திரியன் என்று மீட்டிங் போட்டு கத்துகின்றனர்..
அப்போ அவன் யாரு?
நல்ல வேளை இதன் மூலம் பாட்டாளிவர்க்கத்தின்
பண்பாட்டு வாரிசு கலைஞர்னு சொல்லாம விட்டாகளே
//தமிழினம் மட்டுமல்ல எந்த ஒரு இனத்துக்கும் வரலாற்று வழியில் சிதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட சிறப்பான தமது பண்பாட்டுக் கூறுகளை முன்னிறுத்திப் பேணிக்காக்கும் ஜனநாயக உரிமை உண்டு. அந்த வகையில் மத அடிப்படையில் அல்லாமல், தமிழ் நிலத்தின் திணை மற்றும் சூழலியல் வாழ்வு அடிப்படையில் மொழி ரீதியாக முன்னிறுத்தப்படும் தை அறுவடை மாதத்தை ஆண்டுத் துவக்கமாகக் கொள்வதில் என்ன தவறு? தமிழினம் தன்னிலத்தில் தமக்கான ஆண்டை தையிலே தொடங்கினால் மேஷத்திற்கு என்ன மோசம் வந்தது? போய் ஜெயலலிதாவின் பட்டியில் அமைச்சர்களோடு அதுவும் சேர்ந்து அடைய வேண்டியதுதானே! ’இல்லை இல்லை இது ரொம்ப நாள் பழக்க வழக்கம் மாற்றக் கூடாது’ என்று பார்ப்பது சரியா?//
நீ ஒருத்தன் குத்துக்கல்லு மேரி இன்னும் உசுரோட குந்திகினு இருக்கும்போது வினவு அப்படி சொல்லிடுமா இல்ல சொல்லத்தான் வுட்டுடுவோமா? நீ யாருண்ணே, நீ யாரு???? நீதான்னே இந்த ஒலகத்துல மிஞ்சியிருக்கும் ஒரே புரோட்டாளி வர்க்கத்தின் ஒரே புண்பாட்டு வாரிசு.. இதை உன் தலையில சூடத்த ஏத்தி அதை என் பீச்சாங்கையால அடிச்சு சத்தியம் செய்யவும் தயாரா இருக்கேன்!
பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்.
வேறென்ன சொல்வது?
ஒரு தமிழனாக நான் வெட்கப்படுவது இது ஒன்றால் தான்.
உலகில் சூடு,சுரணை,மான,ஈன வெட்கமில்லாத ஒரு
கூட்டம் இருக்கிறதென்றால் அது சந்தேகமில்லாமல்
என் இனம்தான்.
மொழி பற்று ஒகே.ஆனால் மொழி வெறி தேவையில்லை
என்று இனி எவனாவது சொன்னால் அவன் நாக்கை
அறுத்து காக்கைக்கு போடலாம்.இந்த தாயோளிகள்
இப்படி சொல்லியே,என் இனத்தின் மிச்சமிருந்த
சுரணையும் காணாமல் போக செய்து விட்டார்கள்
ஜெயலலிதா தமிழ் புத்தாண்டு எனும் ஆபாச இழிவை தமிழின் மீதும், தமிழர்கள் மீதும் திணித்த போது… அவரிடம் விருது வாங்கியவர் யார் தெரியுமா? தமிழில் பி.எச்டி. செய்து, தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் 18 ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி துறையில் தலைவராக இருந்தவர்தான்… அவரேதான் தையை தமிழ் புத்தாண்டு என சொல்லி இருக்கிறார்… இவர்கள் எல்லாம் உண்மையில் தமிழ் அறிஞர்கள்தானா?
‘
‘
ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.
SITE: http://thathachariyar.blogspot.com/2011/02/blog-post_02.html
யாரு… தமிழன்தானே… எங்காயவது கௌடியா மடத்தில ரோட்ல பூணுல் விக்கிற கால் வயித்து ஒல்லிப் பாப்பான் பூணுல்அறுத்து கீழ தள்ளிவிட்டு வீரம் பேசுவானே கண்டி… கார்ப்பரேட் பார்ப்பனியத்துக்கிட்ட பல் இளிச்சுகிட்டுதான் வருவான்.. சும்மா நீரு எத்தனி வாட்டி உசுப்பிபேத்தினாலும நடக்காதுண்ணே…..நாம யாரு கைபுள்ளயில்லை…..
“நாயினும் கீழாய் தாழ்ந்து தாழ்ந்து நக்கிக் குடி! இதையே நல்லதென்று சொல்! பொட்டுப் பூச்சியே! புன்மைத் தேரையே!” பாரதிதாசன் சொன்னதை அப்படியே நிறுபிக்கிறார்கள்கள்-தமிழ் அறிஞர்கள்.
// மேழம், அதாவது மேஷ ராசியில் சூரியன் நுழைவதுதான் சித்திரை, ஆண்டுப் பிறப்பு என்றும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகளும் நாரதனும் கிருஷ்ணனும் கூடிப் பிறந்தவை என்றும் ஆபாச, புராண அடிப்படையில் அமையப் பெற்ற பார்ப்பன இந்து மதம் ஆண்டுக்கணக்கை முன்வைக்கின்றது. //
நாரதிக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த 60 பிள்ளைகளும் ஆண்டுக்கொன்றாக முறை வைத்து வந்து தமிழனை சுரண்டித் தின்று விட்டுப் போவதைத் தடுக்க, சைனாக்காரன் போல் எலி, முயல், நாய், பன்றி, பாச்சா, பூரான், கரையான் என்று அவன் சாப்பாட்டு மெனுவை ஆண்டுக்களுக்கு வைத்திருப்பது போல் நாமும் இட்லி, வடை, தோசை, புட்டு, நட்டு என்று முற்போக்கான பெயர்களை வைக்கலாம். தயிர்சாதம், புளியோதரை போன்ற பார்ப்பன அய்ட்டங்கள் கலாசாரச் சீரழிவை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் அதை புறக்கணிக்கலாம். தமிழன் இதை ஏற்க மறுத்தால் தமிழ் புலவர்கள் பெயரை வைக்கலாம். அதிலும் கவனமாக பார்ப்பனீயப் புலவர்கள் பெயரைத் தவிர்க்க வேண்டும். எல்லாத் தமிழ்க் கவிஞனுங்களும் பார்ப்பானுக்கு அடிமைகள், மரண தண்டனைக்குரியவர்கள் என்று தமிழகத்தின் மார்க்ஸ், பெரியார் கொடுத்துவிட்டுப் போன தீர்ப்பை அருள்வாக்காகக் கொண்டு ஒன்லி புரட்சிப் புலவருங்க பெயரை மட்டும் வைக்கலாம்.
// ஆடு, மாடு ஓட்டி வந்த ஆரிய இனத்துக்கு ஆட்டின் (மேஷம்) மீதான காதலும், அறுபது ஆண்டுகள் பிறந்த விதத்தில் பெருமையாகவும் இருந்தால் அவர்கள் குடுமியைத் தட்டிக் கொள்ளட்டும். அதற்காக ஆரியப் பார்ப்பனக் குப்பையை அடுத்தவர் தலையில் கொண்டு வந்து கொட்டி, ’இதுதான் தமிழ்ப் புத்தாண்டு! இவைதான் தமிழர் ஆண்டுகள்’ என்று திணிப்பதையும், தமிழினத்தின் உரிமையை மறுப்பதையும் நாம் அயோக்கியத்தனம், ஆதிக்கம் என்பதால் எதிர்க்க வேண்டும். //
இந்த மாதிரி திடீர் தமிழினப் பற்று ஆட்டின் ரோமங்களைக் கூட சிலிர்க்கவைக்கும் போங்க.. மலையாளி டீ கடைக்காரன் தமிழன் மீது வென்னீரை ஊற்றினால் அது பாட்டாளி வர்க்க ஊடல். அப்போது மட்டும் தமிழன் இன உணர்வை ஒரே அமுக்காக அமுக்கி வைத்துக் கொள்ளாவிட்டால் அவன் இன வெறியன், சாதி வெறியன், தமிழ் முதலாளிகளின் கைக்கூலி, இன்ன பிற.. பிரமாதம்..
ஆரியப் பார்ப்பன ஜெயலலிதா 4 ஆட்டைக் கொடுத்து தமிழர்களை ஆடு மேய்க்கும் கூட்டமாக மாற்றும் பார்ப்பனச் சதியையும் முறியடிக்க முயலவேண்டும்…
// இப்படி ஏற்பதால் சித்திரையில் கிழிந்த தமிழன் வாழ்வை தை வந்து தைத்து விடும் என்று சொல்ல வரவில்லை. நோய் வந்து கிடப்பதால் ஒருவன் மானங்கெட்டு வாழ வேண்டுமா? என்றுதான் கேட்கிறேன். அரசியல், பொருளாதார இழிவுகளைப் போலவே பார்ப்பனப் பண்பாட்டு இழிவுகளையும் தொழிலாளி வர்க்கம் அனுமதிக்க முடியாது… அனுமதிக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம். //
நோயைத் தீர்க்க முடியாவிட்டால் இந்த மாதிரிதான் பார்ப்பான் குடுமியைப் பிடித்துக் கொண்டு முற்போக்குவாதிகளாய் காட்டிக் கொண்டு திரிய வேண்டியிருக்கும்..
// தமிழினம் மட்டுமல்ல எந்த ஒரு இனத்துக்கும் வரலாற்று வழியில் சிதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட சிறப்பான தமது பண்பாட்டுக் கூறுகளை முன்னிறுத்திப் பேணிக்காக்கும் ஜனநாயக உரிமை உண்டு. அந்த வகையில் மத அடிப்படையில் அல்லாமல், தமிழ் நிலத்தின் திணை மற்றும் சூழலியல் வாழ்வு அடிப்படையில் மொழி ரீதியாக முன்னிறுத்தப்படும் தை அறுவடை மாதத்தை ஆண்டுத் துவக்கமாகக் கொள்வதில் என்ன தவறு? //
ஒரு தவறும் இல்லைதான். அதைப் போல சித்திரையை முதல் மாதமாகத் தொடர்வதிலும் பெரிய குற்றம் ஏதும் இல்லையே. சித்திரை முழு நிலவில் இந்திரவிழா கொண்டாடிய தமிழர்கள் அவ்விழாவின் மாதத்தையே முதல் மாதமாக கொண்டாடுவது பெரிய குற்றமா ? பார்ப்பான் பக்தி மாதமான மார்கழியை முதல் மாதமாக்கிருக்க வேண்டுமே, மார்கழியில்தானே வட அயன மாற்றம் நிகழ்கிறது.. தமிழனை விட்டுருங்கப்பா..
நம் ஊர் தமிழறிஞர்களில் மிகப்பலருக்கு ஒரு இழவும் தெரியாது. இவர்களுக்கு அறிவியல் பூர்வமாக மொழியை அணுகும் முறை தெரியாது. மற்ற மொழிகள் குறித்தோ கலாச்சாரங்கள் குறித்தோ கொஞ்சமும் புலமை கிடையாது. வெற்றிலையை குதப்பிக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்து அடுக்கு மொழி அலங்கார வசனம் பேசி ‘கப்ஸா’ விடும் ரகம் இவர்கள் எல்லாம். இந்த தமிழறிஞர்கள் அனைவரும் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் கும்பல். ஆந்திர மாநிலத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள். “தெலுங்கு தேட்ட (தேன்), கன்னட கஸ்தூரி, அரவமு (அதாவது தமிழ்) அர்தவானமு (வெறும் ஓட்டை!)”. இந்த பழமொழிக்கு தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கும்பல் என்ன பதில் சொல்லப்போகிறதோ தெரியவில்லை. மட்டுமல்லாமல் தமிழகத்தில் பேச்சு வழக்கில் இருக்கும் தமிழை ”dabbaa language” என்று வெளியாட்கள் குறிப்பிடுவார்கள். ஈழத்தமிழ் வழக்கு கொஞ்சம் இனிமையானது என கேள்விப்பட்டிருக்கிறேன். கொஞ்ச காலத்துக்கு முன்னர் தன் குடும்ப வளர்ச்சி அரசியலுக்காக ஒரு அரசியல்வாதி ‘தமிழ் மாநாடு’ என்னும் பெயரில் பெரும் செலவு செய்து ஒரு கூத்தை கோவையில் பல நாட்கள் அரங்கேற்றினார். அந்த கூத்து தொடங்குவதற்கு முதல் நாள் அவர் தொலைக்காட்சியில் தோன்றி “தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்” என்று ஒரு அபத்தத்தை பேசினார். இந்த அபத்தம் ’டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் அப்படியே செய்தியாக வெளியாகி பின்னூட்டங்கள் வழியே சந்தி சிரித்தது. உண்மையை சொன்னால் தமிழ் திராவிட மொழிகளுக்கே (கன்னடம் மற்றும் தெலுங்கை பொறுத்த மட்டில்) தாய் கிடையாது. பண்டொரு காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு திராவிட மொழியை மக்கள் பேசினார்கள் என்று கூறுவார்கள். அந்த பழைய திராவிட மொழியானது காலப்போக்கில் வட, நடு மற்றும் தென் பிரிவுகளாக பிரிந்தது. அப்படி பிரிந்த நடு திராவிட மொழியில் இருந்து தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் உருவாயின. தென் திராவிட மொழியில் இருந்து தமிழ், கன்னடம், துளு ஆகிய மொழிகள் உருவாகி பிரிந்ததாக கூறுவார்கள். இங்கே உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக தமிழ் எங்கே வந்தது? தமிழுக்கு இருக்கும் பெருமையெல்லாம் மூன்று. ஒன்று, தமிழ் மொழியானது தான் இருந்து பிரிந்து வந்த தென் திராவிட மொழியை இயல்பில் ஒத்தது (ஒரு தாய்க்கு பல பிள்ளைகள் இருந்தாலும் ஒரே ஒரு பிள்ளை மட்டும் அசப்பிலும் இயல்பிலும் தாயைப்போல இருந்தால் எப்படி இருக்கும்?). இரண்டு, தமிழுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட முறையான மற்றும் தொடர்ச்சியான இலக்கண, இலக்கிய மரபு உண்டு. உலகத்தில் சில மொழிகளுக்கு மட்டுமே இந்த பெருமை உண்டு. மூன்று, முடிந்த வரை வட மொழி தாக்கத்தை தவிர்த்து தன் தனித்தன்மையையும் திராவிடத்தன்மையையும் முடிந்த வரை காப்பாற்றிக்கொண்ட மொழி தமிழ். கன்னடம், தெலுங்கு ஆகியவற்றுக்கு இந்த யோக்கியதை கிடையாது. அவ்வளவு தான் விஷயம். இங்கே தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் எப்படி தாய் ஆனது? ஜப்பானிய தமிழறிஞர் பேராசிரியர் கரஷிமா அவர்கள் “Tamil Nadu is suffering from intellectual vacuum” என்று சும்மாவா சொன்னார்?.
//ஆந்திர மாநிலத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள். “தெலுங்கு தேட்ட (தேன்), கன்னட கஸ்தூரி, அரவமு (அதாவது தமிழ்) அர்தவானமு (வெறும் ஓட்டை!)”. இந்த பழமொழிக்கு தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கும்பல் என்ன பதில் சொல்லப்போகிறதோ தெரியவில்லை. மட்டுமல்லாமல் தமிழகத்தில் பேச்சு வழக்கில் இருக்கும் தமிழை ”dabbaa language” என்று வெளியாட்கள் குறிப்பிடுவார்கள்.//
இதை ஆபாசம் என்று சொல்வேன். இப்போது கொஞ்சம் புரிகிறது. காலம் காலமாக தமிழ் இன, மொழி, கலாசார அழிப்பில் யார் யாரெல்லாம் கை கோர்த்து நின்றனர், நிற்கின்றனர் என்று. நன்றி.
தமிழறிஞர்கள் என்போர் அரசியல்வாதிகளை நக்கிப்பிழைக்கும் குக்கல் கூட்டம் (நிறைய விதிவிலக்குகளும் உண்டு). இந்த கூட்டத்திடம் தமிழும் கிடையாது. அறிவும் கிடையாது. சங்க இலக்கியத்தில் காணப்படும் குமரிக்கண்டம் என்னும் நிலப்பரப்பு லெமூரியா கண்டத்தை குறிப்பதாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கூட்டம் பிதற்றி திரிவதே இதற்கு உதாரணம். லெமூரியா கண்டம் என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில புவியியல் அறிஞர்கள் முன்வைத்த கோட்பாடு. இந்தியாவானது ஆப்பிரிக்காவுக்கு அருகில் இருக்கும் மடகாஸ்கர் போன்ற தீவுகளை உள்ளடக்கி ஆஸ்திரேலியா வரை நீண்ட நிலப்பரப்பாக இருந்தது என இந்த அறிஞர்கள் நம்பினார்கள். ஆனால் “tectonic plate” மற்றும் “continental drift” ஆகிய கோட்பாடுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவுடன் இந்த லெமூரியா கண்டம் கோட்பாடு கழித்துக்கட்டப்பட்டது (பூமி தட்டையானது என்னும் ஆரம்ப கால அறிஞர்களின் கோட்பாட்டை பிற்பாடு வந்த அறிஞர்கள் பூமி உருண்டையானது என்னும் ஆதாரப்பூர்வமான கோட்பாட்டால் முறியடித்ததை போல்). ஆனால் தமிழ் அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டம் இன்னமும் லெமுரியா கண்டம் என்னும் கப்ஸாவை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறது. செம்மொழி தமிழ் மாநாடு கூத்தின் போது இந்த லெமூரியா கண்டத்தை அகழாய்வு செய்ய நிதி வேறு ஒதுக்கப்பட்டது (!). மக்கள் பணம் எப்படியெல்லாம் பாழாகிறது பாருங்கள். அப்படியே லெமுரியா கண்டம் இருந்ததாக ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும் அது இருந்ததாக சொல்லப்பட்ட காலம் முப்பது லட்சம் ஆண்டுகளுக்கும் முன். ஆனால் மனித இனம் தோன்றி வெறும் ஒரு லட்சம் ஆண்டுகள் தான் ஆகிறது. அதிலும் நாடு, நகரம் ஆகிய அமைப்புக்களை ஏற்படுத்தி மனிதன் நாகரீகத்தோடு வாழத்தலைப்பட்டது கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் தான். இங்கே லெமூரியா கண்டம் எங்கே வந்தது?. கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி என்னும் இன்னொரு கப்ஸாவை எடுத்து விடவேண்டியது தான். தமிழ் பேசும் மக்கள் உலகம் பூராவும் ஏன் அடி தின்ன மாட்டார்கள்?. ஜப்பானிய தமிழறிஞர் பேராசிரியர் கரஷிமா அவர்கள் “Tamil Nadu is suffering from intellectual vacuum” என்று சும்மாவா சொன்னார்?.
// முடிந்த வரை வட மொழி தாக்கத்தை தவிர்த்து தன் தனித்தன்மையையும் திராவிடத்தன்மையையும் முடிந்த வரை காப்பாற்றிக்கொண்ட மொழி தமிழ். கன்னடம், தெலுங்கு ஆகியவற்றுக்கு இந்த யோக்கியதை கிடையாது. அவ்வளவு தான் விஷயம்.//
காப்பற்றப்பட்டு வரும் அந்த ‘திராவிட மொழி’க்கு தமிழ் என்று பெயர் இருக்கும் போது ’திராவிட மொழி’ என்று கூறுவது ஏன் ?!
Periyasaamy Ayya gethu padhivu.
Indha unmai purincha podhum.
தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக அறிவியாளில் சிறந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து “சித்திரை” தமிழர்களின் முதல் ஆண்டாக இருந்து வருகிறது. இதற்க்கு காரணம் நாம் விவசாயத்தில் முக்கியத்துவம் கொடுப்பதால்தான். “தை” மற்றும் “மாசி” மாதத்துடன் அறுவடைகள் முடிந்து ஓய்வுக்காலம் ஆரம்பிக்கும். அக்காலங்களில் கோவில் வழிபாட்டு முறைகளை ஒற்றுமையுடன் கொண்டாடுவார்கள். சித்திரை பிறக்கும் . அதுதான் ஆண்டில் முதல் மாதம். கடுமையான வெயில் அடிக்கும். கோடை மழை பெய்யும். உழவர்கள் முதல் உழவை செய்வார்கள். விவசாயத்திற்கு முதல் மாதம். இதைத்தான் கோடானகோடி ஆண்டுகள் முதல் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் கன்னடம், தெலுங்கு, மலையாள மாதங்களும் ஒரு சில நாட்கள் முன்பின் வரும். இது இயற்கை அனுசரித்து நிர்ணயிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டுதான் கருணாநிதியால் “தை” மாதம் வருடத்தின் முதல் மாதமாக கண்டுபிடிக்கப்பட்டு ஒரு காகிதத்தில் எழுதி விளம்பரப்படுத்தி உள்ளார். எதற்கு சாட்சியாக சில தமிழ் தெரிந்த நபர்களை சாட்சிக்கு அளித்துள்ளார். தேவை இல்லாத ஒன்றுக்கு விளம்பரம்.
Regardless of whether you decide to buy an existing home o build anew, there are a few steps that you must folow in th beginning.Assuming that you have started the evaluation process by answering the very first question affirmatively- can I afford to buy or build a new home- it is time to proceed to next step. This is the hardest and the one we all lest wanted to talk about- getting your finances in order. Anyone will feel that there is no relation to the present article…so also the realtion of Tamil New Year month Chithirai and the Jaya Government…Vinavu must concentrate to give more valuable articles than these types of articles..
“தெலுங்கு தேட்ட (தேன்), கன்னட கஸ்தூரி, அரவமு (அதாவது தமிழ்) அர்தவானமு (வெறும் ஓட்டை!)”. இந்த பழமொழிக்கு தமிழறிஞர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கும்பல் என்ன பதில் சொல்லப்போகிறதோ தெரியவில்லை //நாய் மனிதனைக் கடித்துவிட்டால் அது நாயைப் பொறுத்த அளவில் வெற்றி தான் மொழி குறித்த வெட்டிப் பெருமைகள் இந்த இரண்டு மொழிக் காரர்களிடம் உண்டு. இதை பலரிடம் வாதாடி ஆதாரப் பூர்வமாக முறியடித்திருக்கிறேன். சமற்கிருதத்தின் காலை நக்கித்தான் தன் இருத்தலைத் தக்கவைக்கநிலையில் தான் இருக்கின்றன இந்த இரண்டு மொழிகளும். மொழி என்ற சொல் கூட இல்லாத “மொழிகள்” தான் தமிழைப் பழிக்கின்றன வெட்கக் கேடு!!
பண்டொரு காலத்தில் இந்தியா முழுவதும் ஒரு திராவிட மொழியை மக்கள் பேசினார்கள் என்று கூறுவார்கள். அந்த பழைய திராவிட மொழியானது காலப்போக்கில் வட, நடு மற்றும் தென் பிரிவுகளாக பிரிந்தது. அப்படி பிரிந்த நடு திராவிட மொழியில் இருந்து தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் உருவாயின. தென் திராவிட மொழியில் இருந்து தமிழ், கன்னடம், துளு ஆகிய மொழிகள் உருவாகி பிரிந்ததாக கூறுவார்கள்.// இதற்கெல்லாம் ஆதாரம் வேண்டும் சும்மா கூறுகிறார்கள் என்றெல்லாம் “உளறக்” கூடாது.
… “நாயினும் கீழாய் தாழ்ந்து தாழ்ந்து நக்கிக் குடி! இதையே நல்லதென்று சொல்! பொட்டுப் பூச்சியே! புன்மைத் (தெலுங்குத்) தேரையே!”
ஆண்டாண்டு காலமாய் சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு இதை இப்போது மாற்ற எந்த தனி மனிதனுக்கும் உரிமை கிடையாது .அப்படி சொல்பவன் தமிழின துரோகி மட்டுமல்ல தமிழனே அல்ல அதை ஒத்துக்கொல்பவன் அவனது அடிவருடி
இப்போ “தை” க்கு இருக்கட்டும் சித்திரை
இப்போதைக்கு” இருக்கட்டும் சித்திரை.2
இப் “போதை” க்கு இருக்கட்டும் சித்திரை
அருமையான விளக்கம். நன்றி.
//கருணாநிதி போலித்தனமாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக அவர் சோறைத் தின்றால் நாம் வேறொன்றைத் தின்ன வேண்டுமா?//
கருணாவை நியாயமாகவே வெறுப்பவர்களின் சிந்தனை குருடாகும் இடம் இங்கே தான் அதற்கு நல்ல வெளிச்சமிட்ட வரிகள். நன்று.
//இப்படி ஏற்பதால் சித்திரையில் கிழிந்த தமிழன் வாழ்வை தை வந்து தைத்து விடும் என்று சொல்ல வரவில்லை. நோய் வந்து கிடப்பதால் ஒருவன் மானங்கெட்டு வாழ வேண்டுமா? என்றுதான் கேட்கிறேன்//
தமிழ் தமிழுணர்வு என்பவர்களை பித்துக்குளியாக கருதும் பிழைப்புவாதிகளுக்கு நல்லதொரு விளக்கம். நன்று
அன்பு வினவுக்கு..,
இந்த கட்டுரையை வெளியிட்டதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.. தை புத்தாண்டை மாற்றியதற்கு பார்பன ஆ.தி.மு.க திருட்டு கும்பல்களுக்கு சரியான செருப்படியாக அமைந்தது இந்த கட்டுரை..பல நாட்களுக்கு முன் வினவு கேள்வி பதில் பகுதியில் தை திங்கள் தமிழ் புத்தாண்டை மாற்றியது தொடர்பாக இந்த குள்ளநரி கும்பல்களின் சதி திட்டத்தை எடுத்து கூறும் வகையில் ஒரு கட்டுரை வெளியிட வேண்டும் என்று வினவிடம் வேண்டி கொண்டேன் .. என்னை போன்று பலரும் கேட்டு இருக்கலாம்.. எது எப்படியோ என் சார்பாகவும் என் போன்று தமிழ் அறிஞர்களின் சார்பாகவும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்… மேலும் இந்த கட்டுரையை ஆயிரம் பிரதிகள் எடுத்து கொடுத்துள்ளேன் கொடுத்ததும் வருகிறேன் .. நன்றி
1) ‘பங்குனி மாதம் கடை மாதம்’ என்று அகத்தியர் பன்னாயிரத்தில் தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது.
2_ ‘சூரியனே’ இந்த உலகிற்கு பிரதானம். சூரியன் 1 வருடம் தன சுற்றை முடித்து ‘மீண்டும்’ மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும் மாதமே ‘சித்திரை’ மாதம்
இதை எல்லாம் விடுத்து ‘ஆரியம் – திராவிடம்’ என்று அளந்து விடுவது எல்லாம் சும்மா.
‘தை’ மாதமே ‘தமிழ் புத்தாண்டு’ என்று ‘சங்க இலக்கியங்கள்’ (அல்லது) ‘காப்பியங்களில்’ உள்ளதா ? அதெப்படி ‘சங்க காலத்தில்’ வாழ்ந்தவர்கள் எவருமே ‘தையை’ பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியும் ?