நேற்று (ஜனவரி 26 அன்று) நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்(!). அதற்கு ஓரிருநாள் முன்பாக பிரேசிலின் பழங்குடி மக்கள் குறித்து இனவெறி கக்கும் கருத்துக்களை முன்வைத்ததற்காக கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். பிரேசிலில் வஞ்சிக்கப்படும் மக்களை குறித்து மோசமாக விளிப்பது என்பது அவருக்கு ஒன்றும் புதிதல்ல.

கடந்த பத்தாண்டுகளாக அவர் பல்வேறு விசமத்தனமான கருத்துக்களை கூறி வருகிறார். நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் தன்னுடைய சரியான பங்காளியை தான் அழைத்து வந்திருக்கிறார் போலும். போல்சொனாரொவின் முதன்மையான 10 கருத்து முத்துக்கள்,

1) மனிதர்களாகி வரும் பிரேசிலிய பழங்குடி மக்கள்:

பிரேசிலின் “பழங்குடியினர் மாற்றமடைந்து வருகின்றனர் என்பதை மறுக்க முடியாது. அவர்கள் நம்மை போலவே வேகமாக மனிதர்களாகி வருகிறார்கள்” என்று இனவெறி கக்கும் வார்த்தைகளை முகநூலில் பகிர்ந்திருந்தார் போல்சொனாரோ.

“எப்போதுமே பழங்குடி மக்கள் மற்றவர்களை போலவே மனிதர்கள் தாம். போல்சொனரோ தான் தன்னை மனிதருக்கும் குறைவாக வெளிப்படுத்திக்கொள்கிறார்” என்று பிரேசிலை சேர்ந்த ஊடகவியலாளர் லியோனார்டோ சாகாமோட்டோ (Leonardo Sakamoto) கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

2) மக்களை கொடுமைப்படுத்துவது நல்லது:

அரச பயங்கரவாதத்தையும் கொடுமைகளையும் ஆதரிப்பவர் பிரேசில் ஜனாதிபதி. “பிரேசிலிய சிறைச்சாலைகள் அருமையான இடங்கள் … அவை மக்கள் தங்கள் பாவங்களுக்கான விலையை கொடுக்கும் இடங்கள், சொகுசான வாழ்க்கை வாழ முடியாது” என்று அவர் 2014-ல் கூறினார். “நான் சித்திரவதை செய்வதற்கு ஆதரவானவன் என்பது உங்களுக்கு தெரியும். மக்களும் ஆதரவாக உள்ளனர்” என்று 1999-ல் குரூரமாக கருத்திட்டுள்ளார்.

3) அரசு மக்களை கொல்ல வேண்டும்:

இராணுவ சர்வாதிகாரம் பிரேசிலுக்கு நல்லது என்று போல்சனாரோ கருதுகிறார், மேலும் போதுமான மக்களைக் கொல்லாததுதான் அது செய்த ஒரே தவறு என்கிறார். “சில அப்பாவிகள் இறந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை; ஒவ்வொரு போரிலும் அப்பாவி மக்கள் இறக்கின்றனர். என்னுடன் 30,000 பேர் சேர்ந்து இறந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்… சர்வாதிகாரம் இன்னும் அதிக மக்களைக் கொன்றிருந்தால் நாட்டின் நிலைமை இன்று சிறப்பாக இருக்கும்.” என்கிறார்.

படிக்க:
♦ காவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன ?
♦ ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி

4) மக்களாட்சியை விட உள்நாட்டுப் போர் சிறந்தது:

ஒரு தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், மக்களாட்சி மீதான தனது வெறுப்பை பல சமயங்களில் பிரேசில் ஜனாதிபதி பகிரங்கப்படுத்தியுள்ளார். சர்வாதிகாரத்தைக் கொண்டாடும் போதும், போதுமான மக்களைக் கொல்லவில்லை என்பதற்காக அதைத் கண்டிக்கும் அதே வேலையில் பிரேசிலுக்கு உள்நாட்டுப் போர் தேவை என்றும் போல்சனாரோ கூறினார்.

“வாக்களிப்பதன் மூலம் நீங்கள் இந்த நாட்டில் எதையும் மாற்ற மாட்டீர்கள், இல்லையா? ஒன்றுமில்லை! உண்மையில் எதுவும் இல்லை! கெடுவாய்ப்பாக, நாங்கள் இங்கே ஒரு உள்நாட்டுப் போரைத் தொடங்கும் நாளில் மட்டுமே நீங்கள் மாற்றுவீர்கள்.”

5. பழங்குடி மக்கள் “அழிக்கப்பட்டிருக்க வேண்டும்”:

தனக்கு பிடிக்காதவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக போல்சொனாரோ விரும்புகிறார். “பழங்குடி மக்களை கொன்றழித்த அமெரிக்கர்களை போல பிரேசிலிய குதிரைப்படை திறமையாக செயல்படவில்லை” என்று 1998-ல் பழங்குடி குழுக்களைப் பற்றி அவர் சொல்லியிருக்கிறார்.

6) அழகில்லா பெண்ணை வல்லுறவு செய்யமாட்டேன்:

2014-ம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினர் மரியா டூ ரொசாரியோவுடன் (Maria do Rosario) வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது மரியா அசிங்கமானவர் என்றும் தூய்மையற்றவர் என்பதால் அவரை ஒருபோதும் பாலியல் வல்லுறவு செய்யமாட்டேன் என்று மோசமாக போல்சனாரோ விளித்தார். “ஏனென்றால் நீ அதற்கு தகுதியற்றவள்… தூய்மையற்றவள்” என்றார். பிரேசில் இராணுவ சர்வாதிகாரத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி ரொசாரியோ பேசிக்கொண்டிருந்த போது இந்த பதில் அவருக்கு கிடைத்தது.

போல்சனாரோ தனது வார்த்தைகளுக்கு ஒருபோதும் வருத்தம் தெரிவிக்கவில்லை. பின்னர் செய்தித்தாள் நேர்காணலில், ”ரொசாரியோ வல்லுறவுக்கு தகுதியற்ற அளவிற்கு அவள் மிகவும் அசிங்கமானவள். ” என்றார்.

7) மகன் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் “விபத்தில் சாக வேண்டும்”:

அடுதததாக நங்கை, நம்பி, ஈரர், திருனர் ( LGBTQIA) உள்ளிட்ட வெவ்வேறு பாலின இயல்புகள் கொண்ட சமூகம் போல்சனாரோவின் தாக்குதலுக்கு ஆளானது. 2011-ம் ஆண்டில், “ஒரு ஓரினச்சேர்க்கை வழக்கம் கொண்ட மகனை நேசிக்க இயலாது … பெரிய மீசை வைத்த மனிதனாக அவனை காட்டுவதை விட விபத்தில் அவன் இறப்பதையே விரும்புகிறேன்” என்று கூறினார்.

8) அரசு பணத்தை பாலியல் தேவைக்கு பயன்படுத்தியது:

ஒரு காங்கிரஸ் உறுப்பினராக தனக்கு கிடைத்த வீட்டு கொடுப்பனவை (housing allowance) பாலியல் விருப்பத்திற்கு பயன்படுத்தினேன் என்பதை வெளிப்படையாக பேசியிருக்கிறார். “அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதால், பாலியல் இச்சைக்கு பணத்தை பயன்படுத்தினேன்” என்று அவர் 2018-ல் ஒரு பேட்டியில் கூறினார்.

9) அடிமைகளின் சந்ததியினர் குண்டாக இருப்பதால் அவர்களுக்கு “ஒன்றும் செய்யாதீர்கள்”:

ஏப்ரல் 2017 உரையில், அடிமைத்தனத்திலிருந்து தப்பிப்பிழைத்த ஆப்பிரிக்க மக்களின் சந்ததியினர் ஏற்படுத்திக்கொண்ட ஒரு குடியேற்றத்தை (quilombo)பற்றி பேசினார். “நான் ஒரு குடியிருப்பை பார்வையிட்டேன். அங்கு ஆப்பிரிக்க – வம்சாவளியினரின் குறைந்தபட்ச எடையே ஏழு அரோபாக்களை அல்லது 90 கிலோ (ஸ்பைன் மற்றும் போர்த்துகல்லின் எடை அளவீடு ) இருந்தது. அவர்கள் ஒன்றும் செய்வதில்லை! அவர்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு கூட தகுதி படைத்தவர்கள் அல்ல.”

படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்
♦ பறிபோன புத்தம் புதிய கோட்டு – பரிதவிப்பில் அக்காக்கிய் !

10) ஆண்கள் அளவிற்கு பெண்களுக்கு ஊதியம் கொடுக்கக்கூடாது:

மகப்பேறு விடுப்பு போன்ற “சொகுசான தொழிலாளர் உரிமைகள்” கிடைத்ததிலிருந்து ஆண்களைப் போலவே பெண்கள் சம்பளம் பெறுவது நியாயமற்றது என்று 2016-ம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் போல்சனாரோ கூறினார். “ஒரு ஆணுக்கு கொடுக்கும் அதே சம்பளத்துடன், ஒரு பெண்ணைப் பணியமர்த்த மாட்டேன்” என்று அவர் கூறினார்.

தமிழாக்கம் : சுகுமார்
நன்றி :  தி வயர். 

24 மறுமொழிகள்

 1. உங்களின் மோடி ஒப்பீடு தவறு, இவரை அப்படியே பெரியாரோடு ஒப்பிடுவது தான் சரியாக இருக்கும். அநாகரிகமாக கீழ்த்தரமாக பேசுவதில் பெரியார் ஒரு expert என்று படித்து இருக்கிறேன். பிரேசில் பிரதமர் – பெரியார் ஒப்பீடு தான் சரியாக இருக்கும்.

  பிரேசில் பூர்வகுடி மக்களுக்கு எதிரான கிறிஸ்துவம் நிகழ்த்திய அழிவை பற்றி பல முறை சொல்லியிருக்கிறேன் அதற்கு இந்த கட்டுரை மேலும் ஒரு ஆதாரம்.

  பிரேசில் பிரதமர் சொன்னது போல் தான் பெரியாரும் சொல்லியிருக்கிறார், தமிழர்கள் காட்டுமிராண்டிகள் அவர்கள் ஆங்கிலம் படித்து ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை ஏற்று கொண்டால் தான் அறிவாளிகளாக மனிதர்களாக மாறலாம் என்று சொன்னவர் பெரியார்.

  • ஒரு தமிழனான பெரியார் “தமிழர்கள் காட்டுமிராண்டிகள்” என்று சொல்லி தமிழர்களை வேற்று மொழியினருக்கு அடங்கிக்கிடக்கச் சொன்னால் நீங்கள் சொல்வது போல அவரை கோடரிக்காம்பு என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் எங்கும் எப்போதும் யாரும் யாருக்கும் அடிமை பட்டுக் கிடப்பதை அவர் ஆதரிக்கவேயில்லையே. சுயமரியாதை என்பது இயக்கத்தின் பெயர் மட்டும் அல்ல.

   அநாகரிகமாக கீழ்த்தரமாக பேசுவதில் பெரியார் ஒரு expert என்று சொல்வதற்கு ஆதரமாக ஏதாவது உதாரணம் கொடுங்களேன் மணிகண்டன்.

   அநாகரிகம் கீழ்த்தரம் இவைதான் (பிரேசில் அதிபர் கூற்றுக்கள்):

   பிரேசிலிய சிறைச்சாலைகள் அருமையான இடங்கள் … அவை மக்கள் தங்கள் பாவங்களுக்கான விலையை கொடுக்கும் இடங்கள்

   சர்வாதிகாரம் இன்னும் அதிக மக்களைக் கொன்றிருந்தால் நாட்டின் நிலைமை இன்று சிறப்பாக இருக்கும்.

   பழங்குடி மக்களை கொன்றழித்த அமெரிக்கர்களை போல பிரேசிலிய குதிரைப்படை திறமையாக செயல்படவில்லை.

   ரொசாரியோ வல்லுறவுக்கு தகுதியற்ற அளவிற்கு அவள் மிகவும் அசிங்கமானவள்.

   ஒரு ஆணுக்கு கொடுக்கும் அதே சம்பளத்துடன், ஒரு பெண்ணைப் பணியமர்த்த மாட்டேன்.

   கூலியுழைப்பும் மூலதனமும் விளக்கிச் சொல்வதை புரிந்துகொண்டால் இதைப் புரிந்து கொள்ளலாம்: ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, (தனியார்) மூலதனத்தின் நலனுக்கு வேண்டிய ஒரு உழைப்புச் சக்தியைத்தான் பெற்றெடுக்கிறாள். தனியுடைமைச் சமுதாயத்தின் கீழ் உண்மையில் அந்தக் குழந்தை அந்தப் பெண்ணுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் ஒரு சுமைதான். அப்படியிருக்கும்போது ஒரு ஆணுக்கு கொடுக்கும் அதே சம்பளத்துடன், ஒரு பெண்ணைப் பணியமர்த்த மாட்டேன். என்று பிரேசில் அதிபர் கூறியிருப்பது அக்கிரமமான திசைதிருப்பும் பேச்சு.

   மணிகண்டன் சாரிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.
   பெரியாரின் அநாகரிகமான பேச்சுக்களை எடுத்து விடுங்கள்.

   • // “தமிழர்கள் காட்டுமிராண்டிகள்” என்று சொல்லி தமிழர்களை வேற்று மொழியினருக்கு அடங்கிக்கிடக்கச் சொன்னால் நீங்கள் சொல்வது போல அவரை கோடரிக்காம்பு//

    நிச்சயம் பெரியார் கோடரிக்காம்பு தான்… அவர் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி, தமிழ் வேண்டாம் என்று ஆங்கிலத்தை படிக்க சொன்னார், இங்கிலாந்து வெளியேற கூடாது தொடர்ந்து இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டும் அல்லது தமிழகத்தையாவுது ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்று சொன்னவர் பெரியார்.

    ஆங்கிலேயர்களின் அடிமைகளாகவே தமிழர்களை மாற்ற பார்த்தவர் பெரியார்.

    பெரியார் ஒரு ஆங்கிலேய அடிமை… பெரியாரின் அடிமை சிந்தனை எந்தளவுக்கு வேரொடோடி இருந்தால் இந்தளவுக்கு வக்கிரம் பிடித்தவரை போல் தமிழர்களை ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக மாற்ற பார்த்து இருப்பார்.

    பெரியாரின் ஹிந்து விரோத வக்கிரங்களை கிறிஸ்துவ மத மாற்ற கூட்டங்கள் பயன்படுத்தி கொள்கின்றன.

    பெரியாருக்கு தெரியாத விஷயம், ஹிந்து மதத்தில் மட்டுமே கடவுள் மறுப்பு கொள்கை உள்ளது கிறிஸ்துவத்திலோ அல்லது இஸ்லாமிலோ கடவுள் மறுப்பு கொள்கை கிடையாது.

    ஹிந்து மதத்தில் மட்டுமே கடவுளின் இருப்பை கேள்வி கேட்க முடியும்.

    கிறிஸ்துவ உலகம் சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக்கொண்டு இருந்த போது இங்கே இந்தியாவில் பூமியை பற்றியும் மற்ற கிரகங்கள் பற்றியும் சொல்லி, பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது. என்று தெளிவாக சொன்னார்கள்.

    பெரியார் கிறிஸ்துவ மூட நம்பிக்கையின் பிரதிநிதி.

    பெரியார் – பிரேசில் பிரதமர் ஒப்பீடு தான் சரியாக இருக்கும்.

    • //ஹிந்து மதத்தில் மட்டுமே கடவுளின் இருப்பை கேள்வி கேட்க முடியும்.//

     ஏனென்றால் இந்துமத ஜனத்தொகையை அதிகப்படுத்திக் காட்டுவதற்குப் பார்ப்பனர்களுக்கு வேறு வழியில்லை. அதாவது 2000 வருடங்களாக இந்தியாவில் நிலவிய ஆறுவகை சிந்தனை மரபினரையும் (இவற்றுள் வேதாந்தத்தைத் தவிர பிறர் நாத்திக மூலம் கொண்டவர்கள் – பார்க்க “இந்திய நாத்திகம் – தேவிப்ரசாத் சட்டோபாத்தியாயா) ஆசீவகம், சமணம், பவுத்தம் போன்ற நாத்திக மூலம் கொண்ட சிரமணர்களையும் (பார்க்க “பகவான் புத்தர்” – தர்மானந்த கோஸம்பி) பசுவேஸ்வரையா, ஐயா வைகுண்டர், வள்ளலார் போன்ற பார்ப்பன எதிர்ப்புப் புரட்சியாளர்களையும் இந்துக்கள் என்று தலைக்கணக்கு காட்ட வேண்டுமானால் நாத்திகத்துக்கு இடம் கொடுப்பது இந்துமதம் எனும் சொல்லாடல் மூலம்தானே முடியும்.

     இருக்கட்டும்.

     பெரியார் ஒரு ஆங்கிலேய அடிமை…
     பெரியார் கிறிஸ்துவ மூட நம்பிக்கையின் பிரதிநிதி…
     ரஜினி ஒரு சிறந்த தலைவர்…
     போன்ற புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

     • உங்களுக்கு தெரிந்தது அவ்வுளவு தான், மஹாபாரதத்திலேயே கடவுள் கிருஷ்ணர் முன்பே நீ கடவுள் இல்லை ஏமாற்றுக்காரன், இது தெரியாமல் எல்லோரும் உன்னை கடவுள் என்று சொல்கிறார்கள் என்பதை அரசவையில் கிருஷ்ணர் முன்பே சொல்வார்கள்.

      கடவுள் மறுப்பு நாத்திகம் என்பது இப்போது தோன்றியது அல்ல… ஆரம்பம் முதலே ஹிந்து மதத்தில் உள்ள ஒரு விஷயம்.

      பெரியார் ஹிந்து கடவுள்களை இழிவு செய்தது போல் இஸ்லாமிய கடவுளையோ அல்லது கிறிஸ்துவ கடவுளையோ இழிவு செய்து இருந்தால் அவர் உயிரோடு இருந்து இருக்க மாட்டார்.

      இஸ்லாமிய கடவுளை பற்றி ஒரு கார்ட்டூன் போட்டத்திற்கே கொலை செய்ய துடித்தார்கள்.

      பிரேசிலில் கிறிஸ்துவ கடவுளை இழிவு கூட செய்ய வேண்டாம், நீங்கள் கடவுள் மறுப்பாளராக இருந்தாலே போதும் உங்கள் வாழ்க்கை முடிந்து விடும். பெற்ற தாயே மகன் கிறிஸ்துவத்திற்கு எதிராக செயல்பட்டான் என்பதற்காக கொலை செய்யும் நாடு பிரேசில்.

      பெரியார் மற்றும் வினவு கூட்டங்கள் ஹிந்து மதத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

      • நாத்திக வாதிகள், லோகாயதவாதிகள், சார்வாகர்கள், வேதமறுப்பாளர்கள், இவர்களிடமெல்லாம் நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது போல வைதீக பார்ப்பன மதம் சாத்வீகமாக நடந்து கொள்ளவில்லை. சற்றேனும் பார்ப்பன செய்திகளையும் புத்தகங்களையும் விட்டு வெளியே வந்து வாசித்துப் பாருங்கள்.

       மகாபலி, இரணியன், ராவணன், மற்றும் சமன பவுத்த துறவிகள், என்று ஆரம்பித்து, அந்த படுகொலைகள் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கல்புர்கி, கௌரி லங்கேஷ், போல.

       • இவற்றையெல்லாம் விட முக்கியம், பார்ப்பனீயத்துக்குப் பணிய மறுத்த சிறுதெய்வம் எனும் ‘முன்னோர் வழிபாட்டு’ மக்களை ஈவிரக்கமின்றி தாக்கியிருப்பதுதான் பார்ப்பனீயம்.

        மனுஸ்மிருதியைப் போன்ற ஈவிரக்கமற்ற, மனிதத்தன்மையற்ற கொடூரமான civil code உலகில் வேறெங்குமே இல்லை. (-அம்பேத்கர்)

        இந்தியாவின் உண்மையான சரித்திரம் (புராணங்களின் சரித்திரம்) எல்லாம் பார்ப்பனீயத்துக்கும் பவுத்தத்துக்கும் இடையிலான போராட்டச் சரித்திரமே. (-அம்பேத்கர்)

        • இன்று அந்தப் பார்பனீயத்துக்குக் கிடைத்திருக்கும் புதிய பெயர்தான் இந்து மதம். அது மேலே சொன்ன எல்லாரையும் விழுங்கி பார்ப்பன அடிமைகளாக (அடிமைகளை மட்டும்) உமிழுகிறது.

 2. மோடி இது வரையில் இஸ்லாம் பற்றியோ அல்லது கிறிஸ்துவம் பற்றியோ ஒரு வார்த்தை கூட தவறாக பேசியதில்லை. இஸ்லாமிய தீவிரவாதத்தை கூட பாக்கிஸ்தான் தூண்டி விடும் பயங்கரவாதம் என்றே சொல்லியிருக்கிறார். மோடிக்கு எதிராக நீங்கள் சொல்லும் பல குற்றசாட்டுகள் (குடியுரிமை சட்டம் உட்பட) கற்பனை மற்றும் உங்களின் வன்மத்தை காட்டுவதாகவே இருந்து இருக்கிறது.

  • 1. காரில் அடிபடும் நாயும் காவி வன்முறையில் சாகும் முஸ்லிம்களும் சமம்தான் என்று சொன்னவரை இப்படிப் பாராட்டுகிறீர்கள்.
   2. காஷ்மீர் மக்களின் போராட்டமும், 70 ஆண்டுகளாகக் காவிகள் நாட்டில் வழிபாட்டுத் தலங்களில் வைத்த குண்டுகளும் கூட உங்கள் பார்வைக்கு “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்று தெரிகிறதே அதற்கு யார் காரணம். அந்தப் பழியும் பாகிஸ்தான் மீது எப்படி விழுகிறது. இதைத்தான் விமர்சிக்கிறோம்.
   3. “கற்பனை மற்றும் வன்மம்” இதற்கு ஏதாவது சுயநலமான காரணம் இருப்பதாக உணர்ந்துள்ளீர்களா. இருந்தால் சொல்லுங்கள்.

   • 1. காரில் அடிபடும் நாயும் காவி வன்முறையில் சாகும் முஸ்லிம்களும் சமம்தான் என்று சொன்னவரை இப்படிப் பாராட்டுகிறீர்கள்.

    மோடி என்ன சொன்னார் என்று முழுமையாக தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள். வன்முறைகளுக்காக நீங்கள் வருந்துகிறீர்களா என்று கேள்வி கேட்டதற்கு… காரில் போகும் போது நாய் குறுக்கே வந்து இறந்து விட்டால், நாம் காரின் பின்னால் உட்கார்ந்து இருந்தாலும் நமக்கு வலிக்கும் வேதனை அடைவோம். நான் முதலில் மனிதன் வன்முறையால் வேதனை அடைகிறேன் என்று சொன்னார்.

    இதில் என்ன தவறு கண்டீர்கள் ? மோடி சொன்னதை அப்படியே வினவு கூட்டங்கள் திரித்து குஜராத் கலவரத்தில் இறந்தவர்களை மோடி நாய்க்கு சமம் என்று சொன்னார் என்று பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

    2. காஷ்மீர் மக்களின் போராட்டமும், 70 ஆண்டுகளாகக் காவிகள் நாட்டில் வழிபாட்டுத் தலங்களில் வைத்த குண்டுகளும் கூட உங்கள் பார்வைக்கு “இஸ்லாமியத் தீவிரவாதம்” என்று தெரிகிறதே அதற்கு யார் காரணம். அந்தப் பழியும் பாகிஸ்தான் மீது எப்படி விழுகிறது. இதைத்தான் விமர்சிக்கிறோம்.

    இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு பாகிஸ்தான் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் (நக்சல் மாவோ) முக்கிய காரணமாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. உங்களை போன்ற ஆட்களுக்கு தாவூத், ஹபீப் சையத் எல்லாம் அப்பாவிகள்.

    3. “கற்பனை மற்றும் வன்மம்” இதற்கு ஏதாவது சுயநலமான காரணம் இருப்பதாக உணர்ந்துள்ளீர்களா. இருந்தால் சொல்லுங்கள்.

    நிச்சயம் இருக்கும் என்றே சந்தேகப்படுகிறேன், காரணம் வினவு கூட்டங்களின் செயல்கள் பலவும் சீனா பாகிஸ்தான் சார்பாகவே உள்ளது, இந்தியாவை நாசம் செய்வது சீனா பாகிஸ்தான் குறிக்கோள் அதற்கு வினவு கூட்டங்கள் ஆதரவாக இருக்கலாம்… ஒரு சின்ன ஆதாரம் வினவின் “தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன ” என்ற கட்டுரையில் இருக்கும் இந்திய வரைபடத்தை பாருங்கள் காஷ்மீரின் ஒரு பகுதியை சீனாவிற்கும் இன்னொரு பகுதியை பாகிஸ்தானுக்கும் கொடுத்து வரைபடம் போட்டு இருக்கிறார்கள் (இது சீனா போட்டு இருக்கும் இந்திய வரைபடம்)

    • 1. ஆர்.எஸ்.எஸ் உம் பிஜேபியும் பார்ப்பன ஆதிக்க வெறியற்றவை என்று நிரூபிக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். ஆனால் அதற்கு அவர்களே ஆசைப்படவில்லை.
     2. இந்தியாவில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு பாகிஸ்தான் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் (நக்சல் மாவோ) முக்கிய காரணமாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. என்ற முடிவு ஆளும் வர்க்கத்தின் செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எடுத்திருக்கிறீர்கள் என்பதே உண்மை. சரி குண்டு வெடிப்புக்கு நக்சல்-மாவோ காரணம் என்றாலும் நக்சல்-மாவோ உருவாவதற்கு யார் காரணம். பார்ப்பன-பனியா கார்பரேட் தீவிரவாதத்தால்தானே கடந்த 30-35 ஆண்டுகளில் 5 கோடிக்கு மேல் மலைவாழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
     3. முதலாளித்துவப் பாதைக்கு மாறிவிட்ட இன்றைய சீனத்தைப் பற்றி கடும் விமர்சனங்கள் வினவு தளத்தில் வெளியாகியிருக்கிறது. பழைய செஞ்சீனத்தின் மீதான காதல் இந்திய உழைக்கும் வர்க்கத்தில் சிலருக்கு இருந்தது என்றால் அது பொதுவுடைமையின் மீதான காதல், நல்வாழ்க்கைமீதான காதல் போலத்தான். சில பிஜேபி தமிழர்கள் குஜராத் மாடல் வளர்ச்சி மீது காதல் கொள்வது போல அதை எடுத்துக்கொள்ளலாம். கோட்பாடுகள் மீதான காதலை மாநிலம் எனும் கோடு தடுக்காத போது, தேசம் எனும் கோடு ஏன் தடுக்க வேண்டும். உண்மையில் தேசம் என்பது உழைக்கும் வர்க்கத்துக்குச் சம்பந்தமில்லாதது அல்லவா.

     • பிஜேபி RSS மீதான உங்களை போன்றவர்களின் வன்மம் பொய்களை அடிப்படையாக கொண்டது அதில் உண்மையில்லை.

      கம்யூனிஸ்ட்களின் சீனா மீதான பாசம் மிக கேவலமானது… 1962 இந்தியா சீனா போரின் போது சீனாவை ஆதரித்த பச்சை துரோகிகள் கம்யூனிஸ்ட்கள், போரில் காயமடைந்த இந்திய ராணுவத்தினருக்கு ரத்தம் கொடுக்க கூடாது என்று சொன்னவர்கள் இந்த மனித இன விரோதிகள்.

      இந்திய கம்யூனிஸ்ட்கள் பாக்கிஸ்தான் சீனா கைக்கூலிகள் அதனால் தான் JNU வில் இந்தியாவை பல துண்டுகளாக சிதறடிப்போம் என்று பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

      • //சீனாவை ஆதரித்த பச்சை துரோகிகள்…//
       ஆகா!
       சீனாவுக்கு சப்போர்ட் பண்ண இன்றைய தேதியில் எனக்கு ஒரு காரணமும் இல்லை. ஆனால் உங்களுக்கு, இந்திய கார்பொரேட்களின் நலனில் அதாவது பார்ப்பனீய-பனியா இந்திய தேசியத்தின் நலனில் உங்களுக்கு எவ்வளவு அக்கறை!

       இருக்கட்டும். என்றாவது புரிந்து கொள்வீர்கள்.

  • நன்றாக ‘ஆர் எஸ் எஸ்’ வேலை செய்கிறார் ம.க. செய்த அவதூறு பெரியார் ஆபாசமாக, அநாகரிகமாக பேசுவார் என்பது. அதைச் சொல்லுங்கள் என்றால் பதிலைக் காணோம். சிறு குழந்தையைக் கூட ஐயா என விளித்து மரியாதயுடன் பெரியார் பேசுவார் என்பதை எதிரிகளும் கூட பதிவு
   செய்துள்ளனர். கடவுள் நம்பிக்கை அற்ற பெரியார் பொது நிகழ்வில் கடவுள் வாழ்த்தின் போது சபை நாகரிகத்தை மதித்து தள்ளாத வயதிலும் எழுந்து நின்று மரியாதை செய்தவர் எனவும் பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த சங்கியோ எந்த கூச்ச நாச்சமுமின்றி
   சேற்றை வாரி இறைக்கிறது. இது சங்கி கும்பல்கள் திட்டமிட்டு செய்கின்ற கழிசடைத்தனமான இழிசெயல். இதோடு இந்த இழி செயலை நிறுத்திக் கொள்ளவும்.

   • பெரியார் பேசிய அசிங்கமான வார்த்தைகளை எழுத முடியாது ஆனால் அதற்கு ஆதாரம் கொடுக்க முடியும்.

    விடுதலை இணையதளத்தில் பெரியார் சொன்னதாக இருக்கும் வார்த்தைகள் இது “நான் சற்று தவறான வார்த்தை – சற்று அசிங்கமானது என்று கருதும்படியான வார்த்தை உபயோகப் படுத்தினாலும் யாரும் கோபித்துக் கொள்ள வும் மாட்டார்கள்” அவர் பேசிய அசிங்கமான வார்த்தைகள் அடங்கிய பேச்சுக்கள் பல Youtube ல் உள்ளது.

    இந்த திராவிட அரசியல்வாதிகளால் தமிழகத்தின் நாகரிக அரசியலே காணாமல் போய், வெறுப்பு வன்மம் அநாகரிகம் என்று அனைத்து அசிங்களும் மேடை பேச்சுக்களில் நுழைந்தது.

    சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சரே “பாவாடை நாடாவை அவிழ்த்தால் தெரியும்” என்பது போன்ற மிக கேவலமாக பேச கூடிய நிலையை உருவாக்கியது இந்த திராவிட அரசியல்.

    • அண்ணா பேசிய பேச்சுக்கு வலுவான கண்டனம் நானும் தெரிவிக்கிறேன். நான் அவரது அடிமையல்ல. அவர் முன்னெடுத்த கருத்துக்குத்தான் நான் ஆதரவாளன்.

     ஆனால் பெரியாரின் நாத்திகத் தமிழகம் வெறுப்பு-வன்மம் இவற்றுக்கு இடம் கொடுக்காத மாநிலம்தான். அதாவது, அண்ணாதுரையைக் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தாக்கிப்பேசும் போதும், காங்கிரஸை அண்ணாதுரை ஆதரவாளர்கள் தாக்கிப் பேசும் போதும், அதுபோல கருணாநிதி-எம்ஜியார்-ஜெயலலிதா ஆதரவாளர்கள் பேசும் போதும் நிகழாதது இப்போது காவி ரிப்பன் கட்டியவர்களால் நிகழத் துவங்குகிறது. அப்படிப் பேசியவரை தெருவில் வைத்து அடித்து அதை விடியோ எடுத்து முகநூலில் போடுவது.

 3. இந்த கழிசடை பொறுக்கிப் பயலுக்கு தோழர்கள் இவ்வளவு நேரம் செலவிடுவதில் ஏதாவது பயன் இருக்குமா..? தெரியவில்லை…!
  தொடர்ந்து வினவு வாசிப்பவர்கள் இந்த உயிரினத்தைப் பற்றி அறிந்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

  • நானும் பதினைந்து வருடங்களுக்கு முன் மணிகண்டன் சார் போலத்தான் ஊருக்குள்ளே பேசிக்கொண்டிருந்தேன். சைவத்திருமுறைகள், பட்டினத்தார் பாடற்றிரட்டு, அர்த்தமுள்ள இந்துமதம், என வாசித்துக் கொண்டிருந்தேன். புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தேன். இன்று நினைத்தால் எனக்கே சிரிப்பாக வருகிறது.

   விவாதமே சமுதாயத்தை முன்னேற்றும்.
   விவாதத்தை வளர்ப்போம்.
   விவாதத்தில் வெற்றி பெற முடியவில்லை என்பது வருந்த வேண்டிய விஷயமில்லை.

   நம்மிடம் points இல்லை என்பதுதான் அதன் அர்த்தம்.
   அதற்குக் காரணம்
   1. நம் கொள்கை தவறானதாக இருக்கலாம்
   2. நம் வாசிப்பு / விவாத அனுபவம் குறைவாக இருக்கலாம்.

   நான் இங்கு எழுதுவது மணிகண்டன் சாருக்கு மட்டும் இல்லை. நாம் பகிர்ந்துகொள்ளும் ஒவ்வொரு கருத்தும், நம் அனைவருக்கும் வேறு இடத்தில் விவாதத்துக்குத் பயன்படலாம்.

   ஒவ்வொரு நபரிடமும் ஒவ்வொரு நாளும் நாம் ஜெயிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். விவாதத்தை நிறுத்தாதீர்கள்.

   • நண்பர் ஜெகதீசன்,
    ஆன்மீக தேடல் இருப்பது வேறு. சங்கியாக இருப்பது வேறு. ஒரு மனிதனுக்கு மாற்று சிந்தனை எப்போது விளைகிறது? சிறந்த வாழ்விற்கான தேடல், வாழ்க்கை பிரச்சினைகளினால் எழும் கேள்விகள் மற்றும் மனிதநேயம் இவற்றின் ஊடாகவே நாம் மாற்று சிந்தனைகளையும் பகுத்தறிந்து நம்மை வளர்த்துக்கொள்கிறோம்.
    சங்கிகள் அவ்வாறு உருவாவதில்லை. அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ மாற்று வழியில் சிந்திக்க மறுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப் படுகிறார்கள். தந்தை பெரியார் சொன்னதுபோல “நூறு எதிரிகளிடம் கூட விவாதித்து விடலாம் ஆனால் ஒரு முட்டாளிடம் விவாதிக்க முடியாது”.
    ஆகவே இவர்களிடம் பேசுவது கரும்பாறையை நம் தலையால் முட்டி உடைக்க முனைவது போலத்தான். இந்தகைய உயிரினங்களை வேறுவிதமாகத்தான் கையாள வேண்டும்.

    • விவாதம் செய்ய முடியதற்கு இப்படி ஒரு சப்பைக்கட்டா ?

     உண்மையில் உங்களை போன்றவர்களை கம்யூனிசம் என்ற பெயரில் மூளை சலவை செய்து வைத்து இருக்கிறார்கள். அதனால் உங்களால் மாற்று கருத்துக்களை ஏற்க முடிவது இல்லை…

     கம்யூனிசம், இஸ்லாம், கிறிஸ்துவம் மூன்றுமே ஒரே மாதிரியான குணங்களை உடைய கொள்கைகள்… இவர்களால் உலகம் முழுவதுமே பெரும் அழிவுகளை தவிர வேறு என்ன நன்மை மனித இனத்திற்கு கிடைத்து இருக்கிறது.

     மாவோ என்று பெரிதாக பேசி கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் அவரது செயலால் இறந்த பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கு உங்களின் பதில் என்ன… நீங்கள் ஆட்சி அதிகாரத்தை ஜனநாயகத்தின் மூலம் பெற முடியாமல் புரட்சி என்று சொல்லி கொண்டு (உலகை ஏமாற்றி) பல ஆயிரம் பேரை கொன்று அதிகாரத்தை பெறுகிறீர்கள்… இவ்வுளவு அழிவை நிகழ்த்தி அதிகாரத்திற்கு வந்த பிறகு

     என் கேள்வி உங்களின் கம்யூனிச அதிகார பசிக்கு ஏன் அப்பாவிகள் மரணம் அடைய வேண்டும்…

     கம்யூனிசம் என்று சொல்லி கம்போடியாவில் பல ஆயிரம் பேரை கொன்று, இன்றும் கூட பலர் ஊனத்தோடு இருக்கிறார்கள் அந்த அப்பாவிகளுக்கு கம்யூனிசம் என்ன பதில்.

     கம்யூனிசத்திற்கு இந்தியா ஜனநாயகம் ஆயிரம் மடங்கு உயர்வானது…

    • உங்களை போன்றவர்கள் தான் என்னை சங்கீ மங்கி என்று சொல்லி கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் என் பார்வையில் மோடி இந்த நாட்டின் பிரதமர் எனது பிரதமர்… அவரை 5 ஆட்சி செய்ய இந்திய மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், அவரது செயல்பாடுகள் சரியா தவறா என்பதை 5 வருடம் கழித்து வரும் தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள்.

     எனக்கு மோடியும் ஒன்று தான் மன்மோகன் சிங்கும் ஒன்று தான், இன்னும் சொல்ல போனால் மோடியை விட மன்மோகன் சிங்கை எனக்கு பிடிக்கும்.

    • ஒரு அரசை மக்கள் 5 வருடங்கள் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கிறார்கள் ஆனால் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் என்ன செய்கிறீர்கள் தெரியும்மா ? அந்த அரசை அனைத்து வகையிலும் முடக்கி செயல்பட விடாமல் தடுக்கும் செயல்களை செய்து கொண்டு இருக்கிறீர்கள்… இதற்கு பெயர் புரட்சி இல்லை சாதாரண மக்களுக்கு கம்யூனிஸ்ட்கள் இழைக்கும் மிக பெரிய துரோகம்.

     ஒரு பக்கம் வளர்ச்சி திட்டங்களை போராட்டங்கள் என்று முடக்கி இன்னொரு பக்கம் அதே மக்களிடம் வளர்ச்சி இல்லை அது இது என்று தூண்டி விடுகிறீர்கள்….

     பாகிஸ்தானும் சீனாவும் செய்ய நினைக்கும் வேலைகளை கம்யூனிஸ்ட்கள் செய்கிறார்கள்.

     இதற்கு பெயர் புரட்சி இல்லை இந்த நாட்டு மக்களுக்கு நீங்கள் இழைக்கும் பச்சை துரோகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க