ப்போதுவரை யாரும் எங்களுக்கு உதவவில்லை. இப்போது யாராவது எங்களை காப்பாற்ற வருவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று கூறுகிறார். 30 வயதுடைய  கட்டிட தொழிலாளியான சமீர்குமார்.

மே13 அன்று சென்னையின் வடப்புற எல்லையில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் நடந்துசெல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள். (படம் அறிவரசன்)

வியாழன் அன்று, சென்னையையும் கொல்கத்தாவையும் இணைக்கின்ற என்எச் 16 அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில் சுமார் 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் குழுமினர்.

சென்னையிலிருந்து கும்மிடிபூண்டிவரை ஏற்கனவே 45 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்திருந்த அவர்கள், உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், கொல்கத்தா, ஒரிசா, மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள தங்களின் வீடுகளை நோக்கி புறப்பட்டனர்.

மே14 அன்று, சென்னையில் உள்ள என்எச்16ல் ஹௌராவை நோக்கி நடந்துசென்றுகொண்டிருந்த புலம்பெயர் குடும்பத்தை சேர்ந்த குழந்தை,  தன்னார்வ தொண்டர்களிடமிருந்து நிவாரண பொருட்களை பெறும் காட்சி(படம் அறிவரசன்)

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அரசாங்கம் தங்களை தங்களின் சொந்த வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையின்றி காத்துக் கிடக்கின்றனர். உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் அரசுகள்  மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்களை தளர்த்தி மாற்றியிருக்கிற போது, இதற்கிடையில், கர்நாடக அரசோ  திரும்பவும் இங்கேயே தங்கிக்கொண்டு பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுங்கள் என்று  புலம் பெயர் தொழிலாளர்களை  கேட்டுக்கொள்கிறது.

போலிசின் தாக்குதால் ஊனமுற்ற போதிலும் தமிழகத்தின் ஓசூரிலிருந்து 340 கிலோமீட்டர் சிரமத்துடன் நடந்துவந்திருந்த சமீர் குமார் என்ற கட்டிடத் தொழிலாளி கூறுகிறார், ”இனிமேலும் என்னால் காத்திருக்க முடியாது.  உத்திரபிரதேசத்தில் உள்ள பல்லியாவிற்கு எப்போது போய் சேருவேன் என்று எனக்கு தெரியவில்லை. என்னிடம் பணமும் இல்லை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் இல்லை. இப்போது வரை யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. இப்போது யாரும் எங்களை காப்பாற்ற வருவார்கள் என்று நினைக்கவில்லை. மாதம் ரூ 4000 சம்பாதித்தேன். மார்ச் மாதம்  வரைதான் வேலைசெய்தேன். என்னைச் சார்ந்திருக்கின்ற என் வயதான பெற்றோர்களும், மனைவி மற்றும் பிள்ளைகளும் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரயில் சேவைகள் குறைவாகவே உள்ளது. தமிழகத்தின் போலிசு எங்களை லத்தியால் தாக்கியது. நாங்கள் 19 பேர் இந்த பயணத்தை மேற்கொள்கிறோம்”.

கட்டுமான இடங்களிலும், சிறு தொழில் நிறுவனங்களிலும் ரெஸ்டாரண்டுகளிலும் இன்னும் பல முக்கிய இடங்களிலும் பணியாற்றி அந்த நகரத்தை இயக்கிய தொழிலாளர்கள், அவசியமான பொருட்களை மூட்டை முடிச்சுகளாக கட்டிக்கொண்டு அவர்களின் வாழ்வாதாரமாக இருந்த அப்பகுதிகளை விட்டு  விலகிச் சென்றனர்.

படிக்க:
♦ நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்
♦ கொரோனா ஊரடங்கு : நெருக்கடியில் திருச்சி குட்ஷெட் தொழிலாளர்கள் !

விளிம்பு நிலை மக்களுக்காகவும், தற்போது வழி நெடுக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும்  வினியோகம் செய்துவரும் சேவை கரங்கள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் திலக்ராஜ் கூறுகிறார்”,  நான்காம் கட்ட ஊரங்கு உத்தரவு வர இருக்கின்ற நிலையிலும்,  இந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளை புலம்பெயர் தொழிலாளர்கள் நம்புவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்த அரசாங்கம் அழைத்துச் செல்லும் என்று காத்திருந்து அவர்கள் உயிரை தியாகம் செய்யமுடியாது. அவர்கள் தங்களுடைய கூலிகளை பெறவில்லை. வீட்டு வாடகையும் கட்டமுடியாது. ஏன் அவர்கள் இங்கே இருக்கவேண்டும்? இந்த துரோகத்தை உணர்வதற்கேனும் அவர்கள் உயிரோடு இருக்கட்டும்.

ஏப்ரல் 22 அன்று, சுமார் 40 புலம்பெயர் தொழிலாளர்களை கொண்ட முதல் பிரிவுகளில் ஒன்று சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வரை பத்து நாட்களில் 800 கிலோமீட்டர் பயணித்திருந்தது. தொழிலாளார்கள் தங்களுடைய இருப்பிடத்தை அடைந்த போது, அந்த மாநில அரசாங்கத்திற்கு  தெரிவித்தனர். அவர்களில் சிலர் அரசின் மையங்களிலும் வைத்து தனிமைபடுத்தி பராமரித்தது. மற்றவர்களை  தனிமைபடுத்தியது.

மே 13 அன்று, சென்னை ஹௌரா தேசிய நெடுஞ்சாலை 16ல் நடந்துசெல்லும் புலம்பெயர் தொழிலாளிகள். (படம் அறிவுக்கரசு)

”கடந்த வியாழன் அன்று, சிரிபெரம்புதூரில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து கைக்குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மற்றொரு தொழிலாளர்களின் குழு ஆந்திராவை நோக்கி நடக்க தொடங்கியிருந்தது. அவர்கள் ஏற்கனவே 40 கிலோ மீட்டர் தூரத்தை ஒரே நாளில்  கடந்திருந்தனர். பத்து தொழிலாளர்களை கொண்ட ஒரு குழு மத்திய பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்தது. இன்னொரு குழு கொல்கத்தாவை நோக்கி நடந்து கொண்டிருதது. இந்த முழு காலகட்டத்திலும் அவர்கள் கண்டு கொள்ளப்படாத நிலையில், மாற்றம் உடனே வர இருக்கிறது என்ற நிச்சயமான நம்பிக்கையில் அவர்கள் இருக்கவேண்டும் என்று  நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார், திலக்.

இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த மூன்று புலம்பெயர் தொழிலாளர்களும் அங்கே நடந்து கொண்டிருந்தனர். அவளில் இருவர் வயதானவர்கள் ஒருவர் மாற்றுத் திறனாளி. அவர்கள் சொந்த நகரத்திற்கு செல்வதற்கான பயணச்சீட்டு பெற்று வைத்திருந்த போதிலும் போலிசு அவர்களின் மொழியை  புரிந்து கொள்ளாததால் அவர்கள் ரயிலில் பயணிக்கும் வாய்ப்பை இழந்தனர். டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் இருந்தனர். எனினும் மேற்குறிப்பிட்ட நிகழ்வின் காரணமாக அவர்கள் திருப்ப அனுப்பபட்டனர்.

அந்த இருவரும் ஒரு மாதகாலமாக அவர்களுடைய மாநில அரசு அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியாததால் தற்போது மற்ற தொழிலாளர்களை போல் சமூக இடைவெளியை கடைபிடித்து  வீட்டிற்கு நடந்து செல்வதற்கு முடிவு செய்துள்ளனர் என்று கூறுகிறார், அவர்.

ஷிராமிக் எக்பிரஸ் வண்டியில் செல்வதற்கான டிக்கெட் பதிவு செய்திருந்தாலும், சிலர் அரசின் மீது நம்பிக்கை வைக்காமல் மிதி வண்டி வாங்கியுள்ளனர். உணவை விட மிதி வண்டி மிதித்து செல்வதில்,  நம்பிக்கையை ஆதாரமாக கொண்டுள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோ, பூதான், ஜான்பூர் ஆகிய நகரங்களுக்கு மே 13 அன்று, நடந்துசென்றுகொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள். (படம் அறிவரசு)

மத்திய உள்துறை அமைச்சகம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஷிராமிக் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்வதையும் அவர்களை நடந்து செல்ல கூடாது என்பதை உத்திரவாதம் செய்யுமாறும்  மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஒவ்வொரு ரயிலும் அதிகபட்சம் 1200 பேரை ஏற்றிச்செல்லும். கிட்டத்தட்ட 9000 பேரை சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பியுள்ளதாக மே 11 அன்று  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, சென்னையில் மட்டும் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 50,000. ஆனால் இதற்கு மாறாக உண்மை நிலவரமாக 15 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்களில் 5 இலட்சம்பேர் மட்டுமே சென்னையில் மட்டுமே உள்ளனர். இது, தமிழகத்தில் எத்தனை பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதையும் அவர்களுக்கு உதவி செய்ய மறுப்பதையும் காட்டுகிறது. அத்தொழிலாளர்கள் குறித்து தனிஒரு பதிவேட்டை பராமரித்து எல்லாம் சிறப்பாக நடப்பதாக வைத்திருக்கிறது. அரசு. ஆனால் களநிலவரம் வேறாக உள்ளது. அத்தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு 60 கிலோ மீட்டர் தூரத்திற்கும் வகை பிரித்து   நிறுத்தங்களை அமைத்து பணியாற்றும் போது களநிலவரம் வேறாக உள்ளது என்கிறார்.

75,000 உறுப்பினர்களை கொண்டு சமூகத்தின் புதிய முகம் என்ற ஃபேஸ்புக் குழுவை நடத்தி தன்னார்வ தொண்டு வேலைகளை செய்துவரும் திலிப் சீனிவாசன். நாம் ஒரு ஜனநாயகத்தில் வாழ்ந்தாலும் அதன் உள்ளடக்கம் அதற்கு அப்பாற்பட்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. பணமோ அரசியல் ஆதரவோ இல்லாத்தாலும் மேலும் உங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படுவதாலும் அந்த புலம்பெயர் தொழிலாளர்களை  கட்டாயமாக துப்பாக்கி முனையில் ஊருக்கு செல்லவிடாமல் திரும்ப பெற்று வைத்திருப்பது சரியா? இது கொத்தடிமைத்தனம் இல்லையா? என்று கேட்கிறார் ஒரு ஜெயேந்திர பூபதி என்ற தன்னார்வலர்.

குறிப்பாக காஞ்சிபுரம், திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளை ஒவ்வொரு மணிநேரத்திற்கும் சுமார் 200 புலம்பெயர் தொழிலாளர்கள் வரை கடக்கின்ற அளவிற்கு தமிழகத்தின் நிலை கொதிப்பாக உள்ளது என்கிறார், ’புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சென்னை குடிமக்களின் கோவிட் ஃபண்ட்’ என்ற அமைப்பின் தன்னார்வளர் டி. வெங்கட்.

”இனிமேலும் அவர்களை இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள் என்று அவர்களை நாம் கேட்க முடியாது. ஏனென்றால் அவர்களை ஊருக்கு அனுப்புவதற்காக இயக்கப்படும்  ரயில்களின் எண்ணிக்கை சொற்பமாகவும் உத்திரவாதமற்றதாகவும் உள்ளது. அவர்கள் பதற்றத்துடன் உள்ளனர். ஏனெனில் அவர்களில் அனேகமானோர் ரயில் டிக்கெட்பெற இயலவில்லை. மேலும்  அவர்களை ஏற்றாமலேயே ரயில் புறப்பட்டு விடுகிறது என்பது அவர்களுக்கு தெரிகிறது. ஊருக்கு அனுப்பி வைப்பதில் அரசாங்கம் யாருக்கு, எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பதற்றத்துடன் கூடிய அழைப்புகள் எங்களுக்கு வருகிறது. எங்களால் உதவி செய்யமுடியவில்லை.  பெரிய அளவில் புலம்பெயர் தொழிலாளர் கூட்டம்  வெளியேறியதை வடமாநிலம் சந்தித்தித்த போது, ஏற்பட்ட ஒரு பிரச்சினையாக இது இல்லை. ஆனால் இப்போது அவர்கள் கைவிடப்பட்டு விட்டார்கள். கடந்த மூன்று நாட்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் உயர்வை பார்த்துவருகிறோம்,” என்றார், அவர்.

மே 15 அன்று, தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரபிரதேசம் வரை நடந்து சென்றிருந்த இடம்பெயர்வு தொழிலாளர்களை லாரிகளில் பிடித்து அடைத்து மீண்டும்   கொண்டுவந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எந்த முறையுமின்றி இறக்கி விட்டனர். இறுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் அடைத்து விட்டனர். தமிழ்நாட்டின் எல்லை பகுதிக்கு அனுப்புவதற்கு முன்பு ஆந்திரபிரதேச போலிசு அந்த இளைஞர்களை பலமாக லத்தியால் அடித்தது.. அவர்கள் பசியோடு திரும்ப அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டபோது, அடிபட்ட காயத்தை ஆற்றிக் கொள்வதற்காக ஒரு வலிநிவாரண தைலம் கேட்டனர்.

சுமார் 300 புலம் பெயர் தொழிலாளர்கள்   சிரமத்துடன், தங்களால் முடிந்த அளவு  நடந்து விஜயவாடா வரை சென்று விட்டவர்களை பிடித்து மூன்று டிரக் வண்டிகளில் வைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்.  ஒரு ட்ரக் வண்டி இறக்கிவிட்ட சென்னை சென்ரல் ரயில்வே நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் மீது மீண்டும் போலிசு தடியடியை நிகழ்த்தியது. ”அரசு அலுவலர்கள் அவர்களை சொந்த நகரங்களுக்கு அனுப்ப உறுதிகொடுத்த போதிலும்,  அவர்களை வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்ப்ப்படும் வரை அவை வார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. இதற்கிடையில், எல்லைகள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையிலும் அவர்கள், யார் மீதும் முழுமையாக நம்பிக்கை வைப்பதாக இல்லை,” என்கிறார் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த நகரங்களுக்கு அனுப்பிவைப்பதில் உதவி செய்துவரும் இயற்கை விவசாயிகள் சந்தை என்ற அமைப்பிலிருந்து செயல்பட்டுவரும் ஆனந்தூ என்பவர்.

மே 14 அன்று, சென்னை- ஹௌரா என்எச்16 ல் நடந்துசெல்லும் இடம் பெயர் தொழிலாளர்கள். (படம் அறிவரசு).

மே 16 ஆம் தேதி வரையிலான காலத்தில், 9000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு இப்போது 10,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், தமிழகத்தின் தலைநகரத்தின் அருகில் , நிலைமை மாறாமல் அப்படியே உள்ளது. நொய்டா – கிரேட்டர் நொய்டா அதிவிரைவு பாதை வழி நெடுக  புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்து ஊர்களுக்கு செல்லும் அவர்களுக்கு,  உச்சநீதி மன்றத்தில் பதிவு பெற்ற வழக்கறிஞர் அனஸ் தன்விர் சித்திக் உணவளித்து உதவிவருகிறார் .

“தொழிலாளர்களின் இந்த இயக்கம் ஊரடங்கு எப்படியோ அப்படியே தீர்க்கப்படாமல் உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் முதல் இடம்பெயர்வு அலையை பொருத்தவரை அச்சம் காரணமாக கூட இருக்கலாம்.   ஆனால் இப்போதும் ஏன் அவர்கள் திரும்ப நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்? கொரானாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொறுமை காக்க நிர்பந்திக்கப்பட்டு ஊடங்கு உத்தரவு போட்டது போலவே ஒருபோதும் வராத உதவிக்காக  தொழிலாளர்கள் காத்திருந்தனர். முழு ஊரடங்கு காலம் முழுதும் அவர்கள் பசியோடு இருந்து வந்தனர்.  இது, நடுத்தர வர்க்கத்திற்கும், மேட்டுக்குடி வர்க்கத்திற்கும் உதவ முடிந்தவர்களின் கூட்டு தோல்வியும் ஆகும். அது அவர்களுடைய கூலி கொடுப்பதை தொடர்ந்து  கொடுத்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை.  மேலும், கார்ப்பரேட்டுகள் தங்களின் ஏராளமான சொத்துக்களை வேறு வழியில்  வியாபாரத்தை பெருக்குவதற்கு பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் இப்போது தங்களைவிட பல மடங்கு கீழான நிலையில் உள்ள தொழிலாளர்களிடம் கருணை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இது, தொழிலாளிகள் என்போர் எப்போதுமே  தன்மை ரீதியாகவே மதிப்பற்றவர்கள், ஆனால் தன் சொத்தை பெருக்கி கொள்வதற்கு இவர்களுக்கு பயன்படக்கூடிய ஒரு சரக்கு என்ற கசப்பான உண்மையை  உணரச் செய்திருக்கிறது,” என்கிறார் அவர்.

அனஸ், அனைக்குமான இஃப்தார் என்ற இயக்கத்தின் நிறுவனருமாவார்.  2018 ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம்,   போதிய உணவு கிடைப்பதில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதால்  உரிமைகள் மறுக்கப்படும் விளிம்புநிலை மக்களுக்கும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், அங்குள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும்  நம்பிக்கையோடு இஃப்தார் உணவளித்து ரம்ஜானை கொண்டாடி வருகிறது.

அனுசுக்கும் அவரது இயக்கத்தின் உறுப்பினர்களுக்கும் இந்த ரம்ஜான் என்பது  மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இந்தியாவின் தொலைதூர பகுதியிலிருப்பவர்களிடமிருந்தும் பட்டினி போக்க கோரும்   அழைப்புகளை இவர்கள் பெற்று வருகின்றனர். முதல்கட்ட ஊரடங்கு காலத்திலேயே இவர்கள், சில மசூதிகளையே சமூக சமையலறையாகவும் உணவு வழங்கும் மையங்களாகவும் மாற்றினார்கள். “இந்த முன்முயற்சியில் காவல்துறையினர் உதவிகரமாக இருந்தனர்,” என்கிறார் அவர்.

ஊரடங்கு காலத்தில் 8 உறுப்பினர்களை கொண்ட ஒரு புலம்பெயர் தொழிலாளியின் குடும்பம் ஒரு ஜூகத்   ஸ்கூட்டர் ரிக்ஷாவை விட்டுவிட்டு உபியில் உள்ள ஒரு அஜம்கார்க்கிற்கு  சென்றனர்..  அவர்களிடமிருந்து ஒரு தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.

தமிழாக்கம் : முத்துக்குமார்
நன்றி : த வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க