• கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்த மக்களுக்கு அரசு கட்டுமானப் பணிகளில் கிராமம் – நகர்ப்புறங்களில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்து!
  • உள்ளூர் திட்ட பணிகளுக்கு உள்ளூர் மக்களுக்கே வேலை வழங்கு!

ரசு கட்டுமானப் பணிகளில் கிராமப்புற குடிமராமத்து பணிகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் 22.07.2020 காலை 11 மணி அளவில் மனு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன், தலைமையில் தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) மாவட்ட தலைவர் அய்யா.மாபா. சின்னதுரை, மக்கள் உரிமை மீட்பு இயக்கம் நிறுவனத் தலைவர் தோழர்.பஷீர், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு தலைவர் தோழர்.சம்சுதீன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர்.ரமணா, ஜான் பாஷா மாவட்ட தலைவர் தமிழ் புலிகள் கட்சி மக்கள் உரிமை கூட்டணி ஜோசப் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் தோழர்.கமலக்கண்ணன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் புதியவன், மற்றும் மக்கள் கலை இலகியக் கழகத் தோழர்கள் ஆகிய பொதுநல அமைப்புகள் சார்பாக பொறுப்பாளர்கள் 20 பேர் கோரிக்கை மனுவை மாநகராட்சி ஆணையரிடமும், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மாநகராட்சி ஆணையர் மனுவை பெற்றுக்கொண்டு, “வேலைவாய்ப்பு பிரச்சினையில் மத்திய அரசு கில்டு லேபர் திட்டங்கள் நிறைய உள்ளது. ஆகையால் உங்கள் அமைப்புகள்  சார்பாக ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு பேருக்கு வேலை இல்லை என்பதை பட்டியல் எடுத்து எங்களுக்கு தந்தால் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்.” என்றும் பேசினார்.

மேலும் மாநகராட்சி காண்ட்ராக்டர்கள் சார்பாக; “காண்ட்ராக்டர்கள் விருப்பப்படி ஆட்களை தேர்வு செய்து குறைந்த கூலிக்கு வேலைக்கு ஆள் வைப்பார்கள். நீங்கள் ஆட்களை கொடுத்தால் அவர்களுக்கு காண்ட்ராக்ட் தொகை கட்டுப்படி ஆகாது என கொள்ளையடிக்கும் காண்ட்ராக்ட் காரர்களுக்கு ஆதரவாக பேசினார். மேலும் இது சம்பந்தமாக என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அரசுக்கு உங்களுடைய கோரிக்கை அனுப்பி வைக்கிறோம்” என அக்கறை இல்லாமல் பேசினார்.

நாம் மீண்டும் பேசும்போது கொரோனா ஊரடங்கு வேலைவாய்ப்பு பாதிப்பு என்பது ஒரு புதிய பிரச்சனை ஆகையால் இதற்கு அரசு அதிகாரிகள் பொதுநல அமைப்புகள் இணைந்து பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும். என கோரிக்கை விடுத்தும். நான் காண்ட்ராக்ட் காரர்களிடம் பேசுவதாக கூறி நழுவிக் கொண்டார்.

இது சம்பந்தமான அரசு முயற்சி எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு உத்தரவிட வேண்டும். என கோரிக்கை வைத்தும் அவர் அது என்னால் முடியாது. தெரியப்படுத்துகிறேன் என நழுவிக் கொண்டு பேசினார். பிரச்சினைகளை தீர்க்க இந்த அதிகாரிகள்தான் பொறுப்பில் உட்கார்ந்துகொண்டு அரசு திட்ட பணிகளை செயல்படுத்தாமல் காண்ட்ராக்ட் காரர்கள் நலன் சார்ந்து பேசுவதும் அயோக்கியத்தனமாக உள்ளது.

அடுத்ததாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசினோம். மனுவை படித்துவிட்டு அரசுக்கு உங்களுடைய கோரிக்கையை நான் கொண்டு செல்கிறேன் என முடித்துக் கொண்டார். மாவட்ட நிர்வாகத்தில் நீங்கள் இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்க முடியும் என்று பேசிய போது என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அக்கறை இல்லாமலும் பொறுப்பில்லாமல் பேசினார்.

படிக்க:
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
அடாவடி நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உதயம் !

இதே திருச்சி மாநகர பெரிய பணக்காரர்களுக்கும்; வியாபாரிகளுக்கும் ஒரு பிரச்சினை என்றால் உடனே சொந்தமாக முடிவெடுத்து அமல் படுத்துகின்ற மாவட்ட ஆட்சியர் இப்படி வேலையிலிருந்து வாழ்விழந்து தவிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் அவர் பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் ஒரே வார்த்தையில் பேசி முடித்துக் கொண்டார். அதிகாரிகள்  நடவடிக்கை என்பது மக்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத வகையில் உள்ளது.

இதற்கு எதிராக களத்தில் இறங்கி நாம் போராடி, நம்முடைய உரிமைகளைப் பெறவேண்டும் என்பதே இந்த கோரிக்கை மனு கொடுத்தது உணர்த்தியது. இந்த அரசு கட்டமைப்பு மக்களுடைய பிரச்சினையை தீர்க்காது. இதற்கு அதிகாரிகளின் பேச்சே  நிரூபணமாக உள்ளது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
மற்றும் பொது நலஅமைப்புகள்,
திருச்சி மாவட்டம்.

***

அடாவடி செய்யும் நுண் கடன் நிறுவனங்கள், சுய உதவி குழுக்களை எதிர்த்து திருச்சி லால்குடி பெண்கள் தொடர் போராட்டம் !

டந்த ஜுலை 16ஆம் தேதி நுண்கடன் நிறுவனம் கூபா சங்கமம், சுய உதவிக் குழுவான ஐடிஎஃப்சி குழுவின் மேலாளர்கள், வசூல் செய்பவர்கள் தொடர்ந்து போன் மூலமும், நேரடியாக வந்து பெண்களை அவமானப்படுத்தும் வகையிலும் இழிவுபடுத்தும் வகையிலும் பேசி கடன் வசூல் செய்கின்றனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, லால்குடி காவல் நிலையத்தில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு, மக்கள் இமை கூட்டணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் பாதிக்கப்பட்ட பெண்களுடன் சென்று புகார் மனு அளித்தனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அவர்களின் மேல்  உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறிய காவல்துறையினர், வசூல் செய்பவர்கள் “போன் எடுக்கவில்லை…” என அலட்சியமாக பேசினார். ஏற்கனவே லால்குடி பகுதியில் அடாவடி நுண் கடன் நிறுவனங்கள் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி நெருக்கடி கொடுக்க கூடாது என ஒப்புதல் தெரிவிக்கும் வகையில் நுண் கடன் நிறுவனங்கள் கையெழுத்திட்டு கொடுத்தன. அதனடிப்படையில் அப்போது போராடிய சிபிஎம் தோழர்கள் மற்றும் பெண்களை சமாதானமடைந்தனர்.

அதன்பிறகு மறுநாளே “நாங்கள் அரசுக்கு பணம் கொடுத்து விட்டோம். அவர்கள் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது எனவும், பணம் கட்டவில்லை என்றால் நீ செத்து போயிரு, நான் உன் கணக்கை முடித்து விடுவேன்…” என கொலை மிரட்டல் விடுத்தும் பணம் கேட்டு கொண்டு வராத பெண்களை “அவ வீட்டுல என்ன பண்றாள் குளிக்கிறதுக்கு இதுதான் நேரமா…” என கேவலமாக பேசினார்கள். இச்செயலை கண்டித்து பெண்கள் மறுநாள் தாசில்தாரிடம் சென்று முறையிட்டனர் அங்கு தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் இருவரும் பிரச்சனை செய்த அவர்களை கைது செய்து சிறையில் அடையுங்கள் என ஆவேசமாக பேசினர்.

உடனே அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்களிடம் “வாங்குன பணத்தை கட்ட மாட்டியா…” என்று அடாவடி நுண்கடன் நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்கி பேசினார்கள். அங்கு சென்ற ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு தோழர் சம்சுதீன் அவர்களிடம், “மரியாதை குறைவாக பேசி ஒன்னும் பண்ண முடியாது போ…” என்று அடாவடியாக அதிகாரிகள் பேசினர்.

படிக்க:
இப்ப 10 ரூபா டீத்தூளுக்குக் கூட கடன் கொடுக்க மாட்டேங்குறான் !
சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !

தாசில்தார் “நீ எங்க வேண்டுமானாலும் போய் புகார் கொடுத்துக்க.. நான் ஒன்னும் (நிறுவனங்கள் மீது) பண்ண முடியாது போ…” என்று ஒருமையில் பேசினார். நுண் கடன் நிறுவனம் வசூல் செய்யும் நபர்கள் கூறுவதைப்போல “அரசாங்கத்திடம் நிறுவனங்கள் பணம் கொடுத்துவிட்டார்கள்…” எங்களால் ஒன்னும் செய்ய முடியாது என்பதை அதிகாரிகள் சொல்லவில்லையே தவிர, நுண் கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாக பேசி கேவலமாக நடந்து கொண்டனர்.

இப்படிப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நுண்கடன் அடாவடி வசூல் செய்யும் நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் பெண்களை திரட்டி 22.07.2020 அன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தோம்.

மாவட்ட ஆட்சியர் “நான் என்ன செய்வது…” என கைவிரித்தார். பின்பு பெயரளவிற்கு ‘டிஎஸ்பி இடம் கூறி நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்’ என ஒப்புக்கு பேசினார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒரு மாவட்ட ஆட்சியர் மக்களுடைய குறைகளைக் கேட்க நேரமில்லை என்றும்; பெயரளவுக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறுவதை நினைத்து மிகவும் நொந்து போனார்கள்.

இந்த அதிகாரிகள் மக்களுக்காக இல்லை இந்த அரசு நிர்வாகம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும்; செல்வந்தர்களுக்கு மட்டுமே வேலை செய்யக் கூடியது என்பதை உணர்ந்தனர். களத்தில் இறங்கிப் போராடி அடாவடி செய்யும் கந்துவட்டி கும்பலான நுண் கடன் நிறுவன நபர்களை ஊரில் கட்டி வைப்பதும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி போராடுவதுமே ஒரே தீர்வு எனப் பேசினர்.

அடுத்த கட்டத்திற்கு லால்குடி பெண்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் இணைந்து போராட்டத்தை செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

1 மறுமொழி

  1. கந்துவட்டி கரவுத்தொழில் கள்ள காதல் உள்ளிட்ட ரிசர்வ் வங்கிக்கே ஆப்பு வைத்துள்ள கூவிட்19 கூரானா,அதனையே மய்யப் படுத்தி ஏழை எளியோரின் அனைத்து நுன்கடன்களும் தள்ளுபடி செய்யவேண்டி கோரிக்கை வைத்து போராட வேண்டும் கூடுமானால் இதுசம்பந்தமாக ரிசர்வ் வங்கியிலுள்ள பாங்கிங் ஓம்பட்ஸ்மேன்(Banking ombudsman)என்ற அதிகாரி ,வங்கி நடவடிக்கைகளால் பாதிப்புக்குள்ளாகும் குடிமக்களுக்கு சுமூக தீர்வுகாணவுள்ளவர் மூலம் உரிய தீர்வு காணவேண்டி போராட்டங்கள் முறைப்படுத்தி செயல்படவேண்டும், அனைத்தும் தெரிந்தே மவுனம் காக்கும் அவ்வதிகாரிக்கு ஆன்லைன் மூலமாக விளக்கம் கேட்கவும்,தகுந்த ஆடிட்டர் ஆடிட்டிங் ரிப்போர்ட் களை வைத்து முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்து மேலும் ஓவர் டிராப்ட் (o/d)வழங்குவது போன்ற நடவடிக்கை களை,பாதிப்புக்குள்ளாகி மினுக்கும் மக்களுக்கும் விரிவாக்கம் செய்யவேண்டி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…!!! அடுத்த நடவடிக்கை பொறுத்து காய் நகர்த்தவேண்டும்… அனைத்தும் தூரிகை முறையில்..ஆரின கஞ்சி பழங்கஞ்சி…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க