வேலை அல்லது சேமிப்பு இல்லாத நிலையில், இந்திய எலக்ட்ரீஷியன், ஷிபு க்ளெமன்ஸ், குவைத்தில் குடியேறிகளை கடுமையாகக் குறைக்கும் அந்நாட்டு அரசின் முடிவை அறியும் வரை (குவைத்தில்) வேலைக்குத் திரும்பிவிடலாம் என நம்பிக் கொண்டிருந்தார்.

கொரோனா வைரஸ்  நோய்த் தொற்றால் கடந்த பிப்ரவரியில்  வேலை இழந்த பலரில் 38 வயதான ஷிபுவும் ஒருவர். குவைத்தில் உள்ள 44 இலட்சம் வெளிநாட்டினரில், அதிகப்படியான வெளிநாட்டினராக உள்ள பத்து இலட்சத்திற்கும் அதிகமான இந்தியர்களில் இவரும் ஒருவர்.

ஆனால் கொரோனா வைரஸ், எண்ணெய் விலை மற்றும் உள்ளூர் வேலைகளைத் தாக்கிய பின்னர், நாடு புதிய வரம்புகளை பரிசீலித்து வருகிறது. இது சுமார் 800,000 பேரை நாட்டை விட்டு வெளியேறவும், பணம் அனுப்புவதைக் குறைக்கவும் கட்டாயப்படுத்தக்கூடும். இவர்கள் அனுப்பும் பணமே ஊரில் உள்ள குடும்பங்களில் உயிர்நாடி.

மாதிரிப் படம்.

புதிய மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திட்டம் , நாட்டின் மொத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை 40% குறைக்கும், மேலும் இந்தியர்களின் எண்ணிக்கை குவைத் மக்கள் தொகையில் 15% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது எனவும் கூறுகிறது.

“நான் வளைகுடாவிற்கு வந்து என் குழந்தைகளுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க கடுமையாக உழைத்தேன். கோவிட் -19 நெருக்கடியும் இப்போது புதிய குவைத் சட்டமும் எனது கனவுகளை சிதைத்துவிட்டன ” என்று கிளெமன்ஸ் தாம்சன் கடலோர நகரமான மங்காஃப்-லிருந்து தொலைபேசி வழியாகப் பேசினார்.

பிப்ரவரியில் அவர் வேலையை இழப்பதற்கு முன்பு, தென்னிந்திய மாநிலமான கேரளாவில் ஒரு நெரிசலான வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசிக்கும் தனது மனைவிக்கு ரூ. 40 ஆயிரத்தை அனுப்பினார்.

கேரளாவில் தனக்கு சொந்தமாக வீடு இல்லாமல், திரும்பி வரும் புலம்பெயர்ந்தோரில் அதிக எண்ணிக்கை கொண்ட மாநிலமான கேரளத்தில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லாமல், க்ளெமன்ஸ் தனது குடும்பத்துடன் திரும்பிச் செல்ல அஞ்சுகிறார்.

படிக்க:
நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !
கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு வேலை கொடு ! சார் ஆட்சியரிடம் மனு !!

இந்த மசோதாவுக்கு அரசாங்கம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, ஆனால் பிரதமர் கடந்த மாதம் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை குறைக்க விரும்புவதாகக் கூறினார். சட்டமன்ற சபாநாயகர் மர்சவுக் அல்-கானெம் வெளிநாட்டு தொழிலாளர்களை படிப்படியாகக் குறைக்க முன்மொழிந்தார், இது 5% எண்ணிக்கையில் குறைப்புடன் தொடங்கி, நாட்டிற்கு குறைந்த திறமையான புலம்பெயர்ந்தோர் தேவைப்படுவதைக் குறிக்கிறது. நடப்பு அமர்வு அக்டோபரில் முடிவடைவதற்கு முன்னர் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதலுக்காக அரசாங்கத்துக்கு அனுப்பும்.

உலக வங்கியின் தரவுகளின்படி, குவைத்தில் பணிபுரியும் இந்தியர்கள் 2017 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 64.6 பில்லியனை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இது நாட்டின் மொத்த உள்நாட்டு வருவாய் பணப்பரிமாற்றங்களில் 6.7% ஆகும்.

ஆனால் கோவிட் -19 ஐ அடுத்து ஏற்பட்ட உலகளாவிய மந்தநிலை வேலைகளை குறைத்து பணப்புழக்கத்தை குறைத்துள்ளது. இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணம் கடந்த ஆண்டு 83 பில்லியன் டாலர்களிலிருந்து 23% குறைந்து இந்த ஆண்டு 64 பில்லியன் டாலராக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிடுகிறது.

குவைத்திலிருந்து மாதாந்திர பணம் வராமல் கிளெமென்ஸின் மனைவி லிட்டி ஷிபுவைப் பொறுத்தவரை, வீட்டை நிர்வகிப்பதும் அவரது பெரிய குடும்பத்தை கவனித்துக்கொள்வதும் கடினமாக உள்ளது.

மாதிரிப் படம்.

“பணம் வருவதை நிறுத்தியதிலிருந்து நாங்கள் உண்மையான சிக்கலில் இருக்கிறோம் … ஒவ்வொரு நாளும் ஷிபு என்னை அழைத்து தனது துக்கங்களை பகிர்ந்து கொள்கிறார். அவருக்கு உதவ  தங்கத்தை விற்க திட்டமிட்டுள்ளேன்” என்கிறார் அவர்.

“என் கணவர் திரும்பி வர நிர்பந்திக்கப்பட்டால் நாங்கள் கிட்டத்தட்ட தெருவில் நிற்போம்.இதைப் பற்றி நினைத்து என்னால் தூங்ககூட முடியாது.”

மேம்பாட்டு கல்வி மையத்தின் 2018 இடம்பெயர்வு கணக்கெடுப்பின்படி, வளைகுடாவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பணிபுரியும் தென் மாநிலமான கேரளா முழுவதும் இந்த நிலைமை எதிரொலிக்கிறது.

குவைத்தில்  உள்ள 70% இந்தியர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று மாநில தகவல்கள் தெரிவிக்கின்றன.

1960-களில் இருந்து, வளைகுடாவிலிருந்து பணம் அனுப்புவது கேரள பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வருகிறது, இது மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 20% ஆகும்.

குவைத் இந்த மசோதாவை நிறைவேற்றினால், வெளிநாடுகளிலிருந்தும் பிற இந்திய மாநிலங்களிலிருந்தும் திரும்பி வரும் கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் மக்களால் கேரள மாநிலம் பெரும் பொருளாதார பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

கடந்த மாதம், இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைகளை நிரப்ப உதவும் புலம்பெயர்ந்தோரின் திறன்கள் மற்றும் அனுபவங்களின் தரவுத்தளத்தை இந்திய அரசு உருவாக்கியது. சூழ்நிலையை கருத்தில் கொண்டு கேரளா ஏற்கனவே இவர்களை மீண்டும் இணைப்பதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது.

படிக்க:
கர்நாடகா : பாடத்திட்டத்தில் இருந்து திப்பு சுல்தான் வரலாற்றை நீக்கிய பாஜக !
’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக் கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும் !

எதிர்காலத்தில் மக்கள் மீண்டும் குடியேற உதவும் வகையில் திறன்களை மேம்படுத்துதல், 3 மில்லியன் ரூபாய் வரை நிதி மூலம் சொந்த  சொந்த தொழில் தொடங்க உதவிகள், மானியக் கடன்கள் மற்றும் வழிகாட்டுதல் முகாம்கள் உள்ளிட்டவை இதில் அடக்கம்.

குவைத்தில் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் மேற்பார்வையாளராக பணிபுரியும் மூன்று குழந்தைகளுக்கு தந்தையான வினோய் வில்சன், இந்தியாவில் ஒரு வேலை கிடைக்கும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார். அந்த வேலை தனது குழந்தைகளின் கல்விக்கு நிதியளிப்பதற்கும், கேரளாவில் ஒரு புதிய வீட்டிற்கு கடன் வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கும் போதுமானதாக இருக்கும் என நினைக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு அவரது சம்பளம் 25% குறைக்கப்பட்டிருப்பதால், 40 வயதான அவர் மாதாந்திர செலவுகளை ஈடுகட்டவும், பணத்தை வீட்டிற்கு திருப்பி அனுப்பவும் இன்னும் போதுமானது என்று கூறினார்.

திறன் குறைந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டால், அதில் தானும் முதலாக இருப்போம் என கவலைப்படும் வில்சன், அப்படி ஒரு நிலைமை வந்தால் தனது கனவு வீட்டை விற்க வேண்டியிருக்கும் எனக் கூறுகிறார்.

“நான் எனது வேலையை இழந்தால் நான் எங்கே போவேன் என்று எனக்குத் தெரியவில்லை. நிலையான வருமானம் இல்லாமல் என்னால் திருப்பிச் செலுத்த முடியாத கடன்கள் வேறு உள்ளன” என்கிறார் அவர்.

உள்நாட்டிலேயே கோடிக்கணக்கான மக்கள் பணி இழப்பையும் வருவாய் இழப்பையும் எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களை கைகழுவிட்ட அரசு வெளிநாட்டிலிருந்து பணியிழந்து திரும்பும் மக்களுக்கு என்ன திட்டங்களை வைத்திருக்கும்? மொத்தமாக பிரச்சினைகளை மாநில அரசுகளின் தலையில் கட்டிவிட்டு, பெருநோய்தொற்று காலத்தைப் பயன்படுத்தும் மோடி அரசு தனது காவி கரங்களை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.


– கலைமதி
நன்றி: த வயர்.

1 மறுமொழி

  1. ஏதாவது வழி கிடைக்கும் , ஓஹோ என்று வாழமுடியாவிட்டாலும் , ஓரளவுக்காவது வாழலாம்,

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க