கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 12

முதல் பாகம்

சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் :

தயாராயிருத்தல்

  1. போராட்டங்களின் சூழ்நிலைகளில் ஏற்படக் கூடிய எல்லா மாற்றங்களுக்கும் ஏற்ப தன்னை எப்போதும் விரைந்து மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடியவாறு கட்சி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்பட்டுள்ள பெரு எண்ணிக்கையில் உள்ள எதிரியுடன் வெளிப்படையான மோதலைத் தவிர்க்க இயலக் கூடியதான போர்க்குணமிக்க நிறுவனமாக பொதுவுடைமைக் கட்சி வளர்க்கப்பட வேண்டும். ஆனால், மற்றொருபுறம் எதிரி குவிந்திருப்பதையே பயன்படுத்திக் கொள்வது எப்படி இருக்க வேண்டுமெனில், எதிரி எதிர்பாராத இடத்தில் தாக்குதல் தொடுக்கும்படியாக இருக்க வேண்டும். கலகங்கள் மற்றும் தெருச் சண்டைகள் அல்லது கடுமையான அடக்குமுறை சூழ்நிலைகளை மட்டுமே நம்பியிருப்பது கட்சி நிறுவனத்தின் மிகமிகப் பெரிய தவறாகும். திடுதிப்பென்று வரும் எதிர்கால நிலைமைகளை சமாளிக்கத் தயாராய் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பொதுவுடைமையாளர்கள் ஆரம்பகட்ட புரட்சிகர வேலைகளைத் துல்லியமாக செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், பெரும்பாலும் புயல் போன்ற மற்றும் அமைதியான காலங்கள் என்று மாறுவதை முன்கூட்டியே கண்டறிவது கிட்டத்தட்ட அசாத்தியமானதாகும். முன்கூட்டியே அறிவது சாத்தியமாக இருந்தாலும்கூட, பல சந்தர்ப்பங்களில் புனரமைத்தலுக்கு இந்தத் தொலைநோக்கைப் பயன்படுத்துவது இயலாது. ஏனெனில், ஒரு பொதுவிதி என்ற முறையில் மாற்றம் மிகமிக விரைவாகவும் அடிக்கடியும் திடுதிப்பென்றும் நிகழ்வதாக உள்ளது.

சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகளை இணைப்பது :

54. ஆயுதப் போராட்டத்திற்கு அல்லது பொதுவாக சட்டவிரோதமான போராட்டத்திற்கு முறையாகத் தயாரிக்கின்ற கட்சியின் முன்னுள்ள முக்கியத்துவம் வாய்ய்த இக்கடமையை முதலாளித்துவ நாடுகளிலுள்ள சட்டபூர்வமாக இயங்கும் பொதுவுடைமைக் கட்சிகள் வழக்கமாகவே கிரகிக்கத் தவறுகின்றன. தாம் நிலைப்பதற்கு நிரந்தரமான சட்டபூர்வ அடிப்படையைச் சார்ந்திருப்பது மற்றும் சட்டபூர்வ கடமைகளைச் செய்வதற்கு ஏற்ப தமது வேலைகளைச் சார்ந்திருப்பது என்ற பிழையை பொதுவுடைமை நிறுவனங்கள் அடிக்கடி இழைக்கின்றன.

மறுபுறம் சட்டவிரோதமாக இயங்கும் கட்சிகள் புரட்சிகர மக்கள்திரளினருடன் இடையறாத தொடர்புடைய ஒரு கட்சியைக் கட்டி முடிப்பதற்கு சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்துவதற்கு அடிக்கடி தவறுகின்றன. இந்த முக்கிய உண்மைகளை அலட்சியப்படுத்தும் தலைமறைவுக் கட்சிகள் வியர்த்தமான கடமைகளுக்காக தமது உழைப்பை வீணாக்குகின்ற வெறும் சதிகாரக் குழுக்களாகிவிடும் அபாயத்திற்கு உள்ளாகின்றன.

இவ்விரு போக்குகளுமே பிழையானவை. தலைமறைவாக இருந்து இயங்குவதற்கான மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, புரட்சி வெடிப்புகளுக்கான, முழுமையான தயாரிப்புகளை எவ்வாறு நிச்சயப்படுத்திக் கொள்வது என்பதை சட்டபூர்வமாக இயங்குகின்ற ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் அறிந்திருக்க வேண்டும். மறுபுறம், தீவிரமான கட்சி நடவடிக்கைகளின் மூலம் மகத்தான புரட்சிகர மக்கள் திரளினருடைய நிறுவன ரீதியிலான மற்றும் உண்மையான தலைவன் ஆவதற்கு ஒவ்வொரு சட்டவிரோதமாக இயங்கும் பொதுவுடைமைக் கட்சியும் சட்டபூர்வமான தொழிலாளர் இயக்கம் வழங்குகின்ற அனைத்து சாத்தியப்பாடுகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சட்டவிரோதமான – சட்டபூர்வமான கட்சி நிறுவனங்கள் முழுக்க முழுக்க தனித்தனியானவை அல்ல :

  1. சட்டபூர்வமாக இயங்குகின்ற தலைமறைவாக இயங்குகின்ற இரு கட்சி வட்டாரங்களிலுமே சட்டவிரோதமான பொதுவுடைமைவாத நடவடிக்கைகள் பற்றி ஒரு தவறான போக்கு உள்ளது. பிற கட்சி நிறுவனங்களிலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்ட தூய்மையான இராணுவ நிறுவனத்தை நிறுவுவதும் நிலை நிறுத்துவதும் என்ற போக்கே இது. இது முழுக்க முழுக்கப் பிழையானது. மாறாக, புரட்சிக்கு முந்திய காலத்தில் போர்க்குணமிக்க நிறுவனங்களை உருவாக்குவது என்பது பொதுவுடைமைக் கட்சியின் பொதுவான வேலைகளின் வாயிலாகவே பிரதானமாக சாதிக்கப்படுகிறது. புரட்சிக்கான போர்க்குணமிக்க நிறுவனமாக முழுக் கட்சியும் வளர்க்கப்பட வேண்டும்.

புரட்சிக்கு முந்திய காலத்தில் முந்திரிக்கொட்டைத் தனமாக அமைக்கப்படும் தனித்தனியான இராணுவ நிறுவனங்கள் கலைந்துபோகும் போக்குகளையே வெளிப்படுத்தித் தீரும். ஏனெனில், அவற்றுக்கு நேரடியான மற்றும் பயனுள்ள கட்சி வேலை என்று எதுவுமில்லை.

படிக்க:
கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு ! சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் !!
மத்தியக் கமிட்டியும் அரசியல் தலைமைக் குழுவும் | லெனின்

  1. தனது உறுப்பினர்களையும் கட்சி நிறுவனங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்துவிடாமல் பாதுகாப்பதும், இவ்வாறு கண்டுபிடிப்பதைச் சாத்தியமாக்குகின்ற பதிவு செய்தல், கவனக்குறைவாக நிதி மற்றும் நன்கொடை சேகரிப்பது, புரட்சிகர வெளியீடுகளைத் தராதரமின்றி கவனக்குறைவாக விநியோகிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதும் ஒரு தலைமறைவுக் கட்சி செய்ய வேண்டியது அவசியமே. இந்தக் காரணங்களால் ஒரு தலைமறைவுக் கட்சியானது சட்டபூர்வமான கட்சியின் அளவுக்கு வெளிப்படையான நிறுவன முறைகளைக் கடைபிடிக்க முடியாது. இருப்பினும் நடைமுறை வாயிலாக நிறுவன முறைகளில் மேலும்மேலும் தேர்ச்சி பெற முடியும்.

மறுபுறம், ஒரு சட்டபூர்வமான மக்கள்திரள் கட்சியானது, சட்டவிரோதமான வேலைகளுக்கும் போராட்டக் காலங்களை எதிர்நோக்கியும் முழுமையான தயாரிப்புகளுடன் இருக்க வேண்டும். எந்த விதமான சூழ்நிலைகளிலும், அது தனது தயாரிப்பைத் தளர்த்தவே கூடாது. அதாவது, உறுப்பினர்களின் கோப்புகளுக்குப் பிரதி எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கடிதங்களை அழித்துவிட வேண்டும். முக்கிய ஆவணங்களைப் பத்திரமாக வைக்க வேண்டும். செய்தி எடுத்துச் செல்பவர்களுக்கு இரகசிய முறைகள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும்.

சட்டபூர்வமான அதுபோலவே சட்டவிரோதமான கட்சி வட்டாரங்களில், சட்டவிரோதமான நிறுவனங்களானவை முழுக்க முழுக்க இராணுவ நிறுவனங்களாக கட்சிக்குள்ளேயை மிகமிகத் தனிமைப்பட்டவையாக அமைக்கப்பட வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த ஊகம் முழுக்கவும் பிழையானது. புரட்சிக்கு முந்திய காலத்தில் நமது போரிடும் நிறுவனங்களை உருவாக்குவது என்ற பொதுவுடைமைக் கட்சியின் பொதுவான வேலையைப் பிரதானமாகச் சார்ந்திருக்க வேண்டும். முழுக் கட்சியுமே புரட்சிக்காகப் போரிடும் நிறுவனமாக ஆக்கப்பட வேண்டும்.

(தொடரும்)


முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க