கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | இறுதிப் பாகம்

முதல் பாகம்

புரட்சி நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும்.

57. எனவே புரட்சிக்கு முந்திய காலத்திலேயே புரட்சியின் தேவைகளுக்குப் போதுமான ஒரு போரிடும் நிறுவனத்தை உருவாக்கி உறுதிப்படுத்துவதை உத்திரவாதப்படுத்தக் கூடிய முறையில் நமது பொதுவான கட்சி வேலைகள் பிரித்தளிக்கப்பட வேண்டும். பொதுவுடைமைக் கட்சியை வழிநடத்தும் தலைமையானது தனது நடவடிக்கைகள் அனைத்திலும், புரட்சியின் தேவைகளால் வழிநடத்தப்படுவது மகத்தான முக்கியத்துவமுடையதாகும். இத்தேவைகள் என்னவாக இருக்குமென்று முன்கூட்டியே சாத்தியப்பட்ட அளவு காண முடிவது மகத்தான முக்கியத்துவம் உடையதாகும். இது இயல்பாகவே எளிய விசயமல்ல. ஆனால் இது எந்த விதத்திலும் பொதுவுடைமைவாத நிறுவனத் தலைமையில் இந்த முக்கிய விசயத்தைக் கவனத்தில் கொள்ளாமல் விடுவதற்கான காரணமாக இருக்கக் கூடாது.

பகிரங்கமான புரட்சி எழுச்சிகளின் காலத்தில், கட்சி இயங்குவதில் பெரு மாற்றங்களுக்கு உள்ளாவது என்ற மிகக் கடினமான மற்றும் சிக்கலான கடமைகளை மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி கூட எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனது சக்திகள் அனைத்தையும், புரட்சி நடவடிக்கைகளுக்காக ஒருசில நாட்களில் திரட்ட வேண்டிய அவசியம் நமது அரசியல் கட்சிக்கு எழுவது சாத்தியமே. தனது சக்திகளைத் திரட்டுவதுடன் கூடவே தனது சேமிப்புச் சக்திகளையும் ஆதரவான நிறுவனங்களையும், அதாவது நிறுவனமாக்கப்படாத புரட்சிகர மக்கள் திரளினரையும் கட்சியானது திரட்ட வேண்டியிருக்கும். முறையான செஞ்சேனையை அமைப்பது என்பது இன்னமும் நிகழ்ச்சிநிரலில் எழாத பிரச்சினையாகவே இருக்கும். ஏற்கெனவே நிறுவி அமைக்கப்பட்ட படையின்றி ஆட்சித் தலைமையின் கீழான மக்கள் திரளினரைக் கொண்டே நாம் வெற்றியடைய வேண்டியிருக்கும். இக்காரணத்தினால் ஒரு எழுச்சிக்காகச் சிறப்பாகத் தயாரிப்பு செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்படாமல் இருந்தால் கட்சியின் மிகத் தீர்மானகரமான முயற்சிகூட வெற்றி பெறாது.

விசேடமான இரகசிய எந்திரத்தைக் கட்டியமைப்பது

58. புரட்சிகர மையத் தலைமை உறுப்புகள் கூட புரட்சி நிலைமைகளைத் தாக்குப்பிடிக்க இயலாதவை என்று நிரூபிக்கப்பட்டிருப்பதை கண்டிருக்க முடியும். சிறு கடமைகளைப் பொருத்தவரை பாட்டாளி வர்க்கம் மகத்தான புரட்சி நிறுவன அமைப்பாக்குதலைப் பொதுவாக சாதிக்க முடிந்துள்ளது. ஆனால், தலைமையகங்களில் எப்போதும் கிட்டத்தட்ட ஒழுங்கின்மை, குழப்பம், அராஜகம் ஆகியவை இருந்துள்ளன. சில நேரங்களில் மிகமிக எளிய வேலையைப் “பிரித்தளிப்பது” கூட போதுமான அளவு இல்லாமல் இருந்திருக்கிறது. உளவு அறியும் துறை எந்த அளவு மோசமாக ஒழுங்கமைக்கப்பட்டு இருக்குமென்றால், அடிக்கடி அது நன்மை செய்வதை விட தீமையே கூடுதலாகச் செய்திருக்கிறது. இரகசிய அஞ்சல் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் நம்பகமானதாக இல்லை. இரகசிய அலுவலகம் மற்றும் அச்சிடும் வேலைகள் பொதுவாகவே அதிர்ஷ்டவசமான அல்லது தூரதிருஷ்டவசமான வாய்ப்புகளின் தயவில் உள்ளன. எதிரி சக்திகளின் “தூண்டிவிட்டுக் காட்டிக் கொடுக்கும் ஏஜெண்டுகளுக்கு” இவை சிறந்த வாய்ப்புகள் அளிப்பவையாக உள்ளன.

குறிப்பிட்ட இத்தகைய வேலைகளுக்காக கட்சியானது தனது நிர்வாகத்தில் விசேடமான துறையை ஒழுங்கமைக்காவிட்டால், இக்குறைகளைச் சரிப்படுத்த முடியாது. இராணுவ உளவறியும் வேலைக்கு நடைமுறை அனுபவம், விசேடப் பயிற்சி, கூர்மதி ஆகியவை வேண்டும். அரசியல் போலீசுக்கு எதிரான இரகசிய வேலைக்கும் இதுவே பொருந்தும் என்று கூறலாம். நீண்டகால அனுபவத்தின் வாயிலாக மட்டுமே மனநிறைவுறத்தக்க முறையில் இரகசியத் துறை உருவாக்கப்பட முடியும். இந்தச் சிறப்புத் தன்மையுடைய புரட்சி வேலைகள் அனைத்தையும் செய்ய சட்டபூர்வமாக இயங்கும் ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் தயாரிப்புகள் (அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரி) செய்ய வேண்டும். மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முழுக்கவும் சட்டபூர்வமான நடவடிக்கைகளின் வாயிலாகவே இத்தகைய இரகசிய நிறுவனங்களைப் படைக்க முடியும்.

படிக்க:
அண்ணாமலை : வெறும் சங்கியிலிருந்து அதிகாரப்பூர்வ சங்கியான கதை!
அர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் ?

எடுத்துக்காட்டாக, கூர்மதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு சட்டபூர்வ பிரசுரங்கள் விநியோகிப்பது மற்றும் பத்திரிகைகளின் தொடர்பு ஏற்பாடுகள் ஆகியவற்றில் குறியீடு முறையைக் கடைபிடிப்பதன் மூலம் இரகசிய அஞ்சல் மற்றும் போக்குவரத்து செய்தித் தொடர்புகளை நிறுவுவது முற்றிலும் சாத்தியமே.

ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரையும் புரட்சிக் கடமைகளுக்காக வளர்த்தெடுப்பது

பொதுவுடைமைவாத அமைப்பாளர் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரையும் ஒவ்வொரு புரட்சிகர தொழிலாளியையும் எதிர்காலப் புரட்சிப் படையின் போராளி என்று நோக்க வேண்டும். இக்காரணத்தால் எதிர்காலத்தில் அவர் ஆற்றப் போகின்ற பாத்திரத்துக்கு ஏற்ப ஒரு இடத்தை அவருக்கு ஒதுக்க வேண்டும். அவருடைய இப்போதைய நடவடிக்கை உபயோகமானதாக – கட்சியின் இப்போதைய வேலைக்கு அவசியமானதாக – இருக்க வேண்டும். மற்றபடி, வெறும் (வறட்டுத்தனமான) பயிற்சியாக இருக்கக் கூடாது. ஏனெனில், நடைமுறை ஊழியர் இதை நிராகரித்து விடுவார். இத்தகைய நடவடிக்கை ஒவ்வொரு பொதுவுடைமைவாதிக்கும், மிக அத்தியாவசியமான இறுதிப் போராட்டத்துக்கான ஆக மிகச் சிறந்த தயாரிப்பு என்பதை யாரும் மறக்கவே கூடாது.

(முற்றும்)

முந்தைய பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க