ஹானில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படத் துவங்கியது குறித்த செய்தியை வெளியிட்ட சீன ஊடகவியலாளர் ஜாங் ஜானுக்கு “பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக” குற்றஞ்சாட்டி சீன நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

சீனாவின் கூட்டம் நிறைந்த மருத்துவமனைகள் மற்றும் வெறுமையான வீதிகள் குறித்து ஜாங் ஜான் அளித்த தகவல்களால் பெருந்தொற்றின் மையப்புள்ளியாக இருந்த சீனா குறித்த  – சீன அரசின் விவரிப்பிலிருந்து வேறுபட்டதான – விவரங்கள் வெளி உலகிற்கு தெரியவந்தன.

ஷாங்காயின் கீழமை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஜாங்கின் வழக்குரைஞர் ரென் குவானியு கூறியிருக்கிறார்.

படிக்க :
♦ அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !
♦ ” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !

நோய்த்தொற்றை சீனா கையாண்டவிதம் தொடக்கத்தில் மறைக்கப்பட்டதுடன், மருத்துவர்கள் உட்பட நெருக்கடியை அம்பலப்படுத்துபவர்கள் சீன அரசினால் எச்சரிக்கப்பட்டு முடக்கப்பட்டார்கள்.  மேலும் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதை அதிபர் ஜி ஜிங்பிங்கின் வெற்றியாக சீன ஊடகங்கள் புகழ்மாலை சூட்டின.

வாங்கிற்கு ஆதரவாக போராட்டம்

இந்நிலையில் சீனாவின் கொரோனா பரவல் குறித்து செய்தி வெளியிட்ட ஜாங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு 7 மாதங்களுக்குப் பிறகு இந்த தீர்ப்பை சிங்கப்பூர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. தீர்ப்பு வழங்கும் நாளன்று பத்திரிகையாளர் வாங்கிற்கு ஆதரவாய் பலரும் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியதால் ஷாங்காய் போலீஸ் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

வாங்கிற்கு தன்னுடைய ஆதரவை தெரிவிக்க ஹூனானின் மையப்பகுதியில் இருந்து வந்ததாக சக்கர நாற்காலியில் வந்த ஒருவர் கூறினார். வாங்கின் பெயரை ஒரு சுவரொட்டியில் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை போலீஸ் உடனே அங்கிருந்து வெளியேற்றியது. கொரொனா நோய்த்தொற்றைக் காரணம் காட்டி வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

பத்திரிகையாளர் வாங், ஊஹான் குடியிருப்பாளர்களிடம் எடுதத நேர்காணல்கள், ஒரு இறுதிச்சடங்கின் காட்சி மற்றும் அதில் கலந்து கொண்டவர்களிடம் எடுத்த நேர்காணல், இரயில் நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஊஹான் இன்ஸ்டிட்யூட் ஆப் வைராலஜி ஆகியவற்றின் காணொளிக் காட்சிகள் யுடியூப்பில் பதிவேற்றபட்டன.

படிக்க :
♦ ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
♦ ஆப்பிள் நிறுவனம் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு ?

சீனப் போலீசால் கடந்த மே மாதத்தில் கைது செய்யப்பட்ட வாங், ஜூன் மாதம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகவும், அப்போது போலீசு அவரிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் இருந்து ரெய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த டிசம்பர் மாதத்தில் தலைவலி, மனச்சோர்வு, வயிற்று வலி, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் தொண்டை நோயால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கு விசாரணைக்கு முன்பாக அவரை பிணையில் விடுவதற்கு கோரியதையும் நீதிமன்றம் அதை நிராகரித்ததையும் பற்றி அவரது வழக்குரைஞர் கூறினார்.

மேலும், பத்திரிகையாளர் ‘வாங்’குடன் சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்ட ஃபாங் பின், சென் கியுஷி மற்றும் லீ ஜெஹுவா ஆகியோர் நீதிமன்றத்திற்கு வரவில்லை. ஃபாங் குறித்து எந்த செய்தியும் இதுவரை இல்லை. அதே சமயத்தில், தான் கட்டாயத் தனிமைப்படுத்தலில் தள்ளப்பட்டதாக எப்ரல் மாத்தில் வெளியிட்ட ஒரு யுடியூப் காணொளியில் லீ குற்றஞ்சாட்டினார். சென் விடுவிக்கப்பட்டாலும், தொடர்ந்து கண்காணிப்பிற்குள் இருப்பதாகவும், பொது வெளியில் அவர் பேசுவதில்லை என்றும் அவரது நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏகாதிபத்தியங்களின் உற்பத்திப் பின்னிலமாகவும், ஏகாதிபத்தியமாக பரிணமித்தும் வரும் சீனா, தனது நாட்டு உழைக்கும் வர்க்கத்தை ஒட்டச் சுரண்டி வருகிறது. மக்களை சுரண்டலின் பிடியில் இருத்தி வைக்க தொடர்ந்து அங்கு பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் நீடித்து வருகின்றன.


ஆறுமுகம்
நன்றி : The Wire