பெட்ரோல் விலை விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்து வருவதுபோல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் கடந்த சில தினங்களுக்கு முன் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.25-ஐ உயர்த்தி ரூ.875.50-ஆக விலையை நிர்ணயத்துள்ளார்கள். இது ஊருக்கு ஊர், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். சென்னையைப் பொருத்தவரை ஒரு கேஸ் சிலிண்டர் விலை ரூ.875.50 டெலிவரி சார்ஜ்வுடன் சேர்த்து ரூ.925.50.
ஏறக்குறைய ஒரு வருடத்தில் ரூ.165 அளவிற்கு விலையை உயர்த்தி குடும்பங்களின் வருவாயைப் பறித்ததைக் கண்டு அதிர்ச்சியுற்ற மக்களின் கதறலை விட கார்ப்பரேட்டுகளின் சிணுங்கல்கள் தான் பாசிஸ்ட் மோடிக்கு முக்கியம். ஏழைகளின் கதறல் ஓலம் எழும்போது அவருக்கு காது செவிடாகி விடும்.
படிக்க :
கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!
சிலிண்டர் விலை : தேர்தல் முடிஞ்சதும் வச்சான் பாரு ஆப்பு !
பெட்ரோல் – டீசல் – கேஸ் போன்ற எரிப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற, இறக்கத்தை பொருத்தே அமைகிறது என்று ஒப்பாரி வைக்கிறது மோடி அரசு.
ஆனால், கச்சா எண்ணெய் விலை இறங்கும்போது எரிப் பொருட்களின் விலையைக் குறைப்பதும் இல்லை. அதேவேலையில் விலை ஏற்றத்தின் போதும்கூட கடந்த காலங்களைப்போல ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்ற அளவில் உயர்த்தாமல், ரூ.25, 50, 100 என்று அபரிமிதமாக உயர்த்தி ஏழைகளின் வாழ்வை உருகுலைக்கிறது மோடி அரசு. குறிப்பாக இந்த வருடத்தின்(2021) பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.100 உயர்த்தியுள்ளது.
2014-ல் எண்ணெய் நிறுவனங்களுக்கு கொடுத்துவந்த கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாக மக்களுக்கு வழங்கியது காங்கிரஸ் அரசு. அப்போது இதை பாஜக கடுமையாக எதிர்த்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுக்கு வழங்கும் கேஸ் மானியத்தை மக்களின் வங்கி கணக்கில் செலுத்தியது.
2015-ல் ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.998-ஆக இருந்தது. அப்போது ரூ.563 மானியம் வழங்கப்பட்டது, மீதி ரூ.435-ஐ மட்டும் செலுத்தினால் சிலிண்டர் வாங்கும்போது பாதிப்பு தெரியவில்லை. இது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.563 மானியமானது, மோடி அரசால் படிபடியாகப் பறிக்கப்பட்டு இன்றோ வெறும் ரூ.24.75-ஐ மட்டுமே வங்கியில் செலுத்தப்படுகிறது என்று மக்கள் கதறுகின்றனர். இனி என்ன? மோடி ஒரு மோசடி பேர்வழி என்பதை நடைமுறையில் நிருபித்துவிட்டார்.
மோடி அரசானது 2020 – 2021-ல் ரூ.40,915 கோடி இருந்த மானியத்தை வெறும் ரூ.12,995 கோடியாக சுருக்கியதோடு, சந்தைக்கேற்ப கேஸ் சிலிண்டர் விலையை தீர்மானித்து கொள்ளும் உரிமையையும் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதுமே இந்த விலையேற்றத்திற்கு அடிப்படைக் காரணம்.
“இங்குதான் குளறுபடியே தொடர்கிறது” என்கிறார்கள் எண்ணெய் எரிப் பொருட்கள் துறையில் பணிபுரியும் முக்கிய அதிகாரிகள். “தற்போதைய நிலையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்தது யார்? என்பது புரிந்த பாடில்லை” என்கின்றார்கள். “சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு அறிவிக்கப்பட்ட பின்னரே, அதன் விவரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு தெரிகிறது என்கிறார்கள்.
அப்படியென்றால், விலையைத் தீர்மானிப்பது யார்? ஒரு வேளை அதானி, அம்பானிக்கு சந்தை விலைக்கேற்ப கேஸ் சிலிண்டர் விலையைத் தீர்மானித்து கொள்ளும் உரிமையும் காரணமாக இருக்கலாம் அல்லவா? இதனால், எண்ணெய் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், மோடிக்கு நிச்சயம் தெரியும் இந்த வருடத்தில் ரூ.165 வரை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தபடுமென்று.
மக்களை நோயால் விரட்டிய, சாகடித்த கொரோனா காலங்களில், குறிப்பாக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ரூ.115 வரை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தியது மோடி அரசு. ஏப்ரல் 30-ம் தேதி தாமிர ஆலையைத் திறக்க அதானிக்கு ஆணை வழங்கியது போன்ற பல்வேறு சலுகைகள் மூலம் அதானி, அம்பானி கும்பலின் சொத்தின் மதிப்பு தலா 74 சதவிதம் 24 சதவிதம் உயர்ந்துள்ளது. உழைக்கும் மக்களின் நிலையோ இருப்பதையும் இழந்ததோடு, இனியும் வாழ முடியுமா என்ற அவலத்திற்கு சரிந்துள்ளது. இந்த ஈவு இறக்கமற்ற ஜென்மங்கல் கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படும்போது ஒரு துரும்பைக் கூட அலைத்துப்போடவில்லை. இக்காலகட்டத்தில் இவர்கள் கொள்ளையடித்ததோ ஏராளம்.
படிக்க :
மூனு மாடி ஏறிப் போய் சிலிண்டர் போட்டாலும் பத்து ரூபாதான் !
சமையல் எண்ணெய் விலை உயர்வு : பின்னணி என்ன ?
இருப்பவன் [இது போன்றவர்கள்] கொழுப்பதும், இல்லாதவன் [இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள்] இளைப்பதும்தான் முதலாளித்துவத்தின் பொருளாதாரக் கொள்கை. இது பெற்று எடுத்து வளர்த்து வரும் இன்றைய தாராளமயம் – தனியார்மயம் – உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கக் கொள்கையும் இதுவே.
இதை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் கார்ப்பரேட் – காவி பாசிசம்தான் இந்த விலையேற்றத்திற்கும், 91 சதவித மக்களை வறுமைக்கும், பட்டினி – பசிக்கும், பிணிக்கும் ஆளாக்கி வருகிறது என்பதை தொடர்ச்சியாக இடைவிடாமல் நம்முடைய சிந்தனையில் ஏற்றி வருவோம். இவர்களுக்கும் இவர்கள் இழைத்து வரும் கொடுமைகளுக்கும் எப்படி முடிவு கட்டுவதென்று, அப்போதுதான் தெளிவு பிறக்கும்.

கதிரவன்