ஊழலில் உலக சாதனை படைக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி!

ஊழலில் உடைபடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடி பிம்பத்துடன் சேர்த்து கார்ப்பரேட் கொள்ளைகளை உள்ளடக்கிய பிரிட்டன் முதலாளிகள் வகுத்தளித்த போலி ஜனநாயக நாடாளுமன்ற ஆட்சிமுறையையும் அம்பலப்படுத்துவோம்!

ஊழலில் உலக சாதனை படைக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி!
சுரண்டலில் கொழுக்கிறது அம்பானி – அதானி கார்ப்பரேட்கள்!

♦ ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; மோடி-அமித்ஷா ஆட்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமலான ஜி.எஸ்.டி. (GST) வரி மூலம் வசூலான சுமார் 50 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை என்ன ஆனது?

♦ கச்சா எண்ணெய் விலை சர்வதேச அரங்கில் படுபாதாள அளவிற்கு குறைந்த நிலையிலும் வரிகளை உயர்த்தி பெட்ரோல்-டீசல் விலையுயர்வு மூலம் அடித்த கொள்ளை 30 லட்சம் கோடி எங்கே போனது?

♦ மொத்த விலைவாசி உயர்வின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடித்த கொள்ளையை கணக்கிடப்போவது யார்?

படிக்க : அமுல் விரிவாக்கத்துக்குப் பின்னே அம்பானியின் ஏகபோக விருப்பம்!

♦ கடந்த பத்து ஆண்டுகளில் கார்ப்பரேட்களுக்கு கடன் தள்ளுபடி 15 லட்சம் கோடி, இதனால் பொதுத்துறை வங்கிகளின் லாபம் மாயமானதைக் கேட்கப்போவது யார்?

♦ வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாதது, ATM பயன்பாட்டுக்கு கட்டணம், SMS அனுப்ப கட்டணம் எனப் பொதுமக்களிடம் அடித்த கொள்ளை 35 ஆயிரம் கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம்!

♦ அறிவிப்பில்லாமல் ரயில்வே-வில் கட்டண உயர்வு, முதியோர் பயண கட்டண சலுகை பறிப்பு, தரம் குறைந்த கொள்முதல் என மக்களிடம் பிடுங்கும் பல்லாயிரம் கோடி எங்கே செல்கிறது?

♦ கார்ப்பரேட்களுக்கு 30 முதல் 22 சதவிகிதம் வரை வரிகுறைப்பு மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வருவாய் இழப்பு சுமார் 8 லட்சம் கோடி!

♦ தனியார்மயம் என்ற பெயரில் கல்வி, மருத்துவம் போன்ற சேவைத் துறைகளிலும், BSNL, வங்கி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறைகளிலும் கனிம வள சூறையாடல் மூலமும் கொள்ளை அடிக்கப்பட்டது பல லட்சம் கோடி!

♦ நாடாளுமன்றத்தில் அமளிதுமளி செய்து மக்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு செய்யப்பட்ட நூற்றுகணக்கான சட்ட திருத்தங்கள் பற்றி பேசப்போவது யார்?

♦ மோடியின் ஆட்சியில் அதானி உலக பணக்காரர் வரிசையில் 312-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்குத் தாவியது எப்படி? கடைசி இரண்டு ஆண்டுகளில் மட்டும் 18 லட்சம் கோடி ரூபாய் பங்குச்சந்தையில் பரிவர்த்தனை எப்படி? இந்த விசயத்தில் அமலாக்கத்துறை ரெய்டு செல்லாதது ஏன்?

♦ நாடு முழுவதும் பல லட்சம் கோடிக்கு நடக்கும் போதைப்பொருள். கடத்தலையும் கிரிமினல் கும்பலையும் தேசிய புலனாய்வு முகமை (NIA) சுற்றி வளைக்காதது ஏன்?

♦ மோடி அரசின் 9 ஆண்டு பட்ஜெட்டின் வரவு-செலவு, திட்டங்களை ஆய்வு செய்தால் சில நூறு லட்சம் கோடிகள் கார்ப்பரேட்டுகளுக்கு சென்றுள்ளது என்பதை அறிய முடியும்!

♦ உலக மக்கள் தொகையில் 142.8 கோடியுடன் முதலிடம் பிடித்த இந்தியாவில் பட்டினியிலும் முதலிடம் பிடித்து, துடித்துக்கொண்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 22 கோடி!

படிக்க : மோடியின் கிரீஸ் பயணம்: எல்லாம் அதானிக்காக!

♦ படித்த இளைஞர்கள் சுரண்டல், ஊழலில் உலக சாதனை படைக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிஸ்டுகளை கேள்விக்குள்ளாக்கி பொதுமக்களுக்குப் புரிய வைத்தால் தான் இந்த மண்ணில் இனி வாழ முடியும்!

♦ முதலாளித்துவ சுரண்டலை உள்ளடக்கிய நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை லஞ்சம், ஊழல், சொத்துக்குவிப்பு, கடத்தல், பொதுச்சொத்து சூறையாடல், கலவரம் என அனைத்து கேடுகளையும் உள்ளடக்கியது!

♦ ஊழலில் உடைபடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடி பிம்பத்துடன் சேர்த்து கார்ப்பரேட் கொள்ளைகளை உள்ளடக்கிய பிரிட்டன் முதலாளிகள் வகுத்தளித்த போலி ஜனநாயக நாடாளுமன்ற ஆட்சிமுறையையும் அம்பலப்படுத்துவோம்!

இனியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க