டந்த 2021, மே மாதம் குஜராத் கடற்கரை மற்றும் பிற இந்தியாவின் அரபிக்கடல் பகுதிகளில் டக்டே புயல் (Cyclone Tauktae) தாக்கியது. குஜராத் மாநிலத்தில் மட்டும் புயல் மீன்பிடித் தொழிலுக்கு ஏற்படுத்திய சேதம் ரூ.160 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான இழப்பு இன்னும் மிக அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
மீனவர்கள் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ரூ.105 கோடி நிவாரண தொகையை ஒதுக்குவதாக அறிவித்தது குஜராத் அரசு. இந்த தொகை மீன்வர்களின் இழப்பை ஈடுசெய்வதற்கு போதுவானதாக இல்லை என்றும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் பலர் இந்த நிவாரணம் வழங்கும் பட்டியலிலேயே இல்லை என்றும் மீனவ சங்கங்கள் கூறுகின்றன. மே மாதம் ஏற்பட்ட பாதிப்புக்கு இன்றுவரை நிவாரணம் பெற முடியாமல் தவிக்கின்றனர், பெரும்பாலான மீனவர்கள்.
புயல் நிவாரணம் வழங்குவதில் இழப்பீடு பெறுவதற்கு எந்த ஆவணங்கள் தேவை என்பதில்தான் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, புயல் நிவாரணம் வாங்க ரேஷன் கார்டுகள் தேவை என கூறியுள்ளது மாநில அரசு. ஆனால், பல மீனவர்கள் புயல் பாதிப்பால் தாங்கள் வைத்திருந்த ஆவணங்களை இழந்துள்ளனர்.
படிக்க :
பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !
கஜா புயல் : விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் !
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், (NFSA)-2013 அடிப்படையில் அந்தந்த மாநில அரசுகளால் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. ஆனால், மூன்று ஆண்டுகள் கழித்து, உணவுப் பாதுகாப்பு குறித்த தேசிய சட்டத்தை 2016-ல் மட்டுமே நடைமுறைப்படுத்தியது குஜராத் அரசு.
இதனால், குஜராத்தில் தற்போது உணவுப் பாதுகாப்பிற்கான உள்கட்டமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. நிவாரணத் தொகையை ரேஷன் கார்டுகளுடன் இணைத்து வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளது. இதில் பல மீனவர்கள் இடம்பெயர்வு தன்மை கொண்டவர்களாக இருப்பதால் சிக்கல் மேலும் அதிகரிக்கிறது.
குஜராத்தின் உனா பகுதியில் உள்ள ஓர் புலம்பெயர் மீனவ கிராமம்தான் தரபந்தர். மீனவர்கள் வேலைவாய்ப்புக்காக தங்கள் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து, வீடுகள் மற்றும் குடிசைகளை இந்த கடற்கரை கிராமத்தில் கட்டிக்கொண்டு, மீன்பிடி காலத்தில் இங்கேயே தங்கியிருந்து மீன்பிடித் தொழிலை செய்துவிட்டு, மீண்டும் மழைக்காலங்களில் தங்கள் கிராமத்திற்கு திரும்பிவிடுகிறார்கள் என்பதே அவர்களில் வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது.
இப்படி வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்வதன் காரணமாக தங்களிடம் பல்வேறு ஆவணங்களை மீனவர்கள் வைத்திருப்பதில்லை. எனவே, புயல் நிவாரணம் போன்றவற்றை வாங்குவதில் சிக்கல் நிலவுகிறது.
இந்த பிரச்சனையை பற்றி ஷியால்பெட், ஜாஃப்ராபாத், சஞ்ச் துறைமுகம் மற்றும் தாரா துறைமுகத்தின் பல மீனவ அமைப்புகளாலும், கிர் சோம்நாத், சையத் ராஜ்பாரா, நவ பந்தர், சிமர் ஆகிய கிராமங்களை சார்ந்த மீன்வர்களும் மீன்வள ஆணையரிடம் தந்த கோரிக்கை கடித்தத்தில் கூறியுள்ளனர். மேலும், பல்வேறு இழப்பீடு கோரிக்கைகள் பற்றியும், மீனவர்களின் வாழ்வாதரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது பற்றியும் கடிதத்தில் கூறியுள்ளனர்.
சையத், ராஜ்பரா, தரப்பந்தர் விஸ்தாரி ஆகிய கிராமங்களில் 2011 முதல் ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்படவில்லை. இதன்பொருள், இந்த புலம்பெயர்ந்த மீனவர்கள் 2013-க்கு பிறகு வழங்கப்பட்ட புதிய NFSA-வின் கீழ் ரேஷன் கார்டுகளை பெறவில்லை. 2011-ம் ஆண்டுவரை ரேஷன் கார்டுகளில் பதிவு செய்யப்பட்ட மக்களின் வயதிற்கு ஏற்ப நிவாரணத்தொகை வழங்கப்படுவதால், 2011-ல் குழந்தையாக இருந்தவரகள் தங்களுக்கு தகுதியான ரூ.100-க்கு பதிலாக ரூ.60 தான் பெற்றுள்ளார்கள். புதிய உறுப்பினர்கள் (2011 முதல்) எந்த இழப்பீடும் பெறவில்லை என்பதையும் இதன்மூலம் நமக்கு புலப்படுகிறது.
“சில புலம்பெயர் மீனவர்கள் தாராபந்தர் கிராமத்தில் தங்கள் பழைய ரேஷன் கார்டுகளை ரத்து செய்துவிட்டனர். ஆனால், சாயத் ராஜ்பரா கிராமத்திற்கு குடிபெயர்ந்த அவர்கள் அங்கு புதிய ரேஷன் கார்டுகளை பெற முடியவில்லை, இதனால், நிவாரணத் தொகையையும் வாங்க முடியவில்லை” என்கிறார் ஓர் புலம்பெயர் மீனவர்.
வீடு சேத இழப்பீடுத் தொகையிலும், குறிப்பான வரையறைகள் தீர்மானிக்காததால், ரேஷன் கார்டுகள்தான் இதிலும் ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மீன்வர்கள் பொதுவாக தங்கள் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயரும் தன்மையை கொண்டிருப்பதால், அரசாங்கம் அவர்களில் நிலைதன்மையை கணக்கெடுத்து, ரேசன் கார்டு முகவரி இல்லாத, மற்றும் ரேசன் காடுகளே இல்லாத வீடுகளின் சேதத்திற்கான நிவாரணத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நிவாரணம் மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.
பல இடங்களில் புலம்பெயர் மீனவர்கள் பற்றிய கணக்கெடுப்பே நடத்தப்படவில்லை. அப்படி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட இடங்களிலும் கூட ரேஷன் கார்டு உள்ள வீடுகள் மற்றுமே நிவாரண கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு இல்லாத மீனவர்களின் வீடுகள் புயலினால் முற்றிலுமாக அழிந்திருந்தாலும் சரி, சேதமடைந்திருந்தாலும் சரி நிவாரணம் வழங்குவதற்கு அவர்களின் வீடுகள் பதிவுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
படிக்க :
பெரு : ‘சோஷலிஸ்டு’ கட்சியின் வெற்றி ஏகாதிபத்தியத்திற்கு எதிரானது அல்ல !
பெண்களின் சட்டைகளில் பொத்தான்கள் இடதுபுறத்தில் இருப்பது ஏன் ?
தங்களுக்கு (புலம்பெயர் மீனவர்களுக்கு) அரசால் கிடைக்கும் குறைந்த பட்ட மானியத்தை சுவிகரித்துக்கொள்ள ரேஷன் கார்டுகள் பயன்படுகிறார்கள். கார்டுகளை வழங்கும் NFSA-வின் தவறான நடவடிக்கைகளால், புலம்பெயர் மீனவ உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை புயலினால் இழந்து, அரசால் வழங்கப்படும் குறைந்த பட்ச நிவாரணத் தொகையையும் வாங்க முடியாமல் சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகலாக வாழ்கிறார்கள்.
பாதிப்புக்குள்ளான மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஆவணத்தைக் கொண்டு வரச் சொல்லுவதும், அரசின் தவறான ரேஷன் கார்டு பதிவுகளின் அடிப்படையில் நிவாரணம் கொடுக்கப்படாமல், அல்லது நிவாரணம் குறைத்துக் கொடுக்கப்படுவதும், வெறும் அதிகாரவர்க்கத்தின் சிவப்புநாடாத்தனம் மட்டுமல்ல. மாறாக அது, உழைக்கும் மக்களைப் பற்றிய இந்த அரசுக் கட்டமைப்பின் நிலைப்பாடு ஆகும். கூடுதலாக பாசிச பாஜக-வின் ஆட்சி நிலவும் குஜராத்தில் கேட்கவா வேண்டும்?

சந்துரு
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க