மாரிதாஸுக்கு கருத்துரிமை கிடையாதா?
2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதியன்று கோத்ரா இரயில் எரிப்பு நடந்தது. எந்த விசாரணையும் துவக்கப்படுவதற்கு முன்னர், அடுத்த நாளே குஜராத்தின் மிகப்பெரிய பத்திரிகைகளான சந்தேஷ் மற்றும் குஜராத் சமாச்சார் ஆகியவற்றில், மிகக்கொடூரமான வெறுப்புச் செய்திகள் பக்கம் பக்கமாக வெளியிடப்பட்டன. அதிலும் சந்தேஷில் “ஐம்பது இந்துக்கள் எரித்துக் கொலை” என்று முழுக்க முழுக்க படங்கள் அச்சிடப்பட்டு வெளியாகின. அந்த பத்திரிகையை பல்லாயிரக்கணக்கில் ஜெராக்ஸ் எடுத்து, வி.ஹெச்.பி.-யினர் தெருத்தெருவாக விநியோகித்து மிகப்பெரிய வெறுப்புப் பிரச்சாரத்தைத் துவங்கினர்.
அதுமட்டுமில்லாமல் மற்றொரு கட்டுரையில், “கோத்ரா இரயில் எரிப்பில் மீட்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் உடல்களை ஆய்வுசெய்ததில், அவர்கள் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களது மார்பகங்கள் அறுத்து எறியப்பட்டிருக்கின்றன. அவர்கள் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்” என்று சந்தேஷில் வெளியாகி இருந்தது.
படிக்க :
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே : சாமியார் பிராச்சி ஒப்புதல் வாக்குமூலம் !
கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
மார்ச் 1-ம் தேதியன்று சந்தேஷில் வெளியான மற்றொரு கட்டுரையில், “இஸ்லாம் ஆபத்தில் இருக்கிறது. மசூதியில் இருந்து அனைவரையும் உடனடியாக கோத்ரா இரயில் நிலையத்திற்கு அழைத்து வாருங்கள். இஸ்லாமுக்கு எதிரானவர்களை கொன்று தீர்ப்போம்” என்று முஸ்லிம்கள் சொல்லியதாக எழுதப்பட்டிருந்தது.
மார்ச் 1-ம் தேதியில் வெளியான ஒரு கட்டுரையில், “சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா இரயில் நிலையத்திற்கு வரும்போது, அதற்காகவே 7000 – 8000 முஸ்லிம்கள் அந்த இரயில் நிலைய ப்ளாட்பாரமில் காத்துக்கொண்டிருந்தனர்” என்று எழுதப்பட்டது.
அதே மார்ச் 1-ம் தேதியன்று வெளியான இன்னொரு கட்டுரையில், “உத்தரப் பிரதேசத்தில் இருந்து குஜராத்துக்கு இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்கள் தான் குஜராத்தின் பல இடங்களில் மினி பாகிஸ்தானை உருவாக்குகிறார்கள். அதனால் போலீசுத்துறை அவர்களை ‘கவனிக்க’ வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.
கோப்புப்படம் : குஜராத்தின் மிகப்பெரிய பத்திரிகைகளான குஜராத் சமாச்சார் மற்றும் சந்தேஷ்
மார்ச் 6-ம் தேதியன்று, “சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலின் ஒரு பெட்டியை எரிப்பதற்கு பதிலாக ஒட்டுமொத்த இரயிலையே எரிக்கத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இன்னொரு தாக்குதலை நடத்தவும் அந்த கும்பல் தயாராக இருந்தது” என்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது.
மார்ச் 7-ம் தேதியன்று, “ஹஜ்ஜு-க்கு சென்று வரும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாத்தான் திரும்பி வருகிறார்கள். அவர்களால்தான் இந்துக்களுக்கு ஆபத்து” என்று ஒரு கட்டுரை சந்தேஷில் வெளியானது.
அதே மார்ச் 7-ம் தேதியன்று, “கோத்ரா இரயில் எரிப்பைக் கொண்டாடி, கராச்சியில் ஒரு ஊருக்கு கோத்ரா என்றே பெயர் சூட்டியிருக்கிறது பாகிஸ்தான்” என்று இன்னொரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டது.
மார்ச் 8-ம் தேதியன்று, “இப்போது போய் முஸ்லிம்களெல்லாம் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிடுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று இன்னொரு கட்டுரை வெளியானது.
மார்ச் 16-ம் தேதியன்று, “ஃபத்தேகஞ்ச் மசூதியினால் கொளுத்தப்பட்ட நெருப்பு” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியானது.
மார்ச் 24-ம் தேதியன்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில், “சாத் கைவல் கோவிலையும், சர்சா கோவிலையும் இந்து பாடசாலைகளையும் ரிமோட் கன்ட்ரோல் மூலமாக வெடித்துச் சிதறடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர்” என்று ஒரு முதல் பக்கத்திலேயே தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது.
மார்ச் 26-ம் தேதியன்று, “பிலாலின் ஒற்றை வார்த்தையைக் கேட்டு எந்தக் குற்றத்தையும் செய்யத் தயாராகாவே பல கிரிமினல் இளைஞர்கள் இருக்கின்றனர். அப்படித் திட்டமிட்டுத்தான் சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலையே கொளுத்தியிருக்கிறார்கள்” என்று குஜராத் சமாச்சார் பத்திரிகையில் கட்டுரை வெளியானது.
முஸ்லிம்கள் மீது வெறுப்பைக் கக்கும் வகையிலான ஒரு வீடியோ சிடி தயாரிக்கப்பட்டு, தெருத்தெருவாக விநியோகிக்கப்பட்டது.
இப்படியான “கருத்துகள்” பரப்பப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், குஜராத் கலவரம் கொழுந்துவிட்டு எரிந்தது.
எந்தவொரு கருத்தையும் எவரும் சொல்வதற்கு உரிமை இருக்கிறது என்கிற நட்டநடுவாதிகளின் வாதப்படி பார்த்தால், மேலே சொன்னவை அனைத்துமே கருத்துகள்தான். இக்கருத்தை சொல்லியதன் மூலம் எவரொருவரையும் அவர்கள் தாக்கவில்லைதான். ஆனால், ஒட்டுமொத்த குஜராத் மக்களின் மனதிலும் ஆழமான முஸ்லிம் வெறுப்பினை விதைத்தன. கையில் கிடைக்கிற எதனையும் எடுத்து, முஸ்லிம்களை எங்கு பார்த்தாலும் தாக்குவதையும் கொல்வதையும் ஊக்கப்படுத்தியது இத்தகைய “கருத்துகள்”.
படிக்க :
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிக்கு ஓய்வு பெற்ற பிறகும் பதவி !
12-ம் வகுப்பு தேர்வில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்வி : பதறிய சி.பி.எஸ்.இ
தமிழகத்தில் மாரிதாஸ் என்பவன் யூட்யூப் வழியாக பரப்பிக் கொண்டிருக்கிற “கருத்துகள்” அனைத்தும், மேலே நான் குறிப்பிட்டிருக்கிற கருத்துகளுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல. பொய்களையும், வதந்திகளையும் வெறுப்புணர்வைத் தூண்டு வகையில் பரப்பிக்கொண்டிருக்கிற மாரிதாஸ் பேசுவதையெல்லாம் கருத்து என்றோ, அவனுக்கு அதற்கெல்லாம் “உரிமை” இருக்கிறது என்றோ சொல்பவர்களை மனிதர்கள் என்கிற வகையிலேயே சேர்க்கமுடியாது.
கருத்து சுதந்திரம் மிகமிக அவசியம்தான். ஆனால் மாரிதாஸ் பேசுவதெல்லாம் “கருத்து” என்கிற வகையிலேயே வராது. இந்த சமூகத்தை அழிப்பதற்காக காற்றில் கலக்கப்படுகிற விசம் என்றுதான் அதனைச் சொல்லவேண்டும்.

முகநூலில் : Chinthan EP

disclaimer

3 மறுமொழிகள்

 1. சீமான் கக்கும் விச கருத்துகளை பற்றி குறிப்பிடாதது வருத்தமளிக்கிறது.
  தமிழகத்தை கலவர பூமியாக்க கைக்கூலிகளை வளர்த்து வருகிறது பார்ப்பன RSS-BJP கும்பல்.
  DR.ராம்தாஸ்
  DR.கிருஷ்ணசாமி & ஜான்பாண்டியன்
  சீமான், மாரிதாஸ், அண்ணா மலை, L.முருகன் மற்றும் சிலர் கொண்டு செயல்படுகிறது.
  சமூகநீதி பேசுபவர்கள் இதையும் புரிந்துகொண்டு செயல்படே வேண்டும்.

 2. மாரிதாஸ் பணத்துக்காக இதைச்செய்கிறான் அவனுக்கு ஆர்எஸ்எஸில் இருந்து பணம் வருது அதன் மூலம் வொயிட் போர்டு டிஜிட்டல் போர்டா மாறி விட்டது அவன் பொய்களை அம்பலப்படுத்தி முற்போக்காளர்கள் வீடியோக்கள் வெளி வருவதும் குறைந்துவிட்டது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க