ர்வதேச பத்திரிகை நிறுவனம் (IPI) கடந்த டிசம்பர் 29 அன்று வெளியிட்ட அதன் வருடாந்திர இறப்பு கண்காணிப்பு பட்டியலின்படி, 2021-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 45 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதிகபட்சமாக மெக்சிகோ ஏழு கொலைகளைப் பதிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியா ஆறு படுகொலைகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆறு படுகொலைகள் மற்றும் காங்கோ ஐனநாயகக் குடியரசு மூன்று படுகொலைகளை பதிவு செய்துள்ளன.
கொல்லப்பட்ட 45 பத்திரிகையாளர்களில், 28 பேர் தங்கள் பணியின் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று ஐபிஐ அறிக்கை கூறுகிறது. மூன்று ஊடகவியலாளர்கள் கலவரங்களில் செய்தி சேகரிக்கும்போது கொல்லப்பட்டனர். இரண்டு பேர் உள்நாட்டின் அமைதியின்மையை செய்தியாக வெளிபடுத்தியதற்காக கொல்லப்பட்டனர். 11 கொலைகள் விசாரணையில் உள்ளது. அவர்கள் தங்கள் வேலைக்காக கொல்லப்பட்டதாக சந்தேகம் இருந்தாலும் உறுதியாக சொல்ல இன்னும் போதுமான ஆதாரங்கள் இல்லை.
பிலிப்பைன்ஸில் இந்த ஆண்டு கொல்லப்பட்ட முன்னாள் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் ஜெஸ் மலாபனின் உதாரணத்தை இங்கே அறிக்கை கூறுகிறது. மலாபன் 2018-ல் ஜனாதிபதி டுடெர்ட்டின் போதைப்பொருள் போர் பற்றிய கட்டுரையை எழுதுவதில் பணிபுரிந்தார். இந்த ஆண்டு (2021) டிசம்பரில் கொல்லப்பட்டார். இதுபோன்ற வழக்குகளை உள்ளூர் பத்திரிகையாளர்கள் அமைப்புகளுடன் ஐபிஐ தொடந்து விசாரித்து வருகிறது.
படிக்க :
பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடும் 37 தலைவர்களில் ஒருவர் மோடி !
மோடியை விமர்சித்ததால் இந்தியா டுடே பத்திரிகையாளர் பணிநீக்கம் !
45 இறப்புகளில் 12 பேர் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் சேர்ந்து இருப்பதால் ஆசிய – பசிபிக் பகுதி பத்திரிகையாளர்களுக்கு உலகிலேயே மிகவும் ஆபத்தான பகுதியாகும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் அந்நாட்டை தாலிபான்கள் கையகப்படுத்தியதால் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்தன. இந்த 6 கொலைகளும் நேரடியாக பத்திரிகை வேலை தொடர்பானவை எனக் கருதப்பட்டாலும் நாட்டைவிட்டு வெளியேற முயன்றபோது காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மற்ற 2 பேர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இந்தியாவில் கொல்லப்பட்ட 6 பத்திரிகையாளர்களில் 2 பேர் தங்கள் பணிக்காக கொல்லப்பட்டனர். ஆந்திராவை தளமாகக் கொண்ட EV5 செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பத்திரிகையாளர் சென்னகேசவுலுவை ஐபிஐ அறிக்கை குறிப்பிட்டது. சூதாட்டம் மற்றும் புகையிலை கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக புகார் அளித்ததையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட போலீசு அதிகாரியால் ஆகஸ்ட் மாதம் சென்னகேசவுலு கொல்லப்பட்டார். உள்நாட்டு அமைதியின்மை குறித்து செய்தி சேகரிக்கும்போது ஒரு இந்திய பத்திரிகையாளர் கொல்லப்பட்டார், மேலும் இரண்டு வழக்குகள் விசாரணையில் உள்ளது.
படிக்க :
வாட்சப் : உளவு பார்க்கப்பட்ட இந்திய பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் !
#savetamiljournos : எஸ்.வி.சேகர் வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்கள் பணி நீக்கமா ?
கடந்த ஆண்டு பட்டியலில் முன்னணியில் இருந்த வட – தென் அமெரிக்கக் கண்டங்களில், இந்த ஆண்டு 10 பத்திரிகையாளர் படுகொலைகள் பதிவாகியுள்ளன. மெக்சிகோவில் நடந்த 7 கொலைகளும் உள்ளூர் சமூக விரோத செயல்களை பற்றிய செய்திகளுக்கு தொடர்பானவை. இந்தக் கொலைகளில் குற்றவாளிகளுக்கு அதிக அளவில் தண்டனை வழங்கப்படாமல் இருப்பதுடன் – இந்த ஏழு கொலைகளில் ஒன்றில் மட்டுமே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குள்ள அரசாங்கம் மனித உரிமைப் பாதுகாவலர்களைப் பாதுகாப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மெக்சிகோ பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இருத்து வருகிறது. அடுத்து இந்தியா ஆப்கான் இருக்கும் ஆசிய பசிபிக் பகுதி பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடங்களாக உள்ளது என்று ஐபிஐ அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் நடக்கும் பத்திரிகையாளர் படுகொலைகளில் கணக்கில் கொண்டு வரப்பட்டவை மட்டுமே இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.  குறிப்பாக சித்திக் காப்பானைப் போல சட்டவிரோத வழிமுறைகளிலும், சட்ட துஷ்பிரயோக வழிமுறையிலும் முடக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட பத்திரிகையாளர்களையும் கணக்கில் சேர்த்தால், உலக நாடுகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையையும் ஈடு செய்யும் அளவிற்கு இந்தியாவில் மட்டுமே பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் கணக்கில் வரும்.
முதலாளித்துவச் சுரண்டலின் வடிவம் தீவிரமடைய தீவிரமடைய, உலகம் முழுவதும் ஆட்சியதிகாரத்தில் பாசிசக் கும்பல் ஒருபுறம் ஆட்சியமைத்துக் கொண்டிருக்கையில், அதற்கு நிகராக மறுபுறத்தில் முதலாளித்துவம் தான் போட்டுக்கொண்ட ஜனநாயக  முகமூடியைக் கழட்டியெறிந்து கொண்டிருக்கிறது!
சந்துரு
செய்தி ஆராதம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க