த்தீஸ்கரில் மாவோயிஸ்ட் என்ற பெயரில் மாவட்ட ரிசர்வ் போலீசு படை மீண்டும் ஒரு போலி மோதல் கொலையை நடத்தியுள்ளது. கடந்த ஜனவரி 23 அன்று சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள பரந்தா கிராமத்தில் போலீசு நடத்திய போலி மோதல் கொலையில் மனுராம் நுரேட்டி என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இறந்தவரின் சகோதரர் ரேணுராம் நுரேட்டி இப்பகுதியில் டி.ஆர்.ஜி (Diagnosis-related group – நோய் கண்டறிதல் தொடர்பான குழு)-யில் பணி புரிகிறார். ரேணுராம் மற்றும் மானுராமின் மனைவி ஆகிய இருவரும் இந்த மோதல் கொலை போலியானது என்றும் மனுராம் மீது மாவோயிஸ்ட் என்று பொய்யாக முத்திரை குத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மனுராம் போலீஸ் படையில் சேரத் தயாராகி வந்ததாகவும் பஸ்தர் பைட்டர்ஸ் அமைப்பில் சேர போலீசு ஆட்சேர்ப்பு படிவத்தை பூர்த்தி செய்ததாகவும் கூறுகின்றனர்.

படிக்க :

சட்டீஸ்கர் : கார்ப்பரேட் கொள்ளைக்காக 22 துணை ராணுவப்படையினரை பலி கொடுத்த அரசு !

சட்டீஸ்கர் : சரணடைந்தவரெல்லாம் நக்சலைட்டு அல்ல

பஸ்தார் ஃபைட்டர்ஸ் என்பது பஸ்தர் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க மாநில அரசால் அமைக்கப்பட்ட ஒரு சிறப்புப் பிரிவு ஆகும். இது பெரும்பாலும் உள்ளூர் இளைஞர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்துகிறது. பஸ்தார் பிரிவில் ஏழு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2800 பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

“ஜனவரி 24 அன்று அதிகாலை 1.30 மணியளவில் நாராயண்பூர் மாவட்டத்தில் பாரண்டாவுக்கு தெற்கே 6 கி.மீட்டர் தொலைவில் உள்ள பாலத்தில் போலீசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஒரு என்கவுண்டர் நடந்தது. இந்த என்கவுண்டரில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார். பின்னர் ஒரு தேடுதல் நடவடிக்கையில் ஆயுதங்கள் மற்றும் பல்வேறு மாவோயிஸ்ட் பொருட்களும் மீட்கப்பட்டன.” என்று இந்த போலி மோதல் கொலை பற்றி போலீசு கூறுகிறது.

டிஆர்.ஜி பணியாளர் ரேணுராம் நுரேட்டியின் குடும்பம் துர்க் மாவட்டத்தில் உள்ள கொட்டியாவைச் சேர்ந்தது. 2014-ல் தமது குடும்பத்துடன் பரந்தாவுக்கு மாறினார்.

ரேணுராம் அதே ஆண்டு கோப்னியா சைனிக் என்ற ரகசிய சிப்பாயாக போலீசுத் துறையில் சேர்ந்ததாக கூறுகிறார். ஜனவரி 2021-ல் அவர் டி.ஆர்.ஜி பணியாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். தற்போது கடமேட்டா பகுதியில் பணியமர்ந்தப்பட்ட அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் குத்ரி பாராவில் வசித்து வருகிறார்.

ரேணுராமின் மனைவி மற்றும் மக்கள் இருவரும் பரந்தாவில் உள்ள செங்கல் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். அவரது இளைய சகோதரர் மனுராம் தனது மனைவி மனோராவுடன் பரந்தாவில் விவசாயம் செய்து வந்தார்.

ரேணுராம், “எனது குடும்பம் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக இருந்தால் நாங்கள் ஏன் போலீசு துறையில் சேர வேண்டும்? என் சகோதரனும் போலீசு துறையில் சேர இரவு பகலாக உழைத்துக் கொண்டிருந்தான். மாவோயிஸ்ட் என்று கூறி போலீசால் கொல்லப்பட்ட எனது சகோதரர் நிரபராதி” என்றார்.

படிக்க :

குஜராத் : இஷ்ரத் ஜஹான் தன்னைத் தானே போலி மோதல் கொலை செய்து கொண்டாரா ?

சொராபுதீன் போலி மோதல் கொலை: விடையளிக்கப்படாத கேள்விகள் !

எனது சகோதரருக்கு மாவோயிஸ்ட் சீருடையை அணிவித்து அவரது கையில் துப்பாக்கியை வைத்து அடையாளம் தெரியாத மாவோயிஸ்ட் என்று போலீசு அறிவித்தது.” என்கிறார் ரேணுராம்.

இறந்தவரின் மனைவி மனோரா நுரேட்டி, “ஜனவரி 21 அன்று பறவைகளை வேட்டையாட காட்டுக்குச் சென்ற மனு இரவு 10 மணிக்குள் திரும்பி வருவேன் என்று என்னிடம் கூறினார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடினர். காலையில் காட்டில் போலீசு – மாவோயிஸ்ட் என்கவுண்டர் நடந்ததாக ஒருவர் எங்களுக்குத் தெரிவித்தார். அப்போதுதான் என் கணவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டு மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்டது எங்களுக்குத் தெரியவந்தது.” என்றார்.

சத்தீஸ்கர் பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும், அரசுகளால் இயற்கை வளம் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் போராடும் மாவோயிஸ்ட் அமைப்பினர் மீது பல ஆண்டுகளாக நரவேட்டை ஆடி வருகிறது அரசு. ஆனால் பல முறை அப்பாவி பொது மக்களை சுட்டுக்கொன்று தீவிரவாதிகள், மாவோயிஸ்டுகள் என்று முத்திரை குத்தும் அயோக்கியத்தனத்தை செய்து வருகிறது.

சந்துரு
செய்தி ஆதாரம் : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க