ஷ்ய அதிபர் புடின், உக்ரைன் அரசாங்கத்தில் உள்ள நாஜிக்களை களையெடுப்பதாக கூறி உக்ரைன் மீது படையெடுக்க உத்தரவிட்டார். ஆனால், மாஸ்கோவிற்கான முன்னால் அமெரிக்கா தூதர் மைக்கெல் மெக்பால் உட்பட பல மேற்கத்திய நாடுகளை சார்ந்த அதிகாரிகள் ‘உக்ரைனில் எந்த நாஜிக்களும் இல்லை’, மேலும் ‘இது ஒரு வெற்று பிரசாரம்’ எனவும் குற்றம் சாட்டினர்.
ரஷ்ய படையெடுப்பின் பின்னணியில், 2014-க்கு பிந்தைய உக்ரேனிய அரசின் தீவிர வலதுசார்புடைய குழுக்கள் மற்றும் நவ-நாஜி கட்சிகளுடனான பிரச்சினைக்குறிய உறவானது ஒரு தீப்பொறியாக அமைந்துவிட்டது. மேற்கு உலக நாடுகள் இதை திட்டமிட்டு மறைத்தாலும், ரஷ்யா பெரிதுபடுத்தி போருக்கான முதன்மை காரணியாக கூறிக்கொள்கிறது.
உண்மை என்னவெனில், அமெரிக்கா மற்றும் அதன் உக்ரேனிய கூட்டாளிகளின் தூண்டுதலில் 2014-ன் அப்போதைய உக்ரேனிய அரசை கவிழ்த்து, அதன் மூலம் தீவிர வலதுசாரி குழுக்களை அதிகாரம் பெறச் செய்து, கிழக்கு உக்ரேனியப் பகுதிகளில் உள்ள பிரிவினைவாதிகளுடன் மோதச் செய்ததே ஆகும். ஆனால் உக்ரேனில் உள்ள நாஜிக்களை களைப்பதாக கூறி ரஷ்யா நடத்தும் இந்த போரானது, உலகம் முழுவதும் உள்ள போர் வீரர்களையும் பங்கு பெறச் செய்வதுடன், உக்ரேனியர்கள் மற்றும் சர்வதேச நவ-நாஜிக்கள் எதிர்பார்த்த ஆயுதங்கள், இராணுவப் பயிற்சி மற்றும் போர் அனுபவம் உள்ளிட்டவை கிடைப்பதால், இந்த போர் அவர்களை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.
படிக்க :
உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்
உக்ரைன் : உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்கான கழுத்தறுப்பு போர்!
2014 – பிப்ரவரியில், அமெரிக்க ஆதரவுடன் நடந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு, உக்ரேனின் நவ-நாஜி கட்சியான ஸ்வொபோடாவும் அதன் நிறுவனர்களான ஒலே ட்யானிபோக் மற்றும் அண்ட்ரி பருபிய்-ம் முக்கிய பங்காற்றியுள்ளனர். ஆட்சி கவிழ்ப்புக்கு பிந்தைய அரசாங்கத்தின் அதிகார பொறுப்பிலிருந்து ஒலே ட்யானிபோக்-ஐ வெளியேற்ற முயற்சித்தபோதும், உதவி செயலர் நூலண்ட் மற்றும் தூதர் பியாட்டும் ஆட்சி கவிழ்ப்பிற்குமுன் தாங்கள் பணியாற்றிய தலைவர்களில் ஒலே ட்யானிபோக்–உம் ஒருவர் என ஒரு கசிந்த தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் கீவ் பகுதியில் அமைதியாக நடந்த போராட்டம் வன்முறையாகமாறி போலீசுத்துறையுடன் மோதத் தொடங்கியது. ஸ்வொபோடா – கட்சியின் உறுப்பினர்களும் ட்மி யாரோஷ்-ன் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட வலதுசாரி போராளிகளும் போலீச்த்துறையின் ஆயுதக் கிடங்கை சூறையாடியதுடன், கைப்பற்றிய ஆயுதங்களுடன் பாதுகாப்பு வளையங்களை உடைத்துக் கொண்டு பாராளுமன்ற வளாகத்தை அடைந்தனர். கடந்த 2014 பிப்ரவரி மாதத்தின் இடையில் நிசாலென்ஸ்நோஸ்தி சதுக்கத்தில் நடந்த போராட்டத்திலிருந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் இருந்தனர்.
அமெரிக்காவின் தலையீட்டாலோ அல்லது வலதுசாரி அமைப்புகளின் வன்முறையாலோ, உக்ரேனில் நடைபெற்ற அமைதியான போராட்டம் என்ன மாதிரியான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும், இந்த அமைதி போராட்டத்தின் விளைவால் உருவான புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நமக்கு தெரியாமலேயே போய்விட்டது.
ஆனால், போராட்டக்குழு தலைவர் ட்மி யாரோஷ் என்பவர் நிசாலென்ஸ்நோஸ்தி சதுக்கத்தின் போராட்ட மேடையேறி, பிரஞ்ச், ஜெர்மன் மற்றும் போலந்து உள்ளிட்ட நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தல் நடத்தும்படி யனுகோவிச் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒப்புதலுடன் கொண்டுவரப்பட்ட 2014-பிப்ரவரி 21 உடன்படிக்கையை நிராகரித்தார். மாறாக யாரோஷ் மற்றும் மற்ற வலதுசாரிகளும் ஆயுதங்களை கைவிட மறுத்து அரசாங்கத்தை தூக்கியெறிய பாராளுமன்றத்தில் இறுதிக்கட்ட அணிவகுப்பை நடத்தினர்.
1991-லிருந்தே உக்ரேனிய தேர்தல்களானது, டொனெடஷ்கிலிருந்து வந்த ரஷ்ய ஆதரவு அதிபர் யனுகோவிச்-க்கும் மற்றும் மேற்கு உலக நாடுகளின் ஆதரவில் குறிப்பாக ‘ஆரஞ்சு புரட்சி’-க்கு அதாவது 2005-ன் சர்ச்சைகுறிய தேர்தலுக்குபின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட யஸ்சென்கோ–க்கும் இடையில் ஊசலாடியது. உக்ரைனில் முடிவிலா ஊழலானாது ஒவ்வொரு அரசாங்கத்தையும் கரைப்படுத்தியது. மேலும், எந்த தலைவர் அல்லது கட்சி வென்றது என்பது ரஷ்யா அல்லது அதற்கு எதிரான மேற்கு உலக நாடுகள் இசைவுக்கேற்ப இருந்ததால் மக்கள் விரைவில் நம்பிக்கை இழந்தனர்.
2014-ல் ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு நூலண்ட்-ம் அரசுத்துறையும் சேர்ந்து அர்செனிய்-ஐ பிரதமராக தேர்ந்தெடுத்தது. இரண்டு ஆண்டு பதவியில் நீடித்த அவரும் கடும் ஊழல் காரணமாக தன் பதவியை இழந்தார். ஆனால் அதிபராக இருந்த பெய்ரோ போரோஷென்கோ (Peyro poroshenko) 2016 பனாமா பேப்பர்ஸ் மற்றும் 2017 பேரடைஸ் பேப்பர்ஸ்-ல் அவரது தனிவரி விலக்கு திட்டங்களில் நடந்த ஊழல்கள் அம்பலப்பட்டபோதும் 2019 வரை பதவி வகித்தார்.
யட்சென்யுக் பிரதமராக பதவியேற்றதும் ஆட்சி கவிழ்ப்புக்கு உதவியாகயிருந்த ஸ்வொபோடா கட்சியை சார்ந்த ஒலெக்சாண்டர்-க்கு துணை பிரதமர் பதவி உட்பட அக்கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகள் மற்றும் உக்ரைனின் 25 மாகாணங்களில் 3 கவர்னர் பதவிகளும் வழங்கினார். மேலும், ஸ்வொபொடோ-வின் அண்ட்ரி பருபிய், ஐந்து ஆண்டுகள் உக்ரைன் பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் பதவி வகித்தார். 2014 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்யானிபோக் வெறும் 1.2% வாக்குகளை மட்டுமே பெற்றதோடு, பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
2014-க்கு பின் நடந்த தேர்தலில் உக்ரேனிய வாக்காளர்கள் தீவிர வலதுசாரி அரசியலிருந்து பின்வாங்கிவிட்டனர். ஏனெனில் 2012 தேர்தலில் 10.4%-ஆக இருந்த ஸ்வோபோடாவின் (Svoboda) வாக்கு சதவீதம், 2014 ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு நடந்த தேர்தலில் 4.7%-ஆக குறைந்துவிட்டது. வெளிப்படையாக ரஷ்யாவை எதிர்க்கும் பல கட்சிகள் தோன்றியதாலும், ஸ்வொபோடா கட்சி தனது வாக்குறுதிகளை செயல்படுத்த தவறியதாலும் உள்ளூர் அரசாங்களில் அதிகாரத்திலிருந்த பகுதிகளிலும் தனது ஆதரவை இழந்தது.
2014 ஆட்சி கவிழ்ப்பிற்கு பிறகு வலதுசாரி கும்பல், ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது தாக்ககுதல் நடத்தி அவற்றை பலவீனப்படுத்துவதன் மூலம் புதிய ஒழுங்கை கட்டமைக்க தொடங்கியது. ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை  ரஷ்ய ஆதரவு கும்பல் எனவும், அவர்கள் மீது நடந்தப்பட்ட வன்முறையை நாட்டை சுத்தம் செய்ய நடத்தப்படும் போர் என்றும் நியூஸ்வீக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அதன் தலைவர் யாரோஷ் கூறினார். இந்த போரானது மே 2 அன்று Trade Unions Houes-ல் தஞ்சமடைந்த 42 ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பாளர்களை கொடூரமாக கொலை செய்த பிறகே முடிவுக்கு வந்தது.
டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்-ல் நடந்த ஆட்சி கவிழ்ப்பு எதிர்ப்பாளர்களின் போராட்டம் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியதும், இந்த தீவிர வலதுசாரிகள் முழு அளவிளான ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கையிலெடுத்தனர். உக்ரேனிய இராணுவம் தனது சொந்த மக்களுடனே போரிடுவதற்கு தயக்கம் காட்டியதால், உக்ரேனிய அரசாங்கம் புதிய தேசிய காவலர் பிரிவுகளை உருவாக்கியது.
வெள்ளை இனவெறியரான ஆண்ட்ரி பிலெட்ஸ்கி (Andriy Biletsky) வலதுசாரி ஆதரவாளர்களைக் கொண்ட அசோவ் படாலியன் எனும் படைப்பரிவை உருவாக்கினார். இதில் நவ-நாஜிக்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தினர். இதன் நோக்கம் யூதர்களையும் மற்ற தாழ்ந்தப்பட்ட இனங்களையும் உக்ரேனிலிருந்து வெளியேற்றுவது என ஆண்ட்ரி பிலெட்ஸ்கி கூறினார். சுயாட்சி குடியரசாக அறிவித்துக் கொண்ட பகுதிகளை தாக்கியதிலும், பிரிவினைவாதிகள் வசம் இருந்த நகரத்தையும் மீட்டெடுத்ததிலும் உக்ரேனிய அரசாங்கத்தை வழிநடத்தியது இந்த அசோவ் படாலியன்.
2015-ல் போடப்பட்ட ஒப்பந்ததின் மூலம் இந்த மோசமான சண்டை முடிவுக்கு வந்ததுடன், பிரிந்த குடியரசுகளுக்கும் ஒரு பாதுகாப்பு வளையமாக அமைந்தது. இருப்பினும் சிறிய அளவிலான உள்நாட்டுப் போர் தொடரந்தது. 2014 முதல் நடந்து வந்த இந்த சண்டையில் கிட்டத்தட்ட 14,000 பேர் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. காங்கிராஸை சார்ந்த ரோ கண்ணாவும் (Ro Kanna) காங்கிராஸின் முற்போக்கு உறுப்பினர்களும் அசோவ் படாலியன்-க்கு அளிக்கும் இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த பல ஆண்டுகள் போராடினர்.
இறுதியாக 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு ஒதுக்கீடு மசோதா மூலமே அவர்களால் தடுக்க முடிந்தது. இருப்பினும் அசோவ் படாலியன் இந்த தடைகளையும் மீறி ஆயுதங்களையும், ஆயுதப்பயிற்சிகளையும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுவந்ததாக கூறப்படுகிறது.
அசோவ் படாலியன் வலதுசாரி வன்முறை தீவிரவாத நடவடிக்கைகளில் அபாயகரமானதாக வளர்ந்துள்ளது என 2019-ல் உலகெங்கும் உள்ள பயங்கரவாத மற்றும் தீவிரவாத குழுக்களை கண்காணிக்கும் அமைப்பான சௌஃபான் சென்டர் தெரிவித்துள்ளது. மேலும், இதன் கட்டுபாட்டில் உள்ள உக்ரேனிய பகுதிகளை வெள்ளை மேலாதிக்கத்திற்கான முதன்மை பகுதிகளாக மாற்றுவதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அசோவ் படாலியனின் பயங்கரவாத தொடர்புகள் எவ்வாறு உலகம் முழுவம் போராளிகளை தெர்ந்தெடுக்கிறது மற்றும் அதன் வெள்ளை மேலாதிக்க கருத்துக்கள் எவ்வாறு பரப்பப்படுகிறது என்பதை சௌஃபான் சென்டர் விளக்கியுள்ளது. வெளிநாட்டு போராளிகள் அசோவ் படாலியன்-ல் தாங்கள் பயிற்சிகளை முடித்துக்கொண்டு அவற்றை பரிசோதித்து பார்பதற்கும், புதிய போராளிகளை உருவாக்கிக் கொள்வதற்க்கும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப செல்கின்றனர்.
2019-ல் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்-ல் (Christchurch) உள்ள மசூதில் 51 வழிபாட்டாளர்களை கொலை செய்த ப்ரெண்டன் டாரன்ட் (Brenton Tarrant|) உட்பட பல வெளிநாட்டு தீவீரவாத வன்முறையார்கள் அசோவ் படாலியன் உடன் தொடர்பில் உள்ளனர். 2017-ம் ஆண்டு சார்லோட்டஸ்வில்லே-ல் (Charlottesville) நடந்த  ‘உரிமையை ஒன்றிணைக்கவும்’ (Unite the Right)  என்ற பேரணியின் எதிர்-போராட்டக்காரர்களை தாக்கிய குற்றவாளிகளில் பலர் ரைஸ் அபோவ் இயக்கம் (U.S Rise Above Movement) என்ற அமைப்பை சார்ந்தவர்களே. மற்ற அசோவ் படாலியன் உறுப்பினர்கள் ஆஸ்திரேலியா, ஜெர்மன், இத்தாலி, நார்வே, ஸ்வீடன், ஐரோப்பிய ஒன்றியம் என இன்னும் சில நாடுகளுக்கு திரும்ப சென்றுவிட்டனர்.
ஸ்வொபோடாவின் வெற்றி தேர்தலில் மறுக்கப்பட்டபோதிலும் நவ-நாஜிக்கள் மற்றும் தீவிர தேசியவாத குழுக்கள் அசோவ் படாலியன் உடன் தங்களது உறவை மேம்படுத்திக் கொண்டு உக்ரேனிய தெருக்களிலும், உக்ரேனிய தேசியவாதத்தின் மையப் பகுதியான உள்ளூர் அரசியலிலும் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துள்ளன.
2019 அதிபர் தேர்தலில் செலன்ஸ்கி வெற்றிபெற்றதும் டான்பாஸ்-ஐ சேர்ந்த பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மின்ஸ்க் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால் பதவி நீக்கம் அல்லது கொலை செய்யப்படுவார் என்று தீவிரவாத வலதுசாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அந்த 2019 தேர்தலில் செலன்ஸ்கி ஒரு அமைதிக்கான வேட்பாளராகவே போட்டியிட்டார். ஆனால், வலதுசாரிகளின் அச்சுறுத்தலினால் டான்பாஸ்-ஐ சேர்ந்த தலைவர்களை பிரிவினைவாதிகள் என கூறிபேச கூட மறுத்துவிட்டார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்பதற்கு அதிபர் ஒபாமா விதித்திருந்த தடையை ட்ரம்ப் தலமையிலான அமெரிக்க அரசாங்கம் திரும்பப்பெற்றது. மேலும், அதிபர் செலன்ஸ்கி உக்ரேனிய நகரங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய நகரங்களை மீட்டெடுக்க தேவையான புதிய தாக்குதலுக்கு உக்ரேனிய படைகளைக் தயார்படுத்தினார். அவரது ஆக்ரோசமான சொல்லாடல் டான்பாஸ் மற்றும் ரஷ்யாவில் புதிய அச்சுறுத்தல்களை ஏற்ப்படுத்தியது.
உக்ரேனின் உள்நாட்டுப் போர் அந்த அரசாங்கத்தின் நவதாராளவாத பொருளாதாராக் கொள்கைகளுடன் சேர்ந்து தீவிரவாத வலதுசாரிகளுக்கு ஏற்ற நிலமாக வடிவமைத்து கொடுத்துள்ளது. ஆட்சிக் கவி்ழ்ப்பிற்கு பிந்தைய உக்ரேனிய அரசாங்கம், 1990-ல் கிழக்கு ஐரோப்பா முழுவதும் திணிக்கப்பட்ட நவதாராளவாத ‘அதிர்ச்சி சிகிச்சை’யை அப்படியே அமல்படுத்தியது. IMF–யிடமிருந்து 40 பில்லியன் டாலரை கடனாக பெற்றுக்கொண்டு அதனுடனான ஒப்பந்தப்படி, அரசுக்கு சொந்தமான 342 நிறுவனங்களை தனியார்மயமாக்கியதுடன் சம்பளம் மற்றும் ஓய்வூதியவெட்டுடன் பொதுத்துறையில் இருந்த வேலைவாய்ப்பை 20% குறைத்தது, மேலும் மருத்துவம் தனியார்மயமாக்கப்பட்டதுடன், பொதுக்கல்வியில் முதலீடு செய்யாமல் அதன் 60% பல்கலைக் கழகங்களை மூடியுள்ளது.
உக்ரேனின் ஊழலுடன் இணைசேர்ந்த இந்த நவதாராளவாதக் கொள்கைகள், அரசு சொத்துகளை இலாபகரமாக கொள்ளையடிப்பதற்கும், மக்களின் வாழ்க்கைதரம் வீழ்ச்சியடைவதற்கும், சிக்கன நடவடிக்கைக்கும் வழிவகுத்தது. ஆட்சிக் கவி்ழ்ப்பிற்கு பிந்தைய அரசாங்கம் போலந்தை அதன் முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டது. ஆனால் உண்மையில் அதன் நிலை 1990-லிருந்த ரஷ்யாவில் எலிட்சின் ஆட்சியை ஒத்திருந்தது. 2012 மற்றும் 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் உக்ரைனின் வளர்ச்சி 25% வரை குறைந்து. இன்று வரை ஐரோப்பியாவிலேயே ஏழ்மையான நாடாக உள்ளது.
படிக்க :
உக்ரைன் போர் : ரசிய – அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் போர் வெறியை எதிர்ப்போம் || புரட்சிகர அமைப்புகள் அறிக்கை
உக்ரைனை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர துடிக்கும் ரஷ்யா – அமெரிக்கா!
மற்ற இடங்களைப் போலவே, நவ தாராளவாதத்தின் தோல்விகள் வலதுசாரி தீவிரவாதம் மற்றும் இனவாதத்திற்கு எரிபொருளாக அமைந்துள்ளது. மேலும் ரஷ்யாவுடனான இப்போரால் உலகில் உள்ள மற்ற இளைஞர்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள இராணுவப் பயிற்சி மற்றும் போர் அனுபவம் ஆகியவற்றை தங்கள் சொந்தநாடுகளை அச்சுறுத்த எடுத்துச் செல்கின்றனர்.
அசோவ் படாலியன் சர்வதேச அளவில் செயல்படும் யுக்தியை அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்.வுடன் (ISIS) ஒப்பிட்டுள்ளது சௌஃபான் சென்டர். சிரியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் நேடோ கூட்டணியுடன் சேர்ந்து அல்கொய்தா-வுடன் தொடர்புடைய குழுக்கள் ஏற்படுத்திய அதே அச்சுறுத்தலை அசோவ் படாலியன் உக்ரேனில் ஏற்படுத்துகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ (ISIS) உருவாக்கி, அது தங்களின் மேற்கு ஆதரவு நாடுகளுக்கு எதிராக தீர்க்கமாக திரும்பியதும் அந்த கோழைகள் விரைவாக வீடு திரும்பினர்.
இப்போது ரஷ்ய ஊடுறுவலுக்கு எதிராக உக்ரேனிய மக்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆனால் அமெரிக்கா, உக்ரேனிய நவ-நாஜி பினாமி படைகளுடன் அதிநவீன ஆயுதங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த கூட்டணி, இதைவிட மோசமான வன்முறை மற்றும் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதில் நாம் ஆச்சர்யப்பட வேண்டியதில்லை.

தமிழாக்கம் : இசாஸ் ரஹ்மான்
நன்றி : Counter Currents

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க