கல்குவாரி தொடர்பாக தகவல் அறியும் சட்டப்படி தகவல் தர மறுக்கும் திராவிட மாடல் பொது தகவல் அதிகாரியை கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் !
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், இருக்கன்துறை பகுதி-2, உதயத்தூர், பரமேஸ்வரபுரம் ஆகிய கிராமங்களில் ஆளுங்கட்சியினர் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க முயன்று வருகின்றனர். இந்த கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சார்ந்த விவசாயிகள், பொதுமக்கள் இந்த பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து பலமுறை மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். மேலும், தகவல் அறியும் உரிமை சட்டப்படி குவாரி தொடர்பான தகவல் கோரியும் மனு கொடுத்துள்ளனர். ஆனால், பொது தகவல் அதிகாரி இது நாள் வரை இது குறித்த தகவல் தரவில்லை.
குவாரி மற்றும் கிரஷர் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிலையில் குவாரி துவங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மே 16-ம் தேதி காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கல் குவாரி தொடர்பாக தகவல் தர மறுக்கும் பொது தகவல் அதிகாரியை கண்டித்தும்,  கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கூறியும் இருக்கன்துறை பகுதி-2, உதயத்தூர், பரமேஸ்வரபுரம், கூடங்குளம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மீண்டும் மனு அளித்துள்ளனர்.
படிக்க :
நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் !  | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்
தில்லையில் தமிழுக்குத் தடை : நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தங்கள் கிராமங்களில் குவாரி அமைக்க உரிமம் வழங்க கோரி ஆளும் கட்சியினரே தங்கள் பினாமி பெயரில் விண்ணப்பித்திருப்பதாக தங்கள் மனுவல் குறிப்பிட்டுள்ளனர்.
தங்கள் பகுதி மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் இந்த பகுதியில் கல்குவாரி அமைக்க 2021-ம் ஆண்டில் தடை விதித்த அப்போதைய சேரன்மகாதேவி சார் ஆட்சியர், குவாரி அமைக்க தடைவிதித்தார் என்ற காரணத்திற்காகவே உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும், எந்த கல்குவாரியும் அரசு வகுத்துள்ள விதி முறைகள் படியே கூட இயங்குவதில்லை என்பதற்கு மே 15-ம் தேதி நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளம் கல் குவாரி விபத்து சமீபத்திய சான்றாகும் என்றும் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கிராமங்கள் அமைந்திருப்பது சட்டமன்ற சபாநாயகர் திரு.அப்பாவு அவர்களின் தொகுதியாகும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் அவர்களே இந்த பகுதியில் தனது பினாமி பெயரில் குவாரி அமைக்க முயற்சி செய்து வருகின்றார் என்று சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இருக்கன்துறை பகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் ஏற்கனவே குவாரி நடத்தி கொள்ளையடித்து வருகின்றார்.
திராவிட மாடல் ஆட்சியின் கல்குவாரிகள் மூடப்படவும், புதிதாக குவாரிகள் திறக்கப்படாமல் இருக்கவும் மக்கள் தொடர்ந்து போராடுவதைத் தவிர வேறுவழியில்லை. இந்த திராவிட மாடல் என்பது புது வகையான ஏமாற்று என்பதை மக்கள் தங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் அன்றாடம் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க