பாசிசத்திற்கு எதிரான மாற்றாக காங்கிரசை நிறுத்த முடியுமா?

காங்கிரஸ், பா.ஜ.க-வை வெறும் தேர்தலில் வீழ்த்துவதை மட்டுமே தனது ஆதாயமாக பார்க்கிறது. இது ஆளும் கட்சிக்கே உரித்தான சந்தர்ப்பவாத நிலைப்பாடு. எனவே காங்கிரசை பா.ஜ.க-விற்கு மாற்றாக பார்க்க முடியாது.

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: பா.ஜ.க. பாசிச கட்சியாக இருக்கிறது. காங்கிரஸ் சந்தர்ப்பவாத அணுகுமுறையை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் பாசிசத்திற்கு எதிரான மாற்றாக காங்கிரசை நிறுத்த முடியுமா? அல்லது பாட்டாளி வர்க்கம்தான் எதிர்ப்பு சக்தியாக இருக்கமுடியுமா?

காங்கிரசை பா.ஜ.க-விற்கு எதிரான மாற்று கட்சியாக முன்னிறுத்துகிறார்கள், அதுதான் யதார்த்தமாகவும் உள்ளது. ஆனால் காங்கிரஸ், பா.ஜ.க-வை வெறும் தேர்தலில் வீழ்த்துவதை மட்டுமே தனது ஆதாயமாக பார்க்கிறது. இது ஆளும் கட்சிக்கே உரித்தான சந்தர்ப்பவாத நிலைப்பாடு. எனவே காங்கிரசை பா.ஜ.க-விற்கு மாற்றாக பார்க்க முடியாது.

அதேசமயம் பாட்டாளி வர்க்கம் இன்று அமைப்பாக இல்லை; நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான அமைப்புகளாகச் சிதறிக்கிடக்கிறது. பா.ஜ.க-விற்கு எதிராக உழைக்கும் வர்க்கம் பல போராட்டங்களை நடத்திவந்தாலும் அதுவும் சிதறிக்கிடக்கிறது என்பது மற்றொரு யதார்த்தமாக உள்ளது. ஆனால் சந்தர்ப்பவாதத்தில் இருக்கும் காங்கிரசை ஆதரிப்பதைவிட பாசிசத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஒன்றிணைத்து கட்டியெழுப்பவதே சரியான தேர்வாக இருக்கும். நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பும் அதுதான்.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க