சந்துரு
அரியானா : போராடிய விவசாயிகள் மீது போலீசு கொலைவெறித் தாக்குதல் !
மூன்று வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசையும் ‘விவசாயிகள் மண்டையை உடைக்க வேண்டும்’ என்ற ஆட்சியரையும் கைது செய்ய வேண்டும்.
தம்மிடம் பணியாற்றிய ஆப்கான் ஊழியர்களைக் கைவிட்ட மேற்குலகம் !
ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனுக்கு உதவாத எந்த நாட்டு அரசையும், அதன் மக்களையும் கைவிட்டுவிடும் என்பதற்கு ஆப்கான் நாட்டில் இவர்களின் கீழ் பணியாற்றிய ஊழியர்களே துலக்கமான சான்று
அதிகரிக்கும் பெண் தொழிலாளர்கள் வேலையிழப்பு விகிதம் !
பல பெண்கள் வேலை இழப்பின் காரணமாக தங்கள் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்கு என கருதி மன மற்றும் உடல் ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்கிறது ராய்ட்டர்ஸ் இணையதளம்.
செயல்படாத பி.எம்.கேர்ஸ் வெண்டிலேட்டர்கள் : புகாரளித்த மருத்துவர் சஸ்பெண்ட்
கொரோனா பேரிடர் காலத்தில் பி.எம்-கேர்ஸ் நிதியை குறைவாக பயன்படுத்தியது ஒருபுறமிருக்க, மறுபுறம் தரமற்ற வெண்டிலேட்டர்களை ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களிடமிருத்து வாங்கி பி.எம்-கேர்ஸ் நிதியை வீணடித்துள்ளது.
LIC தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் மக்களின் காப்பீட்டு நிதி!
இந்த நாட்டின் நிதியாதாரத்திற்கு என்றும் அள்ளிக் கொடுக்கும் “அமுத சுரபி”யாகவே செயல்பட்டு வந்துள்ளது எல்.ஐ.சி. தங்க முட்டையிடும் வாத்தை அறுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விருந்து வைக்கிறது ஒன்றிய அரசு
‘சிங்காரச் சென்னை’ : ஆர்.கே நகர் வீடுகளை இடித்த திமுக அரசு !
20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு குடியிருக்கும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, குழந்தைகளின் கல்வி என எதைப்பற்றியும் கவலையின்றி, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற ஒரு வக்கிர மனம் வேண்டும்
தனியார் பயிற்சி நிறுவனங்களை கட்டுக்குள் கொண்டுவரும் சீன அரசு !
குழந்தைகள் வாரநாட்களில் தங்கள் பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிக்குப் பிறகான வகுப்புகளில் படிக்கின்றன. இதனால் குழந்தைகளுக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கிறது. மேலும் பெற்றோர்களுக்கு நிதி சுமை குறைகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு !
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நிகழ்ந்த மரணங்கள் பற்றிய செய்திகளும் தரவுகளும் ஏராளமாக இருக்கும்போது, ஒன்றிய பாஜக அரசு வாய் கூசாமல் பொய் பேசுவது, மக்களை தற்குறிகளாகக் கருதும் திமிர்த்தனமே !
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜொலிப்பது இல்லையே ஏன் ?
தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகிய தமிழ்நாட்டை சார்ந்த 5 விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர்களின் உதவியுடன் தான் இந்தத் தகுதிக்கு தங்களை வளர்த்துனர். இதில் அரசின் பங்கு எதுவுமில்லை
மோடியை விமர்சித்ததால் இந்தியா டுடே பத்திரிகையாளர் பணிநீக்கம் !
இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், இந்தியா டுடே மட்டுமல்ல வேறு எந்த நிறுவனமும் நடத்தை விதிமுறை என்ற பெயரில் கருத்துரிமை சுதந்திரத்தை பறிக்க முடியாது என்றும் சாடுகிறார் பத்திரிகையாளர் ஷியாம் மீரா சிங்.
அசாம் : புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா – 2021
கோயில்கள் அல்லது மடங்களை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றளவில் கால்நடை விற்பனை, கால்நடை வெட்டுவது தடைசெய்யப்படுவதாக குறிப்பிடுகிறது புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா.
லாக்டவுன் காலகட்டத்தில் பெருகி வரும் பாலியல் சீரழிவுகள் !
ஒருபுறம் வி.பி.என். மூலம் ஆபாசத் தளங்கள் இளைஞர்களைச் சுரண்ட, டிக்டாக் போன்ற செயலிகள், யூ-டியூப் மூலம் இரட்டை அர்த்த வசனங்களில் பேசுவது, ஆபாச நடன அசைவுகள் போன்றவற்றின் மூலம் பெண்கள் நுகர்வுப் பண்டமாக காட்டப்படுகின்றனர்.
ஸ்டெர்லைட் திறப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் செல்லும் வேதாந்தா : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?
ஆக்சிஜன் பற்றாக்குறையை காரணமாக முன் வைத்து ஸ்டெர்லைட் திறப்பை அன்று ஆதரித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று தாமாக முன் வந்து சட்டரீதியாகவும், களத்திலும் ஸ்டெர்லைட்டை எதிர்க்கப் போகிறார்களா ?
பெட்ரோல் விலை குறைக்க நிதி இல்லை – பூங்காக்களுக்கு ரூ. 2500 கோடி ஒதுக்கும் திமுக அரசு
மின்சாரம், விவசாயம் போன்ற பல்வேறு மக்கள் நலத்துறைகளில் நிதிப் பற்றாக்குறை இருக்கும் நிலையில், சென்னையை அழகு படுத்தும் திட்டத்திற்கு மட்டும் ரூ. 2500 கோடிபணம் ஒதுக்குவது ஏன் ?
தமிழகத்தில் அதிகரித்து வரும் தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை !
கடந்த 15 நாட்களில், 14,161 மாணவர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதில் 9,305 மாணவர்கள் தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்தவர்கள் என்கிறார்கள் கல்வித்துறை அதிகாரிகள்.