Monday, October 20, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4311 பதிவுகள் 3 மறுமொழிகள்

பசில் ராஜபக்சேக்கு அமைச்சர் பதவி : ராஜபக்சே குடும்பத்தின் பிடியில் இலங்கை || ரிஷான் ஷெரிஃப்

பசில் பாராளுமன்றம் வராதிருந்த கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்தின் முக்கியமான தீர்மானங்கள் அனைத்தும் அவரது ஆலோசனைக்கும், ஆசிர்வாதத்துக்கும் ஏற்பவே எடுக்கப்பட்டன

ஒழித்துக் கட்டப்பட வேண்டிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அபராதம் விதிக்கப்போகும் அரசு இத்தனை ஆண்டுகளில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வதில் தோல்வி அடைந்துள்ளதே, அதற்காக நாங்கள் ஏன் அபராதம் விதிக்கக் கூடாது ?

நூல் அறிமுகம் : செல்லாத பணம் || இமையம் || எஸ். காமராஜ்

தனது வர்க்கத்துக்குக் குறைவான ஒரு பர்மா அகதியை சாதி கடந்து திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் தன்னைச் சுற்றியுள்ள சமூக மதிப்பீடுகளுக்கு எப்படி தன்னை பலிகொடுக்க வேண்டி உள்ளது என்பதை ஆழமாக எடுத்தியம்புகிறது இந்நாவல்.

பெருகி வரும் வரதட்சணைக் கொலைகளின் பின்னணி என்ன ?

கேரளாவில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 66 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. படிப்பறிவில் முதன்மை மாநிலமான கேரளாவிலேயே இந்த நிலை என்றால், உ.பி, பீகார் போன்ற மாநிலங்களின் நிலை என்ன ?

இந்திய சீன வர்த்தகம் : முதலாளிகளுக்கு மட்டும் ‘தேசபக்தி’ விலக்கு !

இரு நாட்டு வர்த்தகமும் சுமூகமாகப் போய்க்கொண்டிருக்கும் சூழலில், 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டாலும், போர் நடக்காது. ஏனெனில் மூலதனத்திற்குச் சேவை செய்யத் தான் இராணுவமே தவிர, நாட்டு மக்களுக்காக அல்ல

வன்முறை – ஆட்கடத்தல் : உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் பாசிச பாஜக வெற்றி !

உ.பி உள்ளாட்சி தேர்தலை பாசிச வெறியாட்டத்தின் மூலமாக வென்றிருக்கிறது பா.ஜ.க. அடுத்த ஆண்டு உ.பி சட்டப் பேரவை தேர்தல் எப்படி நடக்கவிருக்கிறது என்பதற்கு இந்த உள்ளாட்சித் தேர்தலே சாட்சி !

நாசகர கிடெக்ஸ் நிறுவனத்துக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் திமுக அரசு !

இத்தகைய கொடூர கிட்டெக்ஸ் நிறுவனம், தமிழகத்திற்கு வந்தவுடன் தொழிலாளர்கள் மீதான சுரண்டலையும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதையும் கைவிட்டு புனிதனாக தம்மை மாற்றிக் கொண்டுவிடுமா ? 

ரஃபேல் ஊழல் : பிரான்சில் அம்பலமான பின்னும் இந்தியாவில் அமைதி ஏன் ? || தோழர் சுரேசு சக்தி

ரபேல் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் பிரான்சில் அம்பலமாகி விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில், இந்தியாவில் இந்த ஊழல் முறைகேடு அடக்கி வாசிக்கப்படுகிறது. ரஃபேல் ஊழல் குறித்த பார்வையை வழங்குகிறார் சுரேசு சக்தி முருகன்

வங்க தேசத்தில் தொடரும் முதலாளித்துவ பயங்கரவாதப் படுகொலைகள் || படக் கட்டுரை

ஏகாதிபத்திய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து இயங்கும் வங்கதேச தொழிற்சாலைகள் ஆகியவற்றின் இலாபவெறி தான் ஆண்டுதோறும் தொடரும் வங்கதேச தொழிலாளர்களின் மரணங்களுக்கு முக்கியக் காரணம்.

மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்து || மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாட்டில் முன்னெடுப்பதும், பாஜக போன்ற கார்ப்பேரேட் சேவை செய்யும் துரோகிகளை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்பதும் நமது கடமையாகும்.

ஸ்டான் சுவாமி மரணம் : மோடி அமித்ஷா நடத்திய படுகொலையே || தோழர் மருது நேர்காணல்

ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களை அரச பயங்கரவாத்தில் இருந்து பாதுகாப்பதற்காக போராடினார் ஸ்டான் சுவாமி. அவர் சிறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு, இதுவே முக்கியக் காரணமாகும்.

பத்திரிகை சுதந்திரத்தை வேட்டையாடும் 37 தலைவர்களில் ஒருவர் மோடி !

சட்டரீதியான ஆயுதங்களை ஊடக சுதந்திரத்திற்கு எதிராகப் பயன்படுத்துகிறது மோடி அரசு. உதாரணமாக, தேசதுரோக வழக்கின் கீழ் வாழ்நாள் சிறைத் தண்டனை அபாயத்தோடு தான் பத்திரிகையாளர்கள் பணிபுரிகின்றனர்.

மருத்துவர் தினம் : மருத்துவர்களை வஞ்சிக்கும் மோடி அரசு !

மருத்துவர் சுதாகர் ராவின் மரணம் ஒரு உதாரணம் மட்டுமே. இந்தியா முழுவதும் தமது உரிமைகளைக் கேட்ட மருத்துவர்கள் வெவ்வேறு அளவுகளில் மிரட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டனர். உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.

கனடா : மோடி அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து போராட்டம் !

பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை குறிவைக்கும் கொடுமையான சட்டங்களை நீக்க வேண்டும், சிறையில் உள்ள சமூக செயல்பாட்டாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்

எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் : அமெரிக்காவின் மறைமுக ஆக்கிரமிப்புப் போரே !!

எத்தியோப்பியாவை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியாகவே, தமது அடியாளான டி.பி.எல்.எஃப் கட்சியின் மூலம் டிக்ரே பகுதியில் உள்நாட்டுப் போரை தூண்டிவிடுகிறது அமெரிக்கா