வினவு செய்திப் பிரிவு
பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
இந்தியப் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் மட்டும் ரூ.14 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. இந்த வாராக் கடனை வசூலிக்க ரிசர்வ் வங்கி எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்கிறது மோடி அரசு.
சட்டீஸ்கர் : தேர்தலுக்கு எதிர் அணி – கார்ப்பரேட் நலன் காக்க ஓரணி !
அதானி கும்பலின் லாப வெறிப்பிடித்த அகோரப் பசிக்கு லட்சக்கணக்கான ஆதிவாசி மக்கள், மண்ணின் புதல்வர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை விட்டு விரட்டப்படுகின்றனர்
பிராமணர் மட்டும் விண்ணப்பிக்கலாம் – அறிவிப்பு ரத்து || அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்க வழக்கு எதிரொலி...
உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராக பிராமணர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும் என திருக்கோயில் பணி நியமன அறிவிப்பாணை வெளியிடும் அறநிலையத்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
பார்ப்பன – பனியா உயர்சாதிக் கும்பலின் அதிகாரக் கூடாரமே பாஜக !
பாரதிய ஜனதா கட்சி யாருக்காக செயல்படுகிறது என்பதையும், ஆர்.எஸ்.எஸ். எதற்காக செயல்படுகிறது என்பதையும், அவர்களது கட்சியில் கொடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.
நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || உலகை கபளீகரம் செய்யும் வல்லூறு || ஹாவர்ட் ஜின்
வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய நாபாம் குண்டுகள் எல்லாம் மிகக் கொடூரமானவை. அமெரிக்கத் தொழிலாளி வர்க்கமும் அமெரிக்க மக்களும் போர்வெறிக்கு எதிராக யுத்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினர்.
சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் : உசிலையில் அரங்கக் கூட்டம் !
முதலாளித்துவம் வழங்கி இருக்கும் குறைந்த பட்ச ஜனநாயக அடிப்படையில் வெளியில் சென்று உழைக்கிறார்கள். அங்கு பலருடன் பழக வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அதனைக் கூட பெற அனுமதிப்பதில்லை நம் சமூக உறவுகள்.
கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !
பாஜக ஒரு கிரிமினல் பாலியல் குற்றக் கும்பல் என்பதற்கு இது ஒரு வகை மாதிரி. இந்தக் கிரிமினல் கும்பல்தான், தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை இழிபுகழ் அதிமுக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தே தீருவோம் என்று கூவுகிறது.
பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !
பெண் விடுதலை, பெண்ணியம் என்று பொதுவாக பேசும்போது, உழைக்கும் பெண்களின் மீதான மூலதனத்தின் ஆதிக்கம் பற்றி யாரும் பேசுவதில்லை. அதைப் பற்றி பேசாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை
யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !
2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, 4,05,861. இதில் உபி-யில் மட்டும் 59,853 வழக்குகள் பதிவாகி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உ.பி. முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்
ஜெர்மனியில் 1911-ம் ஆண்டு 30,000 பெண்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய தெருமுனை ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் பதாகைகளை அகற்ற முடிவு செய்தனர். பெண்கள் போலீசை எதிர்த்து அதை எதிர்கொள்வதென முடிவு செய்தனர்.
டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?
டிஜிட்டல் பாசிசம் மேலிருந்து கீழ் செல்லும் அமைப்பாக இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தட்டையான ஒரே அளவு பரிமாணம் கொண்ட ஒட்டுப் போட்ட பல்வேறு வலதுசாரி சிந்தனையோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
செஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி !
எங்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். போலீசை விட்டு நீங்கள் எங்களை அடித்தாலும், நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம். எத்தனை நாள் ஆனாலும் சரி, பிணம் அழுகட்டும், நாரட்டும் இங்கேயேதான் இருப்போம்,
இந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் !
முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக நாட்டு மக்கள் திரும்பாதவண்ணம், சாதிய மதரீதியான பிரிவினைகள் மூலம் அவர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுத்து கார்ப்பரேட் நலனைக் காக்கிறது இந்துத்துவக் கும்பல்.
அதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு
மக்களிடம் அன்னியப்பட்டு நிற்கும் போலீசுதுறையில் ஊறிப் போயிருக்கும் அதிகாரத்துவமும், ஆணாதிக்கத் திமிரும் இந்த அரசுக் கட்டமைப்பு நீடிக்கும் வரை நீடித்தே தீரும்.
கோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி
எந்த வல்லரசும் இலங்கையில் கால் ஊன்றவும் வளங்களைச் சுரண்டவும் ஆதிக்கம் செலுத்தவும் வேண்டாம் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் போதே இலங்கைக்குரிய விடுதலையும் சுதந்திரமும் தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமையும் கிடைக்க முடியும்