‘மதச்சார்பற்ற’ கட்சிகளின் கோழைத்தனமும், வாஜ்பாயி முகமூடியும்!
''சங்க பரிவாரத்தின் முகமூடிதான் வாஜ்பாய்'' என்று ஒருமுறை சொன்னார் கோவிந்தாசார்யா. உண்மையில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பெர்னாண்டஸ் போன்ற ''மதச்சார்பற்ற'' கூட்டாளிகளின் பிழைப்புவாதத்திற்கும், காங்கிரசு முதல் மார்க்சிஸ்டுகள் வரையிலான ''மதச்சார்பற்ற'' எதிர்க்கட்சிகளின் கோழைத்தனத்திற்கும்தான் திருவாளர் வாஜ்பாயி ஒரு முகமூடியாகப் பயன்பட்டு வருகிறார்.
இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதீய ஜனதாவின் அழைப்பு!
"என் பெண்ணை எதுவும் செய்து விடாதீர்கள். நான் பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்று அவள் இந்துக்களிடம் கெஞ்சினாள். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். பிறகு ஒருவர் பின் ஒருவராக பத்து பேர் அவளைக் கற்பழித்தார்கள்.
தினமலர் கஞ்சா அடித்து விட்டு எழுதுகிறது!
தமிழ்நாட்டில் உண்மையின் உரைகல் என்ற முத்திரையுடன் வெளியாகும் பார்ப்பனியத்தின் ஊதுகுழலான தினமலர் ஹைதராபாத் குண்டு வெடிப்பு தொடர்பாக வெளியிட்ட இரண்டு செய்திகளை வினவு வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார்.
‘ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்!
சங்கர ராமனை போட்டுத்தள்ளிய ஜெயேந்திரனோ, இல்லை பல் மருத்துவக் கல்லூரிக்காக முறைகேடுகளில் ஈடுபட்ட பங்காருவோ இல்லை வருமானவரி, விற்பனை வரி ஏய்ப்பு செய்த பாபா ராம்தேவோ, இன்ன பிற கிரிமினல் சாமியார்களெல்லாம் நாத்திகர்களா?
கிரிக்கெட் : பாகிஸ்தானுக்குக் கைதட்டுபவன் பயங்கரவாதியா ?
அரசியல் கலப்பற்ற தூய விளையாட்டு எதுவும் இன்று கிடையாது. சாத்தியமும் இல்லை. ஒரு போராகவும், போர் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் கருவியாகவும், இன - நிற வெறிச் சண்டையாகவும் விளையாட்டு மாற்றப்பட்டுவிட்டது.
அப்சல் குரு தூக்கு : இந்திய அரசின் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் !
அப்பாவி அப்சல் குருவை படுகொலை செய்த இந்திய அரசின் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் இந்த அநீதியை கண்டிக்க வேண்டுமென கோருகிறோம்.
ஷாருக்கான் பாதுகாப்பிற்கு பாகிஸ்தான் கவலை ஏன் ?
இந்தியாவில் ஒரு முஸ்லிமுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், அது குறித்து பேசுவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. அப்படி இல்லை என்று பேசுபவர்கள் குஜராத் 2002 இனப்படுகொலைக்கு பதில் சொல்ல வேண்டும்.
செய்தி ஊடகம் இந்துமதத்தை இழிவுபடுத்துகிறதாம் !
தீபாவளி, ஓணம், ஹோலி, ரக்சாபந்தன், விநாயகர் சதுர்த்தி, இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, வருடப்பிறப்பு போன்ற இந்துப் பண்டிகை நாட்களில் சங்கராச்சாரி அருளுரையுடன் துவங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனைய மதப் பண்டிகைகளுக்குக் கிடையாது.
இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!
ஆர்.எஸ்.எஸ் இன் அவதூறுகளுக்குப் பதிலளிப்பதோடு இந்தியாவில் கிறித்தவ மதமாற்றம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் விரிவாக விளக்கும் மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரை!
இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?
பால் தாக்கரே : ஒரு பாசிஸ்ட்டின் கிரிமினல் வரலாறு !
இறந்து போன சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் முழு வரலாறு. ஒரு பாசிஸ்ட் எப்படி தோன்றி யாரால் உதவி செய்யப்பட்டு எதனால் வளர்ந்தார் என்பதை விவரிக்கும் பதிவு. அவசியம் படியுங்கள், பரப்புங்கள்!
கசாப்புக்கு தூக்கு, தாக்கரேவுக்கு மரியாதை – ஏன்?
கசாப் பாகிஸ்தான் பயங்கரவாதி, பால் தாக்கரே இந்தியப் பயங்கரவாதி என்பதால் மட்டும் இந்த வேறுபாடு இல்லை! அவர் ஒரு இசுலாமியப் பயங்கரவாதி. இவர் ஒரு "இந்து" பயங்கரவாதி என்பதாலும் இந்த வேறுபட்ட அணுகுமுறை.
இந்திய இராணுவம் இன்னொரு பஜ்ரங்தள்!
ஏதோ இந்தியப் பாதுகாப்புப் படைகளும், போலீசுப் பிரிவுகளும் நடுநிலையாக இருப்பதாகவும், முசுலீம்களுக்கான கோரிக்கையினால் அந்நடுநிலை சீர்குலைவதாகவும் இந்து முன்னணிக் கும்பல் ஓநாயைப் போல் வருந்துகிறது.
துப்பாக்கி: துருப்பிடித்த மசாலா! கொழுப்பெடுத்த துவேசம்!!
குமுதத்தின் ஒரு பக்க கதை பார்முலாதான் நமது பதிவர்களது ரசனை அளவு கோல் என்றால் தமிழ் மக்களிடம் வசூலிக்கவும் விறுவிறுப்பை அளிக்கவும் ஒரிஜினல் துப்பாக்கி தேவையில்லை, வெறும் தீபாவளி பொம்மைத் துப்பாக்கியே போதும்.
குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?
அடுத்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடியே வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த கலவரத்தின் நாயகன் மீண்டும் வெற்றி பெறக் காரணம் என்ன?















