கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 27
“இன்று இந்துக்கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை, பாரம்பரியம், புனிதநூல்களைத் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் கிண்டல் பண்ணுகிறார்கள். கிறித்தவ பாதிரிகள், முசுலீம் மௌல்விகள் என்றால் பெரிய மகாத்மா போலவும், கோயில் பூசாரிகள் – இந்துத் துறவிகள் கயவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். எனவே வானொலி, பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் இந்துக்களை இழிவுபடுத்தும் எந்தக்கருத்தும் வராமல் தடை செய்ய வேண்டும். அதனைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.”
– “இந்துக்களுக்கு உரிமைகிடையாதா?” – இந்துமுன்னணிவெளியீடு.
இந்து தர்மம், பண்பாட்டை யாரும் வெளியிலிருந்து மெனக்கெட்டு கிண்டல் பண்ணத் தேவையில்லை; வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள், ஸ்ருதிகள், ஸ்தோத்திரங்கள் இவற்றையெல்லாம் இந்து முன்னணியே மலிவு விலையில் அச்சடித்து வெளியிட்டாலே போதும். கடவுளர்கள் உருவான கதை, ஊடல் – கூடல் -ஆபாசங்கள், தேவலோக அழகிகளான ரம்பா – ஊர்வசி – மேனகைகளிடம் கடவுள்களும், முனிவர்களும் மயங்கிய கதைகள், அய்யப்பன் – விநாயகர் பிறந்த கதைகள் இன்ன பிறவற்றையெல்லாம் மக்கள் தெரிந்து கொண்டு ‘ப்பூ இந்து தர்மம் இதுதானா’ என்று ஒதுக்கி விடுவாரகள். அப்படித் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்து மதவெறியர்களும் – உபந்நியாசம் செய்பவர்களும் இந்து தர்மம் – பண்பாடு பற்றி பூடகமாகவும் தமிழ்ச் சிறு பத்திரிகைகளின் புதுக்கவிதை பாணியில் புரியாமலும் பேசி வருகிறார்கள்.
”நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே, சுற்றி வந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா, நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் ” என்று சித்தர்கள் அன்று கேட்டார்கள். புத்தர், மகாவீரர், சார்வாகர், நியாயவாதிகள், மீமாம்சவாதிகள், பூதவாதிகள் என்று பார்ப்பனியத்தை எதிர்த்துக் கிளம்பிய அனைவரும் ‘இந்து தர்மத்தை’ புரியும்படி மக்களிடம் விளக்கியதற்காகவே ஒடுக்கப்பட்டார்கள். அவர்களுடைய இலக்கியங்களும் பெருமளவு அழிக்கப்பட்டன.
தற்காலத்தில் அம்பேத்கரும், பெரியாரும் இதைச் செய்ததற்காகவே இந்து மதவெறியர்களால் கேவலமாக ஏசப்படுகிறார்கள். ”எல்லாம் இறைவன் செயல் என்றால் கொலை கொள்ளை எவன் செயல்?” என்ற திராவிடர் கழகப் பிரச்சாரத்திற்கு, ‘எல்லாம் மனிதச் செயல் என்றால் ஈ.வெ.ராவிற்கும் மணியம்மைக்கும் குழந்தையில்லையே ஏன்?’ என்று இந்து முன்னணி தனது வெளியீடு ஒன்றில் பதிலளித்திருக்கிறது. இதுபோக ‘பெரியாரைக் கொளுத்துவோம்’ என இராம.கோபாலன் பகிரங்கமாக அறிவிக்க முடிகிறது என்றால் அதன்பின்னே வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும் டன் கணக்கில் உள்ளது.
ஆகவே, ‘இந்து தர்மத்தை’ அம்பலப்படுத்தும் அதாவது இழிவுபடுத்தும் அனைவரும் இன்றுவரை ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே வரலாறு காட்டும் உண்மை. ‘இந்து தர்மத்தை’ விமரிசிப்பதற்கெதிரான தடை ஏற்கனவே அமலில் இருக்கிறது. ஏதோ புதிதாக விதிக்க வேண்டும் என இந்து முன்னணி கோருவதன் பொருள் தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதுதான்.
அடுத்து வானொலி – வானொளியில் இந்து மதம் இழிவுபடுத்துப்படுகிறது என்பது உண்மையா? நிச்சயம் கிடையாது.
இந்நாட்டு உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தின் புராணப் புரட்டுக்கள்தான் தொடர்ந்து ஒலி-ஒளி ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இராமானந்த சாகரின் இராமாயணம், சோப்ராவின் மகாபாரதம், சாணக்கியன், ஸ்ரீகிருஷ்ணா, ஜெய் அனுமான், சிவமகாபுராணம் முதலான ஏராளமான புராணக் கதைகள் தூர்தர்சனிலும், தனியார் அலைவரிசைகளிலும், இந்தி மற்றும் தேசிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டும் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகின்றன. தீபாவளி, ஓணம், ஹோலி, ரக்சாபந்தன், விநாயகர் சதுர்த்தி, இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, வருடப்பிறப்பு போன்ற இந்துப் பண்டிகை நாட்களில் சங்கராச்சாரி அருளுரையுடன் துவங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனைய மதப் பண்டிகைகளுக்குக் கிடையாது.
மேலும் விநாயகர் ஊர்வலம் பம்பாயிலிருந்தும், கிருஷ்ண ஜெயந்தி மதுராவிலிருந்தும், தியாகய்யர் உற்சவம் திருவையாற்றிலிருந்தும், அமர்நாத் யாத்திரை ஜம்முவிலிருந்தும், ஜெகந்நாதரின் தேரோட்டம் பூரியிலிருந்தும், தசரா ஊர்வலம் மைசூரிலிருந்தும், காளி பூஜை கல்கத்தாவிலிருந்தும், சூரசம்ஹாரம் திருச்செந்தூரிலிருந்தும், ஓணம் ஊர்வலம் திருவனந்தபுரத்திலிருந்தும், மகர விளக்கு ஐயப்பன் கோவிலிலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. குடமுழுக்கு, தேரோட்டம் போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகள் வானொலி மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. இவைகளுக்காகப் பலகோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஒலி – ஒளிபரப்பு நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன. இத்தகைய சலுகை ஏனைய மதங்களுக்குக் கிடையாது. மேலும் ராமனைக் கசிந்துருகும் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளானாலும் சரி, மாணவர்களின் தமிழ்ப்பாட நூலின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் இடம் பெறும் திருவாசகமானாலும் சரி பார்ப்பனியத்திற்குத் தரப்படும் முக்கியத்துவத்தில் நூற்றிலொரு பங்கு கூட முசுலீம் – கிறித்தவ மதங்களுக்குக் கிடையாது.
காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி உயிர் துறந்த இந்திய அரசர்களில் முதன்மையானவன் திப்பு. அவன் பிறப்பினால் ஒரு முசுலீம் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். கும்பல் திப்புவைக் கட்டோடு வெறுக்கிறது. ‘திப்பு சுல்தான்’ தொடரை ஒளிபரப்பியதற்காக பல தூர்தர்சன் நிலையங்கள் இந்து மதவெறியர்களால் தாக்கப்பட்டன. அதன்பிறகு தொடருக்கு முன்னால் ”இது உண்மைக் கதையல்ல, கற்பனைச் சம்பவங்கள் நிறைந்தவை” என்ற அறிவிப்போடு பல சமரசங்களுடன்தான் திப்புவின் தொடர் ஒளிபரப்பானது. ”திப்புவின் வரலாறு பொய், இராமாயணம் உண்மை” என்று வரலாற்றையே இந்த மதவெறியர்களால் புரட்டிப் போட முடிகிறது என்றால் இந்த முட்டாள்தனத்தை தாலிபான்களின் ஆட்சியில் கூடக் காண முடியாது.
’47 பிரிவினையின் போது நடந்த இந்து – முசுலீம் கலவரப் பின்னணியை வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘தமஸ்’ தொடரையும் இந்துமத வெறியர்கள் எதிர்த்தனர். பார்ப்பன இந்து மதம் விதவைகளை எப்படிக் கேடாக நடத்துகிறது என்பதைக் கருவாகக் கொண்ட தீபாமேத்தாவின் ‘வாட்டர்’ படப்பிடிப்பையே ஆர்.எஸ்.எஸ். கும்பல் தடை செய்திருக்கிறது. சரஸ்வதியை உள்ளபடி நிர்வாணமாய் வரைந்தார் என்பதற்காக ஓவியர் எம்.எப். உசைனைத் தாக்கியதும் இவர்கள்தான்.
இந்தியாவின் திரையுலகமும் கூட பார்ப்பனியத்தின் பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்ட ஊதுகுழலாகத்தான் இருக்கின்றது.
இந்தித் திரையுலகைக் கட்டுப்படுத்துவது பால்தாக்கரேவின் சிவசேனா கும்பல்தான். ‘ரோஜா’ படத்தில் காசுமீர் முசுலீம் மக்களைக் கேவலப்படுத்திய மணிரத்தினம், ‘பம்பாய்’ படத்திலும் முசுலீம்களைக் கலவரக்காரர்களாக உண்மைக்கும் புறம்பாகச் சித்தரித்ததனாலேயே தாக்கரேயின் பாராட்டையும், அனுமதியையும் பெற்றார். மணிரத்தினத்தின் இத்தகைய படங்கள் தூர்தர்சனின் ஏதோ ஒரு அலைவரிசையால் மாதந்தோறும் இப்போதும் திரையிடப்படுகிறது. பாகிஸ்தான் எதிர்ப்பை வைத்து முசுலீம்களை பயங்கரவாதிகளாக – வில்லன்களாகக் காட்டும் படங்கள் தற்போது ஏராளம் வருகின்றன. முசுலீம்களையும், கம்யூனிஸ்டுகளையும் கேவலப்படுத்தி ஹாலிவுட்டில் 80-களில் வந்த படங்களின் போக்கிற்கு இணையானது இது.
விஜயகாந்த், அர்ஜுன் போன்றோரது ‘தேசபக்தி’ப் படங்களிலும், தெலுங்கின் மசாலாப் படங்களிலும், அவ்வளவு ஏன் கடவுளைக் கேலி செய்து வெளிவந்த வேலுபிரபாகரனின் ‘புரட்சிக்காரன்’ படத்திலும் ‘பின்லேடன்’தான் வில்லன். தாடியும், குர்தாவும், கண்களில் தெறிக்கும் வெறியும் கொண்ட முசுலீம் பயங்கரவாதிகளாய் இவர்கள் காட்டப்படுகிறார்கள். மேலும் முசுலீம் கிறித்தவப் பெயர் கொண்டவர்களே கடத்தல்காரர்களாகவும், சட்ட விரோதத் தொழில் செய்பவர்களாகவும் திரைப்படத்தில் தோன்றுவது இந்தியத் திரை மரபாகவே நிலைபெற்று விட்டது. பார்ப்பனியத்தின் பண்பாட்டை ஆதரிப்பவரே நல்ல முசுலீம் – கிறித்தவராகத் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்றனர்.
திராவிட இயக்கத்தின் தூண்டுதலில் வந்த எம்.ஆர்.இராதாவின் (பார்ப்பனியத்தின் சமூக விரோதத் தன்மையை எதிர்த்து வந்த) படங்களும், நாடகங்களும், கல்லடியும், சொல்லடியும் எதிர்கொண்டே மக்களிடம் சென்றன. இவரைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சமரசத்திற்கிணங்க பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகி விட்டனர். தி.மு.க.வின் முன்னாள் கொ.ப.செ.யான ராஜேந்தர் தீவிரமான ஆஞ்சநேய பக்தர், பக்திப் படங்களை மாதம் ஒன்று என எடுத்துத் தள்ளும் இராம நாராயணன் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
தன் மகனுக்கு ‘பிரபாகரன்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தவரும், தனது ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் பாராட்டியதைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவருமான நடிகர் விஜயகாந்த், ஒரு மாதிரி தேசியம் கலந்த தமிழ்ப் பற்றாளனாகக் காட்டிக் கொள்பவர். ‘கள்ளழகர்’ தொடங்கி பின்னர் வெளிவந்த ‘நரசிம்மா’ வரை இராம.கோபாலனுக்குப் போட்டியாகப் பேச ஆரம்பித்திருக்கிறார் விஜயகாந்த். ‘நரசிம்மா’ படத்தில் ”இந்தியாவில் ஒரு முசுலீம், ஜனாதிபதியாக, கிரிக்கெட் காப்டனாக மாறமுடியும், உங்க பாகிஸ்தானில் ஒரு இந்து வரமுடியுமா? இங்கே ஏராளம் மசூதிகள் கட்ட முடியும், உங்க பாகிஸ்தானில், இந்துக் கோவில்கள் கட்ட முடியுமா?” என்று ஒரு காசுமீர் முசுலீம் ‘தீவிரவாதியிடம்’ விஜயகாந்த் வாதிடுகிறார்.
எனவே, தமிழ்த் திரையுலகின் மணிரத்தினம், விசு, பாலசந்தர், ஜீ.வி., சங்கர், கமலஹாசன், பாலகுமாரன், சுஜாதா, வாலி போன்ற பார்ப்பனர்களானாலும், விஜய்காந்த், பாரதிராஜா, எஸ்.தாணு, இளையராஜா, வைரமுத்து போன்ற சூத்திர – பஞ்சமர்களானாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து தேசபக்த – பண்பாட்டு விழுமியங்களை ஏற்றுக்கொண்டவர்கள்தான். பிரபல பின்னணிப் பாடகியான சித்ரா சென்னை ஆர்.எஸ்.எஸ். குரு பூஜையில் வருடந்தோறும் பாட்டுப் பாடுகிறார். கௌதமி, எஸ்.வி.சேகர், விசு, விஜயசாந்தி, சத்ருகன்சின்ஹா, விக்டர் பானர்ஜி என இந்திய அளவில் திரை நட்சத்திரங்கள் பா.ஜ.க.வில் குவிந்து கிடக்கின்றனர். இராமாயணத் தொடரில் இராமன், சீதையாக நடித்த நடிகர்கள் கூட பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்களாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
அரசியல் மற்றும் மக்களின் போராட்டங்களைப் பதிவு செய்யும் ‘டாக்குமென்டரி’ பட உலகிலும் இந்து மதவெறியர்களை எதிர்த்து ஏதும் செய்ய இயலாது.
அத்வானியின் ரத யாத்திரையை வைத்து இந்து மதவெறியர்கள் நடத்திய ‘ராமஜென்ம பூமி’க் கலவரங்களைப் பதிவு செய்து ‘கடவுளின் பெயரால்’ என்ற ஆவணப் படத்தின் மூலம் அம்பலப்படுத்தியவர் ஆனந்த் பட்வர்த்தன. அந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது என்ற அரசு உத்தரவை முறியடிக்க அவர் 8 ஆண்டுகள் நீதிமன்றத்தில் போராட வேண்டியிருந்தது. அதேபோல ரூப் கன்வர் என்ற இளம் பெண்ணை உடன்கட்டையேற்றிக் கொன்ற பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தைப் பதிவு செய்து ஒரு குறும்படமாக்கிய 5 பெண் பத்திரிகையாளர்களுக்கும் அதே நிலைமைதான். போலீசு நடத்திய வெறியாட்டத்திற்குப் பிறகு, கொடியங்குளத்தின் அவலத்தை வீடியோவில் பதிவு செய்து தாழ்த்தப்பட்ட மக்களிடம் திரையிட்டது ‘புதிய தமிழகம்’ கட்சி. அதைக்கூட தடை செய்ய வேண்டும் என்று கூக்குரலிட்டவர் இந்து முன்னணி இராம.கோபாலன்.
இப்படி காட்சி ஊடகத்தில் மட்டுமல்ல, செய்தி ஊடகத்திலும் பார்ப்பனியமே தலைதூக்கித் துரத்துகிறது. இந்தியாவின் அநேக மாத, வார, நாளிதழ்கள் பார்ப்பன – மேல்சாதியினரிடமே இருப்பதால் இந்து மீட்புவாதத்திற்கும், பிற்போக்குத் தனங்களுக்கும் கோட்டையாக அவை விளங்குகின்றன. ஜாதகம், ஜோசியம், நல்ல நேரம், வார – மாத ராசி பலன்கள், சாமியார்களின் அருளுரைகள், கோவில் யாத்திரைகள் எல்லாம் இந்தப் பத்திரிகைகளில் நிரம்பி வழியும். எல்லா மதத்தினரும் வாங்கிப் படிக்கும் குமுதம், விகடன் வகையறாக்கள் தீபாவளிக்கு மூன்று புத்தகங்கள் வெளியிடும். ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்காக மூன்று பக்கங்களைக் கூட அதிகரிக்காது.
உள்நாட்டு – வெளிநாட்டு சினிமா கிசுகிசுக்கள் நிரம்பி வழியும் தினமலரின் வாரமலர் பக்கங்களில் கீழே ராமகிருஷ்ண பரமஹம்சரது பொன்மொழிகள் தவறாமல் இடம் பெறும். ‘பொய்யே உன் பெயர்தான் தினமலரா’ என்பதற்கேற்ப தமிழகம் முழுவதும் ஜெலட்டின் குச்சிகளும், ஐ.எஸ்.ஐ. உளவாளிகளும் நிரம்பி வழிவதாக இப்போதும் கூசாமல் எழுதுகிறது தினமலர். பா.ஜ.க.வின் அரசியலை ஆதரிப்பதற்குத் தனது தலையங்கப் பக்கத்தையே ஒதுக்கியுள்ளது தினமணி. தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்து, இந்தியாடுடே போன்ற பத்திரிகைகளில் பணியாற்றுபவர்களில் பலர் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள்தான்.
இந்து மதவெறியர்களுக்கு நேரடிப் புரவலராக இருக்கும் தினமலர், பார்ப்பனியத்தின் இலக்கியப் பத்திரிகையான காலச்சுவட்டிற்கும் புரவலராக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தனது அலுவலகத்திலேயே பெருமையுடன் விற்பனை செய்யும் ஜெயமோகனின் ‘விஷ்ணு புரம்’ நாவலுக்கு பணஉதவி செய்தவர் பொள்ளாச்சி மகாலிங்கம். கோக் – பெப்சி முகவராக இருக்கும் மகாலிங்கத்தின் கல்லூரிகளில்தான் ஆர்.எஸ்.எஸ்.இன் பயிற்சி முகாம்கள் இன்றும் நடக்கின்றன. ”எங்கே பிராமணன், மகாபாரதம், இராமாயணம்” இவற்றை வைத்தே ‘அரசியல்’ பத்திரிகை நடத்தும் ‘சோ’ தனது பா.ஜ.க. விசுவாசத்திற்குப் பரிசாக ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைப் பெற்றார். இவரைப்போலவே இந்து மதவெறியரின் பத்திரிகையாளராக இருந்த அருண் சோரி – இன்று அமைச்சர் பதவியையே பரிசாகப் பெற்றிருக்கிறார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கில – இந்தி நாளேடுகள் பல பாபர் மசூதி இடிப்பிலும், மண்டல் கமிசன் பிரச்சினையிலும், பா.ஜ.க.வின் ஊதுகுழலாய்ச் செயல்பட்டன. முலாயம்சிங் முதலமைச்சராக இருந்தபோது 90-ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற அயோத்தி கரசேவை கலவரத்தில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாகப் பொய்ச் செய்தி வெளியிட்ட ஆஜ், தைனிக் ஜாக்ரண், சுதந்திர சேத்னா, சுதந்திர பாரத் எனும் 4 இந்தி இதழ்கள் ‘இந்திய பிரஸ் கவுன்சிலினால்’ கடும் கண்டனம் செய்யப்பட்டன. இக்கண்டனத்தைக் கூட ஏனைய தேசியப் பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்து விட்டன.
சட்டரீதியில் மதச் சார்பின்மை என்று சொல்லிக் கொண்டாலும் செய்தி ஊடக நிறுவனங்களில் இயல்பாக உள்ள ‘இந்து’ ஆதிக்கம் சிறுபான்மை மக்களைத் தனிமைப்படுத்துகிறது. போட்டி மதவாதம் எழுவதற்கு இத்தகைய இந்து செய்தி நிறுவனங்களும் ஒரு காரணமாகின்றது.
மொத்தத்தில் நம் நாட்டின் காட்சி – செய்தி – பொழுதுபோக்கு ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனமயமாக்கப்பட்டு இந்து மத வெறியின் பக்கவாத்தியங்களாகச் செயல்படுபவைதாம். இருப்பினும் பார்ப்பனியத்தின் சென்சார் கண்களில் சிக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும் ஒன்றிரண்டு கலகக்குரல்களையும் நெரிக்க வேண்டும் என்பதுதான் இந்து மதவெறி பாசிஸ்டுகளின் விருப்பம். இட்லரின் இந்திய வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கள்?
– தொடரும்
__________இதுவரை____________
- பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
- பாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?
- பாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
- பாகம் 4 – தீண்டாமையை ஏற்றுக்கொள்! இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்!!
- பாகம் 5 – கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்!
- பாகம் 6 – வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?
- பாகம் 7 – ஆண்டவனின் வறுமையா? ஆலயக் கொள்ளைக்கு உரிமையா?
- பாகம் 8 – கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி!
- பாகம் 9 – ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!
- பாகம் 10- வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்?
- பாகம் 11 – ‘இந்து கடையிலேயே வாங்கு’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு?
- பாகம் 12 – சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?
- பாகம் 13 – சிறுபான்மையினர் கமிசனைக் கலைக்கக் கோரும் ‘மனித உரிமை’ப் பற்றாளர்கள்!
- பாகம் 14 – கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா?
- பாகம் 15 – ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா?
- பாகம் 16 – ‘நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’!
- பாகம் 17 – உருது முஸ்லிம்களின் மொழியா?
- பாகம் 18 – மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?
- பாகம் 19 – உயர்பதவிகளில் முஸ்லிம்கள் – பார்ப்பனியத்தின் கருணையா?
- பாகம் 20 – பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?
- பாகம் 21 – வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?
- பாகம் 22 – சதி… சதி….ஐ.எஸ்.ஐ சதி…
- பாகம் 23 – பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்?
- பாகம் 24 – இந்திய இராணுவம் இன்னொரு பஜ்ரங்தள்!
- பாகம் 25 – இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
- பாகம் 26 – இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு?
// சரஸ்வதியை உள்ளபடி நிர்வாணமாய் வரைந்தார் என்பதற்காக ஓவியர் எம்.எப். உசைனைத் தாக்கியதும் இவர்கள்தான். //
நீரும், எம்.எஃப்.ஹுசைனும் எந்த சரஸ்வதியை உள்ளபடி நிர்வாணமாகப் பார்த்து ரசித்தீர்களோ.. அதை படமாக வேறு வரைவதா..?! கையில் வீனணயை வேறு கொடுத்து ரசித்துவிட்டு, வாங்கி கட்டிக் கொண்டு புலம்புவதேனோ…
// திராவிட இயக்கத்தின் தூண்டுதலில் வந்த எம்.ஆர்.இராதாவின் (பார்ப்பனியத்தின் சமூக விரோதத் தன்மையை எதிர்த்து வந்த) படங்களும், நாடகங்களும், கல்லடியும், சொல்லடியும் எதிர்கொண்டே மக்களிடம் சென்றன. இவரைத் தவிர்த்த ஏனைய கலைஞர்கள் அண்ணாவின் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற சமரசத்திற்கிணங்க பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகி விட்டனர். //
வேலும் மயிலும் துணை படத்தில் எம்.ஆர்.இராதா உண்மையான பக்தர் வேடத்தில் நடித்து முருகனுடன் சமரசமாகிவிட்டார்..
இந்நாடு பெருமளவு பார்ப்பனியத்தின் கருத்துக்கு அடிபனிந்து வால கர்ருக்கொன்டது ஆனால் பார்ப்பனியய்ம் இன்னூம் முழுமையாக மாரீ விடவென்டும் என அஷ்சுருத்துகின்ரது.புது பாணியில் தாக்குதல் இந்நாட்டு உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தின் புராணப் புரட்டுக்கள்தான் தொடர்ந்து ஒலி-ஒளி ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இது மரு விவாதங்கள் வேண்டும்-வினவு கட்டுரை நன்றி.
வேலும் மயிலும் துணை படத்தில் எம்.ஆர்.இராதா உண்மையான பக்தர் வேடத்தில் நடித்து முருகனுடன் சமரசமாகிவிட்டார்..—அம்பி சொல்வது நிஜமா………..?
கந்தரலங்காரம் என்ற படத்திலும் நடிகவேள் முருகவேளின் பக்தராக நடித்திருக்கிறார்..
முருக பக்தர்போல நடித்திருப்பார். அவர் வேல் காவடி எடுத்து வந்து அமரும் போது அது நன்றாகத் தெரியும். தவிர, அவர் பேசும் வசனங்களும்கூட இரண்டு பொருள் கொண்டிருக்கும்.
ஷரீஆ சட்டத்தின் நரபலி ரிஸானா நஃபீக்!
வினவு இதை பற்றி உங்கள் கருத்து ????
Not only that. Vinavu should write about hundreds of innocent Jews slaughtered by mohammad.
இந்து மதம் என்பது அகில உலகத்திலேயே இந்தியா, நேப்பாளம் ஆகிய இரண்டு நாடுகளில் (மட்டும் தான்) பெரும்பாண்மை மதம். இந்த இரண்டு நாடுகளும் உலக நிலப்பரப்பில் வெறும் 2.5% மட்டுமே. உலகில் உள்ள பெரும்பாண்மை நாடுகள் கிறிஸ்த்தவ அல்லது முஸ்லீம் பெரும்பாண்மை நாடுகளே. சுருங்க சொன்னால் இவ்வுலகின் மிகப்பெரிய மத அடையாளம் ஆபிரகாமிய மத அடையாளம் தான். ஒருவர் இந்தியாவை விட்டு வெளியே போனால் கிறிஸ்த்தவ அல்லது இஸ்லாமிய பெரும்பாண்மை நாட்டில் தான் கால் வைக்க வேண்டி வரும். விதி விலக்காக சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் புத்த மத அடையாளத்தை கொண்டவையாக இருந்தாலும் இதனால் எந்த அரசியல் ரீதியான ஆதரவினையும் இந்து மதம் (ஏன் இந்தியாவே கூட) எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் புத்த மதம் இந்தியாவில் தோன்றியிருந்தாலும் மேற்கண்ட நாடுகளில் அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாறிய வடிவம் தான் பின்பற்றப்படுகிறது (உதாரணமாக ஜப்பானில் அம்மண்ணுக்கு உரித்தான ஜென் வடிவ புத்தமே பின்பற்றப்படுகிறது. அதற்கும் இந்து மதத்துக்கும் அல்லது இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை). மேலும் இந்துக்கள் எனப்படுவோர் சிறுபாண்மையினராக வாழும் பாக்கிஸ்தான், அப்கானிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, மலேசியா ஆகியவற்றில் அவர்களுக்கு என்ன விதமான மரியாதை கிடைக்கிறது என்பது விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். பாரசீக மொழி அகராதியில் இந்து என்றால் திருடன் என்றே பொருள் கூறப்பட்டுள்ளது. மேற்கத்திய உலகில் தியானம், யோகாசனம், ஆயுர்வேதம் ஆகியவற்றை இந்து மதத்தில் இருந்து பெறுவதை விட புத்த மதத்தில் இருந்து பெறுவதையே வெள்ளை இனத்தவர் விரும்புகிறார்கள். ஆக இந்து மதம் மட்டுமல்லாது அதை பின்பற்றுபவர்களும் இந்த ஆபிரகாமிய உலகில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே!. இதையெல்லாம் மறைக்கும் விதமாகத்தான் இந்து மதம் உலக மதங்களுக்கு எல்லாம் தாய் என்று இந்த இந்து மதவெறி அரை டவுசர் கா(லி)வி கும்பல் வாய் கூசாமல் கப்சா விட்டு வருகிறது. மேற்காசியாவில் தோன்றிய ஆபிரகாமிய மதங்களுக்கும் அப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் எல்லையில் தோன்றிய இந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? சுருக்கமாக சொன்னால், அரசியல் ரீதியாக பார்க்கும் போது இந்து மதமானது இந்த உலகில் இரண்டே இரண்டு நாடுகளில் மட்டுமே இருக்கிறது. கிறிஸ்த்தவர்களும் இஸ்லாமியர்களும் இந்தியாவில் வேண்டுமானால் சிறுபாண்மையினராக இருக்கலாம். உலகளவில் அவர்கள் தான் பெரும்பாண்மையினர். ஆகையால் இந்தியாவில் இந்து மனுதர்ம வெறி கும்பல் ஒரு கிறிஸ்த்தவனை தாக்கும் போது அது இவ்வுலகின் 126 கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. ஒரு இஸ்லாமியனை தாக்கும் போது அது 50 இஸ்லாமிய பெரும்பாண்மை நாடுகளில் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டத்தில் இருக்கும் கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் கல்வி, பொருளாதாரம், சமூக வளர்ச்சி, தொழில்நுட்பம், இராணுவ வலிமை ஆகியவற்றில் மிகவும் முன்னேற்றம் அடைந்து உலகையே கட்டுப்படுத்துபவை. இந்தியா பயன்படுத்தும் பெட்ரோலியத்தில் கணிசமான அளவு அரபு நாடுகளில் இருந்து வருபவை. இஸ்லாமிய மத அடையாளம் கொண்ட இந்த அரபு நாடுகளில் பல லட்சம் இந்தியர்கள் நாலாவித தொழில்களிலும் இருந்து கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த இந்தியர்கள் அனுப்பும் அன்னிய செலாவணியை நம்பி இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன (குறிப்பாக கேரளம்). பல கிறிஸ்த்தவ பெரும்பாண்மை நாடுகள் (குறிப்பாக மேற்கத்திய நாடுகள்) மத சார்பற்றதன்மை (Secular) தன்மை கொண்டவைகளாக உள்ளன. சில இஸ்லாமிய பெரும்பாண்மை நாடுகளும் பிற மத விவகாரங்களில் நீக்குப்போக்கு தன்மை கொண்டவைகளாக உள்ளன. ஆகையால் தான் இவ்வுலகில் இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகள் இந்து பெரும்பாண்மை நாடுகளாக சொல்லிக்கொண்டு காலம் தள்ள முடிகிறது. இந்தியாவை சேர்ந்த பல லட்சம் பேர் உலகின் ஏனைய பகுதிகளில் பணி புரியவோ (குறைந்த கூலிக்காவது) அல்லது குடியிருக்கவோ முடிகிறது. இந்தியாவில் இருக்கும் இந்து மத வெறிக்கும்பல் பின்பற்றும் அரசியலையும் அவர்களின் மத சிறுபாண்மையினரை தாக்கும் பாணியையும் அனைத்து ஆபிரகாமிய நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்தால் இவ்வுலகில் இந்துக்களும் இந்து மதமும் சுத்தமாக துடைத்தெறியப்படுவது மட்டுமன்றி இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகளும் பேரழிவுக்கு ஆட்படும். மேலும் இந்து மதவெறி கும்பலின் ஆபிரகாமிய மதங்களுக்கு எதிரான துவேஷத்தால் கிறிஸ்த்தவர்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் ஆபிரகாமிய மதங்கள் உலகளவிலானவை. இந்தியாவில் பெரும்பாண்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்த நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் தங்கள் பங்கு குறித்து தற்போது தான் கவலைப்பட ஆரம்பித்துள்ளார்கள். இந்த மக்களின் உரிமைக்கான உணர்வினை திசைதிருப்ப தான் இந்துத்துவ அரசியல் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது.
வேதங்கள், புராணங்கள் ஆகியவை தங்களின் ஆபாச கட்டுக்கதை சரக்குகளின் மூலம் கேவலப்படுத்துவதை விடவா ஊடகங்கள் இந்து மதத்தை கேவலப்படுத்திவிட்டன. என்ன பிதற்றல் இது?
இது மிகவும் தவறான கருத்து. பெரும்பான்மையான நாடுகள் சில மதங்களைப் பின்பற்றுவதால், அல்லது அந்த நாடுகள் பலம் வாய்ந்தவை என்பதால், மற்றவர்கள் அவற்றிற்கு அடங்கிப் போகவேண்டும் என்று கூறுவது குறுகிய ஆதிக்க மனப்பான்மையினையும் மிரட்டலையுமே காட்டுகின்றது. எந்த ஒரு மதமும் மற்ற மதங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது.
ரூம் போட்டு யோசிப்பாரு போல……!
பெரியசாமியின் விளக்கம் அற்புதம்! ஒரு திருத்தம்! இந்தியாவிலும்,நேப்பாளமத்திலும் கூட ஆட்சியில் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தும் கூட்டம்தான், பிராமண் மதததை மற்ற மக்களும் பின்பற்றுவதாக ஏமாற்றுகிறது இஙு பெரும்பான்மை மக்கள் மதமற்றவர்கள்! சட்டப்படி வேறு வழியில்லாமல் இந்து என்ற பெயரை ஏற்றுக்கொன்டனர்!
நிதர்சன உண்மை
//”திப்புவின் வரலாறு பொய், இராமாயணம் உண்மை” என்று வரலாற்றையே இந்த மதவெறியர்களால் புரட்டிப் போட முடிகிறது என்றால் இந்த முட்டாள்தனத்தை தாலிபான்களின் ஆட்சியில் கூடக் காண முடியாது.///
SUPPPERRRRRRRRRR….
Tipu’s history is not a lie but his secular credentials are.
Ramayan is accepted as a belief across all over India and is never told to be a true story.
இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட வேண்டும்
இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட வேண்டும்
எனில் நாமும் நமது குடும்பத்தாரும் தீபாவளி வினாயகர் சதுர்தி போன்ற பன்டிகைகள் கொன்டாடுவதை புறக்கனிக்க வேண்டும்.
u can start first and see who agrees with u.
எனது குடும்பத்தில் யாரும் பாப்பான் போதித்த பண்டிகைகளை கொண்டாடுவதுமில்லை.துக்கமாக அனுஸ்டிப்பதுமில்லை.இது மிக நீண்டகாலமாகவே எமது வர்க்கத்தின் பன்பாடு.
congratulations,good luck.
பெரும்பாலான நாடுகளில் பெரும்பான்மையினர் பின்பற்றும் மதங்கள் ஆதிக்கம் செலுத்துவது வெளிப்படையானது. இதில் இந்தியாவை மட்டும் குறைகூறுவதில் பயனில்லை.
இவ்வளவு எழுதியவர் இசுலாமியர்களின், கிறிஸ்தவர்களின் புனித நூல்களிலுள்ள தவறான விடயங்களை பட்டியலிடத் துணிவாரா?
நீங்கள் பட்டியலிடுங்களேன்.
நாங்கள் பட்டியலிட்டால் தான் எங்களுக்கு இந்து மத வெறியற்கள் என்று பெயர் வைப்பீர்.நீங்கள் தான் நாத்திகவாதிகளாயிற்றே, பகுத்தறிவாதியாயிற்றே. இந்து மதத்தை விமர்சிக்கும் பொழுது இசுலாமியர்களின், கிறிஸ்தவர்களின் புனித நூல்களிலுள்ள தவறான விடயங்களை பட்டியலிடத் பயப்படுரீரா. ஒரு வேலை நாத்திகவாதி என்ற போர்வயில் ஒளிந்திருக்கும் இசுலாமியரா?
செய்தி ஊடகங்களை விடுங்கள்.
இன்றைய சுடச் சுட ஆவி பறக்கும் செய்தியைப் பாருங்கள்.
கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில், தர்மசத்திரத்தில் நடந்து கொண்டிருக்கும் பார்ப்பன மேல் சாதி வெறியைப் பாருங்கள். ஓசியில் கிடைக்கும் சோற்றை, சூத்திரன் தங்களோடு ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடக் கூடாது என்று பார்ப்னர்கள் அவர்களை த்னியாக உட்கார வைத்து விட்டார்கள். சூத்திரனை உள்ளே வர விடாமல் இருப்பதற்காக ஒரு காவலாளியையும் போட்டு விட்டார்கள். (People மலையாளச் சேனல் செய்தி)
இந்து என்று சொல்லிக் கொண்டே இப்படி ஒரு சமுதாயத்தையே இழிவுபடுத்துகிறீர்களே!! இதை எப்படி சொல்வது? போங்கடா நீங்களும் உங்க…………..
Udupi doesn’t have segregation for brahmins and others,it is all common.
False news.
My dear Hari, this is the exclusive news report from People Malayalam channel. I checked with my Mangalore friend about this and unfortunately he also accepted this inhuman behaviour. So, please change your view to accept the real things as it is. Don’t try to turn the truth from reality to falsehood. If you have curiosity to know the truth, then check with People channel’s people or go the so called Krishna temple in the great Udippi.
I have been to the udupi temple myself and i know how food is served there.my friend’s family which was brahmin and came with us,ate with our family and everyone else.
what u r talking about is in dharmasthala,not in udupi.
What am speaking is the very latest news (20/01/13).
Anyhow Mr. Hari, Is this custom acceptable in Dharmasthala?
Let me be honest again,
when brahmins eat they have to do some rituals and eat in a certain way,
The food in dharmasthala for brahmins was slightly better as my friend tells me and is quite authentic but he also mentioned his family had some ties like his grandfather was known to the adminsitration and things like that.
But IMO,it is okay to feed anyone separately but all of today’s brahmins who dont live a proper spiritual life,i dont think they deserve any special treatment.
and secondly,the food should be the same,good or normal food.
I am okay with some people getting better treatment anywhere but not for no reason.
The one and only reason is brahmin – non-brahmin. Nothing else. That is the reason they getting the better treatment. Starving people never bother about the rituals. If you see the clipping then you never give the comments like this. The innocent children eating food with full of fear on their faces…If they allow us to eat fully or not
பாலசந்தர் படமான உன்னால் முடியும் தம்பி என்ற படத்தில் வரும் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா மிஸ்டர்.ஹரிகுமார். “அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா. ஆகாசப் பார்வை என்ன சொல்லுராசா”
I dont know about any clipping,
But i can assure you nobody eating there was thinking of fear and all.People sit and eat normally,i certainly ll any day consider my personal experience over some communist propoganda.
“I dont know about any clipping,”
If you not wish to know the truth, then what else. Nothing. You are 101% correct. The People Channel’s people are idiot. That’s all.
Mr. Hari, today morning Kairali channel telecast one more news. In Subramaniya Temple at Sullia Taluk in Mangalore Dist – Untouchable people roll over (Angapprathatchanam) on the leaf (Banana leaf – after eating the food by Brahmins i.e., on wastage). Check the custom is true or not.
I saw that and the custom is true,i dont knw why they do it.
we dont have that culture anywhere else,u knw it yourself.
i knw the truth because,i have been to udupi and i have been to that subramanya temple also.
இந்து சமயம் தமிழரது அல்ல. அப்படியான ஒன்றை அந்நியர் சிந்து நதி மக்களின் வாழ்வியலுக்கு ஏற்படுத்திய பெயர். இந்தியா என்ற ஒரு தேசமும் சிந்து வெளி மக்களை வைத்து ஆரியரும் அந்நியரும் உருவாக்கிய ஒன்றே. ஆரியரின் வேதத்துக்கும் தமிழரின் வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு. ஆரியர் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தவும் தமிழருடன் கணந்து வாழவும் உருவாக்கிய கூட்டு மதமும் கலாச்சாரமுமே இந்து மதமும் அதனை தூக்கி நிறுத்தும் ஆபாசமான புராணக் கதைகளும். தமிழன் தனது வரலாறு தெரிந்து அதன்படியே தன் வாழ்வியலை மாற்றாதவரை இத்தகைய வாத விவாதங்கள் தொடரவே செய்யும். அடிமையாகிவிட்ட தமிழ் இனத்தால் எதுவித முன்னேற்றமும் காணமுடியாது. அம்பேத்கார, பெரியாருக்கு நடந்ததே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் நடந்தது. உலகம் மிகப் பெரிய சதி வலைக்குள் சிக்கி விட்டது. மத வாதிகளும் வணிகர்களும் கொள்ளைக்காரரும் கூட்டு வைத்து உலகையும் உலக வளங்களையும் உயிர்களையும் சுரண்டிவாழும் அரசியலே இன்று நடக்கிறது.இந்தச் சதி வலையை வெல்லும் ஆற்றல் எவருக்கும் கிடையாது என்பதே கசப்பான உண்மை.
யப்பா…காமெடி பன்னாதீர்கள் மனோ….
// ஆரியரின் வேதத்துக்கும் தமிழரின் வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு //
“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீ வலம் செய்து” திருமணம் புரிந்த சுத்த சுயம்ப்ரகாச தமிழ்ப்பெண் கண்ணகியை கேட்டுப்பாருங்கள். ஒருவேளை விடை கிடைக்கலாம்!
Mano,
I have never seen a ill informed ignorant post like yours anywhere.
Hinduism,Buddhism,Jainism everything exists in India and that includes tamizhnadu.
Saivam is a religion as much as Advaitam or Vaishanavam.
Nobody lost anything because of it.
No religious man ever looted the natural wealth of TN,it is the DK/DMK people who are first in stealing river sand or cutting down trees or making buildings over dry lakes.
// கடவுளர்கள் உருவான கதை, ஊடல் – கூடல் -ஆபாசங்கள், தேவலோக அழகிகளான ரம்பா – ஊர்வசி – மேனகைகளிடம் கடவுள்களும், முனிவர்களும் மயங்கிய கதைகள், அய்யப்பன் – விநாயகர் பிறந்த கதைகள் இன்ன பிறவற்றையெல்லாம் மக்கள் தெரிந்து கொண்டு ‘ப்பூ இந்து தர்மம் இதுதானா’ என்று ஒதுக்கி விடுவாரகள். //
அமர் சித்ர கதாவில் இருந்து, அம்புலிமாமா வரை பெருமளவில் வெளியானவைதானே இந்த கதைகள். “ஹரிஹரபுத்ரா ஐயப்பா” என கோஷம் போட்டபடி சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பன் அவதார கதை தெரியாது என்றா சொல்கிறீர்கள்? சரி. உங்கள் கூற்றுப்படி இந்தக் கதைகள் தெரியாததால் தான் பெருமளவு இந்துக்கள் இந்த மதத்தை ஏற்கிறார்கள் என்றே கொள்வோம். அப்படியானால் இந்த நாட்டின் அனைத்து இன்னல்களுக்கும் ஆதிமூல, முழுமுதல் காரணமான இந்து மதத்தை ஒழிக்க ஒரு எளிய வழி உள்ளதே. இந்தக் கதைகளை இந்துக்களுக்கு நீங்களே எடுத்து சொல்லலாமே. அனைவரும் இந்துமதத்தை விட்டு நீங்கி விடுவர். இந்த கொடிய மதமும் ஒழிந்துவிடுமே. இவ்வளவு ஒரு எளிய வழி இருக்கும் போது புரட்சி, போராட்டம் என்றெல்லாம் எதற்கு கஷ்டப்படுகிறீர்கள்?
இந்துக்கள் இறைவனை விநாயகர், ஐயப்பன் என பல உருவில் வழிபடுகிறார்கள். அவர்கள் இந்த புராணக் கதைகளை சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்வதில்லை.
இந்துக்கள் இறைவனை விநாயகர், ஐயப்பன் என பல உருவில் வழிபடுகிறார்கள். அவர்கள் இந்த புராணக் கதைகளை சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்வதில்லை இறைவனும் கடவுளும் கற்பனை பொய் புரட்டுக் கதைகள் என்பதை நிரூபிக்க அறிவியல் ஆய்வுகள் பொருள் முதல் வாதத்தைக் கொண்டு இன்று வரை நிரூபித்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானத்தைக் கொண்டுதான் உங்களைப் போன்று அறியாமையில் மூழ்கியிருக்கும் மக்களுக்கு அறிவை போதிக்க முடியுமே தவிர , அய்யப்பன் எவனோ ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் சுய இன்பத்தால் பிறந்த இன்னொரு கற்பனை கதாபாத்திரம் என்ற உன்மையையும், புள்ளையாரு இன்னொரு கற்பனை பெண் கதாபாத்திரத்தின் பிறப்புருப்பில் சேர்ந்த அழுக்கைக் கொண்டு உருவாக்கப்பட்ட இன்னொரு கற்பனை கதாபாத்திரம் என்ற உன்மையையும் எப்பொழுதுமே பிரச்சாரம் செய்துகொன்டிருக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.அதைவிட நாட்டு நலன் சார்ந்த அரசியல் பொருளாதார உண்மைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டிய கடமையே பெரிதெனக் கருதுகிறோம்.வேண்டுமானால் அய்யப்பன் புள்ளையாரு இன்னும் பிற இத்யாதிகள் குறித்த உண்மைகளை பிரச்சாரம் செய்யும் பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.தவறொன்றும் இல்லை.
ஐயா, நான் முட்டாளாகவே இருந்துவிட்டு போகிறேன். நீங்கள் முற்றும் அறிந்த முழு முதல் அறிவாளியாகவே இருங்கள். இறைவன் இருக்கட்டும், இல்லாமல் போகட்டும். அதுவல்ல இங்கே பிரச்சனை.
பெரும்பான்மையான மக்கள் புராணக் கதைகள் தெரியாததால்தான் இந்து மதத்தை பின்பற்றுகின்றனர் என்பது வினவின் கூற்று. இது உண்மையல்ல என்பது என் கணிப்பு. மேற்கண்ட கூற்று உண்மையாய் இருப்பின் இந்தக் கதைகளை மக்களிடையே பரப்புவதன் மூலம் இந்து மதத்தை ஒழிக்கலாம். அத்துடன் சேர்ந்து சாதி மடிந்து சமத்துவம் பிறக்கும். வாஸ்து போன்ற மூட நம்பிக்கைகள் மறைந்து அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். காதல் முதல் கருமாதி வரை இந்நாட்டின் பல பிரச்சனைகளுக்கு காரணமாக வினவு நம்பும் இந்து மதத்தை ஒழிக்க இப்படி ஒரு எளிய வழி இருக்கும் பொது அதை செய்யாமல் இருப்பது பகுத்தறிவல்ல.
புரட்சியும் போராட்டமும் நடத்துவதற்கான தோழர்களின் உழைப்பும் வினவின் உழைப்பும் சல்லிக்காசுக்கு பிரயோஜனப்படாத இந்து மதத்தை அழிப்பதற்கென்றா நினைக்கிறீர்கள்? 5000 ஆண்டுகளாக மக்களின் மனதில் திணிக்கப்பட்டுவிட்ட கடவுள் நம்பிக்கையை (குறிப்பாக இந்து மதத்தின் மீதான நம்பிக்கை)நீங்கள் குறிப்பிடும் எளிய பிரச்சாரத்தின் மூலம் அழித்துவிட முடியும் என்றே ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் கூட அடுத்து கிறிஸ்தவத்திற்கு மறுவார்கள்,இஸ்லாத்திற்கு மாறுவார்கள்,மறுவார்கள் மறுவார்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். மதம் மக்களுக்கு அபின் போன்றது ,அது காலம் முழுக்க மனிதனை போதியிலேயே வைத்திருக்கும். எனும் காரல் மார்க்ஸின் உண்மையை உணரும் வரை. பொதுவுடமை அறிவியலை புரிந்து கொள்ளும் வரை. பொதுவுடமை ஆட்சி அமைப்பதற்கான போராட்ட பாதையில் தாங்கள் சார்ந்திருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் மதத்தையும் சாதியையும் உங்களைப் போலவே மக்களும் தூக்கியெரிவார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.அதனால்தான் பொதுவுடமை அரசியலையும் அதனூடாக தற்போதைய ஓட்டுபொருக்கிகளையும்.துரோக ஆட்சியாளர்களையும்,காட் டங்கல், 123 முதலான துரோக ஒப்பந்தங்களையும் இதற்கு மாற்றாக மக்கள் கருதக்கூடிய பி ஜே பி உள்ளிட்ட மதவெறி பிடித்த பாஸிஸ்டுகளின் துரோகத்தையும் அம்பலப்படுத்துகிறோம்.மக்கள் உண்மையைப் புரிந்துகொள்ள நீண்ட நாளாகலாம்.ஆனல் உண்மை ஒருபோதும் தோற்றுப்போகாது. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை….காரல் மார்க்ஸ்.
புரட்சியும் போராட்டமும் நடத்துவதற்கான தோழர்களின் உழைப்பும் வினவின் உழைப்பும் சல்லிக்காசுக்கு பிரயோஜனப்படாத இந்து மதத்தை அழிப்பதற்கென்றா நினைக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே வினவில் எழுதப்படும் மிகப்பெரும்பாலான கட்டுரைகளில் சம்பந்தமில்லாத விடயங்களில் கூட பார்ப்பனியத்தையும் இந்துமதத்திட்கும் எதிராக அனல் கக்குவதையே காணமுடிகின்றது.
இந்து மதம் எத்தனை காசு விலை போகும் என்பதல்ல இங்கு விவாதம். இந்து மதம் சமூகத்தில் பெரும் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தியதா? ஏற்படுத்துகிறதா? இதில் நல்ல விஷயங்கள் ஏதுமே இல்லையா? இந்த மதம் அழிந்தால் சமூகத்திற்கு பெரும் நன்மை விளையுமா? புராணக் கதைகள் தெரியாததால்தான் பெரும்பான்மை மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்களா? இந்தக் கதைகள் தெரிய வரும் போது இவர்கள் இம்மதத்தை விட்டு நீங்கி விடுவார்களா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வினவின் பதில் “ஆமாம்” என்பதே எனது புரிதல். அப்படியாயின், வினவு புராணக் கதைகளை பிரச்சாரம் செய்வதே சரியான அடுத்த கட்ட செயலாக இருக்க முடியும்.
விடுங்கள். நான் முதலில் கூற வந்த கருத்து வேறு. இந்துக்கள் இந்தக் கதைகள் தெரிந்தேதான், இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் இந்தக் கதைகளை சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்வது இல்லை.
அது சரி. இனியன் கூறியது போல, பொதுவுடைமை மட்டுமே லட்சியம் என்றால் எதற்கு சல்லிக்காசு பிரயோஜப்படாத இந்து மதத்தை தாக்கி இத்தனை கட்டுரைகள். ignore செய்து விட்டு போவதுதானே.
இந்துக்கள் எல்லோரும் இஸ்லாத்திற்கு மாறினால் என்ன பிரச்சனை? அதுதான் சுத்த சன்மார்க்க சமயம் ஆயிற்றே.
venkatesan,
இந்து மதந்தான் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. போன பிறவியில செஞ்ச பாவத்தினாலதான் இப்படி அனுபவிக்கிறோம்னு கஷ்டங்கள சகிச்சுக்கிறது, சாமி, சாமியாருங்கள தேடி ஓடுறதுன்னு சமூக கொடுமைகள புரிஞ்சுக்காம, போராடாம இருக்கிறதுக்கு காரணம் இந்து மதம்தான்.
மதத்து பெயரால, சாதிக் கொடுமைகள், மடங்களில் சாமியார்கள் உல்லாசம், அரசியல்ல ஓட்டு வேட்டை என்று நடக்கும் அநியாயங்களை வினவும் எதிர்த்து தொடர்ந்து எழுதிக்கிட்டுத்தான் இருக்குது.
சமூக அக்கறை உள்ளவங்க நியாயமா இதைத்தான் செய்யணும், லட்சியம் பொதுவுடைமையாக இல்லாம அடிப்படை ஜனநாயகம்னு நெனைக்கிறவங்க கூட இந்த பாசிச, புளுகு மூட்டை இந்து மதத்திடமிருந்து மக்களை விடுவிக்க போராடுவதுதான் நேர்மையா இருக்கும்.
புராணக் கதைகள் தெரியாததால்தான் இந்துக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள் என்ற கூற்றை நான் ஏற்கவில்லை. நான் கூற வந்தது “இந்துக்கள் இந்தக் கதைகள் தெரிந்தேதான், இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் இந்தக் கதைகளை சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்வது இல்லை “. அவ்வளவே. விவாதம் திசை மாறி சென்று விட்டது.
வர்ணம்-ஜாதி, ஜோதிடம்-சாமியார் என ஏமாறுவது, சங்கராச்சாரி போன்ற போலி சாமியார்கள் என்ற பல தீமைகள் இந்து மதத்தில் உள்ளன என்பதை ஏற்கிறேன். ஆனால், இம்மதம் முழுதும் அழிக்கப்பட வேண்டியது என்பதை நான் ஏற்கவில்லை. “ஈசா வாஸ்யம் இதம் சர்வம்” (இங்கு இருப்பவை எல்லாவற்றையும் இறைவனாகப் பார்) என்று கூறும் மதம் இது. இதுவே லட்சியம். இதை நான் பின்பற்றுகிறேனா, பரப்புகின்றேனா என்றெல்லாம் கேட்காதீர்கள். மற்ற தீமைகள் ஒழிய என்ன செய்கிறேன் என்றும் கேட்காதீர்கள். எனக்கு அதற்கெல்லாம் திராணி இல்லை.
//புராணக் கதைகள் தெரியாததால்தான் இந்துக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள் என்ற கூற்றை நான் ஏற்கவில்லை. நான் கூற வந்தது “இந்துக்கள் இந்தக் கதைகள் தெரிந்தேதான், இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்கள் இந்தக் கதைகளை சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்வது இல்லை “//
இருக்கலாம். இந்த பதிவிலும் மக்கள் புராண ஆபாசங்களைப் பத்தி தெரியாம இருப்பதாலத்தான் இந்து மதத்தில இருக்காங்கன்னு சொல்லலையே.
//“ஈசா வாஸ்யம் இதம் சர்வம்” (இங்கு இருப்பவை எல்லாவற்றையும் இறைவனாகப் பார்) என்று கூறும் மதம் இது.//
இது மிகப்பெரிய மோசடின்னு மக்களுக்கு தெரிய வைக்கணும்.
இளம் பெண்ணின் முகத்தில் வீசப்பட்ட அமிலமும் இறைவன், ஆதிபராசக்தி பல் மருத்துவ காலேஜூ அனுமதிக்கு கொடுத்த லஞ்சமும் இறைவன், ஜெயலலிதா கோயிலில் போடும் அன்னதானமும் இறைவன், சாக்கடையில் புரள வைக்கும் டாஸ்மாக் சரக்கும் இறைவன் என்று சொல்லிக் கொடுக்கும் இந்த லட்சியத்தினால யாருக்கு லாபம்னு யோசிச்சி பாருங்க.
sezhian,
why would u compare all negative things to god? are u a born idiot or u just like to have misinterpretations?
God gives us enough good things in life to have a good morale and confidence in this society.
If you still want to look at the bad things,it is ur mind which is looking for bad things just to boost ur ego and assertion.
what a pathetic character u r.
god is not there in bad things
in case of good things we don’t need god
u r nobody to need or not need god,world wont become dark if u go blind.
you only said that there is no god in bad things
god is always there in good things
why do i need if i have good things
good for u,ungalukku lateaavum varathu latestavum varathu.
//God gives us enough good things in life to have a good morale and confidence in this society.//
எப்படி அரிகுமாரு தம்பீ!
காஞ்சி மட தலைவன் ஆனா, வாழையிலையில மலம் கழிக்கலாம்
குஜராத்துல இந்து மத வெறியனா இருந்தா பாலியல் வன்முறை செஞ்சத வீடியோல பீத்திக்கலாம்
முதலமைச்சரா இருந்து சொத்துக் குவிச்ச வழக்கை இழுத்தடிச்சு தண்டனை கெடக்காம தப்பிக்கலாம்
காவிரில தண்ணி திறக்காம பல லட்சம் ஏக்கர் பயிரை அழிச்ச பிறகும் கர்நாடாகாவில ஆட்சியில இருக்கலாம்.
இதெல்லாம், சமூகத்தில நம்பிக்கை தரும் நல்ல விஷயங்கள்னு சொல்றீங்களா?
orru irukku,nalla kaathu irukku,iyarkai ellam kuduthirukku,aana ungalukku yaaro seyyira specific vishayam mattum thaan kannula theriyuthu,
unga ishtam,idhula kattayam enna,vaazhai elayila malam kazhikirathu avlo periya prachanaya?
// இருக்கலாம். இந்த பதிவிலும் மக்கள் புராண ஆபாசங்களைப் பத்தி தெரியாம இருப்பதாலத்தான் இந்து மதத்தில இருக்காங்கன்னு சொல்லலையே. //
கீழே உள்ளதற்கு என்ன அர்த்தம்? இதுவரை “ப்பூ” என்று சொல்லி ஒதுக்காமல் இருக்க காரணம் என்ன? கதைகள் தெரியாததால்தானே?
// கடவுளர்கள் உருவான கதை, ஊடல் – கூடல் -ஆபாசங்கள், தேவலோக அழகிகளான ரம்பா – ஊர்வசி – மேனகைகளிடம் கடவுள்களும், முனிவர்களும் மயங்கிய கதைகள், அய்யப்பன் – விநாயகர் பிறந்த கதைகள் இன்ன பிறவற்றையெல்லாம் மக்கள் தெரிந்து கொண்டு ‘ப்பூ இந்து தர்மம் இதுதானா’ என்று ஒதுக்கி விடுவாரகள் //
ஈசா வாஸ்யம் இதம் சர்வம். இங்கு இருப்பவை எல்லாம் இறைவனே என்றான பிறகு ஒரு ஏழையை சுரண்டி நான் வயிறு வளர்க்க முடியாது. ஒரு தலித்தை இழிவாகப் பேச முடியாது. நீங்கள் இவர்களை மனிதர்களாக பார்க்க சொல்கிறீர்கள். இந்த வாக்கியம் இவர்களை இறைவனாக பார்க்க சொல்கிறது. எல்லாம் இறைவனான பிறகு சாராயம் விட்டு தெருவில் உருள்பவன் எனக்கு அருவருப்பாக தெரிய மாட்டான். மற்றவர் நன்மைக்காக மலம் அள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அருவருப்பினால் ஒதுங்கிவிட மாட்டேன். பொழுது விடிந்து பொழுது போனால் நான் ஏற்றிருக்கும் இந்து மதத்தை வசை பாடும் வினவு மீது எனக்கு வெறுப்பு ஏற்படாது. வினவும் இறைவனே. அது என்ன சொல்கிறது என்று வெறுப்பின்றி கேட்பேன்.
“வாஸ்யம்” என்ற சொல்லுக்கு “நிறைக்கப்பட வேண்டும்” என்றும் பொருள் சொல்கிறார்கள். எல்லாம் இறைவன் நிறைந்து எல்லாம் அவனது என்றான பிறகு எனது என்று ஏதும் இல்லாது போகும். பொதுவுடைமை எல்லாருக்கும் சமமாக பங்கு பிரி, எனக்கும் ஒரு பங்கு கொடு என்கிறது. இந்த வாக்கியம் எனக்கு பங்கே வேண்டாம் என்கிறது. நித்தியானந்தா, சங்கர் ஆச்சாரி போன்றோரை மட்டுமே பார்க்கும் நீங்கள் பட்டினத்தார்-பத்ரகிரியாரை புறந்தள்ளி விடுகிறீர்கள். கையால் பிச்சை எடுக்கும் துறவி பட்டினத்தார் ஒரு முறை திருவோட்டில் பிச்சை எடுக்கும் துறவி பத்ரகிரியாரை சொத்துடையவன் என்று கேலி செய்கிறார். திருவோடும் துறக்க வேண்டிய சொத்தாகிறது. இந்தக் கதை உண்மையோ பொய்யோ, துறவின் உச்சத்தை காட்டுகிறது.
இந்த வாக்கியம் சொல்லும் லட்சியத்துக்கும், உங்கள் பொதுவுடைமை லட்சியத்துக்கும் அதிக தூரம் இல்லை. நீங்கள் மனிதர்களை மனிதராய் நடத்த வேண்டும் என்கிறீர்கள் இந்த வாக்கியம் அவர்களை இறைவனாய் நடத்த சொல்கிறது.
மேலும் இந்து மதம் இல்லையானால் கோவில்கள் இருக்காது. ஓசியில் பொங்கல், புளியோதரை, சுண்டல் கிடைக்காது 🙂
//பிறகு ஒரு ஏழையை சுரண்டி நான் வயிறு வளர்க்க முடியாது.
ஒரு தலித்தை இழிவாகப் பேச முடியாது.
சாராயம் விட்டு தெருவில் உருள்பவன் எனக்கு அருவருப்பாக தெரிய மாட்டான்.
மற்றவர் நன்மைக்காக மலம் அள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அருவருப்பினால் ஒதுங்கிவிட மாட்டேன். பொழுது விடிந்து பொழுது போனால் நான் ஏற்றிருக்கும் இந்து மதத்தை வசை பாடும் வினவு மீது எனக்கு வெறுப்பு ஏற்படாது.//
இப்பொழுது இதெயெல்லாம் செய்கிறவங்களை, இறைவன் மாற்றாமல் இருப்பது எதனாலோ? சும்மா எல்லாத்தையும் இறைவனா பாருன்னு சொல்றதுக்கு மதம் எதுக்கு?
கஷ்டங்களை எல்லாம் சகிச்சுக்கோ, மத்தவங்க எல்லாம் எல்லாத்தையும் இறைவனா பார்க்க ஆரம்பிச்சதும் (அதுக்கு சில நூறு வருஷங்கள் ஆகுமா?) சுபிட்சம்தான்னு பிரெயின் வாஷ் செய்யவா?
adhe iraivan thaana inaikku reservation kuduthirukkaru,aduthavana thunpuruthi vaazhravan ennaikki santhoshama irunthirukkan.
kashtatha yaarum sagichikka vendam,urimaya poradi vaanga thaan venum,aana unmayaana kurikkeedu yarunnum therinjukkunga.
// இப்பொழுது இதெயெல்லாம் செய்கிறவங்களை, இறைவன் மாற்றாமல் இருப்பது எதனாலோ? //
என்ன கேட்கிறீர்கள் என புரியவில்லை.
// சும்மா எல்லாத்தையும் இறைவனா பாருன்னு சொல்றதுக்கு மதம் எதுக்கு? //
சும்மா சொல்லிவிட்டு போகவில்லை. அந்த நிலையை அடைய ஞானம், தியானம், யோகம் என பல்வேறு வழிமுறைகளையும் சொல்கிறது. மேலும், இந்த நிலையை அடைய முயற்சிப்பது மற்றவர் நலனுக்காக மட்டும் அல்ல. தன் நலனுக்காகவும் தான். “நான்”, “எனது” என்ற எண்ணம் அழிந்து போன பேரின்ப நிலை. தார்மீக அடிப்படையில் பிறர் நலன் நாடுபவன் தன்னலமும், பிறர் நலமும் மோதி முரண் ஏற்படும் சூழ்நிலையில் தன்னலப் பாதையில் செல்கிறான். அல்லது வருந்தி, கஷ்டப்பட்டு பிறர்நலப் பாதையில் செல்கிறான். எல்லாம் இறைவனாக பார்க்கும் நிலை அடைந்த ஞானிக்கு தன்னலம் என்று ஏதும் இன்றி பிறர் நலம் செய்வது இயல்பாகப் போய் விடும்.
இறைவன் பெயரால் தொண்டு செய்யும் போது அதற்கு ஒரு வலு கிடைக்கிறது. “ஈசா வாஸ்யம் இதம் சர்வம்” என்ற அடிப்படையில் எழுந்த ஸ்ரீராமகிருஷ்ண மடம் கல்வி, மருத்துவம் என பல சேவை செய்கிறது. இறைவன் பெயரால் கிருத்துவ மிஷனரிகள் இதே சேவையை மேலும் விரிவாக செய்கின்றன. நான் இந்த இரண்டு கல்வி நிறுவனங்களிலும் படித்து பயன் பெற்றவன்.
// கஷ்டங்களை எல்லாம் சகிச்சுக்கோ, மத்தவங்க எல்லாம் எல்லாத்தையும் இறைவனா பார்க்க ஆரம்பிச்சதும் (அதுக்கு சில நூறு வருஷங்கள் ஆகுமா?) சுபிட்சம்தான்னு பிரெயின் வாஷ் செய்யவா? //
என் பார்வையில் இந்து மதம் ஒரு personal மதம். தனி மனிதன் ஒருவன் செல்ல நல்லதோர் பாதையைக் காட்டுகிறது.
சரி. ஜாதி-வர்ணம், இந்த-கோவிலுக்கு-போனா-இந்த-பலன், போலித் துறவு போன்ற வக்கிரங்கள் மட்டுமே விரிந்து விட்ட இந்து மதத்திற்கு இப்படியெல்லாம் வியாக்யானம் கொடுத்துக் கொண்டே எனக்கே கூச்சமாக உள்ளது. என் பார்வையில் இந்து தர்மம், அல்லது அதன் லட்சியம் என்பது “அனைத்தையும் இறைவனாய் பார்க்கும் உன்னத நிலை” என்று சொல்லி நிறுத்திக்கொள்கிறேன்.
// காஞ்சி மட தலைவன் ஆனா, வாழையிலையில மலம் கழிக்கலாம்
இதென்ன மேட்டர்? இதுக்கு முன்ன நான் கேள்விப்பட்டது இல்லையே.
விவேகானந்தர் கூரியபடி, கிருத்துவ மிஷ்ஷனரிகளுக்கு நிகராக பட்டி தொட்டியெஙகும் சாதி ஒழிப்பு பணியாற்ற வேண்டிய ராமகிருஷ்ண மடஙகள், பண்க்காரர்களுக்கு பகவத் கீதை அருளும் பணியிலே நிலைத்து விட்டது ஏன்? பார்ப்பனர்களையும், சஙக்ரரையும் வருணாசிர தீண்டாமைக்காக சாடிய விவேகானந்தரின் சீடர்கள், புத்தருக்கு பின் வந்த சீடர்கள் செய்ததையே செய்வது ஏன்?
விவேகானந்தர் கூரியபடி, கிருத்துவ மிஷ்ஷனரிகளுக்கு நிகராக பட்டி தொட்டியெஙகும் சாதி ஒழிப்பு பணியாற்ற வேண்டிய ராமகிருஷ்ண மடஙகள், பண்க்காரர்களுக்கு பகவத் கீதை அருளும் பணியிலே நிலைத்து விட்டது ஏன்? பார்ப்பனர்களையும், சஙக்ரரையும் வருணாசிர தீண்டாமைக்காக சாடிய விவேகானந்தரின் சீடர்கள், புத்தருக்கு பின் வந்த சீடர்கள் செய்ததையே செய்வது ஏன்?
பணக்காரர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தான் கீதை அருளிவருகிறார்கள் . அவர்கள் நடத்தும் ஆன்மீக வகுப்புகள் இலவசம். பகவத் கீதை தமிழ் உரை நூல் ரூபாய் 200. நான் மேற்கோள் காட்டிய “ஈசா வாஸ்யம் இதம் சர்வம்” என்ற வாக்கியம் உள்ள ஈசா வாஸ்ய உபநிடதம் உரை நூல் விலை ரூபாய் 16. (இவ்விரு உரை நூல்களையும் எழுதிய சுவாமி ஆசுதோஷானந்தர் நாடார் சாதியில் பிறந்தவர். இந்த irrelevant செய்தியை இந்நூல்களை எழுதியவர் பார்ப்பனர் அல்ல என்று காட்டவே சொல்ல வேண்டி வந்தது).
இந்த மடத்தின் செயல்களில் பங்கேற்க சாதி தடையில்லை. மேலும் அவர்கள் செய்யும் சேவைகளும் அனைவருக்குமானவையே. நான் கூறிய ஒரு தனி மனிதனின் ஆன்மீக முன்னற்றத்துக்கு சாதி வேறுபாடின்றி வழிகாட்டுகிறார்கள். ஒரு வரியில் அவர்களது கொள்கை “For one’s liberation and for the good of others (aatmano mokshartham jagadhitaaya cha”).
ஆனால், நீங்கள் கூறுவது போல தெருவுக்கு வந்து ஜாதி ஒழிப்பு போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்பது உண்மையே.
மதம் மக்களுக்கு அபின் போன்றது,அது காலம் முழுக்க மனிதர்களை போதையிலேயே வைத்திருக்கும் என்பதற்கு பதிலாக போதியிலேயே வைத்திருக்கும் என்று தவறாக எழுதியமைக்கு வருந்துகிறேன்.
ண்மை ஒருபோதும் தோற்றுப்போகாது. விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை….காரல் மார்க்ஸ். SUPER KATTU THARI
மதம் அபின் போன்றது என்பது உண்மையே. அதேபோல இளவயதில் வசதி வாய்ப்புக்கள் கிடைக்காதபோது பொதுவுடைமை என்று பேசித்திரியும் பலர் மேன்மட்டத்திட்கு வந்ததும் மற்றையவர்களை விட மோசமான சுரண்டல்காரர்கள் ஆகிவிடுவதும் கசப்பான ஒரு உண்மை.
கல்யாணம் செய்து கொண்ட புரட்சிகாரர்களின் வேகம் குறையத்தான் செய்கிற்து! இந்திரா காந்தியிலிருந்து பிருந்தா கரட் வரை, சுயனலம் மிக்கவர்களாகவே உள்ளனர்! பிருந்தாவின் பொட்டும், சுஷ்மாவின் பொட்டும் பெரியதாகிக்கொண்டே போகிறதே, ஏன்?
அருமையான கேள்வி.. இப்படிப் பட்ட கேள்விகளைத்தான் சாக்ரடீசும் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.. இதற்கான பதில் பல தளங்களை உள்ளடக்கும் சிக்கலான ஒன்றாகும்.. அதாவது, அவர்களது திருவாளர்களுக்கும் வயது அதிகமாகிக் கொண்டே போவதால் பொட்டின் அளவை அதிகரிப்பது ஆயுளை நீட்டிக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், வயதாக ஆக மூக்குக் கண்ணடி அணிந்து பார்ப்பதால் நிலைக்கண்ணாடியில் நெற்றி பெரிதாகக் காட்சியளிப்பது போன்ற அறிவியல் காரணங்கள், கைநடுக்கம் போன்ற நரம்பியல் காரணங்கள் உண்டு..
மதவாதி சுஷ்மாவின் தோற்றத்தை புரிந்து கொள்ள முடிகிறது! முற்போக்கு தோழர் காரத்தின் துணைவியாரும், (கருணானிதியின் துணைவியாரும்) மூடநம்பிக்கை கொள்ளலாமா?
கணவரின் கருத்தையே மனைவியும் கொள்ளவேண்டும் என்பது ஆணாதிக்கமில்லையா..?!
யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு நம்பிக்கையை மனதில் கொள்ள தனிமனிதர்களுக்கு உரிமை உண்டல்லவா.. மற்றவர்களும் அப்படி நம்பியே ஆகவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதோ கட்டாயப்படுத்துவதோதான் தவறு..
Vinanvu writes about Bombay Thackeray but not about Hyderabad Owaisi.
//யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு நம்பிக்கையை மனதில் கொள்ள தனிமனிதர்களுக்கு உரிமை உண்டல்லவா.. மற்றவர்களும் அப்படி நம்பியே ஆகவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதோ கட்டாயப்படுத்துவதோதான் தவறு..// தனி மனிதர்கள் திருந்தினாலும், அவர்தம் குடும்பஙகள் திருந்துவதில்லையே என்பதைத்தான் குறிப்பிட்டேன்! மீண்டும் மீண்டும் புதை குழியில் அல்லவா தள்ளப்படுவார்கள்? குடும்பத்திலேயே கொள்கையை கடைபிடிக்காதவர்கள், சமுதாயதிற்கு என்ன செய்ய முடியும்? அவர்களின் வாரிசுகள் என்ன கொள்கை கொண்டிருப்பார்கள்?