Wednesday, February 1, 2023
முகப்புசமூகம்சாதி – மதம்பாக் - வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?

பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 20

”பாரதத்தில் முசுலீம்களுக்கு அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்துக்கள் தாக்கப்படுகின்றனர்; இந்துக் கோவில்களும் இடிக்கப்படுகின்றன.”

–  இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று.

இந்தியாவில் முசுலீம்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உரிமைகள், சலுகைகள் என்பவை ஏதோ பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டவை போல ஆர்.எஸ்.எஸ். சித்தரிக்கிறது. முசுலீம் என்றாலே பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் என்ற உண்மைக்குப் புறம்பான அயோக்கியத்தனமான பிரச்சாரத்தை முதலில் முறியடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக முசுலீம் மக்கள் வாழந்து வருகின்றனர். காஷ்மீர் உள்ளிட்ட வட மாநில முசுலீம்களும் பல நூற்றாண்டுகளாய் இம்மண்ணில் வாழ்பவர்கள்தான். இன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியும், பணக்கார பா.ஜ.க. தலைவர்கள் பலரும்தான் பாகிஸ்தானிலிருந்து ஓடிவந்த அகதிகள்!

இந்தியாவில் இந்து – முசுலீம் மதக் கலவரங்களில் நேற்றும் இன்றும் பாதிக்கப்படுபவர்கள் இரு மதத்தைச் சேர்ந்த ஏழைகள்தான். அதேசமயம். இரு மதத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் மட்டும் இந்தக் கலவரங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழியைத் தேடுகின்றனர். அதன்படி 1947 பிரிவினையின் போது வடமேற்கு மாநிலம் மற்றும் வங்காளத்தில் உள்ள மேட்டுக்குடி முசுலீம்கள் மட்டும் பாகிஸ்தானுக்கும், பங்களாதேசுக்கும் சென்றனர். அதேபோல அங்கிருந்த பணக்கார – மேல்சாதி இந்துக்கள் மட்டும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியா வந்தனர். இரு நாடுகளிலும் உழைத்தால்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற நிலையிலிருந்த ஏழைகள் மட்டும் இடம் பெயரவில்லை.

பிரிவினைக் காலத்தில் கலவரங்கள் ஏதும் தென்னிந்தியாவில் நடக்கவில்லை. அதனால் இங்கிருக்கும் வசதி படைத்த முசுலீம்களும் இடம் பெயரவில்லை. மேலும் அவர்கள் இதுதான் தமது மண் எனக் கருதியதாலும், பிற மக்களுடன் கொண்டிருந்த நேச உறவினாலும், பாகிஸ்தான் போவது பற்றிச் சிந்திக்கவில்லை. 1947-க்குப் பின் இந்தியாவுடன் இணைக்கப்ட்ட காசுமீர் மற்றும் ஐதராபாத் நிஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்தோரும் இடம் பெயரவில்லை. எனவே கலவரம் தூண்டிவிடப்பட்ட வட மேற்கு, வட இந்திய, வங்காள மாநிலங்களில்தான் இடம் பெயர்தல் நடைபெற்றது.

அடுத்து இந்தியாவில் 12 கோடி முசுலீம் மக்கள் பல மாநிலங்களில் பரவலாக வாழ்கின்றனர். மதத்தைத் தாண்டிய மொழி, இன, பண்பாடு, பொருளாதாரக் காரணங்களினால் அந்தந்த வட்டாரத்தோடு ஐக்கியப்பட்டே வாழ்கின்றனர். முசுலீம் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களெல்லாம் வங்க தேசத்திற்கோ, பாகிஸ்தானுக்கோ போக முடியாது. அந்த அளவுக்கு வாழ்வியல் – சமூகவியல் – அரசியல் வேறுபாடுகள் இருக்கின்றன.

ஆனால், பாகிஸ்தானில் வாழும் இந்துக்களிடையே இத்தகைய வேறுபாடுகள் இல்லையென்றாலும் வாழ்க்கை நிலைமை இடம் பெயருவதற்கு உகந்ததாக இல்லை. அங்கே சிந்து மாகாணத்தில் குறிப்பாக லாகூரைச் சுற்றிய பகுதிகளில் சுமார் 13 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். அதிலும் 70 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர். ஆய்வாளர் அஸ்கர் அலி என்ஜினியர் ஒரு முறை லாகூருக்குச் சென்றிருந்தபோது தெருக்கூட்டும் தாழ்த்தப்பட்ட தொழிலாளி ஒருவரிடம் ‘நீங்கள் ஏன் பிரிவினையின் போது இந்தியா செல்லவில்லை’ எனக் கேட்கிறார். ”இங்கேயும் தெரு கூட்டுகிறேன். இந்தியா சென்றாலும் அதைத்தான் செய்யப் போகிறேன். இதற்கு எங்கே இருந்தால் என்ன?” என்று பதிலளிக்கிறார் அந்தத் தொழிலாளி. அவரைப் பொறுத்தவரை வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் மதத்திற்குப் பங்கு ஏதுமில்லை. ஏழ்மைக்கு ஏது மதம்?

இப்படி ஏழ்மையில் உழலும் இத்தாழ்த்தப்பட்ட ‘இந்துக்கள்’ அங்கே தாக்கப்படுவதற்கு ஆதாரமும் கிடையாது; அடிப்படையும் கிடையாது. இந்தியாவைப் போல அங்கும் பெரும் கலவரங்கள் நடந்ததாகப் பார்ப்பனப் புளுகுணி தினமலரில் கூட செய்தி வந்ததில்லை. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகுதான் எதிர்விளைவாக பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இந்துக்களுக்கு எதிரான கலவரங்கள் தொடங்கின. இருந்தபோதும் அப்படிக்  கலவரம் செய்தமைக்காக இரு நாடுகளைச் சேர்ந்த பல இசுலாமிய வெறியர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்செய்தி இந்தியப் பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது. ஆனால், இங்கே மசூதியை இடித்த கரசேவகர்கள் யாரும் சுடப்படவில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

பாகிஸ்தானில் தாக்கப்படும் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்காக பா.ஜ.க. கும்பல் முதலைக் கண்ணீர் விட வேண்டாம். ஏனெனில் இங்கிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் – இந்திய இந்துக்களால் தாக்கப்படுவதைவிட பாகிஸ்தான் இந்துக்களின் நிலைமை பரவாயில்லை. மற்றபடி இந்தியப் புவியியல் எல்லையை புனிதம் கொண்டாடும் இந்து மதவெறியர்கள் நினைப்பது போல் வாழ்வியல் நிலைமைகள் மதத்தை வைத்து மட்டும் சிக்கலாகவில்லை.

உலகிலேயே இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்த இப்பிரிவினை அந்த அளவுக்கு சோகத்தையும், பிரச்சனைகளையும் கொண்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற முசுலீம்கள் ‘முஜாகிர்கள்’, வந்தேறிகள் என்றழைக்கப்படுகின்றனர். அதன்படி அவர்களுக்குரிய உரிமைகளும், வாய்ப்புகளும் இன்றுவரை மறுக்கப்பட்டே வருகின்றன. அவர்களும் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுடன் ஆயுத மோதலை நடத்தி வருகிறார்கள்.

இருநாட்டு எல்லையில் வாழும் மக்களும் இரு நாட்டுப் போர்களினால் அடைந்த துயரங்கள் அளவில் அடங்கா. இராணுவச் சண்டையினால் தேசியம் மாறுவதும், எல்லை தாண்டி இயங்கிவரும் மண உறவுகளும் – அதைத் தொடர முடியாத அரசுத்தடைகளும் அங்கே இயல்பானவை. பிரிவினையின்போதும், பின்னர் நடந்த 3  போர்களினாலும் இலட்சக்கணக்கான இந்துக்கள் இங்கே வந்திருக்கின்றனர். முசுலீம் நிலவுடைமையாளர்களின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்களோடு சேர்ந்து அடிமைப்பட்டிருந்த இராஜபுத்திரர்கள், இந்தியா வந்தவுடன் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஆளும் உண்மையான இராஜபுத்திரர்களாக மாறிவிட்டனர். எனவே பிரிவினை என்பது இரு நாட்டிலிருந்தும் இடம் பெயர்ந்த உழைப்பாளிகளான முசுலீம்களுக்கும் இந்துக்களுக்கும் பொன்னான வாழ்க்கை எதையும் வழங்கவில்லை.

பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டும் தங்களை இசுலாமியக் குடியரசுகள் என அறிவித்துக் கொண்டவை. அதன்படி மாற்று மதங்களைச் சேர்ந்தோர் அங்கே சட்டபூர்வமாகவே இரண்டாந்தரமாயக் கருதப்படுகின்றனர் என்பதும் உண்மைதான். மதக்குடியரசு தவறு என்று கருதும் நாம் அதை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டியதில்லை.

மேலும் மதத்தின் பெயரிலான எந்தவொரு அரசும் தனது நாட்டுச் சிறுபான்மை மத மக்களை ஒடுக்கப் பயன்படுவதைக் காட்டிலும் தன் மதத்துப் பெரும்பான்மை உழைக்கும் மக்களை ஏய்க்கவும் ஒடுக்கவுமே பயன்படுகிறது. இந்து மதவெறியர்கள் – கிறித்துவ, உழைக்கும் மக்களுக்கும் எதிரிகள் என்பது எப்படி உண்மையோ அப்படி ஒரு இசுலாமியக் குடியரசு, அந்நாட்டு முசுலீம் உழைக்கும் மக்களுக்கும் விரோதியாகத்தான் இருக்கிறது.

பாகிஸ்தான் – வங்க தேசத்தில் சட்டப்படியும், இந்தியாவில் சட்டமின்றியும் பெரும்பான்மையினரின் மதவாதம் இருந்து வருகிறது. ஆயினும் இந்தியாவில் ஆயிரமாயிரம் முசுலீம்கள் கொல்லப்பட்ட போதும், மசூதி இடிக்கப்பட்ட போதும் வளைகுடாவில் பிழைக்கப் போன இந்துக்களைக் கேட்பார் இல்லாமல் தாக்கியிருக்கலாமே? ஏன் அப்படி நடக்கவில்லை?

வங்க தேசத்தில் இந்துக்களைத் தாக்கிய முசுலீம் மதவெறியர்களை எதிர்தத்து ‘லஜ்ஜா’ (அவமானம்) என்ற நாவலை எழுதினார் தஸ்லிமா நஸரீன். அதனால் மதவாதிகள் அவருக்கு மரணதண்டனை அறிவித்து நாட்டை விட்டு விரட்டினாலும் தஸ்லிமா தனது போராட்டத்தைக் கைவிடவில்லை.

‘பம்பாய்’க் கலவரத்துக்குக் காரணம் பால் தாக்கரேதான் என்று பத்திரிகைகளும், நீத மன்றமும், வரலாறும் நிரூபித்திருக்கின்றன. ஆனால், பம்பாய்க் கலவரம் நடந்த புழுதி மறைவதற்குள் ‘பம்பாய்’ திரைப்படத்தின்மூலம் வரலாற்றை மாற்றி, முசுலீம்கள்தான் காரணம் என்று கதை சொல்லி, பால் தாக்கரேவிடம் ஆசியும், அனுமதியும் வாங்கினார் மணிரத்தினம். மாநில, தேசிய விருதுகள், த.மு.எ.ச. உள்ளிட்ட ‘மதச்சார்பற்ற’ அறிஞர்களின் பாராட்டு, தொலைக்காட்சிகளில் 3 மாதத்திற்கு ஒரு முறை ஒளிபரப்பு என ‘பம்பாய்’ படத்துக்குக் கிடைத்த சீராட்டும், பாராட்டும் பட்டியலிட்டு மாளாது.

வங்கதேசம் இசுலாமிய நாடு என்றாலும் ஒரு தஸ்லிமா நஸரீனுக்காக அந்நாடு பெருமைப்பட முடியும். இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறிக்கொண்டாலும் ஒரு மணிரத்தினத்துக்காக நாம் வெட்கப்படவே இயலும்.

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

 1. In 1951, Hindus constituted 22 percentage of the Pakistani population (that includes the modern day Bangladesh)Today, the share of Hindus are down to 1.7 percent in Pakistan, and 9.2 percent in Bangladesh(In 1951, Bangladesh alone had 22% Hindu population)

  Can anyone comment on this.

 2. இந்தியாவிலுள்ள முஸ்லீம்களுக்கு ஆதரவாக கட்டுரை பேசுகிறது, சரி.. பாக், வங்க இந்துக்களின் துயரங்கள் என்னும் தூணைத் துரும்பாக்குகிறதே.. காவிப் புழுதி கண்ணை மறைக்கிறதா…?!

  “We are businessmen but have been compelled to leave our motherland because of harassment, lawlessness, looting, kidnapping of girls and their forced conversion to Islam,” said Amesh Kumar of Bakhshapur area in Jacobabad.”

  http://www.hindustantimes.com/News-Feed/North/Pakistani-Hindus-arrive-with-horror-tales/Article1-911584.aspx

  ” Years of oppressions and state sponsored discriminations have ended the minorities so fearful and vulnerable that the vicious Islamic fundamentalists never have to face any resistance during their medieval rampage against minorities. “

  http://www.hrcbm.org/NEWLOOK/1992.html

 3. //இன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியும், பணக்கார பா.ஜ.க. தலைவர்கள் பலரும்தான் பாகிஸ்தானிலிருந்து ஓடிவந்த அகதிகள்!//

  அத்வானி பிறந்த பொழுது (1927)ல் கராச்சி இந்தியாவின் ஒரு பகுதி. எனவே அத்வானி என்றைக்குமே பாகிஸ்தானில் இருந்தது இல்லை. இந்தியாவின் ஒரு பகுதியில் பிறந்து பிரிவினைக்குப் பின் மற்றொரு பகுதிக்கு குடியேறியவர்.

 4. //தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக முசுலீம் மக்கள் வாழந்து வருகின்றனர்//

  பாகிஸ்தான், முஸ்லிம்களின் சொர்கம் என்று நினைத்து கேரளத்திலிருந்து ஓடிப்போன இஸ்லாமிய சகோதரர்களின் சோகக் கதையை இங்கே படித்துப் பார்க்கவும்.

  http://mintopark.com/2011/12/19/malayali_karachi_malappuram/
  http://www.openthemagazine.com/article/nation/the-agony-of-pakistani-indians

 5. How does Vinavu always proves its stupidity and ignorance again and again,

  Lahore in Sindh? Lahore is in Punjab.

  The areas spoken of here are near Karachi and an area called Balochistan.

  Regarding partition, the number of atrocities committed by Muslims including Direction action day in Calcutta, Moplah Massacre in Malabar(Reason given is dissolution of caliphate in Turkey,Turkey enga irukku Kerala enga irukku) and so on.

  Asghar Ali is most probably lying,many hindus of Sindh/Balochistan are rich businessmen and you can read on the internet about the atrocities they faced.

  Regarding Bangladesh, everyone knows what happened during the times before the 1971 war when hindu professors and intellectuals were massacred wholesome by the pakistani army and bangladeshi razakars.

  Regarding partition, most of the votes for partition were given by muslims of UP/Bihar/Bengal(united) and most of the rich muslims left for pakistan and only the poorer ones didn’t go because of fear of riots/lack of money.

  Vinavu,

  Dont open your mouth about things you have no idea about.

 6. And more stories,

  There is a movie called Black Friday made by Anurag Kashyap which gives all the details about the conspiracy behind Mumbai riots and even 3-4 days ago there was a violent demonstration by muslims.

  That movie tells you clearly as to who is responsible and who is not?

  Bangladesh and Taslima Nasreen, Do you know that there is a fatwa against her in Bangladesh and even in India many parties dont give her enough support.India is a country where any random nobody like vinavu can talk bad about hinduism but even Salman Rushdie cant come and attend a literary seminar because some muslims ll feel hurt.

  wow,what a logic.

  Vinavu alone can pulugu blatantly without caring about facts.

 7. ஆர்.எஸ்.எஸின் பொய்

  //பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்//

  வினவு சொல்லும் உண்மை

  //பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டும் தங்களை இசுலாமியக் குடியரசுகள் என அறிவித்துக் கொண்டவை. அதன்படி மாற்று மதங்களைச் சேர்ந்தோர் அங்கே சட்டபூர்வமாகவே இரண்டாந்தரமாயக் கருதப்படுகின்றனர் என்பதும் உண்மைதான்//

 8. //பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டும் தங்களை இசுலாமியக் குடியரசுகள் என அறிவித்துக் கொண்டவை. அதன்படி மாற்று மதங்களைச் சேர்ந்தோர் அங்கே சட்டபூர்வமாகவே இரண்டாந்தரமாயக் கருதப்படுகின்றனர் என்பதும் உண்மைதான்/

  இதுதான் இஸ்லாம். சிறுபான்மை என்றால் மத சார்பினை,தனி சமூக சட்டம்.வினவு போன்ற இடது சரிகள் மூமின்கள்க்கு ஆதரவு

  மூமின்கள் பெரும்பானமை என்றால் அனைவருக்கும் ஷரியா,போடய்யா ஜிஸ்யா,வினவு போன்றவர்களும் காஃபிர்கள் ஆகி விடுவார். ஹி ஹி

 9. நான் படித்த வரையில் வினவின் weakness இது போன்ற புரட்டு செய்திகள் தான். பாகிஸ்தானே ஒத்துக்கொள்ளும் ஒரு செய்தியை ஆர்.எஸ்.எஸ்-இன் பொய் என்று கூறுவது. வினவின் உள் நாட்டு கருத்துக்குள் பெரும்பாலும் உண்மையை அறைவது போலிருக்கும், அனால் இது போன்ற சர்வதேச பிரச்சனைகளுக்கு வினவின் அணுகுமுறை என்னவென்றே புரியவில்லை. அஸ்ஸாம் போடோ இன, பங்களாதேஷி ஊடுருவலையும் பொய் என்கிறீர்களா? காங்கிரஸ்-இன் ஜால்ரா மீடியாக்கள் இதை ஹிந்து-முஸ்லிம் பிரச்னை என்றே எழுதுகின்றன, இதையும் ஆர்.எஸ்.எஸ் புரட்டு என்கிறீர்களா? பாபர் மசூதி இடிப்பதற்கு முன்னரே இந்தியாவில் பாகிஸ்தான் சப்போர்ட் நிறைய இருந்திருக்கின்றன. தீவிரவாதம் இருந்திருக்கிறது. அனால் அது இஸ்லாம் மத தீவிரவாதம் அல்ல, தனி மனித வெறியினால் உண்டான வோட்டுக்காக உருவாக்க பட்டவை. வளைகுடா நாட்டில் ஹிந்து முஸ்லிம் பார்பதில்லை என்ற உங்கள் வாதம் செரிதான். அங்கு நாம் நம் வாலை சுருட்டி வைத்திருப்பதுதான் காரணம். எதையோ எழுதப்போய், கடைசியில் இந்த மொக்கை பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் உயர்த்தி இருக்கிறீர்கள். நம்மூரு இஸ்லாமியர்களே இதை பார்த்து சிரிப்பார்கள்.

 10. ர்ச்ச் இல்லாம போகனும் அப்படி ஒருநினைப்பு தான் உங்க பொலப்ப கெடுக்க போகுது.

 11. //பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்துக்கள் தாக்கப்படுகின்றனர்; இந்துக் கோவில்களும் இடிக்கப்படுகின்றன//
  This is RSS’s critic

  What is your response?
  //பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டும் தங்களை இசுலாமியக் குடியரசுகள் என அறிவித்துக் கொண்டவை. அதன்படி மாற்று மதங்களைச் சேர்ந்தோர் அங்கே சட்டபூர்வமாகவே இரண்டாந்தரமாயக் கருதப்படுகின்றனர் என்பதும் உண்மைதான். மதக்குடியரசு தவறு என்று கருதும் நாம் அதை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டியதில்லை.//
  Your response is a non-sense. Does RSS want secular democracy? It wants only hindu country, just like Pakistani and Bangladeshi muslims. If it is right for muslims it should be right for Hindus too. Answer this.

  • //Your response is a non-sense. Does RSS want secular democracy? It wants only hindu country, just like Pakistani and Bangladeshi muslims. If it is right for muslims it should be right for Hindus too. Answer this.//

   What RSS claims is Bull Shit… The Idea of INDIA itself was possible in 1947 only because it was pledged to be a SECULAR state… If the same slogan of HINDU COUNTRY would have been said at the time of 1947 then out of 565 we can’t be sure how many would have joined INDIA… Even tamilnadu(considering the anti brahminism mood at that time) may NOT have joined INDIA… So since the decision of remaining secular is taken before formation of INDIA… If RSS wants HINDU COUNTRY then we shud have elections for the earlier 565 princely states saying “INDIA will remain a HINDU country” and the following options(same given in 1947) shud be given
   1) Join INDIA or PAKISTAN
   2) Remain independent

   Do u have the guts ????

   • Dont say random stuff,

    India & Pakistan got independence from Britain regardless of conditions.The secular word was included in the preamble in 1976,even though both Jinnah & Hero openly supported minority religions to live in both countries.

    RSS doesn’t want Hindu only country,RSS wants the majority sentiments respected and they are against forced/monetarised conversions as we all know the agenda of the Abrahamic Religions.

    Even after independence most of the states had the option of joining India/Pakistan/Being Independent and it did not depend upon any clause.

    We do not want any muslims/christian to leave India, Only the Bangladeshi people who are illegally staying here without political asylum/long term visa and no citizenship should leave the country.

    TamilNadu overwhelmingly chose to join India and there were many people who worked for India,Congress had many people who were not brahmins and even today thats the case.Justice party had no role or no power in deciding anything.

    Thats why nobody took the separatism seriously in TN and even today,it has no takers.

    If the people of TN truly wanted separatism,DMK would have made a much bigger effort than what we see today.

    And moreover TN people were already participating in elections and Madras Presidency was a British province and when Periyar went to discuss separate dravidanadu,neitehr Jinnah nor Nehru took him any seriously.

    • //RSS doesn’t want Hindu only country,RSS wants the majority sentiments respected and they are against forced/monetarised conversions as we all know the agenda of the Abrahamic Religions.//

     If this is the case this discussion itself is NOT needed… I answered ONLY because some one said “RSS want HINDU STATE”… Also there are laws in place for forced or monetarised conversions… And what do u mean by MAJORITY SENTIMENTS respected ???? U can believe RAM built RAM SETHU … The constitution allows it but u cannot teach that as HISTORY… If that is ur SENTIMENT then it will never be respected… This fits for CHRISTIAN and ISLAMIC beliefs also… Just imagine iam a christian if i say “The prayer of D G S DINAKARAN is the one made TamilNadu a educated state” and this has to be taught as HISTORY of TAMILNADU. can it be accepted to respect my sentiment ??? So now we are in same page and all the requirements of RSS are already satisfied can we dissolve RSS ?? (The DGS part is for example)

     //And moreover TN people were already participating in elections and Madras Presidency was a British province and when Periyar went to discuss separate dravidanadu,neitehr Jinnah nor Nehru took him any seriously.//

     Iam also saying the same its madras presidency NOT India.. If Congress would have said that INDIA will be a HINDU state… The Map of INDIA may have changed…

     • Who is asking for Ramar sethu in history?

      Just show the true face of the foriegn invasions in India,open up a bigger chapter about Harshavardhana,PrithviRah Chauhan,Rana Pratap,Shivaji and also the true face and bigotry of the mughals,portuguese christian aggression in Goa,Portuguese inquisition in Goa,Tipu Sultan and large scale muslim bigotry,Bigotry of the Moplah rebellion,show the real face of communism as in Stalin and how Leon Trotsky got murdered and show the real face of America.

      So,you dont have a problem with all these glaring facts gone missing or for that matter that people like Karunanidhi is getting glorified openly in tamizh textbooks,but you talk about ram sethu.

      And i repeat again,if Congress were to declare India as a Hindu state, TN would have voted in a super majority to join India rather than now.

      • //And i repeat again,if Congress were to declare India as a Hindu state, TN would have voted in a super majority to join India rather than now.//

       U cannot simulate history… I just make asumption saying “May have”… because when Periyar criticized RAM heavily also have beaten RAM images with slipper.. Still he didn’t face opposition from the majority people… In this situation how can u claim TamilNadu wud have voted super majority ??? If u are so sure why can’t u say and have the election NOW ??? RSS shud have started agitation for that elections now na ???

       Als the story of RAM SETHU is just an example also even now we see RSS fighting to “SAVE” Ram Sethu … If u agree RAM SETHU is not important please tell what is ur SENTIMENT ???

 12. hidhu matrum musilm idthil yar sirubanmaiya irundhalum avargaluiku samadharma samuga needhi kidaika vendum. idhai nokiea namudaiya seyalbadugal iruika vendumea thavira manidha arivai azhikum madhangalai noki iruika vendiya avasiyam illai. madham saadhi ivatriliruinedhu vidubada enna vazhi adhai evaru maikalidam kondu selvadhu endru sindhipathum seyalbaduvahumea oru padihtha arivarndha samugathin kurikolaga iruikavendum.
  indha ootu poriki arasiyalvadhigalin poi pithalatingalai nambamal avargalai thavirpathea namaikum nam santhahikum nanmayai mudiyum.
  adhai viduthu madham saadhi ena pesi kondiruipadhu mutalthanamea,.

 13. “பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டும் தங்களை இசுலாமியக் குடியரசுகள் என அறிவித்துக் கொண்டவை. அதன்படி மாற்று மதங்களைச் சேர்ந்தோர் அங்கே சட்டபூர்வமாகவே இரண்டாந்தரமாயக் கருதப்படுகின்றனர் என்பதும் உண்மைதான்”

  மதத்தின் பெயரை சொல்லியோ அல்லது ஜாதியின் பெயரைச் சொல்லியோ யாரும் யாரையும் கொல்வது என்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

 14. பிற விஷயங்களில் நேர்மையாக எழுதும் நீங்கள், மதம் விஷயத்தில் மட்டும் தவறான பார்வை கொண்டுள்ளீர்கள். தயவுசெய்து இதுகுறித்து மேலும் எழுதாதீர்கள்.

 15. Vinavu should publish this type of articles more and more. Then only it can test their maturity level. Further, it will learn lot of history.

  Then, it will able to see the real factors.
  It will see it’s viewers knowledge also.
  You come with this type of stupid articles, Vinavu.

  When will you write about Assam issue? That also because of RSS??

 16. அடடா ! இங்கே குவிந்து தாக்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளிடம் இருந்து வினவை காப்பாற்ற யாருமே இல்லையா ?

  அம்பிகளே ! கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளது படி, இஸ்லாமிய நாடுகளில் மத அடிப்படைவாதம் உள்ளது. ஆனால் அதெற்கெதிராக அரசுகளும் நடவடிக்கை எடுத்து உள்ளன். என்ன இது தேசத்திற்கு தேசம் மாறி உள்ளது. வினவு சொன்னபடி சவூதியில் எந்த அடக்குமுறையும் இல்லை. ஆனால் பாக்கிஸ்தானில் உள்ளது. அதற்கு காங்கிரஸ் கும்பல், பிரிட்டிஸ் சதியின்படி வளர்த்து விட்ட காழ்ப்புணவு காரணமாக உள்ளது. இஸ்லாமிலும் ஜாதிகள் உண்டென்றாலும், ஒப்பிட்டளவில் கொஞ்சம் மரியாதை தாழ்த்த்தப்பட்டவர்களுக்கு உண்டு. ஆனால் முழுக்க ஜாதி இல்லை என்று சொல்லிவிட முடியாது. அது வினவில் கட்டுரைகளிலேயே விளக்கப்ப்ட்டுள்ளது.

  ஆனால் மதசார்பற்றவர் என்று சொல்லிக்கொள்கின்ற நாட்டில் ஆர்.ஆர்.எஸ் ஆதிக்கம் மறைமுகமாக உள்ளது என்பதைதான் வினவு சொல்லும் மையகருத்தாக கருதுகின்றேன். இது தெரிந்தே அம்பிகள் கும்பி அடிக்கின்றனர்.

  • ஆதவன்,

   இந்தக் கட்டுரைத் தொடர் வரிக்கு வரி RSS-ஐ மறுக்கவேண்டும் என்ற முயற்சியில் இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டிருக்கிறது. பாக், வங்க அரசுகள் மதத் தீவிரவாதிகளுக்கு எதிராக இயங்க இயலாதவை. அங்குள்ள மதச் சிற்பான்மையினர் பாதுகாப்பாக நல்வாழ்வு வாழ்கிறார்கள் என்பது போன்ற தவறான சித்திரத்தை வழங்குவது ஏற்றுக் கொள்ளமுடியாதது.

   வளைகுடா நாடுகளில் (சவுதியில் அல்ல) மத அடக்குமுறை இல்லாததால்தான் அங்கு வேலை செய்ய ஆட்கள் கிடைக்கிறார்கள். ஐக்கிய அரபு நாடுகளின் அரசுகள் தங்கள் நலனுக்கேனும் அப்படித்தான் இருந்தாக வேண்டும். பாக், வங்கக் கதையே வேறு..

   முஸ்லீம் சமுதாயத்தில், மார்க்கப் பற்றுள்ளவர்கள், மத அடிப்படைவாதிகள், மதத் தீவிரவாதிகள் என்று பல தரப்பினர் உண்டு. மதத் தீவிரவாதிகளுடன் உடன்படாத, சீர்திருத்தம் செய்ய முயலும் மத அடிப்படைவாதிகளும் (TNTJ) உண்டு. இந்து மதத் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் முஸ்லீம் மதத் தீவிரவாதத்துக்கு மறைமுக ஆதரவு தருகின்றதோ என்ற ஐயத்தை முஸ்லீம்கள் மத்தியிலே கூட ஏற்படுத்தும் வகையில், விளிம்பில் – உள்ளே வெளியே – என்று குழப்பிக் கொண்டிருக்கிறது இக்கட்டுரை…

  • I ll ask any of the lowered caste muslims to go to pakistan/any arab countries and we ll see what rights/respect they get there/

   Secular person means someone who doesn’t discriminate on the basis of religion but if u hate me and discriminate against me because i believe in a hindu god,then do you think hindus ll love you for that.

   Obviously movements like RSS ll also come.

   That way why are muslims having special personal laws,reservation and all that.Pakistan,the country was made for muslims who cannot live alongsside hindus,so why dont these muslims who have a problem with uniform civil code move to pakistan then.

   They dont get this is in any western country and India is the only exception,why is that so?

   • // why dont these muslims who have a problem with uniform civil code move to pakistan then./

    I agree 100% with u… The CHURCH and STATE has to be separated… There should be NO compromise on this…

 17. This is a response to Jenil’s response (13.1)

  Hi Jenil,

  நீங்கள் என் கேள்விக்கு பதில் கூறாமல், ஒரு நடைமுறை சிக்கலின் (technicality) பின்னால் ஒளிந்து கொண்டீர்கள். முஸ்லிம்கள் [முகமதை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள் என்று படியுங்கள்] இஸ்லாமிய நாடு வேண்டுமென்றால் இந்துக்களுக்கு இந்து நாடு சரியா இல்லையா என்ற கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை.

  இருக்கட்டும், நீங்கள் குறிப்பிட்ட நடைமுறை சிக்கலைப் பற்றியும் பார்த்து விடலாம். இந்தியா உருவாகும் போது அதை இந்து நாடாக அறிவிக்க முடியாமல் எப்படிப் போனது? அது சராசரி முஸ்லிமல்லாத இந்தியர்களின் (குறைந்த பட்சம் அன்றைய விவாதத்தில் பங்கு பெற்றவர்களின்) திறந்த மனப்பான்மையைக் காட்டுகிறது. அல்லது அவர்களின் பன்முகத் தன்மையைக் காட்டுகிறது. அவர்களிடம் சராசரி முஸ்லிம்களுக்கு இருக்கின்ற மதவெறி இல்லை. அவர்களில் மற்றவர்களின் மீது தனது அழுக்கைத் தடவும் கெட்ட எண்ணம் கொண்டவர்கள் குறைவாகவே இருந்தனர்.

  இந்தியர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் தான். சொல்லப்போனால், இந்தியாவில் வாழும் பெயரளவுக்கு முஸ்லிம்களாக இருக்கும் ஏராளமான ஆண்களும் பெண்களும் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்களும் இஸ்லாமிய பாகிஸ்தானில் வாழ்வதை விட இந்தியாவில் வாழவே விரும்புவார்கள். மதம் என்ற மலக்குழியில் மாட்டிக்கொண்ட பல நாடுகளில் மக்கள் பலர் தப்பிப்பதற்கு வழி இல்லாமல் மூக்குமுட்டி விழிபிதுங்கி திணறிக்கொண்டு இருக்கிறார்கள் (பன்றிகள் போன்று இதில் சுகம் காண்பவர்களும் பலர்). மதம் என்ற மலத்தை கழிப்பறையில் மட்டும் கண்டுகொள்ளும் காலம் பாகிஸ்தானில் மட்டுமல்ல அரேபியாவில் கூட சீக்கிரம் வருவது மனித இனத்திற்கு நல்லது.

 18. I was surprised to see the headline, i was presuming that vinavu is written something for hindus also, finally the true colrs shown… as usual muslims, muslims everywhere…

 19. இந்த புத்தகத்தை வெளிவந்த சமயத்தில், பல திருமணங்களுக்கு பரிசாக தந்தேன். அருமையான புத்தகம்.

  இந்தக் கட்டுரையில்…

  //அதேபோல அங்கிருந்த பணக்கார – மேல்சாதி இந்துக்கள் மட்டும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியா வந்தனர். //

  முந்திய பதிப்பு என்பதால், “பணக்கார மேல்சாதி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு என்பதால், இப்படி நீங்கள் கூட எழுதுவது இல்லை. அதனால், திருத்துவது சரி என கருதுகிறேன்.

 20. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் வந்துள்ள (அகதி) இந்துக்கள் என்ன காரனத்திகாக இங்கு ஓடி வந்தோம் என்று தெளிவாகவே கூறியுள்ளார்கள். அங்கு தங்களால் வாழமுடியவில்லை என்று கூறியுள்ளனர். பணக்கார – மேல்சாதி இந்துக்கள் மட்டும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியா வந்தனர் மற்ற ஜாதி இந்துக்கள் அங்கேயே இருந்து விட்டனர் என்றால் தற்போது இங்கு வந்து கொண்டு இருப்பவர்கள் யார்? சுதந்திரமடைந்த போது 25 சதவீதம் இருந்த இந்துக்கள் தற்போது இரண்டு சதவீதத்திகும் குறைந்துள்ளனரே ஏன்? எப்படி? அனைவரும் தொடர்ந்து இந்தியாவிற்குள் வந்துகொண்டே இருக்கின்றனர். இது தொடர்கிறது. பெரும்பாலானவர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.கேட்பதற்கு நாதியில்லை. உங்களைப்போன்றவர்கள் எதெற்கெடுத்தாலும் இந்துக்களை இழித்துப் பேசியும் பயங்கரவாதத்திற்கு ஆதரித்தும் பேசுவதும்தான் (முஸ்லீம்) ஏன் என்று விளங்கவில்லை. இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு பரிந்து பேசும் நீங்கள் இதற்காக ஒரு நாள் வருத்தப்படுவீர்கள்.

 21. உலக அளவில் எடுத்துக்கொண்டால் முஸ்லீம் அமைப்புக்கள் ஏராளமாக உள்ளன. அவைகளில் பல பயங்கரவாத அமைப்புக்கள். இந்துக்களுக்கென்று சரியாக எந்த அமைப்பும் கிடையாது. ஓரிரு அமைப்புக்கள் இருந்தாலும் அவைகள் மிதவாத அமைப்பாகவே இருக்கின்றன. இதைக்கூட அவ்வப்போது பலர் கண்டிக்கிறார்கள். முஸ்லீம் மற்றும் கிருஸ்துவர்களுக்கு இருப்பது போல் இந்துக்களுக்கு தலைமை அமைப்பு இல்லாதது ஒரு மிகப்பெரிய குறை.

  • Who said Hindu organizations are Non Extremist ?? U forgot about RSS ?? If its an non extremist organization Why do they give weapon training ??? Y did they tried to create violen by hoisting pakistan flag ??

   • கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தான் வென்றால் இங்குள்ள முஸ்லீம்கள் வெற்றி விழ எடுக்கிறார்கள். அதனால்தான் மும்பை போன்ற நகரங்களில் அடிக்கடி கலவரம் நிகழ்கிறது.

    சதாம் உசேன் கொல்லப்பட்டதும் இங்கு உள்ளவர்கள் எதிர்ப்பு குரல் தெரிவித்து போஸ்டர் ஓட்டுகிறார்கள்.ஏன்? இங்கு உள்ளவர்கள் இந்தியர்களா அல்லது ஈராக்கியர்களா? ஈராக்கிற்கும் அமெரிக்காவிற்கும் பிரச்சனை என்றால் அவர்கள்தான் அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும். இங்குள்ளவர்கள் இதில் ஏன் பிரச்சனையை எழுப்புகிறார்கள்?

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தானில் உள்ளதுபோல் இங்கு எந்த இந்து அமைப்பும் தீவிரவாத பயிற்சி கொடுப்பதில்லை. பல ஆண்டுகளாக கர்நாடகாவில் பாகிஸ்தான் கொடியைஏற்றியவர்கள் அங்குள்ள முஸ்லீம்கள்தான்!! முஸ்லீம்களை திருப்திபடுத்த இதுபோன்ற பொய்களை இந்துக்கள் மீது சுமத்தப்படுகிறது!! காஷ்மீரில் நமது நாட்டின் தேசீய கொடியை ஏற்றமுடியவில்லை! மசூதிகளில் இறைவனைப் பற்றியெல்லாம் சொல்வதில்லை. எல்லாம் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கவேண்டும் என்றுதான் பிரார்த்திக்கிறார்கள்!!

 22. Vinavu,

  Shame.. you psoting is a shame. DO you really know what is happening in Dacca. Hindu women when they go out of their house remove their kumkum /pottu and go. Else they will be molested.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க