Thursday, December 12, 2024
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா?

கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 14

 ”இராமநாதபுரம் கீழக்கரையில் தொடங்கி பம்பாய் தாவுத் இப்ராஹிம் வரை, கடத்தல் போன்ற சட்ட விரோதத் தொழில்களில் முசுலீம்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்.”

இந்து முன்னணியின் மேடைகளிலும், ஆர்.எஸ்.எஸ்.-இன் ஷாகாக்களிலும் அடிக்கடி வலியுறுத்தப்படும் ஒரு அவதூறு.

மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஆமாம் உண்மைதானே’ என்று தோன்றும். திரைப்பட உலகமும், செய்தி நிறுவனங்களும் முசுலீம்களைக் கடத்தல்காரர்களாகப் பல ஆண்டுகளாகச் சித்தரித்ததன் விளைவே மேற்கண்ட கருத்து. விவாதத்திற்கும் அப்பாற்பட்ட உண்மை போல இது உருவெடுத்திருக்கிறது. உண்மையில் கடத்தல் தொழிலுக்கு உகந்த மதம் என்று எதுவும் இல்லை. கடத்தல் தொழிலில் எல்லா மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். அவர்களின் மதமே சட்ட விரோதமாகக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதுதான்.

பம்பாயின் வரதராஜ முதலியார், அமர்நாயக், அருண்காவ்லி, சிவசேனாவின் குண்டர்படைத் தொழிற்சங்கம், தாவூத் இப்ராகிமிடம் வேலை பார்க்கும் இந்துத் தளபதிகள் போன்ற தாதாக்களெல்லாம் யார்? சென்னையில் ஏழுமலை, சிவா, வீரமணி, பாக்சர் வடிவேலு, எர்ணாவூர் நாராயணன், ஆதி ராஜாராம், மதுசூதனன், ஜெயா – சசி கும்பலின் தலைமையில் தமிழகத்தை மொட்டையடித்த வட்டாரத் தளபதிகள் அவர்களெல்லாம் யார்? அந்நியச் செலவாணி மோசடியில் ஈடுபட்டமைக்காக ஜெயா – சசி கும்பலைச் சேர்ந்த தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் ‘இந்துக்கள்’ என்பதால்தான் கடத்தல், சட்ட விரோத தொழில்களில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்று கூறலாமா?

கடத்தல் மற்றும்  அந்நியச் செலாவணி மோசடியைத் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாகக் கருதிய ஃபெரா (FERA) சட்டத்தை ரத்து செய்து, அதை சிவில் குற்றமாக மாற்றி ஃபெமா (FEMA) என்ற புதிய சட்டத்தைப் பிறப்பித்திருப்பதே தற்போதைய பா.ஜ.க. அரசுதான். எனவே கடத்தல் பேர்வழிகளெல்லாம் இந்துக்கள்தான் என்பதற்கு இதையே நிரூபணமாக எடுத்துக் கொள்ளலாமா? ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது, முசுலீம்கள் மட்டுமே கடத்தல் செய்து, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகிறார்களாம்.

உண்மையில் கடத்தல் என்றால் என்ன? சுங்கவரி, இறக்குமதித் தீர்வைப் பட்டியலில் உள்ள பொருட்களை சட்ட விரோதமாகக் கடத்தி வந்து விற்று இலாபம் சம்பாதிப்பது. ஆனால், இன்றைய உலகமயமாக்கமும், புதிய பொருளாதாரக் கொள்கையும் இத்தகைய மரபுவழிக் கடத்தலைத் தேவையற்றதாக்கி விட்டது. தங்கமும், டாலரும் தடையின்றி வர அனுமதிக்கப்படுகின்றன. முக்கியமாக அரசே கடத்தல் தொழிலுக்கு உரிமம் கொடுத்து வருகிறது. ஓ.ஜி.எல் (Open Goverment License) என்ற உரிமம் பெற்று எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யலாம். தற்போதைய பா.ஜ.க. அரசும், முந்தைய அரசுகளும் செய்ததும், செய்வதும் இத்தகைய கடத்தல்தான்.

பர்மா பஜாரில் லுங்கியும் சென்ட் பாட்டிலும் விற்கும் முசுலீமைக் காட்டி ”பார் முசுலீம்தான் கடத்தல்காரன்” என்கிறது இந்து முன்னணி. லுங்கி கிடக்கட்டும்; பனியன் ஜட்டி முதல் பல் குத்தும் குச்சி வரை, ஊறுகாய் மட்டை முதல் துடைப்பக்கட்டை வரை சுமார் 750 பொருட்களை வெளிநாடுகளிலிருந்து ‘கடத்தலாம்’ என்று இப்போது சட்டமே போட்டிருக்கிறது பா.ஜ.க. அரசு. கடத்தல்  அனுமதிக்கப்பட்ட 750 சரக்குகளில் ”ஹிந்துக்களின் புனிதமான குங்குமமும்” அடக்கம். பர்மா பஜார் முசுலீம்களை ஒழிக்கத்தான் பா.ஜ.க அரசு நாட்டையே பர்மா பஜார் ஆக்கிவிட்டது போலும்!

இதுவன்றி ஏற்றுமதி – இறக்குமதி மோசடி, வருமானவரி ஏய்ப்பு, அந்நியச் செலாவணி மோசடி, கழிவு, தரகு, ஊழல் என்று பல்லாயிரங்கோடிக் கணக்கில் சுருட்டுவது பார்ப்பன – பனியா தரகு முதலாளிகள்தான். தன்னுடைய கணக்குப்படி ஒரு ஆண்டில் சுருட்டப்படும் மோசடிப் பணம் குறைந்தது ஒரு லட்சம் கோடியிருக்கும் என்று சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் மாதவன் கூறியிருக்கிறார்.

மேலும் இந்தியாவின் பிரபல ஊழல் வழக்குகளான போஃபர்ஸ், சர்க்கரை, நிலக்கரி, தொலைபேசி, ஜெயின் டைரி, ஹவாலா, இந்தியன் வங்கி, பங்குச் சந்தை, ஜெயா – சசி ஊழல், தெகல்ஹா இராணுவ ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல் போன்ற அனைத்து வழக்குகளிலும் கோடிகளைக் கொள்ளையடித்தவர்கள் யார்? முசுலீம்களா? இல்லை; ஒருவர் கூட இல்லை. மாறாக பார்ப்பன – பனியா கும்பல்தான் கொள்ளையடிக்கும் கூட்டமாக இருந்து நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வருகிறது.

எனவே இத்தகைய மோசடிகளைத் தடுப்பதோ, தடை செய்வதோ இந்து மத வெறியர்களின் நோக்கமல்ல. மாறாக இந்த சட்ட விரோத – சமூக விரோத கும்பல்கள் அனைத்தும் தனக்கு மட்டும் விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பம். ”கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், குண்டர் படை நடத்துபவர்கள், விபச்சாரத் தொழில் செய்பவர்கள் – அனைவரும் மராத்திய இந்துக்களாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று அவர்களின் நோக்கத்தை பால் தாக்கரே பச்சையாக வெளியிடுகிறார். இது இந்து தர்மத்துக்கு விரோதமானதல்ல என்பதையே கீழ்க்கண்ட கீதையின் சுலோகமும் மெய்ப்பிக்கின்றது.

”எவனொருவன் மிகக் கெட்ட குணங்களை உடையவனாக இருந்தாலும், மற்றொரு தெய்வத்தையன்றி என்னையே வழிபடுவானேயானால் அவன் நல்லவன் என்றே அறிய வேண்டும்.”

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

  1. உடுங்க கிஷன்ஜி சாரி அவுருதான் மேல போய்ட்டாரா சரி அடுத்த தலிவரை பிரதமராக்கி இந்தியாவை ஒரு இசுலாமிய நாடாக்கிடுவோம்!

  2. ஆமா ஹிந்து மதம் பார்ப்பன ஹிந்து மதம்னு சொல்றீங்க சரி
    அப்போ கிறித்துவ மதம் நாடார் கிறித்துவ மதம்னோ உருது முஸ்லிம் மதம்னோ சொல்ல தில் உண்டா உங்களுக்கு?

    • கோயில் கருவறையில வீடியோ யாரு தம்பி புடிக்கிறது…நாடாரா?
      எல்லொரும் இந்துனா ஏங்க க்ராஸ் பெல்ட்டு மட்டும் மணி ஆட்டுது… அந்த ராயல்டிய ட்ரான்ஸ்பர் பண்ணுங்க பாப்போம்….

  3. // இதுவன்றி ஏற்றுமதி – இறக்குமதி மோசடி, வருமானவரி ஏய்ப்பு, அந்நியச் செலாவணி மோசடி, கழிவு, தரகு, ஊழல் என்று பல்லாயிரங்கோடிக் கணக்கில் சுருட்டுவது பார்ப்பன – பனியா தரகு முதலாளிகள்தான். //

    யார் அந்த பார்ப்பன தரகு முதலாளிகளோ???

    // மேலும் இந்தியாவின் பிரபல ஊழல் வழக்குகளான போஃபர்ஸ், சர்க்கரை, நிலக்கரி, தொலைபேசி, ஜெயின் டைரி, ஹவாலா, இந்தியன் வங்கி, பங்குச் சந்தை, ஜெயா – சசி ஊழல், தெகல்ஹா இராணுவ ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல் போன்ற அனைத்து வழக்குகளிலும் கோடிகளைக் கொள்ளையடித்தவர்கள் யார்? முசுலீம்களா? இல்லை; ஒருவர் கூட இல்லை. மாறாக பார்ப்பன – பனியா கும்பல்தான் கொள்ளையடிக்கும் கூட்டமாக இருந்து நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வருகிறது. //

    ஜெயா-சசி பெயரைப் போட்டுவிட்டால் மற்ற ஊழல்களிலும் பார்ப்பானை இழுத்துவிடலாம் என்ற எண்ணமா??? மேலே குறிப்பிட்ட ஊழல்களிலெல்லாம் ஈடுபட்ட பார்ப்பனர்களின் பெயர்களைப் பட்டியல் இடாமால் பர்ப்பன-பனியாக் கும்பல் என்று பம்மாத்து பண்ணப்படாது..

    கீழக்கரை முஸ்லீம்களின் பாரம்பரியமான கடல்கடந்த வியாபாரம், ‘கடத்தல்’ என்ற கெட்ட பெயரைப் பெற சட்டம் கொண்டுவந்தது காவிகள் அல்ல..!!!

  4. அப்போ கிருத்தவ மதத்தின் கிறுக்கு தனத்தே இதுவரைக்கும் வினவு எழுதனதே இல்லையே ???

    வெள்ளை பாதிரிகளின் அட்டுழியம் பற்றி எதுவும் தெரியாதோ ??
    அடிகடி ஹிந்து முஸ்லிம் மதம் பற்றி எழுதி சண்டை மூட்டி விடறதே வேலை …

    • அட நீங்க வேற தலித்துகளுக்கு தனி சுடுகாடு பல கிறித்துவ அமைப்புகள் இன்னும் நடத்துது!ஆனா தலித்துகள் என்னதான் கூப்பாடு போட்டாலும் கேட்பார் யாரோ?

  5. வினவு …உங்க வீரத்த பாராட்டுகிறேன்….
    தைரியம் இருந்தால்… ஆசிரியரின் முகவரியும்..புகைப்படத்தைம் போடவும்…
    சிவப்பு சட்டைக்காரன் எல்லாம்… கும்பல்ல கோவிந்தா போடும் பேடிகள்னு நாட்டுக்கே தேரியுமே….
    இருக்கப்பிடிக்கலைனா… பாக்கிஸ்தான் போகவேண்டியது தானே …

    • //இருக்கப்பிடிக்கலைனா… பாக்கிஸ்தான் போகவேண்டியது தானே //
      அப்படியே நீங்களும் வந்த வழியே கொஞ்சம் பொட்டியை கட்டினா நல்லா இருக்கும்ல….

  6. // கீழ்க்கண்ட கீதையின் சுலோகமும் மெய்ப்பிக்கின்றது.

    ”எவனொருவன் மிகக் கெட்ட குணங்களை உடையவனாக இருந்தாலும், மற்றொரு தெய்வத்தையன்றி என்னையே வழிபடுவானேயானால் அவன் நல்லவன் என்றே அறிய வேண்டும்.” //

    இதைப் போன்று கீதையில் படித்த நினைவில்லையே??!! சரடா???

  7. நம் அனைவர் மீதும் அந்த ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
    ******************************************************************************
    இது கண்டிக்கத்தக்கது! இஸ்லாமிய ஆட்சி அமைந்தால் அமைதி நிலவும் ஒழுக்கம் பிறக்கும் மக்கள் நோயில்லாமல் வாழ முடியும்!இன்ஷா அல்லாஹ் அருளால் அது நடக்க வேண்டும்!

    • இதே வேறு ஒரு மதத்தின் ஆட்சி அமைய வேண்டும்னு யாராவது சொல்ல வாய் திறந்தா போதும் இந்நேரம் வினவு அண்ட் கொ பாய்ந்திருக்கும்!ஆனா இப்போ எதிர்வினையையே காணோம்?வாழ்க போலி நாத்திகம்!

      • சகோ சுமீன்,
        இஸ்லாம் என்பது மனிதன் ஒழுக்கமாய் வாழ வேண்டி இறைவன் வகுத்து கொடுத்த பாதை அதாவது மார்க்கம். இதை மனிதர் படைத்த மற்ற மதங்களோடு ஒப்பிட வேண்டாம்
        உமக்கு ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்

    • சகோ சுமீன்,
      இஸ்லாம் என்பது மதமல்ல மனிதன் ஒழுக்கமாய் வாழ வேண்டி இறைவன் வகுத்து கொடுத்த வழி அதாவது மார்க்கம். மார்க்கத்தை மற்ற மனிதன் படைத்த மதங்களோடு ஒப்பிட வேண்டாம்.

      ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் உமக்கு உண்டாகட்டும்

  8. தொழிற்சாலை யில் இருந்து ஒரு பொருள் வெளியே வரும் போது அதன் விலை ரூபாய் எண்ணூறு என்று வைத்துகொள்வோம் சூப்பர் ஸ்டாகிஸ்ட், ஸ்டாகிஸ்ட்,டிச்றிபியுட்டர்,ஹோல்சேலர், ஏஜென்ட், தாண்டி ரீடைலர் கிட்ட வரும் போது அதன் விலை இரண்டாயிரம் ஆகிறது.உற்பத்தி செய்பவனை விட அதிகம் லாபம் பார்க்கும் இந்த தரகு முதலாளிகள் பெயர்கள் டாட்டா, அம்பானி, பிர்லா,பஜாஜ்,மிட்டல் என்று ஐம்பது ஆண்டுகள் முந்தைய செய்தித்தாள்களில் காண முடிகிறது.இப்பொழுது அவர்களின் அடுத்த தலைமுறையினர் முன்னணி தொழில் அதிபராய் இருக்கின்றனர்.

  9. \\”எவனொருவன் மிகக் கெட்ட குணங்களை உடையவனாக இருந்தாலும், மற்றொரு தெய்வத்தையன்றி என்னையே வழிபடுவானேயானால் அவன் நல்லவன் என்றே அறிய வேண்டும்.” //

    • இதை போன்ற ஒரு வரியை நானும் படித்தது இல்லை. இதன் சம்ஸ்க்ரித மற்றும் ஒவ்வொரு சொல்லுக்குமான தமிழ் வார்த்தைகளையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

      சரி அந்த வார்த்தைகளுக்கு முன்னும் பின்னும் உள்ள வரிகள் என்ன என்பதை பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.

      கீதைக்கு பல நூறு பேர் அர்த்தங்களை எழுதியுள்ளனர், இதை எந்த கீதை அதாவது சம்ஸ்க்ரித வல்லூனர் எழுதிய நூலில் எழுதியுள்ளனர்.

      தான் செய்த முன் வினைக்கு தானே தண்டனையை பெற்று வேடனால் கொல்லப்பட்டு கண்ணன் மண் உலகை விட்டு சென்றான். தான் செய்த முன்வினைக்கு தண்டனையை தானே விதித்து கொண்ட பின்பு இது போன்ற குறை குடங்கள் அரை வேக்காடு தனமாக எழுதுவது முட்டாள் தனம்.

      அதுவும் தவிர கீதையில் பல அத்தியாயங்களில் பல கோட்பாடுகள் விளக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கோட்பாடும் ஒன்றுக்கு பின் முரண்பட்டு இருந்தாலும் கர்மா காலத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதையும் மையமாக கொண்டு தான் சொல்லப்படுகிறது.

      அது மட்டும் இன்றி கீதை ஒன்று மட்டுமே ஹிந்துக்களின் ஓரே ஒரு மத நூல் அல்ல…. ஆயிரம் ஆயிரம் நூல்களில் அதுவும் ஒன்று.

  10. //

    கறிகட மூஸாMarch 30, 2012 at 2:34 pm

    1
    உடுங்க கிஷன்ஜி சாரி அவுருதான் மேல போய்ட்டாரா சரி அடுத்த தலிவரை பிரதமராக்கி இந்தியாவை ஒரு இசுலாமிய நாடாக்கிடுவோம்!//

    ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவட்டும்.

    சகோ கறிகட மூஸா, இறை நாடினால் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒரே குடையின் கீழ், ஓரிறைவனின் அருளின் கீழ் சங்கமிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. மாஷால்லாஹ்!

    ஜசாக்கலாஹு க்ஹைர்

    • //இறை நாடினால் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒரே குடையின் கீழ்//

      அது எந்த இறை என்பது தான் பாய் தகராறே….!!!!

    • மூதேவி ட்ரைனிங் பத்தாது இன்னும் நல்ல ட்ரை பண்ணு

      ///சகோ கறிகட மூஸா, இறை நாடினால் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒரே குடையின் கீழ், ஓரிறைவனின் அருளின் கீழ் சங்கமிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. மாஷால்லாஹ்! ஜசாக்கலாஹு க்ஹைர்///

      எங்கே சொல்லு மே மேஹ் ஹா மே

    • கற்பனைக்கும் ஒரு எல்லை உண்டு. இதெல்லாம் போலி வாதங்கள். ஒருகாலும் இந்துக்களை வெற்றி கொள்ள முடியாது. உலக அளவில் எத்தனை வினவு மற்றும் “புதிய ஜனநாயகம்” அதாவது “இஸ்லாமியம்” வந்தாலும் நடக்காது.

  11. முஸ்லீம்கள் அச்சப்பட வேண்டியதில்லை. முஸ்லீம்கள் செய்யும் அக்கிரமங்களை வினவு போன்ற வலைபதிவு மற்றும் அதன் பத்திரிகைகள் முழு ஆதரவு தெரிவிக்கின்றன. இந்துக்கள்தான் இளிச்சவாயர்கள். நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மதசார்பற்ற நாட்டில் “போலி மதவாதத்தை’ தூண்டிவிட்டு அதாவது இஸ்லாம் மதவாதத்தை தூண்டிவிட்டு நாட்டில் பிரிவினையையும் போராட்டத்தையும் உக்குவிக்கிரார்கள். இதனை மூளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

  12. இங்கு சிலர் இஸ்லாமிய ஆட்சி அமைய வேண்டும் என சொல்கிறார்கள்(சிலர் வேண்டுகிறார்கள்).இதே வேறு ஒரு மதத்தின் ஆட்சி அமைய வேண்டும்னு யாராவது சொல்ல வாய் திறந்தா போதும் இந்நேரம் வினவு அண்ட் கொ பாய்ந்திருக்கும்!ஆனா இப்போ எதிர்வினையையே காணோம்?வாழ்க போலி நாத்திகம்!

    • பின்னூட்டங்களில் இசுலாமிய ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்பவர்கள் யாரும் இசுலாமியர்கள் இல்லை. பல பெயர்களில் வந்து அப்படி போட்டிருப்பவர் ராசா என்ற பெயர் கொண்டவர். இங்கு பல பெயர்களில் போட்டிருக்கிறார். அதே ஆசாமிதான் சோ அய்யரென்றும் பிரவீன் என்றும் கடந்த இரண்டு நாட்களாக பின்னூட்டம் எழுதிவருகிறார்.

      • முஸ்லீம்கள் பெயரில் குண்டு வைக்கிறாய்ங்கன்னுதான் படிச்சிருக்கேன், இப்போ பின்னூட்டம்மும் போடுறாய்ங்களா! அம்பிகளா! ஏன் உம்ம புத்தி இப்படியெல்லாம் போகுது. விவாதிக்க முடியலைன்னா வாயையும் …….யும் மூடிக்கிட்டு இருக்கவேண்டியதுதானே.

        • ஆமாமா, தியாகச்செம்மல் ஒசாமா, மாவீரன் தாவித்துதூ, போராளி கசாப்பு, இந்த அப்பாவிகளின் பெயரில் தீவிரவாதத்தில் ஈடுபடுவது யார் சுஜித்..

          • ///இந்த அப்பாவிகளின் பெயரில் தீவிரவாதத்தில் ஈடுபடுவது யார் சுஜித்..///

            கர்சேவகர்கள்

    • பிரவீனு நான் அன்னிக்கே சொன்னேன் நீ ஒரு டுப்பாக்கூர்னு, நீயே பின்னூட்டம் போட்டு அதுக்கு நீயே பதிலும் எழுதவேன்னு, இந்த பின்னூட்டத்துலேயே பாரு எத்தனை பேருன்னு

      1) வண்டு முருகன்
      2) கறிகட மூஸா
      3) பெரியாரின் கால்தூசி
      4) அமீன்
      5) சுமீன்
      6) பிரவீன்

      நேத்திக்கு

      7) சோ அய்யர்
      8.) வடக்குபட்டி

      அன்னிக்கு
      9) கனவு
      10) மெய்கான்
      11) நரன்
      12) ராசா
      13) ரவி
      14) காத்தவராயன்

      பல நேரங்களில்
      15) ராஜன்

      இன்னும் எத்தனையோ பெயரயை நான் மிஸ் பண்ணியிருக்கலாம்

      ஆனா ஒண்ணுடா

      வாங்குன காசுக்கு மேல கூவுறத சினிமாவுல பாத்திருக்கேன், ஆனா
      இப்படி காசே வாங்காம வினவுக்கு பின்னூட்ட சேவை செய்யுறீயே கொய்யாலே
      நீ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்டா

  13. முஸ்லீம்கலை தாச செய்வதிலேயெ இருக்கிரீர்கல். இந்த இஸ்லாமியர்களல் உலகமெ அச்சத்தில் உள்ளது. தினசரி கலவரம். ஏராலமான மக்கள் கொல்லப்படுகிரார்கள். தினசரி செய்தியை படித்தாலே உன்மை விலங்குலிறாது. ஆனால் இந்துக்கள் அமைதியையெ விரும்புகிரார்கள். உலகத்தில் எத்தனை பயங்கரவாத இஸ்லாமிய இயக்கம் இருக்கிறது என்பது அனைவரும் தெரிந்த்தே. ஆனால் “வினவு” மட்டும் இந்த பயங்கர வாதிகலுக்கு வக்கலத்து வங்குகிரது!!!!.எல்லாம் பெட்ரொ டாலர் செய்யும் மகிமை!!!!!!

  14. WHAT VINAVU HAS TO SAY ABOUT JIHADIS IN CHINA?IS THE CHINESE GOVT RUN BY COMRADE MAO S STUDENTS SEE THAT EVERY MUSLIM IS HAPPY IN THEIR TERITORY. THERE WAS SO MUCH BLOOD SHED DURING PARITITION AND NON MUSLIM NATIVES OF SIND, WESTERN PUNJAB AND EASTERN BANGAL CAME BLEEDING TO INDIA AND IT WAS ONE THE MAIN CAUSE FOR HINDU
    MILITARISM. IT IS WRONG TO SAY THAT ALL MUSLIMS ARE SMUGGLERS . BUT THE TWO COASTAL VILLAGES KIZHAKARAI AND KAYALPATTINAM HAD MAY MILLIONAIRES WHO WERE ENGAGED IN THIS TRADE

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க