Saturday, February 4, 2023
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்சிறுபான்மையினர் கமிசனைக் கலைக்கக் கோரும் 'மனித உரிமை'ப் பற்றாளர்கள்!

சிறுபான்மையினர் கமிசனைக் கலைக்கக் கோரும் ‘மனித உரிமை’ப் பற்றாளர்கள்!

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 13

”சிறுபான்மையினரைப் பற்றி மட்டும் கவலைப்படும் ஒரு சார்பாக சிறுபான்மையினர் கமிசனைக் கலைத்து விட்டு, அனைத்து மக்களும் தங்களது குறைகளுக்குத் தீர்வு காணும் மனித உரிமைக் கமிசன் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் எவருக்கு எந்தக் குறையிருந்தாலும் அது களையப்பட ஒரு அமைப்பும் உருவாகும்.”

– ”இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?”இந்து முன்னணி வெளியீடு, பக் -29.

பெரும்பான்மை இந்துக்களுக்குக் கிடைக்காத மாபெரும் உரிமைகள் சிறுபான்மையினர் கமிசனுக்கு உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிதான் இந்தக் கோரிக்கை. தேசிய சிறுபான்மையினர் கமிசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கமிசன், தேசிய மகளிர் கமிசன் போன்றவை பார்ப்பனியத்தின் சமூகக் கொடுமைகளை எதிர்த்த மக்கள் போராட்டத்தினால் உருவானவை. இவை அந்தந்தப் பிரிவு மக்களின் குறிப்பான பிரச்சினைகள், பாதிப்புகளை அரசிற்கும், வெளி உலகிற்கும் ‘தெரிவிக்க’ மட்டுமே அதிகாரம் படைத்தவை. மற்றபடி இவற்றுக்கு வேறெந்த அதிகாரமும் கிடையாது.

இந்தக் கமிசன்கள் விசாரிக்கச் செல்லும் பிரச்சினைகளில், சாதி, மத, இன, ஆணாதிக்கத்தின் உறைவிடமான இந்து மதவெறியர்களே எதிர்த்தரப்பாக இருக்கின்றனர். எனவேதான் இந்தச் ‘சிறுபான்மை’ கமிசன்களைக் கலைத்துவிட்டு, மனித உரிமைக் கமிசனை ஏற்படுத்துமாறு கேட்கிறார்கள். அவர்கள் கேட்காமலேயே இப்போதே ‘மனித உரிமைக் கமிசன்’ ஒன்று செயல்படுகிறது.

கோவையில் காவலர் செல்வராசு கொலையைச் சாக்கிட்டு முசுலீம்களை எதிர்த்து நடந்த கலவரத்தை விசாரிக்க ‘மனித உரிமைக் கமிசன்’ வந்தது. வந்தவர்கள் உள்ளூர் போலீசு உருவாக்கிய அறிக்கையைக் கேட்டு வாங்கி, ‘இதுதான் தாங்கள் விசாரித்துக் கண்டறிந்தது’ என வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு வந்த சிறுபான்மையினர் கமிசன் இந்த ‘மனித உரிமை’ மோசடியை அம்பலப்படுத்தியது.

இப்படித் தங்கள் கலவரங்கள், கொலைகள் மற்றும் ஆதிக்கத்தை எவ்வித இடையூறுமின்றி தொடர்வதற்கே மனித உரிமை பற்றிப் பேசுகிறது ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணிக் கும்பல்.

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

 1. இந்த இந்து முன்னணி ஆர் எஸ் எஸ் ஆகியோர் விடுக்கும் அறிக்கைகள் துண்டு பிரசுரங்களை தவறாமல் படிப்பது விணவு மட்டுமே!சாதாரண மக்களுக்கு தமது தின வயிற்று பிழைப்பை பார்க்கவே நேரமில்லை!சரி சரி ஆர் எஸ் எஸ் அறிக்கை விடுவதே வினவு கட்டுரை எழுதி அதை பிரபலபடுத்ததானோ?

 2. Ultra left க்கும் ultra right க்குமான கருத்தியல் துருவ நிலை வேறுபாடு அனைவரும் அறிந்ததே!ஆனால் தொடர்ந்து வினவு அவர்கள் ஆர் எஸ் எஸ் துண்டு பிரசுரங்களுக்கு பதில் கொடுத்து கொண்டிருப்பது அல்ட்ரா ரைட் அல்ட்ரா லெப்ட் போல இல்லையே என்ற ஒரு ஆதங்கமே இதிள் தெரிகிறது!

  • உங்கள் ஆதங்கம் என்னவென்று புரியாமல் போவது வருத்தமளிக்கிறது!

   • புரியலையா…உன் கண்ணில் ஏன் இஸ்லாமியத் தீவிரவாதமும், ம்தவெறியும்
    , பிரிவினைவாதமும், தெரியமாட்டேங்குது…உனது டேக்ஸ் அதற்க்கு ஓர் அருமையான எடுத்துக்காட்டு..அதுலயும் காவிப்புழுதி என்று 2 முறை எழுதி ஒரு அல்ப்ப சந்தோஸம் வேறு…

    //Tஅக்ச்: ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, இஸ்லாமியர், ஓ.ஜி.எல், கடத்தல், கடத்தல்காரர்கள், கண்ணை மறைக்கும் காவிப்புழுதி, காவிப்புழுதி, கீதை, சிறுபான்மைக் கமிசன், சிறுபான்மையினருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸின் பொய்யும் புரட்டும், பாரதிய ஜனதா, பார்ப்னியம், மனித உரிமைக் கமிசன், முஸ்லிம்கள்//

    • குணா படத்தில் கமல் சொல்லுவாரு நடு நடுவுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும் என்று,.அது போல வினவு கட்டுரையில் கண்டிப்பாக இடம் பேர வேண்டிய வார்த்தைகள் ::::::-
     ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி,[பார்ப்பன,பாஸிச , இஸ்லாமியர், ஓ.ஜி.எல், கடத்தல், கடத்தல்காரர்கள், கண்ணை மறைக்கும் காவிப்புழுதி, காவிப்புழுதி, கீதை, சிறுபான்மைக் கமிசன், சிறுபான்மையினருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸின் பொய்யும் புரட்டும், பாரதிய ஜனதா, பார்ப்னியம், மனித உரிமைக் கமிசன், முஸ்லிம்கள்

     • எப்படி ராமகோவாலன் முக்கி பேழ முடியாட்டி கூட பாகிஸ்தான் சதின்றானே அப்படியா?
      இப்ப பாத்ரூம்ல வழுக்கி விழுந்தானாமே அதுக்கு கூட பாகிஸ்தான் சதிம்பான்.. இவனுங்க வினவுவை பத்தி பின்னுட்டம் போடுறாங்க…
      கேவலமா இல்லே….

    • பையா, கண்ணை மறைக்கும் காவிப்புழுதி புத்தகமாவும் உள்ளது, புதியகலாச்சாரம் அலுவலகம்/கீழைக்காற்றை தொடர்பு கொள்ளுங்கள்

     • இஸ்லாம் தீவிரவாதம், மதரஸாக்களில் தீவிரவாதப்பயிற்சி, தமுமுக, மதானி, கசாப், மும்பைத்தீவிரவாதம் இந்த மாதி டேக்குகளோ, கட்டுரைகளோ, புத்தகங்களோ தாங்களிடம் ஏன் இல்லை ஊசி…

      • இவருதான் எல்லா புத்தகத்துக்கும் ராயல்டி வாங்கிருக்காரு. இந்த ப்பீயா நெறுக்கி புடிச்சி கேள்வி கேட்டா, உடனே எஸ்கேப்பு… வந்த்துட்டாரு வள்ளலு…..

    • ஏன் இந்து திவிரவாதத்தை பற்றி வாய் திரப்பதில்லை. மலேகான் கைங்கரியம், மோடியின் இனவெறி ஆட்டம், இஸ்லாமிய மக்கள் மீது அவதுறு உண்டாக்க பாக்கிஸ்தான் கொடியை ஏற்றி அல்ப்ப காரியங்களில் இடுபட்டது யார்?. பாபரி மஸ்ஜித் இடிப்பு கலவரத்தில் அப்பாவி முஸ்லிம் மக்களை கொன்று குவித்தது யார்?

     நாட்டுல எங்க குண்டு வேடிச்சாலும் முஸ்லிம் மக்கள் தான் காரணம் என்று ஒரு மாயை உண்டாக்கி அவர்களை பல இன்னல்களுக்கு தள்ளி அதனை ரசிக்கும் பாசிச கோமாலிகள் தானே இந்த டிரவுசர் கூட்டம்.

     நீங்க எப்படி பெறும்பான்மை எடத்த பிடிசீங்க என்று போய் வரலாற்றை கொஞ்சம் படித்துவிட்டு வாங்க, உண்மை வரலாற்றை!. உங்க வீர சர்வார்கர் டுபாக்கூர் வீர வசனத்தை எல்லாம் படிங்க உண்மை புரியும்.

    • இந்த பதிவுக்கு யோக்கியமா பதில் போடு… .. இந்து முன்னணீ, விஜய பாரதம் புளுகுமூட்டை மாதிரி புரட்டு கிடையாது….

 3. “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் தொலைவில் இல்லை.//

  ஆங்கிலம் தாய்மொழியாக கொண்டவர்களை விட,வேறு மொழியை தாய்மொழியாக கொண்ட- ஆங்கிலம் பேசுவோர்களின் எண்ணிக்கை உலகில் மிக அதிகமாகி உள்ளது; ஆங்கிலேயரின் வாழ்க்கைதரம் குறையவில்லை. தமிழகத்தில்,அதே நிலை தமிழ் மொழிக்கும் உருவாகியுள்ளது. ஆனால் தமிழரின் வாழ்க்கைத் தரம் பரிதாபமாக உள்ளது; பிற மொழிகளை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில் வாழும் மக்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. இந்நிலை இந்திய ஒருமைப்பாட்டுக்கு/நமக்கு நல்லதல்ல. ஆகவே திறமையான தமிழ் வழிகாட்டிகள் தமிழகத்திற்கு உடனடியாகத் தேவை.

  ”தமிழர்கள் நம்முடன் வாழும் அணைத்து மொழி பேசுபவர்களையும் நல்லபடியாக தான் பார்க்கிறோம். இல்லாவிடில் 234 எம்.எல்.ஏ. மற்றும் மந்திரிகளில் 20% அண்டைமாநில மொழியை பேசுபவர்கள் சென்ற முறை பதவி வகித்திருக்க முடியுமா?

  அண்டைமாநிலங்களில் நம்மால் இப்படி நினைத்து பார்க்க முடியுமா? “யாதும் ஊரே யாவரும் கேளீர்”- என்று வாழ்ந்த தமிழர்கள் தமிழகத்தில் மைனாரிட்டி தகுதியில் வரும் நாள் தொலைவில் இல்லை.

  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிய மறுக்கிறார்களே??? கணக்கெடுக்க தயாரா திராவிடம் பேசுவோர்???

  காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு “- நம் வீட்டுக்குழந்தையை விட பக்கத்துக்கு குழந்தை அழகாக இருந்தால், பக்கத்து வீட்டு குழந்தையையா கொஞ்சுகிறோம்?

  வாடிய பயிரைக் கண்டு மனம் வாடிய, வள்ளலார் பிறந்த நாட்டு தமிழர்களும் வாழ வேண்டாமா ??? சிந்திக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம்.

  http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=596299&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

 4. அம்பேத்கரைப் பற்றிய கார்ட்டூன் நீக்கப்படும்: கபில்சிபல்

  கடந்த ஆறு ஆண்டு காலம் எல்லோரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்???

  ஹிஹும் ஹிஹும்..ஹிஹும் குமாரி மாயாவதி சிலை தயாரிப்பிலும், திருமதி மீரா குமார் சபாநாயகர் -சண்டை தடுப்பு பணியிலும், சாது நிதிஷ்- மோடியுடன் கை குலுக்கலாமா வேண்டாமா என்பதிலும், விடுதலை வீரர் திருமா- திமுக தன் திரும்புமா? திரும்பாதா?? என்பதிலும், பத்திரிகையாளர்கள்/ மீடியாக்கள் நடிகையின் பேட்டிஎடுப்பதிலும், மக்கள் இலவசங்களை பொறுக்குவதிலும்தம்மை ஆட்படுத்திக் கொண்டிருந்தார்கள் என்று சொல்லித்தெரியவேண்டுமோ??? வாழ்க சமூக நீதி காக்கும் பாரதம்!!! போட்டது போட்டுடீங்க- என்னுடைய கருத்தையும் போடுவீர்கள் என நம்புகிறேன்

  http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=596755&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

 5. //”மதுரையில் சர்வதேச தரத்தில் திரைப்பட பயிற்சிக் கழகம்: துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தகவல்”//

  இங்காவது தமிழ்ப் பிள்ளைகளை- அரவணைக்கும்/ பாலூட்டும் தமிழ் தாய்மார்கள் கிடைப்பார்களா??

  தமிழர்களுக்கு என்று தனி அமைப்புகள், தமிழ்த் திரைப்பட துறையில் மட்டும் இல்லை”:திரைப்பட இயக்குநர்கள் .; தெலுங்கருக்கு – நைனா, அம்மா; மலையாலத்தவருக்கு -அச்சன், அம்மா; கன்னடத்தவருக்கு – தந்தே, தாயி; தமிழருக்கு – பொது அப்பா, அம்மா; என்ன ஞாயம் இது???? திராவிடம், திராவிடம் என்று ஏமாந்ததைச் சொல்லுகிறோம்.; ஹி ஹி..ஹி . இப்படியாகத்தானே எல்லா துறைகளிலும், தொலைக்காட்சியிலும், தமிழ்த்திரையுலகிலும் தமிழர்களின் மனதை கொள்ளை கொண்டு அருஞ் சேவை புரிந்து வருகிறோம். எல்லாம் அவன் செயல். வேறொன்றும் அறியோம் – பராபரமே!!!

  http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest+News&artid=596747&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%

 6. “கபில்சிபல் அவர்களையும் / பாராளுமன்றத்தையும் கலக்கிய தொல் திருமா அவர்களையும் மற்றவர்களையும் பாராட்டுகிறோம். நன்றி.”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க