Tuesday, December 10, 2024

உருது முஸ்லிம்களின் மொழியா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 17

”வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத சலுகை உருது மொழிக்குக் கொடுக்கப்படுகிறது. இது கொடுமையிலும் கொடுமை. அப்படி என்ன சிறப்பிருக்கிறது அந்த மொழியில்? உருது மொழியைக் கற்பிக்க அரசு ஆசிரியர்களை நியமிக்கிறது. அதுவும் அந்த ஆசிரியர்கள் முசுலீமாகத்தான் இருக்க வேண்டும் என்பது இன்றைய நிலை. உருது தெரிந்த இந்து ஆசிரியர்களை நியமிப்பதில்லை. ஆகவே அரிய எழுத்து உள்ள உருது மொழிக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

வானொலியில் உருது மொழியில் செய்தி வாசிப்பாளர்களுக்கு முசுலீம்களை மட்டும் நியமிக்கிறார்கள். ஆனால், தமிழ் மொழி செய்தி வாசிப்பாளர்களிலும் முசுலீம்களுக்கு இடம் கொடுக்கப்படுகிறது… இதனுடைய ஆழத்தையும் அகலத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.”

– ‘இந்து மக்களுக்கு உரிமையே கிடையாதா?’ இந்து முன்னணி வெளியீடு, பக்கம் – 21.

வளமான இலக்கண மரபும், செறிவான இலக்கியங்களையும் கொண்டுள்ள உருது மொழி, இந்த மதவெறியர்களின் முசுலீம் எதிர்ப்பு அரசியல் அட்டவணையில் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது. ஏனைய தேசிய மொழிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச, பெயரளவு சலுகைகள் கூட உருதுவுக்கு வழங்கப்படாததன் காரணமும் அதுவே. நடப்பிலிருக்கும் ஒன்றிரண்டு அற்பச் சலுகைகள் கூட தடை செய்யப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. மதம் கடந்து சில கோடி மக்கள் பேசும் உருது மொழியை, முசுலீம்கள் பேசுகின்ற துரோகிகளின் மொழியாகச சித்தரித்து ஒழிக்கப் பாடுபடும் இந்துமத வெறியர்களின் முயற்சி இன்றல்ல, காலனிய ஆட்சி காலந்தொட்டே துவக்கப்பட்டது. இந்தியை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பதற்காக உருது மொழியை அழிக்கும் சதி அப்படித்தான் துவங்கியது.

ஹர்ஷவர்த்தனரின் ஆட்சிக்குப் பிறகு இன்றைய இந்தியாவின் பெரும்பான்மை நிலப்பரப்பை ஆண்டவர்கள் முகலாய மன்னர்கள். அவர்களின் ஆட்சி மொழியாகத் திகழ்ந்தது பாரசீகமாகும். அதனால்தான் அன்று பல்வேறு சமஸ்கிருத இலக்கியங்கள் பாரசீகத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. ஆள்வோரின் மொழி என்ற தகுதியில் பாரசீகம் மக்களிடையே மெதுவாகப் பரவ ஆரம்பித்தது. அப்படித்தான் வட இந்தியாவின் வட்டார வழக்கு மொழியோடு (இந்தியின் மூல வடிவம்) பாரசீகம் இணைந்து உருது மொழி தோன்றியது. மக்களிடையே பரவவும் ஆரம்பித்தது.

பின்னர் தோன்றிய பக்தி இயக்கம் காரணமாக உருது, மதங்கடந்து மக்களிடையே வேர்விட ஆரம்பித்தது. மொகலாயர்களின் இறுதிக் காலத்தில் தெற்கே தக்காணத்தில் ஆட்சி செய்த சுல்தான்களின் அரசவை மொழியாகவும் உயர்ந்தது. அதேபோன்று வட மாநிலங்களின் பல பகுதிகளில் உருதுவும் வட்டார வழக்கு மொழியும் இணைந்த இந்துஸ்தானியும் மிகவும் நெருக்கமான மொழிகளாகும். இன்றைக்கு உருது மொழியை ஒழிப்பதற்கு இந்து மதவெறியர்கள் மேற்கொள்ளும் முயற்சியினை அன்று  சமஸ்கிருதத்தை ஒழிப்பதற்கு முகலாயர்கள் மேற்கொள்ளவிலை. இருப்பினும் தமது சமூக, அரசியல் அந்தஸ்து குறைந்து போனதன் காரணமாக சனாதனிகள் முகலாயர் மேல் வெறுப்புக் கொண்டிருந்தனர். வெள்ளையர்களின் வரவு அவர்களின் வன்மம் நிறைவேற அடி எடுத்துக் கொடுத்தது.

காலனிய எதிர்ப்புப் போராட்டம் என்பது முசுலீம் எதிர்ப்பை உள்ளடக்கிய இந்து தேசியமாக இருந்தது. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உகந்ததாக இருந்தது என்பதையும் இந்நூலில் பலமுறை பல பிரச்சினைகளுக்காகப் பார்த்திருக்கிறோம். அத்தகைய இந்து தேசியத்தின் பொது மொழியாக இந்தி வரவேண்டும் என்பதற்காக காங்கிரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ். சனாதனிகள் ஆரம்பம் முதலே பாடுபட்டு வந்தனர். இவற்றின்  அடிப்படையில் உருது மற்றும் இந்துஸ்தானி மொழிகளைப் புறந்தள்ளும் வேலையும் தொடங்கியது. வெள்ளையர்களும் இதற்கு ஆதரவளித்தனர்.

1947 அதிகார மாற்றத்திற்குப் பின்னர், ‘தேசிய மொழி’ப் பிரச்சினை வந்தபோது ஆரம்பத்தில் உருது கலந்த இந்துஸ்தானி மொழியை ஆதரிப்பதாக நடித்த காங்கிரஸ் கும்பல், பின்னர் தேவநாகரி எழுத்திலமைந்த சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியை ஆதரித்தது. அரசியல் நிர்ணயச் சட்டத்தின் நகல் பற்றிய காங்கிரஸ் கட்சியின் வாக்கெடுப்பில் இந்திக்கு ஆதரவாக 78 வாக்குகளும், இந்துஸ்தானிக்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. இப்படி ஒரு வாக்கு வித்தியாசத்தில்தான் இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது. இதற்கு ஆர்.எஸ்.எஸ். கும்பல் மட்டுமல்ல, ஆரம்பம் முதலே காந்தி, நேரு கும்பலும் உடந்தையாக இருந்தனர்.

மேலும் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்தி என்பது வட மாநிலங்களில் நிலவிய மைதிலி, அவதி, போஜ்புரி, கடி(ரி) போலி, மற்றும் இந்துஸ்தானி போன்ற பல்வேறு தனித்தனி மொழிகளை, வழக்குகளை அழித்து செரித்து உருவாக்கப்பட்டதாகும். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும் உருது கணக்கில் எடுக்கப்படவில்லை. இவ்வளவிற்கும் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் கோடிக்கணக்கான மக்கள் உருதுவைத் தாய் மொழியாகக் கொண்டிருந்தனர். உருதுவுக்கென்று தனி மாநிலம் இல்லாததுபோல், கல்விக்கொள்கையிலும் உருது புறக்கணிக்கப்பட்டது. பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக உருது அறிவிக்கப்பட்டதும் இங்கே துரோகிகளின் மொழியாக அது சித்தரிக்கப்பட்டது.

1947-க்கு பிறகு உருது மொழி நீடிக்க வேண்டுமானால், ”தேவநாகரி வரி வடிவத்தை ஏற்க வேண்டும், உருதுவில் உள்ள பாரசீகச் சொற்கள் களையப்பட வேண்டும், உருதுக்கென உள்ள ஒலி அமைப்பின் கறார்த் தன்மை தளத்தப்பட்டு தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும்” என்று இந்து மதவெறியர்கள் கட்டளை பிறப்பித்தார்கள். பார்ப்பனியச் சுத்திகரிப்பு நடந்த பிறகு உருது உருதுவாக இருக்க முடியுமா? திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழைத் தவிர ஏனைய மொழிகள் சமஸ்கிருத மயமாக்கப்பட்டது இப்படித்தான் என்ற வரலாறு அக்கேள்விக்கு விடையளிக்கிறது.

மேலும்  பாரசீகக் கலப்பு இல்லாத வட இந்திய மொழிகளே இல்லை என மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிருஜ் பாசா, கடிபோலி, மராத்தி  போன்றவை உருது – பாரசீக இலக்கணத்தை ஏற்றுக்கொண்ட மொழிகள்தான். எனவே பாரசீக கலப்பு என்று கூறி உருதுவைத் தூற்றுவது ஒரு மோசடி. மேலும் உருது ஒரு மதத்தினரின் மொழியாக மட்டும் இருக்கவில்லை. இந்து மதவெறியர்களால்தான் அப்படி ஆக்கப்பட்டு விட்டது. மிகச்சிறந்த உருது இலக்கியவாதிகளான தயாசங்கர், லல்லுலால், ராஜாசிவ சங்கர் பிரசாத், கிஷன்சந்தர் போன்றோர் ‘இந்துக்’ குடும்பத்தில் பிறந்தவர்களே. முன்னர் உருது வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக இருந்த ஜகன்னாத் ஆசாத் ஒரு ‘இந்து’தான். பல்வேறு கஜல் பாடகர்கள் உருதுக் கவிதைகளைப் பாடுகிறார்கள். வாஜ்பாயி உள்ளிட்டு பல வட இந்தியப்பேச்சாளர்கள் உருது மேற்கோள்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்தித் திரைப்படம் – பாடல் இரண்டிலும் உருது தவிர்க்க முடியாத மொழியாகத்தான் இருக்கிறது. உருது பொது மக்களின் மொழி என்பதற்கு இப்படிப் பல சான்றுகள் உண்டு.

இருப்பினும் வாழ்வின் பல தளங்களிலும் ஊடுருவிவிட்ட இந்து மதவெறி உருதுவைப் புறந்தள்ளுவதில் வெற்றி பெற்றவிட்டது. மும்மொழித் திட்டத்தை அமல்படுத்தச் சொன்னபோது வட மாநில முதலமைச்சர்கள் உருதுவை ஏற்கவில்லை. எட்டாவது அட்டவணையில் செத்த பாடையான சமஸ்கிருதத்திற்கு உயிரூட்ட வேண்டும் எனக் குளிப்பாட்டியவர்கள், மக்கள் மொழியான உருதுவைத் தள்ளி வைத்தார்கள். இந்தி ஆட்சி மொழியாக ஆக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் பல்வேறு தேசிய இன மொழிகளுக்கான உரிமைகளும், தகுதிகளும் மறுக்கப்பட்டன. இதில் முக்கியமான சேதாரம் உருதுவுக்கு நடத்தப்பட்டது. குறிப்பாக உருது தாய்மொழிக் கல்வி அழிக்கப்பட்டது.

‘இந்தி’யை பெரும்பான்மையினரின் மொழியாகக் காட்டுவதற்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் மோசடிகள் நடத்தப்பட்டன. உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவரையெல்லாம் ‘இந்தி’ பேசுபவராக மாற்றினாரர்க்ள. 1981 கணக்கெடுப்பில் நடந்த இம்மோசடியை எதிர்த்து பல உருது எழுத்தாளர்கள் வழக்கு தொடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றும் அலிகார் முசுலீம் பல்கலைக் கழகத்தைத் தவிர முழுமையான உருதுக் கல்வி எங்கும் கிடையாது. சில மதராஸாக்கள், முசுலீம் தன்னார்வக் குழுக்கள் போன்ற அரசு சாரா நிறுவனங்களின் மூலமே ஓரளவு உருதுக் கல்வி இருந்து வருகிறது.

இந்து மதவெறியரிடம் அடிமேல் அடிபட்டு நொந்திருந்த முசுலீம் மக்களின் வாக்குகளைக் கவர வேண்டும், (இங்கே பா.ஜ. கூட்டணியில் இருந்து கொண்டே உருது அகாதமியை கருணாநிதி அறிவித்ததுபோல) என்பதற்காக உ.பி. மாநிலத்தில் உருதுவை இரண்டாம் ஆட்சி மொழியாக காங்கிரஸ் கட்சியினரும், முலாயம் சிங் யாதவும் அறிவித்தனர். அதைச் சாக்கிட்டே இந்து மத வெறியர் பல கலவரங்களை நடத்தி எண்ணிறந்த முசுலீம்களைக் கொன்றனர்.  பெங்களூர் தொலைக்காட்சியில் 10 நிமிடம் உருதுச் செய்தியறிக்கை ஒளிபரப்பியதற்காக, காவிரியை முன்னிட்டு தமிழர்களை எதிர்த்து வந்த கன்னட இனவெறி இந்து வெறியாக மாற்றப்பட்டு கலவரம் நடந்து பல முசுலீம்கள் கொல்லப்பட்டனர்.

இப்படித்தான் வளமையும் பாரம்பரியமும் கொண்ட உருது மொழி ஒரு நூற்றாண்டு காலத்தில் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறது. உருதுவை முசுலீம் மொழியாக்கியது போல இந்து, முசுலீம், சீக்கியர் என அனைத்து பஞ்சாபியராலும் பேசப்பட்ட பஞ்சாபி மொழியை சீக்கிய மொழியாக்கியதும் இந்து மதவெறியர்களே. மக்கள் தொகை கணக்கெடுப்பில் பஞ்சாபி இந்துக்களை ‘இந்திதான் தாய்மொழி’ என அறிவிக்க வைத்தனர்; பஞ்சாபி மொழியின் வரிவடிவமான குர்முகியை நசுக்கி தேவநாகரியைப் புகுத்தினர். இவற்றின் மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டனர். அதேபோல காஷ்மீர் இந்துக்களின் தாய்மொழியாக இந்தியை அறிவிக்க வைத்து, காஷ்மீர் மொழி முசுலீம்களுக்கானது என மாற்ற முனைபவர்களும் இவர்கள்தான். காலனிய காலந்தொட்டே இந்தியைத் தேசிய மொழியாக்குவதற்கு இந்து மத வெறியர்கள் செய்த அயோக்கியத்தனங்களுக்கு அளவில்லை.

எனவே பலகோடி மக்கள் பேசும் உருது மொழிக்கு உரிய தகுதிகள் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சலுகைகள் ஏதும் இல்லாமல் சாகடிக்கப்படும் நிலையில் கூட உருதுவுக்குரிய சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கோருவது கடைந்தெடுத்த கயவாளித்தனமாகும். அதிலும் உருதுமொழி செய்தி வாசிக்க முசுலீம்களுக்கு மட்டும் இடம் கொடுத்து, தமிழ் செய்தி வாசிப்பிலும் முசுலீம்களுக்கு இடம் கொடுக்கலாமா என இந்து முன்னணி கேட்கிறது. அதாவது தமிழர்களில் முசுலீம்கள் கிடையாது என்பதே அதன் சாரம். இந்தி எதிர்ப்பில் வீரம் செறிந்த தமிழ் மக்களின் போராட்டத்தையடுத்து, இங்கே இந்தி பருப்பு வேகாது எனத் தெரிந்து, தமிழ் மொழியே இந்து மொழிதான், தமிழர்கள் இந்துக்கள்தான் என்று காட்டி, முசுலீம்களுக்கு இங்கே இடமில்லை என்று – மொத்தத்தில் பார்ப்பனீயத்தின் இலக்கணத்திற்கு வரலாற்று ரீதியான ஒரு பொழிப்புரை எழுதப்படுகிறது.

பார்ப்பனீயத்தின் முடிவுரையை நாம் எழுதுவது எப்போது?

____________________________________________

தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

  1. There is NO national language for India. Hindi is not a national language for any country in the world. Hindi is one of the official language of India. I was very much surprised when I read this article. How did vinavu made this blunder?.

    • மோகன்,
      நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரிதான். இந்தி இந்தியாவின் அதிகாரப்பூர்வமான மொழி என்பதே சரி. கட்டுரையில் தேசிய மொழி என்று குறிப்பிட்டிருப்பது தவறு. அதே நேரம் இந்தி மொழி அதிகாரப்பூர்வ மொழி என்ற பெயரில் இருந்தாலும் அதுதான் இந்தியாவின் ‘ஒரே தேசிய மொழி’ போன்ற அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது. இந்திய அரசின் நிர்வாக,நீதி,கல்வி, பண்பாட்டு மொழியாக அதுவே மற்ற தேசிய இன மக்களிடம் திணிக்கப்படுகிறது.நன்றி

      • ஆமாஞ்சாமி ஆழ்வார்கள் நாயன்மார்கள் தமிழ் புலவர்கள் அல்லாரும் ஆரியர்கள், இந்த திவா ஜெனில் அப்புறம் நம்ம வினவு எழவின் மச்சான்களான பாய் மாறுங்கோ, அல்லாரும் கடைஞ்செடுத்த தமிழர்கள்! அல்லாரும் குல்லா போட்டுண்டு நோம்பு கஞ்சி குடிச்சா வினவு சாந்தமாயிரும்! அதுவரைக்கும் இப்பிடி அல்லலூயா பாடிகினுதான் இருக்கும்! தெரிஞ்சிகுங்கோ, தங்க தமிழ் இறைவன் கொடுக்கவில்லை, தானே முதல் தலைமை புலவனாய் இருந்து சங்கம் நடத்தவில்லை, தன் மகனான கதிர்வேலவனை கொண்டு தமிழ் வடிக்க வில்லை! குறுமுனி இதற்கு இலக்கணம் வகுக்கவில்லை, அவ்வை இதனை வளர்க்கவில்லை, எம் அங்கயற்கண்ணியை பாடி தமிழ் வளரவில்லை! ஆனா எனக்கு ஒரு டவுட்: தூய மார்கத்லையும் தவ்கீத் ஜமாஅத் ளையும், தமிழன்னை சிலம்பும்,மணியும், வளையும் குண்டலமும் அணிந்த குறளை பிடித்து கொண்டு அரசாட்சி செய்கிறாள் என்ற உவமை ஏற்றுகொள்ள படுகிறதா? எல்லா பள்ளியிலும் தமில்லில் தான் ஓதராங்களா? ஏன்னா தமிழ் கருவறையில் இல்லைன்னு ஒரு கூட்டம் குத்தாட்டம் போடுது! அவிங்க தல ஈரோட்டு மாமா தமிழ் பெண்களையும் தமிழையும் பண்ண அர்ச்சனை ஊருக்கே வெளிச்சம்! ஆனா பல ஆயிரகணக்கான வருடங்களாக தமிழ் பிரபந்தங்கள் பாடாமல் எந்த வைணவ ஆலயங்களிலும் எந்த பூஜையும் செய்யபடுவதில்லை! இப்போ திடீர்னு வனத்துலேந்து குதிச்ச எழவு சாரிபா வினவு, இப்போ உருத தூக்கி வெச்சுகிட்டு எதுக்கு ஓலம் இடுதுன்னு புரியலையே பா!

  2. Tamil tamilnu koovuangale sila tamil medhavigal engappa avanga??? inga paarunga ippo hinduva edhirka uruduku supoort panrranga innum enna ennav try pannunga …

  3. ஓ!!! இந்து முண்ணணி பார்பணீய கட்சீயா!!! சொல்லவே இல்ல!!! வெட்டி ஆபிசர்!!!

  4. நான் ரயிலில் செல்லும்போது ஒரு கிழவர் என்னிடம் இந்தியில் பேச நான் தெரியாதது என்று சொன்னேன் .உடனே அவர் தேசிய மொழி தெரிந்து இருக்க வேண்டும் என்றார் .நான் உடனே நீங்கள் கர்நாடகத்தில் எவ்வளவு நாளாக இருக்கிறார் என்று கேட்டேன் .அவர் 15 வருடங்கள் என்றார் .கன்னடம் தெரியுமா என ,தெரியாது என்றார் .
    நான் பெங்களுரு வந்து 5 வருடம் ஆகிறது கன்னடம் நன்றாக பேசுவேன் ,தேவை என்றல் எதையும் மனிதன் கற்று கொள்ளுவான் என்றேன் .
    இந்தி தேசிய மொழி அல்ல !எந்த சட்டதிலும் அப்படி சொல்லபடவில்லை.வெறி பிடித்தவர்கள் அந்த கருத்தை உருவாக்கி வெற்றி பெறுகின்றனர் என கூற வாயை மூடி கொண்டார்.

    • திரு மனி அவர்களே இதே போன்ட்ர சம்பவம் எனக்கும் யேற்பட்டது.. யென்னிடம் மாட்டியவன் ஒரு மராத்திக்காரன்….முதலில் அசிஙக பட்டான் அந்த ஆட்டொக்காரன் said ” u tamil guys are always rude.,” பிரகு அடி பனிந்தான். ” .at the same time u are the genius n brave people when compare to other part of people in india”

  5. // தமிழ் மொழியே இந்து மொழிதான், தமிழர்கள் இந்துக்கள்தான் என்று காட்டி, முசுலீம்களுக்கு இங்கே இடமில்லை என்று – மொத்தத்தில் பார்ப்பனீயத்தின் இலக்கணத்திற்கு வரலாற்று ரீதியான ஒரு பொழிப்புரை எழுதப்படுகிறது.//

    தமிழர்கள் இந்துக்களாக இருப்பதால்தான், இங்கு மாற்று மதங்களும், நாத்திகமும் வளர்ந்ததை தடுக்காமல், ஒடுக்காமல் அனுமதித்தார்கள்.

    • //தமிழர்கள் இந்துக்களாக இருப்பதால்தான், இங்கு மாற்று மதங்களும், நாத்திகமும் வளர்ந்ததை தடுக்காமல், ஒடுக்காமல் அனுமதித்தார்கள்.//

      U are wrong… Its NOT because tamilians are HINDUS its because TAMILIANS are tolerant they allowed SANSKRIT and HINDUISM(SANSKRI GODS only) into their territory if it would have been any other group of people tey wud have driven out ARYANS and their SANSKRIT long back when the intruded…The same kind of tolerance they are showing towards ISLAM and CHRISTIANITY also .. Y u r so jealous ?? If SANSKRIT speaking GODS can intrude here Y can’t ARABIC and HEBREW speaking GODs can’t intrude ??

      • அதானே, தமிழன் மேல ‘ஆரியன்’ மட்டும் வந்து குதிரை ஏறலாமா.. எறங்குங்கப்பா.. ஏசுவும், முகமதும் தமிழன் முதுகுல ஏறி ரெண்டு ரவுண்டு வரவேணாமா… எறங்கமாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்களே.. தமிழன் முதுகை உங்க பேர்ல பட்டா போட்டா வச்சுருக்கீங்க..

      • // if it would have been any other group of people tey wud have driven out ARYANS and their SANSKRIT long back when the intruded… //

        ..but would have welcomed the missionaries and became christians as the north-east tribals did..?? Wishes are not facts.

        // If SANSKRIT speaking GODS can intrude here Y can’t ARABIC and HEBREW speaking GODs can’t intrude ?? //

        Rome was pagan 2000 years back, will you or any other christian support muslims to go and spread islam in vatican..? Double statndards are not secularism.

        • // The same kind of tolerance they are showing towards ISLAM and CHRISTIANITY also .. //

          Had the tamils became christians by Thomas by some misfortune, would they have allowed anyone to preach Islam..? Remember inquisitions, crusades…

          Had the tamils converted to Islam by muslim armies of Delhi Sulthanate in 1300s, would they have allowed any missionaries to spread christianity..? Death is the punishment for blasphemy and apostasy..

          They were hindus and showed tolerence. This is the fact, whether you like it or not..

          • //Had the tamils became christians by Thomas by some misfortune, would they have allowed anyone to preach Islam..? Remember inquisitions, crusades…/

            That is a question can be answered YES but cannot be proved because we do not have instrument to simulate history.. It can be answered YES because most of the christian majority countries ENGLAN, FRANCE, USA allow spread of ISLAM.. Even some biggest HINDU temples are now built in USA… Whay can’t HINDUS in INDIA be tolerant ?? ..

            Also the big word TOLERANT HINDUS is not because of choice its because of compulsion.. The reason is if HINDUS where not tolerant towards other people groups today INDIA wud not be a HINDU majority countr… The tolerance only made possible to label people who worshippe SUDALAI MADEN, MARIAMMAN as HINDUS and now u are able to boast HINDU COUNTRY.. If HINDUS remained intolerant at the time of independence today INDIA wud have had nearly 450 religions and ISLAM wud have become majority :):):)

            • // That is a question can be answered YES but cannot be proved because we do not have instrument to simulate history..//

              but you were just doing similar thing in your previous post :

              // if it would have been any other group of people tey wud have driven out ARYANS and their SANSKRIT long back when the intruded… //

              for this type of affirmative guess work of you, I showed you that it didnot happen anywhere in TN, Kerala, Karnataka, Andhra or anywhere else in India except remote north-eastern packets of hill tribes.

              I am just countering your logic of Tamils accepting Aryans, Christians, Muslims. I have not yet started countering the Aryan invasion theory so far in this debate..!

              You are arguing as if Tamil Nadu is a guest house. Tamils would have welcomed any visitor.. Muslim tamils / Christian tamils would neither run a guest house nor welcome preachers of other religions..

              // It can be answered YES because most of the christian majority countries ENGLAN, FRANCE, USA allow spread of ISLAM.. Even some biggest HINDU temples are now built in USA… Whay can’t HINDUS in INDIA be tolerant ?? ..//

              We are talking about large scale conversions took place 100 years back and before in Tamil land and in India. The above european countries allowed spread of Islam, based on their new found secular democratic principles of late 19th & 20th centuries and a little decline of the influence of church on these democracies.
              On the other hand, hindu majority India has always been tolerent towards other relegions. It would remain so, if not pushed to the edge by psuedo- secularists like you..!

              // Also the big word TOLERANT HINDUS is not because of choice its because of compulsion.. The reason is if HINDUS where not tolerant towards other people groups today INDIA wud not be a HINDU majority countr..
              The tolerance only made possible to label people who worshippe SUDALAI MADEN, MARIAMMAN as HINDUS and now u are able to boast HINDU COUNTRY.. //

              What compulsion is there for Hindus to be tolerent for millennims..?!

              What do you know about Sudalai Maden, Mariamman..?? Their stories and legends spoken in folklores strongly connect them to the other gods of India. Pilgrimages from north to south, south to north was going on for ages, even before christ.. several sects and groups of Hinduism cannot be considered as mutually exclusive religions as understood (or distorted) by monotheistic eurpean, middle east ‘researchers’.

              // If HINDUS remained intolerant at the time of independence today INDIA wud have had nearly 450 religions and ISLAM wud have become majority :):) //

              Remained intolerent..?! funny, man. Why ‘at the time of independence’ ? Islam would have simply swallowed your ‘450 unconnected lilliputians’ in the past 1000 years.. No east india company, No missionaries, No christianity in India.. hence no necessity of independence..!

              I would like to continue in Tamil for the convenience of others, would you too, please.

        • //..but would have welcomed the missionaries and became christians as the north-east tribals did..?? Wishes are not facts./

          iam saying the same they welcomed christians and musliam as they welcomed aryans..my question is u are okay with aryans why u r tensed only when it comes to christianity and Islam ??

          //Rome was pagan 2000 years back, will you or any other christian support muslims to go and spread islam in vatican..? Double statndards are not secularism.//

          Afcourse they shud allow … If they are NOT allowing i say they are doing a wrong example… Athu vanmaiyaha kandika thakathu

            • அம்பி
              இந்த நீண்ட விவாதத்தின் மூலம் நீங்க சொல்ல வர்றது.தமிழர்கள் இந்துக்களாக இருப்பதால்தான் சகிப்பு தன்மையோட இருக்கிறார்கள்.பிற மத பிரசாரங்களை அனுமதிக்கிறார்கள்.முஸ்லிம் மற்றும் கிறுத்துவராக மாறுகிறார்கள்.
              முஸ்லிமோ,கிருத்துவரோ பிற மத பிரசாரங்களை அனுமதிக்க மாட்டார்கள்.மதம் மாற மாட்டார்கள்.இதுதானே.

              அப்படியானால் என்ன அர்த்தம்.முஸ்லிம்களும் கிருத்துவர்களும் அவரவர் மதத்தில் திருப்தியுடன் நீடிக்கிறார்கள்.இந்துக்கள் இருக்கும் மதம் பிடிக்காமல் மதம் மாறுகிறார்கள்.அப்படி மாறுவதற்கு என்ன காரணம்.சிந்திச்சு பாக்கணும்.மதம் மாற்றங்களுக்கு ஆன்மீக காரணங்களை விட சமூக காரணங்களே அடிப்படையாக உள்ளன.இந்துக்களில் மேல்சாதியினரோ,ஆதிக்க சாதியனரோ பெரும்பாலும் மதம் மாறுவதில்லை.இழிவு படுத்தப்பட்டு தாழ்நிலையில் உள்ளோரே மதம் மாறுகிறார்கள்.தென்மாவட்டங்களில் நாடார் சாதியினர் பெருவாரியாக கிருத்துவத்திற்கு மாறியது இப்படித்தான்.பின்னே அவர்கள் வீட்டு பெண்களை இடுப்புக்கு மேல ஆடை உடுத்த விடாமல் படுத்தினா எப்படி இந்துவா இருப்பாங்க.தலித் மக்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை.அவர்கள் மீதான ஒடுக்குமுறை இன்று வரை ஓயவில்லை.அதனால் அவர்கள் மதம் மாறுவதும் நிற்கவில்லை.ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் V.H .P .ஆடிய ஆட்டம் என்ன,கிருத்துவத்திற்கு மாறிய அந்த மக்கள் உயிரே போனாலும் சரி என்று இந்து மதத்திற்கு திரும்ப மறுத்தார்கள்.

              ஆகவே அம்பி,இந்து மத சகிப்புத்தன்மை என்று பீத்திக்காதீங்க.சொந்த மத மக்களில் ஒரு பகுதியினரை வேசி மக்கள் னு இழிவு படுத்துற மதத்துக்கு சொந்தக்காரர்களான நீங்க மத சகிப்பு தன்மை பற்றி பேசுறீங்க.உங்களுக்கே வெட்கமாக இல்லையா.

              • // முஸ்லிமோ,கிருத்துவரோ பிற மத பிரசாரங்களை அனுமதிக்க மாட்டார்கள்.மதம் மாற மாட்டார்கள்.இதுதானே.

                அப்படியானால் என்ன அர்த்தம்.முஸ்லிம்களும் கிருத்துவர்களும் அவரவர் மதத்தில் திருப்தியுடன் நீடிக்கிறார்கள்.இந்துக்கள் இருக்கும் மதம் பிடிக்காமல் மதம் மாறுகிறார்கள்.
                //

                அன்பு,

                மதமாற்ற ’முயற்சிகளை’ அனுமதித்தால் தானே தெரியும், மதம் மாறுவார்களா இல்லையா என்று..

                // இந்துக்களில் மேல்சாதியினரோ,ஆதிக்க சாதியனரோ பெரும்பாலும் மதம் மாறுவதில்லை.இழிவு படுத்தப்பட்டு தாழ்நிலையில் உள்ளோரே மதம் மாறுகிறார்கள். //

                மேல்சாதியினரும், ஆதிக்க சாதியினரும் மதம் மாறாமலா இரட்டைச் சுடுகாடுகளும், இன்ன பிற பாகுபாடுகளும் நிலவுகின்றன.. தலித்துகள் எல்லாம் மதம் மாறாததற்கு இதுவும் ஒரு காரணம் இல்லையா.. இந்து மதத்தை கேள்வி கேட்டு அதன் அநீதியை மாற்றும் உரிமை தலித்துகளுக்கு உண்டு..

                // சொந்த மத மக்களில் ஒரு பகுதியினரை வேசி மக்கள் னு இழிவு படுத்துற மதத்துக்கு சொந்தக்காரர்களான நீங்க மத சகிப்பு தன்மை பற்றி பேசுறீங்க.உங்களுக்கே வெட்கமாக இல்லையா. //

                இன்னொரு புளுகு.. இதை ஏற்கனவே நண்பர் தோழமையுடன் விவாதித்திருக்கிறேன்.. தெளிவான ஆதாரங்களைக் காட்டுங்கள்..

                • மிக சரியனது உங்கலது பதில் ….. கிருத்துவைர் முஸ்லிம்களும் இங்க ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரிய விரட்டுதாம்…..

                • \\ மதமாற்ற ’முயற்சிகளை’ அனுமதித்தால் தானே தெரியும், மதம் மாறுவார்களா இல்லையா என்று..//

                  இந்தியாவில் மதங்களை பிரசாரம் செய்ய எந்த தடையுமில்லை.இங்கு ஏன் முஸ்லிம்களும் கிருத்துவர்களும் மதம் மாறுவதில்லை.குஜராத் முஸ்லிம்கள் அந்த மதத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக சொந்த இடங்களை விட்டு துரத்தி அடிக்கப்பட்ட நிலையிலும் அந்த மதத்திலேயே நீடிக்கிறார்கள்.ஒரிசாவின் கிருத்துவர்கள் VHP யின் அடாவடிகளுக்கு மத்தியிலும் ”தாய் மதம்” திரும்ப மறுக்கிறார்கள்.

                  \\மேல்சாதியினரும், ஆதிக்க சாதியினரும் மதம் மாறாமலா இரட்டைச் சுடுகாடுகளும், இன்ன பிற பாகுபாடுகளும் நிலவுகின்றன//

                  தாழ்த்தப்பட்டோரோடு ஒப்பிடும்போது மேல்சாதியினரும், ஆதிக்க சாதியினரும் மிக குறைந்த அளவே மதம் மாறுகின்றனர்.அதற்கு காரணம் முந்தய பின்னூட்டத்திலேயே சொல்லி இருக்கிறேன்.மத மாற்றத்தில் ஆன்மீக காரணங்களை விட சமூக காரணங்களே கூடுதலான பங்கு வகிக்கின்றன.

                  \\ இந்து மதத்தை கேள்வி கேட்டு அதன் அநீதியை மாற்றும் உரிமை தலித்துகளுக்கு உண்டு.//

                  இந்து மதம் அநீதியானது என்பதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி.”தீண்டாமை ஷேமகரமானது”ன்னு சொல்லி விட்டு செத்து போன சீனியர் சங்கராச்சாரியின் அநீதியை தலித்கள் எப்படி தட்டிக் கேட்டு மாத்தணும்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்.

                  \\இன்னொரு புளுகு.. இதை ஏற்கனவே நண்பர் தோழமையுடன் விவாதித்திருக்கிறேன்.. தெளிவான ஆதாரங்களைக் காட்டுங்கள்.//

                  எப்படி அம்பி இப்படி கூசாம பொய் சொல்றீங்க.இந்த லட்சணத்துல நான் புளுகுவதாக சொல்றீங்க.நாம் ஏற்கனவே நடத்துன விவாத்துலையே இதற்கான ஆதாரத்தை தந்துருக்கேன்.
                  பார்க்க.https://www.vinavu.com/2012/05/30/kanchi-report/#comment-63207
                  சூத்திரன் யார்.மனு தர்மம் சொல்கிறது.
                  யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன், விபசாரி மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (அத் 8. சு. 415)

                  • // இந்தியாவில் மதங்களை பிரசாரம் செய்ய எந்த தடையுமில்லை.இங்கு ஏன் முஸ்லிம்களும் கிருத்துவர்களும் மதம் மாறுவதில்லை. //

                    இந்துக்கள் மத்தியில் மாற்று மதப் பிரசாரம் நடக்க இயலுவதுபோல் , கிறித்தவர்க்ள் மத்தியில் இஸ்லாமிய பிரசாரமோ, முஸ்லீம்கள் மத்தியில் கிறித்தவ பிரசாரமோ நடக்க முடியுமா, நடந்திருக்கிறதா..?!

                    // எப்படி அம்பி இப்படி கூசாம பொய் சொல்றீங்க. //

                    முதலில் அர்ச்சனையில் ‘சூத்திரர்களை’ இழிவுபடுத்தியதாகச் சொன்னீர்கள்.. அந்தப் பதிவில் அப்படி ஒரு மந்திரம் இல்லை என்று காட்டியாச்சு.. இப்போது நீங்கள் கூறுவது :

                    // சொந்த மத மக்களில் ஒரு பகுதியினரை வேசி மக்கள் னு இழிவு படுத்துற மதத்துக்கு//

                    என்று கூறுவது ‘சூத்திரர்களை’ தான் என்று எண்ணுகிறேன். அதற்கு மனுசாத்திரத்தை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள் :

                    // சூத்திரன் யார்.மனு தர்மம் சொல்கிறது.
                    யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன், விபசாரி மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்கிறவன் (அத் 8. சு. 415) //

                    மந்திரம் இல்லையென்றால் மனு சாத்திரம் என்று மாற்றிக் கொண்டது தவறில்லை..

                    ஆனால் மேற்படி லிஸ்டில், ”விபசாரி மகனும் ஒரு சூத்திரன்” என்பதை, “சூத்திரன் என்றால் விபசாரி மகன்” என்று திரித்து விடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகாதா ..? ஏன் பெரியாரின் இந்த திரிபு வேலை தமிழ் மக்களிடம் பலிக்கவில்லை என்று புரிகிறதா..?

                    விபசாரிகளை பாலியல் சுரண்டலுக்கு உட்படுபவர்கள் என்ற பொருளில் ‘பாலியல் தொழிலாளர்கள்’ என்று அழைப்பதை வைத்து, தொழிலாளர்கள் எல்லாம் விபசாரிகள் என்று யாராவது திரித்துச் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா..?!

                    • இதை பாருங்கள் ஐய்யா,வீட்டை விட்டு வேலையே போயி வேலை செய்யும் பெண்கள் விபச்சாரிகலம்.இதற்கு ஹதீஸ் ஆதாரம் தருகிறார்கள்.

      • Jenil

        Hinduism did not intrude it is the religion of the land. To justify entry of Christianity and islam , the missionaries spread rumour that hindusim is outside religion.

  6. சீமான் கிட்ட இந்த மேட்டரை யாரும் சொல்லலையா? சொன்னா அவரும் இனத் தூய்மை காக்க மொழித் தூய்மை காக்க உருதுவை எதிர்ப்பாரே ?
    யார்னா இந்து முன்னணி காரங்க அவர் கிட்ட இதையும் சொல்லி கட்சி ஆவணத்துல சேர்க்க சொல்லுங்கப்பா !

    • தமிழ் நாட்டில் உருது வளரவில்லையே என ஏங்குபவர்கள் மூலைக்கு மூலை மேடை போட்டு உருது கஜல், கவாலி என்று கலக்கலாம்..

  7. வினவு,
    என்ன மேன்நெனைச்சிட்டுருக்க ! டமில் படிச்சிட்டு எங்கன்னா ரெண்டாயிரம் ரூவாக்கு இஸ்கூல் வாத்தியா வேலை பாக்க சொல்ரியா ! இங்கிலிஸ் படி மேன் ! உலகமே அமெரிக்காகிட்ட போயினு இருக்கு இந்தநேரத்துல இங்கிலிஸ் தெ வெரி யூஸ்புல் லேங்குயேஜ். இதுல டமில், டிராவிடியன் லேங்குயேஜ்,நேசனல் லேங்குயேஜ் டிப்பெரென்ஸ் பாக்காதே ! மன்மோகன் சிங்கு இந்தநாட்டை ஒன் ஆப் அமெரிக்கன் ஸ்டேட்டா சீக்கிரம் மாத்திடுவாரு ! சோ சீக்கிரம் கத்துக்கோ ! இல்ல ஜப்பான் புடிக்கற மாத்ரி இருந்தா ஜப்பனீஸ் கத்துக்கோ !

    • Epic comment keep going… inime tamil tamilnu koovura vetti opicer seeman, vaiko , karunanidhi ellam ellathuyum moodinu kelamba vendiyadhui thaan … tamil is just another language avlo thaaan summa thambattam adikka onnum adhula illa…

      • உங்களுக்கு தெரியல்லைன்னா அதுல ஒண்ணும் இல்லைன்னு அர்த்தமா..?!

  8. தமிழ், உருது, பெங்காலி, தெலுங்கு இவை நாளுமே இயல், இசை, நாடகங்களுக்கு ஏற்ற இனிமையான மொழிகள்.
    எவன் என்ன சொன்னாலும் இவை மாறாது. மொழி என்பது மக்கள் தாமாக ஏற்றுக்கொள்வது, எம்மொழியாக இருப்பினும்.
    மதத்திணிப்பு போல் மொழி திணிப்பு செய்ய முடியாதென்பது என் கருத்து. ஹிந்து முன்னணி இன்னிக்கி ஒன்னு சொல்லும்
    நாளைக்கி இன்னொன்று சொல்லும். இதை விட்டுட்டு இப்போ செல் போன் பேசிக்கிட்டு ஒட்டி பாலதிலேர்ந்து விழுந்த bus
    பத்தி எதாவது எழுதுங்க.

  9. இன்று இந்தி திணிக்கப்படுகிறது என்று சொல்லும் இதே வாய் முகலாய ஆட்சிக்காலத்தில் உருது திணிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லுமா ?

    ஒம்ம யோக்கிதை இந்த வரியில் தெரியுது எழவு!

    “ஆள்வோரின் மொழி என்ற தகுதியில் பாரசீகம் மக்களிடையே மெதுவாகப் பரவ ஆரம்பித்தது.”

    ஆள்வோரின் மொழி என்ற தகுதியில் மக்களிடையே ஒரு மொழி பரவுதாம்! வெளக்கெண்ணை…அது திணிக்கப்பட்ட மொழி என்று சொன்னால் என்னவாம்? நைட்டுக்கு பிரியாணி வாங்கிக்கொடுக்க மாட்டானா உன் “பாய்” ஃபிரண்டு?

  10. மதம் மாறினால் தாய்மொழி மாறுமா?
    தமிழர்களா இருந்தவங்க ஆரியர்கள் வரவால் இந்துவாக மாறுனாங்க, முகலாயர் வரவால் சிலர் இஸ்லாத்துக்கு மாறினார்கள், ஆங்கிலேயர் வரவால் சிலர் கிறிஸ்துவத்திற்கு மாறினார்கள் ஆனால் பலருக்கு தமிழ்மொழியில் பெயர்வைக்க விரும்புவதில்லை அதிலும் இஸ்லாமியர்களில் யாரும் தமிழில் வைப்பதே இல்லை.

    ஆனால் இந்துக்களில் மட்டும்தான் அர்த்தம் தெரியாமல் பல கொச்சையான பெயரை வைக்கின்றனர் . உதாரணம் கந்தன், சரவணன். ‘பாப்பான்’ மட்டும்தான் இந்துங்கர உண்மை தெரியாதவரை இப்படித்தான்…

    கந்தன், சரவணன், சுப்ரமணியர் பெயர்காரணம் தெரிய: http://thathachariyar.blogspot.com/2010/12/blog-post_21.html

    • ’Dhiva’ ன்னு சுத்தமான தமிழ் பேரா வச்சு முருகனை கும்பிடவேண்டியதுதானே…

      • அம்பி,
        ராமன் தேசிய நாயகன்னு கொண்டாடுற பார்ப்பனர்கள் ஏன் ராமலிங்கம் னு பேர் வைப்பதில்லை.அத சொல்லிட்டு திவா தமிழ் பேர் வக்கிரத பத்தி பேசலாம்.அப்படியே ராமலிங்கம்,மகாலிங்கம் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு சொல்றீங்களா.நான் சொன்னால் அப்படி இல்லன்னு கழுவ புடுங்கி சாதிக்கிறீங்க.

        • ராமலிங்கம் என்ற பெயருள்ள பார்ப்பனர்களே இல்லையா..?!! எனக்குத் தெரிந்து 3 பேர் இருக்கிறார்கள். அவர்களை இங்கே கொண்டுவந்து காட்டமுடியாதென்பதால், கூகிளில் ராமலிங்க அய்யர் என்று (ஆங்கிலத்தில் அதிகம் முடிவுகள் வரும்) தேடிப் பார்க்கவும்..

          ராமலிங்கம், மகாலிங்கம் இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு நீங்களே உங்களுக்கு பிடித்த விளக்கமாகக் கொடுத்துக் கொண்டு மகிழவும்.. இந்து மதத்தை இழிவு படுத்தும் முயற்சியில் மற்ற நட்பு மதங்களின் ‘புனிதங்களும்’ வெளிவரும்..!!! இந்த சேறு பூசும் விளையாட்டுக்கு நான் வரலைங்கோ…!!!

          • ஆம்,ராமலிங்கம் அய்யர் என்று கூகளில் பேர் வருகிறது.தவறான தகவல் ஒன்றை உண்மை என நம்பி இங்கு பதிவு செய்ததற்காக வருந்துகிறேன்.

            அந்த பெயர்களின் அர்த்தம் என்னவென்று கேட்டால் நல்லாவே நழுவுறீங்க.ரொம்ப சாமர்த்தியம் காட்டுறதா நெனச்சுகிட்டு அதுக்கு அர்த்தம் சொன்னா மத்த ”நட்பு” மதங்கள் மேல சேறு பூச வேண்டியிருக்கும்னு சமாளிக்கறீங்க.நல்லா இருக்குய்யா உங்க அறிவு நாணயம்.உங்கள் மீதான விமர்சனத்துக்கு இன்னொரு மதத்தின் குறைகள் எப்படி பதிலாகும்.

            சரி அர்த்தம் என்னனு பாக்கலாமா.அத சொல்லி மகிழ்ச்சி அடைய சொல்லி இருக்கீங்க.உண்மையில் அதில் மகிழ்வதர்கு ஏதுமில்லை.சிந்திக்கும் திறனின்றி இப்படியும் பேர் வைக்கிறார்களே என்று வருத்தமே மிஞ்சுகிறது.

            லிங்கம் என்றால் ஆணின் பால் உறுப்பு. ராம என்றால் ராமனின் என்று பொருள்.மகா என்றால் பெரிய என்று பொருள்.

            • லிங்கம் என்பதற்கு பற்பல விளக்கங்கள் உண்டு.. ஆனா இந்து மதம் அசிங்கம் பிடிச்சது, அதனால் இந்த அர்த்தம்தான் சரி என்ற முன்முடிவுடன் இருப்பது ஒரு வகையான ‘பகுத்தறிவு’.

    • //தமிழர்களா இருந்தவங்க ஆரியர்கள் வரவால் இந்துவாக மாறுனாங்க, முகலாயர் வரவால் சிலர் இஸ்லாத்துக்கு மாறினார்கள், ஆங்கிலேயர் வரவால் சிலர் கிறிஸ்துவத்திற்கு மாறினார்கள் ஆனால் பலருக்கு தமிழ்மொழியில் பெயர்வைக்க விரும்புவதில்லை அதிலும் இஸ்லாமியர்களில் யாரும் தமிழில் வைப்பதே இல்லை. //

      This is the question i asked Ambi in the first.. If Tamilians can become HINDUS why can’t they become MUSLIMS or HINDUS… But he don’t want to answer it so deviating the topic to VATICAN and SAUDI…

  11. தமிழ்நாட்டில் மிக குறைந்த சதவீத முஸ்லீம்கள்
    தவிர்த்து மிக பெரும்பான்மையான முஸ்லீம்களின் தாய்மொழி
    தமிழ் தான் என்பது பண்ணாடைகளே உங்களுக்கு தெரியுமா தெரியாதா?
    இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்று கேள்விப்பட்டதுண்டா?
    தமிழர்களில் பெரும்பான்மையோர் சைவர்கள்.
    சிறுபான்மையோர் முஸ்லீம்கள்.இதில் இந்து,சந்து,பொந்து
    எங்கிருந்து வந்தது வெண்ணைகளா?
    எப்போதும் போல் எம் தமிழை நீச பாசை என்று சொல்லிவிட்டு
    சுவாஹா சொல்லும் வேலையைப்பாருங்கள்.

    • உணர்ச்சிவசப்படாதீங்க பாய்.. சைவர்கள் எல்லாம் பயந்துடப் போறாங்க..

      • அவர் சொல்றது காவி கும்பலை.அதை ஏன் சைவர்கள் னு கோர்த்து விடுறீங்க.உங்களுக்கு குறுக்கு புத்தி நல்லாவே வேலை செய்யுது.இதுதானே ஆர்.எஸ்.எஸ்.காலம் காலமாக கடைப்பிடிக்கும் யுக்தி.பார்ப்பனர்கள் மீதான விமரிசனம் என்றால் அதை அனைத்து இந்துக்கள் மீதானது என திரிப்பது.மோடியை விமர்சித்தால் குஜராத்தி மக்களை விமர்சிப்பது என திரிப்பது இப்படி நல்லாவே அந்த நரித்தந்திரத்தில் தேறிட்டீங்க.

        • சைவர்கள் இந்துக்களா, முஸ்லீம்களான்னு எனக்கு வந்த சந்தேகம், சைவர்களுக்கும் வந்துட்டா பயந்து போக மாட்டாங்களா.. எப்படியோ ரெண்டு பேரும் சிவனேன்னு ஒண்ணாத் தொழுகை நடத்தினால் நல்லாத்தான் இருக்கும்..!!!

          • \\சைவர்கள் இந்துக்களா, முஸ்லீம்களான்னு எனக்கு வந்த சந்தேகம்,//

            இப்படி ஒரு சந்தேகம் உங்ககுக்கு வருதுன்னா அதுக்கு ஒரே ஒரு பதில்தான்.

            உங்களோடு விவாதம் பண்ணி ஒருவகையான முரண் நட்பு ஏற்படுத்திக் கொண்ட நண்பன் என்ற உரிமையில் சொல்கிறேன்.

            மனதை திடப்படுத்திக்காங்க அம்பி.உண்மையை சொல்லித்தான் ஆகணும்.

            நிலைமை கை மீறி போறதுக்குள்ள நீங்க ஒரு நல்ல சைக்கியாட்ரிஸ்ட பாருங்க.

  12. மாட்டுக்கறியும்,மட்டன் குருமாவும் சாப்பிடுற பாயுங்க,அதையே
    சாப்பிடுற நானும் உணர்சிவசப்படுறேன்.ஓகே.வெறும் பருப்பும்,
    தயிரும் சாப்பிடுற நீ ஏன் அம்பி உணர்சிவசப்படுற?

  13. இந்தி அதிகாரபூர்வமான மொழி ஆனதற்கு காந்தி, நேரு காரணம் என்று கட்டுரை கூறுகிறது. காந்தியை இதில் சேர்ப்பது தவறு. இந்துஸ்தானி தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று கடைசிவரை வலியுறுத்தி வந்தவர் காந்தி. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. கட்டுரையைப் படிக்கும்போது இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வந்தன. உருது இஸ்லாமியர்களின் மொழி என்று எண்ணுபவர்கள் இந்துக்கள் மட்டுமல்ல, அறியாமையால் இப்படி எண்ணிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களும் உண்டு, மொழிகள் பற்றிய சரியான புரிதல் நம் பள்ளிக்கல்வி நூல்களில் இருந்ததில்லை. மற்றொரு விஷயம், பஞ்சாபியர்களின் உருது அறிவு. பஞ்சாபியர்கள் என்று நான் குறிப்பிடுவது, சீக்கியர்களையும் உள்ளடக்கிய பஞ்சாபியர்கள் பலர் உருது மொழி வல்லுநர்களாக இருக்கிறார்கள். உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் உருது மொழி இஸ்லாமியர்களின் மொழியாக மட்டும் இல்லை, இந்துக்களும் சரளமாகப் பேசுகிறார்கள். அது மட்டுமல்ல, உருது எழுத்து வடிவம் பின்தங்கிக் கொண்டிருக்கும் காரணத்தால், உருது பத்திரிகைகளும் நூல்களும் ஆங்கில எழுத்து வடிவிலும், தேவநாகரி – இந்தி – எழுத்து வடிவிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிகின்றன. பாகிஸ்தான் உருதுவை ஆட்சிமொழி என்று அறிவித்ததால் இங்கேயும் அது இஸ்லாமியர்களின் மொழியாக முத்திரை குத்தப்பட்டு விட்டது. விஷயம் மொழியிலிருந்து திசைதிரும்பி மதத்தை அடைந்து விடுகிறது.
    காந்தி கூறியதை கீழே தர விரும்புகிறேன்.
    I have said it time and again, and I repeat it, that Hindustani alone can become the common language of all Indians. Neither Hindi nor Urdu can take that place. I do not claim to be proficient in Hindi, but I do understand Hindi well and to some extent Urdu also. I used to attempt conversation in Urdu with my friend Maulana Abdul Bari of Firangi Mahal, Lucknow and other friends, and even now I try to speak chaste and correct Urdu with Muslim friends.
    Till all the Hindus and Muslims in our country willingly accept one language and one script, it is essential that we learn both Hindi and Urdu. Whether or not the Muslims learn Hindi and Devanagri, we must learn the Urdu language and script. At the moment we have also to atone for our crimes against the Muslims. Hence it is all the more necessary that we demonstrate our affection and sympathy for them by learning their language and script. From tomorrow onwards I wish to see sign-boards in Hindi and Urdu wherever I go.
    – Prayer Meeting at Goriakhari, 19 March 1947

  14. இந்தியே தேசிய மொழியாக இருக்க வேண்டும், என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது – தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எதிர்ப்பையும் மீறி. நேருவின் தனிப்பட்ட கருத்து இதற்கு மாறாக இருந்தது. ஆதாரமாக அவரது கடிதம் இங்கே –
    My dear Brelvi,
    I have your telegram about Hindi-Hindustani. I agree with you that this move to oust Hindustani is unfortunate and undesirable. I have been trying to combat it, not with great success I am sorry to say. Unfortunately the partition business has roused passions among the Hindus and they are acting in a narrow short-sighted way in many respects.
    22 July 1947

  15. உருது மற்றும் அரபு மொழிகள் தமிழ் மொழி சர்ந்தவைகள் அல்ல! தமிழுக்கும் இந்த மொழிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழில் பேசுகிற முஸ்லீம்கள் தமிழில் பெயர் வைப்பதில்லை.உருது அரபு மொழியில்தான் பெயர் வைக்கிறார்கள். அதேபோல் கிருத்துவர்களும் தமிழில் பெயர் வைப்பதில்லை. ஆகையால் இவர்களை தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது!!!

    • இதையும் சேர்த்துக்கங்க, பெரும்பான்மையான இந்துக்களும் தமிழில் பேர் வைப்பதில்லை, ஆகையால் இவர்களையும் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது, அப்ப யார்தாங்க தமிழன்!!!

  16. Tell me if what i inferred from this essay is correct or not.. Urdu should not be opposed by tamils even though it does not have origin in South India but Hindi should be.. Because Hindi is the language of hindus and Urdu is not.. Is it what you want to convey vinavu?
    So if above question’s answer is yes, Hindi opposition organized by periyar is rationalist movement, but Urdu opposition organized by Tamil hindus is racist.. Adhathaane solla vareenga? No better example of ‘oru kanla vennai.. Maru kanla sunnaambu’

  17. Principle of Scheduling Languages or Grouping: Non-Scheduled Languages with Scheduled Languages

    FAIRNESS demands uniform criteria when related languages or associated dialects are grouped with a major language or treated as Non-Scheduled Languages. It is noticeable that with the exception of Bhili, Ho, Khandeshi, Khasi, Mundari and Oraon—all other Non-Scheduled Languages have much smaller number of speakers. A fair policy should be to have a cut-off at one million so that if a distinct language if spoken by more than one million speakers, its data should be recorded separately and it should not be treated as a dialect of another language, whether Scheduled or Non-Scheduled, unless it is indeed a dialect with no grammar or literature of its own. Similarly all grouped languages, which have more than the 10 million speakers, should be given the status of Scheduled Languages. Bhojpuri, Magadhi, Rajasthani and Chhattisgarhi fall in this category. http://www.mainstreamweekly.net/article1094.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க