கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 15
”ஜிகாத் என்றால் புனிதப் போர். இந்த ஜிகாத் ‘தாரூல் ஹாப்’ நாடுகளின் மீது அங்கு உள்ள முசுலீம்களால் வெளிநாட்டு (தாருல் இஸ்லாம் நாடுகளின்) முசுலீம்களின் உதவியால் நடத்தப்படும். இசுலாத்தை நம்பாதவர்களைக் கொன்று குவித்து, அவர்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்து, பெண்களை அபகரித்து, கோயில்களைத் தரைமட்டமாக்கி (கொள்ளையில் ஐந்தில் ஒரு பங்கு இசுலாத்திற்கு போக வேண்டும். அபகரிக்கப்பட்ட பெண்கள் உட்பட) அந்த நாட்டை முசுலீம் நாடாக மாற்ற நடத்தப்படும் புனிதப் போருக்குப் பெயர் ஜிகாத் – ஜிகாத்தில் ஈடுபட வேண்டியது ஒவ்வொரு முசுலீமின் கடமை.”
– மதமாற்றத் தடை சட்டம் ஏன்?
இந்து முன்னணி வெளியீடு – பக்: 26, 27.
ஒவ்வொரு முசுலீமும் கொலைகாரன், கொள்ளைக்காரன், காமவெறியன் என்று இந்து முன்னணி கூறுகிறது. நீங்கள் சந்திக்கும் முசுலீம்கள் அப்படித்தான் உள்ளனரா? வாசகர்கள் பரிசீலிக்க வேண்டும்.
குர்-ஆன் மற்றும் இலக்கியங்களில் ஜகாத், ஜிகாத் என இரண்டு வார்த்தைகள் குறிப்பிடப்படுகின்றன. ஜகாத் என்பதன் பொருள் தன் இதயத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள முசுலீம் மக்கள் செலுத்தும் வரியாகும். முசுலீம் அல்லாதவரிடமும் இவ்வரி வசூலிக்கப்பட்டது. நாட்டின் நலிவடைந்த பிரிவினருக்குச் செலவழிப்பதற்காக இசுலாமிய அரசுகள் இவ்வரியைப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர். இந்தியாவின் மொகலாய மன்னர்கள் வசூலித்த ஜசியா வரியும் இத்தகையதே.
அடுத்து, உலகிலுள்ள எல்லா அரசர்களும், அரசுகளும் தாம் வென்ற நாடுகளில் கிடைத்த செல்வத்தை தம் வீரர்களிடையே பங்கிட்டுக் கொண்டனர். அந்த வழக்கம் இசுலாமிய மன்னர்களிடையேயும் இருந்தது. அதிலும் ஐந்தில் ஒரு பங்கு அரசின் சமூகச் செலவினங்களுக்காகக் கொடுக்கப்பட்டது. ‘ஜிகாத்’ எனப்படும் புனிதப்போர் மெக்காவில் ஒடுக்கு முறைகளுக்கு ஆளாகியிருந்த முசுலீம் மக்களை மீட்பதற்காக மதினாவிலிருந்து நபிகள் தலைமையில் முசுலீம்கள் சென்ற, நடத்திய தற்காப்புப் போரேயன்றி ஆக்கிரமிப்புச் சண்டையல்ல.
நபிகளுக்குப்பிறகு விரிவடைந்த இசுலாமியப் பேரரசு பல ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தினாலும் அதற்கு காரணம் மதமோ, ‘ஜிகாத்தோ’ அல்ல. ஏனைய அரசுகள் தத்தமது அதிகாரத்தையும், செல்வத்தையும் பெருக்குவதற்காக நடத்திய படையெடுப்புக்களைத்தான் இசுலாமிய அரசர்களும் நடத்தினர். மற்றபடி மாற்று மதத்தவர்கள், சிலை வழிபாடு செய்பவர்களைப் பாதுகாத்து மதிக்கும்படி குர்ஆனில் ஏராளமான வசனங்கள் உள்ளன.
அதன்பின் பல இசுலாமிய நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் தங்களது போர்களுக்கு ‘ஜிகாத்’ என்ற மதச்சாயம் பூசியே மக்களை அணி திரட்டின. இந்த நூற்றாண்டிலும் இதைப்பார்க்க முடியும். அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்த ஈரான், ரசிய ஆதிக்கத்தை எதிர்த்த ஆப்கானிஸ்தானின் முஜாகிதீன்கள், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த காலனிய நாடுகளின் முசுலீம்கள் அனைவரும் தங்களது போரை ‘ஜிகாத்’ என்றே அழைத்தனர். மத விளக்கப்படி அவை ‘ஜிகாத்தா’ இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இந்தப் போர்களின் சாரம் வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிரான உரிமைப்போர் என்பதே முக்கியம்.
இதுவன்றி அமெரிக்காவை எதிர்க்கும் பின்லேடன் – தாலிபான் மற்றும் அல் – உம்மா போன்ற இசுலாமியத் தீவிரவாதிகளும் தங்களது நடவடிக்கைகளை ஜிகாத் என்கின்றனர். ஆனால், இந்த விளக்கத்தை பெரும்பான்மை முசுலீம்களும், மிதவாதிகளும் எதிர்க்கின்றனர். இப்படி ‘ஜிகாத்துக்கு’ வேறுபட்ட பல விளக்கங்கள் இருப்பினும், இந்துமத வெறியர்கள் கூறும் அவதூறு விளக்கம் வரலாற்று ரீதியாகவே பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்துக் கோவில்களுக்கும் – பார்ப்பனர்களுக்கும் இனாம், மானியம் வழங்கியும், வேதம் – கீதை – பாரதம் போன்றவற்றை பாரசீகத்தில் மொழிபெயர்த்தும் பல மொகலாய மன்னர்கள் செய்திருக்கின்றனர். இதனாலேயே இவர்கள் யாரும் மதநீக்கம் செய்யப்படவில்லை. இப்படி ஏனைய சமூகங்களுடன் உறவு கொண்டு புதியவற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் பாரசீக – அராபிய அறிஞர்களிடம் வியப்பூட்டும் வகையில் இருந்தது. அதனால்தான் மத்திய காலத்தின் அறிவியல், மருத்துவ, கலைத்துறைச் சாதனைகளும், சிகரங்களும் இவ்வறிஞர்களிடமிருந்து தோன்றின.
ஆனால், மதத்தில் இல்லாத விளக்கத்தை ஜிகாத்துக்குள் புகுத்தி, மக்களின் மத உணர்வுகளுடன் விளையாடி அவர்களை அடக்கி ஒடுக்கவே அரபு ஷேக்குகள் முயல்கின்றனர். அதனாலேயே பல்வேறு இசுலாமியக் குழுக்களுக்குப் பொருளுதவி செய்து ‘ஜிகாத்தை’ ஆதரிக்கும் புனிதர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். இன்னொரு புறம் அமெரிக்காவுடன் பொருளாதார உறவுகளை வைத்திருக்கும் கைக்கூலிகளாகவும் இருக்கின்றனர். எனவே, இசுலாமிய ஆளும் வர்க்கங்களிடம் இருக்கும் ‘ஜிகாத்’ இசுலாமிய மக்களிடமும், மதத்திடமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
1947 பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், பங்களாதேசம், இந்தோனேசியா போன்ற முசுலீம் நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் கூறுவதுபோல மாற்றுமத கோவில் இடிப்பு, மதமாற்றம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற ‘ஜிகாத் போர்’ எதுவும் நடக்கவில்லை. அப்படி நடந்த ஓரிரு கலவரங்களும் பாபர் மசூதியை இந்துமத வெறியர்கள் இடித்ததன் எதிர் விளைவாகத்தான் நடந்தன. முசுலீம்கள் சிறுபான்மையாக உள்ள இந்தியா, இலங்கை போன்ற எந்த ஒரு நாட்டிலும் யாரும் ஜிகாத் நடத்தவில்லை.
பங்களாதேசம் சென்று வந்த காஞ்சி சங்கராச்சாரி அங்கே ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கோயில்கள் இருப்பதாகவும், தான் சென்றுவந்த ஒரு காளி கோயிலைப் புதுப்பிக்க அரசே ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் ஜுனியர் விகடனுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். அங்கே இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவதாகவோ, இந்துக்கள் கொல்லப்படுவதாகவோ இருந்தால் அதை வெளியிடுவதில் சங்கராச்சாரிக்குத் தயக்கமோ தடையோ இருக்க முடியாது.
ஆனால், இந்துமதவெறியர்கள் வாழும் இங்கேதான் 1947 பிரிவினைக்கு முன்னும், பின்னும் இன்று வரையிலும் கலவரங்கள், மசூதி இடிப்பு, கொலை, சர்ச் மீது தாக்குதல், கன்னியாஸ்திரி கற்பழிப்பு, பாதிரி எரிப்பு போன்றவைகள் நாள் தவறாமல் நடக்கின்றன. இதன் எதிர் விளைவாகவே இசுலாமியத் தீவிரவாதம் தோன்றியது. எனவே இந்துமதவெறியர்கள் கூறுவது போன்ற (ஜிகாத்) புனிதப் போரில் முசுலீம்கள் ஈடுபடவில்லை. மாறாக பார்ப்பன – மேல் சாதியினரும், அவர்களின் பிரதிநிதிகளான இந்துமத வெறியருமே ஈடுபட்டுள்ளனர்.
சிறுபான்மையினருக்கு எதிராத மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சாதியினர் அனைவரின் மீதும் அன்று முதல் இன்று வரை இந்த ‘தரும யுத்தம்’ தொடர்கிறது. ஜிகாத் என்ற சொல்லுக்கு வேண்டுமானால் பலர் பலவித விளக்கங்கள் தரமுடியும். ஆனால், பார்ப்பனீயத்தின் இந்த தர்ம யுத்தத்திற்கு வேறு விளக்கமே கிடையாது. பார்ப்பன இலக்கியங்களும், நேற்றைய – இன்றைய வரலாறும் அதன் சாட்சியங்களாக இருக்கின்றன.
சாமி கும்பிடாவிட்டாலும், விரதமிருக்காவிட்டாலும் உயர்சாதி இந்துக்கள் இந்த தருமயுத்தக் கடமையிலிருந்து தவறுவதில்லை. இப்படி அடுத்தவனைத் துன்புறுத்துவதற்கும், இழிவுபடுத்துவதற்கும் அவர்கள் குற்ற உணர்வு ஏதும் அடைவதில்லை. ”குல தர்மத்தை நிலைநாட்டக் கொலை செய்ய வேண்டியிருந்தாலும் அதற்காக வருந்தாதே” என்கிறது கீதை. அதனால்தான் சாதி ஆதிக்கம் என்பது இந்துக்களின் மதஉணர்வு என்கிறார் அம்பேத்கர். எனவே ஜிகாத் என்ற பெயரில் முசுலீம் மக்களுக்கெதிராக அவர்கள் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் சாதிவெறி கொண்ட இந்துக்களுக்கும், குறிப்பாக பார்ப்பன இந்துமத வெறிக்கும்பலுக்குமே பொருந்தும்.
தொடரும்
_________________________இதுவரை …………………………………………..
- பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
- பாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?
- பாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
- பாகம் 4 – தீண்டாமையை ஏற்றுக்கொள்! இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்!!
- பாகம் 5 – கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்!
- பாகம் 6 – வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?
- பாகம் 7 – ஆண்டவனின் வறுமையா? ஆலயக் கொள்ளைக்கு உரிமையா?
- பாகம் 8 – கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி!
- பாகம் 9 – ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!
- பாகம் 10- வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்?
- பாகம் 11 – ‘இந்து கடையிலேயே வாங்கு’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு?
- பாகம் 12 – சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?
- பாகம் 13 – சிறுபான்மையினர் கமிசனைக் கலைக்கக் கோரும் ‘மனித உரிமை’ப் பற்றாளர்கள்!
- பாகம் 14 – கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா?
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
கீதையில் இந்த பாடல் ஆரம்பிக்கும் இடமே போர் பற்றிய அர்ஜுனனின் சுணக்கத்திற்கு காரணம் என கருதுகிறேன் ஆனால் நீங்கள் வலிந்து சொல்லும் காரணத்துக்கு உரிய ஆதாரம் இருக்கா
http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-1
http://temple.dinamalar.com/news_detail.php?id=6031
//குல தர்மத்தை நிலைநாட்டக் கொலை செய்ய வேண்டியிருந்தாலும் அதற்காக வருந்தாதே” என்கிறது கீதை. அதனால்தான் சாதி ஆதிக்கம் என்பது இந்துக்களின் மதஉணர்வு என்கிறார் அம்பேத்கர். எனவே ஜிகாத் என்ற பெயரில் முசுலீம் மக்களுக்கெதிராக அவர்கள் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் சாதிவெறி கொண்ட இந்துக்களுக்கும், குறிப்பாக பார்ப்பன இந்துமத வெறிக்கும்பலுக்குமே பொருந்தும்.//
இதற்குரிய பாடல் விளக்கம் இருக்கிறதா
முஸ்லிம் எல்லோரும் கொலைக்காரன் கிடையாதுதான்… ஆனா இவனுங்க எதுக்கு மதத்தீவிரவாதத்தை ஆதரிக்கனும்… உலகத்தில் பிரச்சனையும், குழப்பமும் முஸ்லிம்களால தான்… அவனுங்க இருக்குர நாடுங்கள் பாத்தாலே புரியும்…
அவனுங்களுக்கு சொரனை இருக்கு எதுத்து போராடுறான். இந்தியன், நமக்குதான் எதுவும் கிடையாதே நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம். நக்குனமா தூங்குனமான்னு இருக்கனும். நான் காலை நக்குவதைப் பற்றி சொன்னேன்
குழப்பம் இல்லாத நாடே கிடையாது,இதில் முஸ்லிம்களை குறை சொல்வது நியாயம் இல்லை, முசுலிம்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை இது காட்டுகின்றது
நீங்கள் சொல்வது நல்ல வேடிக்கை. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் குழப்பமின்றியே இருந்தன. எப்போது சிரியாவிலிருந்து அகதிகளை ஏற்றுக் கொண்டனரோ அன்றிலிருந்து அந்த நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. தற்போது உலகில் எங்கெல்லாம் முஸ்லீம்களுக்கு அடைக்கலம் வழங்கப்படுகிறதோ அங்கெல்லாம் நிம்மதி இல்லாமல் போகின்றது. அகதியாய் வந்தவர்களை ஏற்றுக் கொண்டதற்கு அவர்கள் காட்டும் நன்றி விசுவாசம். அப்பப்பா நினைத்தாலே புல்லரிக்கின்றது.
// ‘ஜிகாத்’ எனப்படும் புனிதப்போர் மெக்காவில் ஒடுக்கு முறைகளுக்கு ஆளாகியிருந்த முசுலீம் மக்களை மீட்பதற்காக மதினாவிலிருந்து நபிகள் தலைமையில் முசுலீம்கள் சென்ற, நடத்திய தற்காப்புப் போரேயன்றி ஆக்கிரமிப்புச் சண்டையல்ல. //
அப்புறம் என்னாச்சு..? எல்லா மெக்கா முசுலீம்களையும் ஒடுக்குமுறையிலிருந்து மீட்டுட்டாரா ? எல்லா மெக்கா மக்காவையும் முசுலீமாக்கிவிட்டார், ஒரு காஃஃபிர் கூட மக்காவில் இருக்கவில்லைன்னு எல்லாம் பெருமையா சொல்லிக்கிறாங்களே.. எப்டியோ, நீங்க சொன்னா கட்டாயமா இது தற்காப்புப் போர்தானுங்கோ.. நபிகள் ஜிந்தாபாத்..
நீங்க சொல்றதெல்லாம் சரி தான் வினவு. மதங்கள் படுகொலைகளை நியாயப்படுத்துகிறது தான். ஆனால் உங்க சௌகர்யத்துக்கேற்ப்ப, முட்டாள்தனம்மா – அதை இன்றும் படுகொலைகளை நியாயப்படுத்துபவர்களை பற்றி சொல்லல. ரஷ்யாவிலும் ஜிகாத் இருக்கு. சீனாவிலும் ஜிகாத் இருக்கு. ஆனா அங்க பகவத்கீதையும் இல்ல. பார்ப்பணியமும் இல்ல. கம்யூனிஸ்ட் இருக்கு. மூலதனம் இருக்கு. அங்க புனித போருக்கும், மத மாற்றத்துக்கும் என்ன காரணம். கம்யூனிஸ்டா இருக்கிறதை விட முக்கியம் மனுஷனா இருப்பது. முதலில் நேர்மையா எழுத பழகுகுங்க. உங்க பங்குக்கு குண்டு வைக்காதீங்க.
நேசன்,
ஜிகாத்தே இருக்காதுன்னு யாரு சொன்னா! அது ஒடுக்குபனுக்காகவா ஒடுக்கப்பட்டவனுக்காகவா என்பதுதானே முக்கியம்.
///உங்க பங்குக்கு குண்டு வைக்காதீங்க….////இதை இதைத்தான் நானும் சொல்லவந்தேன். வினவு ஹிஸ்டீரியா பேஷண்டு மாதிரி…கரண்டை கம்பியை புடிச்சவன்மாதிரி உளறிவிடுவதில் மன்னன்…
//நீதி, மதம் , அரசியல் சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் , வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதை கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமாக ஏமாளிகளாகவும் தம்மை தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர் , எப்போதும் இருப்பார்கள், பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் , அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்ட அது நிலைநிருத்தப்பட்ட்டு வருகிறது. சீர்திருத்தங்கள் , மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள்.” லெனின்
” மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய் களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் ”
—————————————————————
இதில இஸ்லாம் மட்டும் விதிவிலக்கு இல்லை பாஸ்
இஸ்மாயிலின் இஸ்லாமியத்தை அமைக்கத்தான் வினவு போராடிக்கொண்டிருக்கிறதா என்ன?
உங்களுடைய புரிதல்கள் மார்க்சியத்தை நாலு செவத்துக்குள் படிப்பதினால் ஏற்படும் பலஹீனங்கள்.
கரிபால்டி ஊருக்கு புதுசா?
@@ மார்க்சியத்தை நாலு செவத்துக்குள் படிப்பதினால்@@
தப்பு தப்பு, மதம்+மார்க்சியம் னு கூகுள்ல தேடி அதுல வர ரிசல்டை படிச்சுக்கூட பார்க்காம காப்பி பேஸ்டு பண்ணுவதுன்னு இருக்கனும்.
தீர்ப்பை மாத்திச் சொல்லு!
பார்ப்பன பருப்புகளின் வருகை போதிய அளவு இல்லையே.
ரொம்ப சீக்கிரம் வந்துட்டேனோ?
பாய்ங்க கூட்டத்தையும் காணோம்.
என்னாச்சு இவங்களுக்கு?
hi,
இந்துத்வவாதிகள் முஸ்லிம்கள் பற்றி கூறுவதால் மட்டும் அது தவறு ஆகி விடாது.
மதவாதிகள் அனைவருமே ஒன்று என்பதால் அவர்களின் முஸ்லிம் என்பதற்கு பதில் இஸ்லாம் என கருத்திடுவது பொருந்தும்.
முஸ்லிம்கள் அனைவரும் ஜிகாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்பது எவ்வளவு தவறோ அதே அளவு இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்பதும் தவறாகும்.
தமிழ் நாட்டில் வாழும் ஒரு சராசரி முஸ்லிமுக்கும்,சராசரி இந்து கிறித்தவருக்கும் வித்தியாசம் கிடையாது என்பது உண்மைதான்.சராசரி முஸ்லிமுக்கு குரான்,ஹதிது,ஷாரியா பற்றி தெரியாது என்பதுதன் இதன் காரணம்.
இஸ்லாம் என்பது ஒரு முற்று முழுதான உலக முழுமைக்கான ஆன்மீக போர்வையில் உள்ள அரசியல் இயக்கம் ஆகும்.
ஜிகாத் என்பது முஸ்லிம்களின் கருத்தின்படி என்ன?
உலக முழுதும் இஸ்லாமை ப்ரப்ப ,ஷாரியா சடம் அமல்படுத்த செய்யும் முயற்சி ஆகும்.
இதனை எந்த விதத்திலும் செய்யலாம்.சிறுபான்மையாக இருக்கும் போது மத சார்பின்மை என்பதும்,பெரும்பானமை ஆனால் ஷாரியா மீதான மத ஆட்சி வேண்டும் என்பதும் ஒரு வகை ஜிகாத்தே ஆகும்.
பதிவுலகில் உள்ள இஸ்லாமியா தாவாவாதிகளில் எத்தனை பேர் உலக முழுதும் ஷாரியா சட்டம் இல்லாத இஸ்லாம் மட்டும் இருக்க வேண்டும் என ஒத்துக் கொள்வார்கள்?.
ஆகவே ஷாரியாவை எதிர்ப்பதில் அனைவருமே முனைய வேண்டும்.
இந்தியாவில் ஷாரியா அமல்படுத்த ஷாரியா4ஹிந்த் என்னும் இயக்கம் நடத்தி வரும் அன்ஜீம் சவுத்த்ரி இதற்காக ஜிகாத் அறைகூவல் விடுப்பதும் அறியுங்கள்
http://www.anjemchoudary.com/press-releases/the-shariah-4-hind-campaign-will-continue-until-islam-rules-in-dia
ஜிகாத் என்பது ஷாரியா அமல்படுத்தும் முயற்சி!!!!!!!!!!!!!!!!
ஷாரியா இருந்தால் குற்றம் குறையும்,பொருளாதாரம் சிறக்கும்,சமரசம் மலரும்,பலதார மணம் விபசாரத்தை குறைக்கும் என்றெல்லாம தாகியா திலகங்கள் தமிழ்மணத்தில் மணம் பரப்புவது அறிய மாட்டீரா!
திருகோமகன்,”இஸ்லாம் என்பது உலகம் முழுமைக்குமான ஆன்மீக போர்வையில் உள்ள அரசியல் இயக்கம்” எஙிறீர்கள்.போர்வை தலையனை எல்லாம் இல்லை.வெளிப்படையாகவே இஸ்லாம் என்பது ஆன்மீகம் அரசியல் குடும்பவியல் நிர்வாகவியல் அனைத்து துறைகளிலும் வரையறுத்த கொள்கை திட்டங்களை கொண்ட மார்க்கமாகவே இருக்கிறது.தன்னை ஏற்றுக்கொண்ட ஆட்சியாளர்கள் பொதுமக்கள் ஆகியோரிடம் முற்றிலும் தன் கொள்கையின் படி கட்டுப்பட்டு நடத்தலையே எதிர்பார்க்கின்றது.இதில் போர்வை ஜமுக்காளம் போன்ற எந்த ஒளித்தல் மறைத்தலும் இல்லை.”ஷரியா சட்டம் இல்லாத இஸ்லாம் என்பதை ஒப்புக்கொள்வார்களா?” எஙிறீர்கள்.ஷரியா சட்டம் இல்லாத இஸ்லாம் என்றால் என்ன? ஷரியா சட்டம்தானே இஸ்லாம்.ஷரியா சட்டத்தை ஏற்றுக்கொண்டவந்தான் முஸ்லிம்.எங்களுடைய திருமணம் வியாபாரம் உணவு உடை வழிபாடு கடவுள் கோட்பாடு பாகப்பிரிவினை இன்னும் பல குடும்பவியல் சட்டங்கள் அனைத்திலும் ஷரியாவை ஏற்றுக்கொண்டுதான் முஸ்லிம்களாக இருக்கிறோம்.ஒரு முஸ்லிம் வட்டிகடை நடத்த மாட்டான். சாராயஆலை தொடங்க மாட்டான். சாராய கடையை ஏலத்திற்க்கு எடுத்து வியாபாரம் செய்யமாட்டான்.எதனால்? அவன் ஏற்றுக்கொண்ட ஷரியா இவற்றை அவனுக்கு தடை செய்து இருக்கின்றது.இதுதான் ஷரியா.இது தனி ஒரு முஸ்லிமுக்கு ஷரியா விதிக்கும் சட்டங்கள்.இதுவே ஒரு இஸ்லாமிய அரசுக்கு ஆட்சியாளனுக்கு அவ்னுக்கு தகுந்த சட்டங்கள் இருக்கிறது.இதில் எதிலும் நிர்பந்தம் இல்லை.உலகம் முழுக்க எத்தனையோ இஸ்லாமிய, அறிவிக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளன.எல்லா நாடுகளிலும் ஷரியா சட்டம் நூற்றுக்கு நூறு அமலில் உள்ளனவா? அது அந்த நாடுகள் அந்த நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டிய ஒன்று.வகாபி நாடு வகாபி நாடு என்று அலறுகிறீர்களே அங்கே ஷரியா சட்டம் அமலில் இருப்பதாக சொல்லப்படுகிறது.உண்மையில் அங்கே அசகுபிசகாமல் அதிகாரவர்கம் தொடங்கி சாமான்ய மக்கள் வரை இந்த சட்டம் சரியான முறையில் அமுல்படுத்தப்படுகிறதா என்பது விவாதத்திற்க்குரிய ஒன்று.ஆனாலும் அங்கிருக்கும் மாற்றுமத மக்கள் இந்த ஷரியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கிற அவாள் கள் தான் அங்கேயும் பெரிய பொறுப்பு பதவிகளில் இருக்கிறார்கள்.ரியாத் ஜித்தா கத்தார் போன்ற எந்த நகரங்களில் போனாலும் எந்த சிரமும் இல்லாமல் மிக சுதந்திரத்தோடும் மரியாதையோடும் இருப்பவன் தமிழ்நாட்டு முஸ்லிம் கிடையாது, சீனிவாசன் களும் ரங்கராஜன் களும் பார்த்தசாரதிக்ளும்தான்.” ஷரியா இருந்தால் குற்றம்குறை குறையும் சமரசம் மலரும் பொருளாதாரம் சிறக்கும்” என்பதெல்லாம் அதை நம்புவர்களுக்குள்ள பிரச்சினை. ஷரியாவை ஏற்றுக்கொண்டவன் அதை சிறப்பித்து சொன்னால் உங்களுக்கு ஏன் எறிகிறது?
@komagan
//தமிழ் நாட்டில் வாழும் ஒரு சராசரி முஸ்லிமுக்கும்,சராசரி இந்து கிறித்தவருக்கும் வித்தியாசம் கிடையாது என்பது உண்மைதான்.சராசரி முஸ்லிமுக்கு குரான்,ஹதிது,ஷாரியா பற்றி தெரியாது என்பதுதன் இதன் காரணம்.//
ஹா..ஹா…நகைச்சுவையாக நிறைய எழுதுகிறீர்களே அது எப்படி?
தவ்ஹீத்வாதிகள் தமிழகத்தில் அதிகமான பிறகுதான் மத சண்டைகள் குறைந்துள்ளது. முஸ்லிம்கள் படிப்பதிலும் தற்போது ஆர்வம் கொண்டுள்ளனர். வேலை வாய்ப்பிலும் போட்டி போடுகின்றனர். மாற்று மத நண்பர்களையும் அன்போடு பழகி கசப்பையும் நீக்குகின்றனர். குர்ஆனையும் ஹதீஸையும் விளங்க வேண்டிய முறையில் விளங்கியதால்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இது இனிமேலும் தொடரும்.
குரானில் அறிவியல் உண்மைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அண்ணன் பி.ஜே.யும் அவருடைய தவ்ஹீத் மௌல்விகளும் முழுமூச்சாய் இறங்கி இஸ்லாமை நவீனகாலத்துக்கு பொருந்தும் மார்க்கம் என்று நிறுவும் முயற்சியில் இறங்கியிருக்கையில், முற்போக்குவாதிகள், இஸ்லாமின் பெயரால் முஹம்மதுவும், அவர் தோழர்களும் நடத்திய ‘ஜிஹாத்துகளை’ பாதுகாப்புப் போர் என்று சொல்லிக் கொண்டு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருப்பது காலத்தின் கோலம்…
//1947 பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், பங்களாதேசம், இந்தோனேசியா போன்ற முசுலீம் நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் கூறுவதுபோல மாற்றுமத கோவில் இடிப்பு, மதமாற்றம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற ‘ஜிகாத் போர்’ எதுவும் நடக்கவில்லை//
தூங்கறவனை எழுப்பலாம்…ஆனா தூங்கற மாதிரிநடித்தால்…
இந்தியாவுல எத்தனையோ மச்ஜிடுங்க இருக்கு. பாழப்போன மொக்கை பாப்ரி மஸ்ஜித்த விட பெரிய பழமை வாய்ந்த சம மஸ்ஜித் இருக்கு,எத்தனையோ சர்ச்சுகள் இருக்கு. ஆனா அதெல்லாம் யாரும் இடிக்கல ஒன்னும் செய்யல. கோயில இடிச்சு கட்டுன மசூதிங்க மட்டும் தான் பிரச்சினையே.
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு உள்ள எப்படி மசூதி வந்திச்சு, உள்ள நோக்கம் இல்லாமயஎ ?
எல்லாம் சரி, பாகிச்தாணுல மத மாற்றம் இல்ல கோயில இடிக்கலன்னு எல்லாம் சொல்றாங்க அங்க இருக்கிறதே 3 பெர்சென்ட் ஹிந்துக்கள் தானே இதுல எத இடிக்க யார மதம் மாத்த ?
அப்புறம் இப்போ சிந்த் ப்ரோவின்கில நடக்குற கிட்னப்பிங் போர்செட் கோன்வேர்சியன் இத பத்தி எல்லாம் யாருக்கும் இங்க தெரியாத என்ன?
“மாற்று மதத்தவர்கள், சிலை வழிபாடு செய்பவர்களைப் பாதுகாத்து மதிக்கும்படி குர்ஆனில் ஏராளமான வசனங்கள் உள்ளன.”
நீங்கள் சந்திக்கும் முஸ்லிம்கள் அப்படித்தான் உள்ளனரா? வாசகர்கள் பரிசீலிக்க வேண்டும்.
Then also, in 1947 you have described as only muslims have been killed. Why you have hidden the fact about Hindus?
இதெல்லாம் சுத்த பொய். அரசியல் ஆக்கப்பட்ட மதங்களில் எல்லாம் இந்த பிரச்சனை இருக்கு.
புத்தகத்துல எப்படி இருந்தாலும் நடைமுறைல என்ன இருக்குங்கறது தான் முக்கியம். அப்படி திருந்தருத இருந்த அவுங்க புத்தகத்த பாது திருந்திக்குங்க.
நமக்கு எல்லாம் பாதுகாப்பு தர இவுங்க யாரு ? முடிஞ்சா ஒன்னும் செய்யாம இருந்தாலே போதும்.
இஸ்லாமியர்களை முரட்டுத்தனமாக நம்பி நாம் வீண் போகக்கூடாது.
ஆப்கானிஸ்தானில் புத்தர் பெருமானின் சிலை துப்பாக்கி முனையில் தகர்த்தப்பட்டது. அப்போது இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.
மும்பை கோவை மற்றும் பல இடங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டுவைத்து பலரை கொன்றனர்.
ஆப்கான்,பாகிஸ்தான்,சிரியா, துருக்கி ஈராக் மற்றும் பல நாடுகளில் தினசரி குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்படுகிறார்கள்.
தினசரி பத்திரிகைகளில் சாதாரணமாக பார்க்கலாம்.
எதெர்க்கேடுத்தாலும் முஸ்லீம்களை திருப்திபடுத்துவதற்காக தவறான செய்திகளை பரப்புகிறார்கள்.
எல்லாம் உலகமக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள்.
அமெரிக்க ,பிரான்சு, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் மனித குண்டு வைக்க விளம்பரம் கொடுத்துள்ளார்கள்.
பாக்கிஸ்தானில் ஆண்களுடன் சேர்ந்து நடனமாடிய நான்கு பெண்கள் கொல்லப்பட்டார்கள்!!!!!
என்ன கொடுமை!!!
முஸ்லீம் ஜனத்தொகை குறைவாக இருக்கும்போது “ஜிகாத்” என்பதற்கு ஒரு அர்த்தமும் ஜனத்தொகை அதிகமானால் வேறு அர்த்தமும் சொல்லப்படுகிறது.
இந்துக்களுடன் சேர்ந்து வாழ விரும்பாத இவர்கள் தனி சிவில் சட்டம் வைத்துள்ளார்கள். ஒரு மதசார்பற்ற நாட்டில் அனைவருக்கும் ஒரு சட்டம் இருப்பதுதானே நியாயம். இன்னும் சில காலங்களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஆபத்து உண்டு!!!!
மக்களுக்கு நன்றாக தெரியும்.
மேற்குலகப் பிரச்சாரம் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்டதன் விளைவுதான் இதுமாதிரியான கேள்விகள் எழுவதற்கு காரணம், உண்மையை மறைத்து பொய்யான செய்திகளையே அவை பெருமபலாலூம் வெளீயிடுகின்றன
@Saleem
சலீம் எது உண்மையுன்னு நீங்களே சொல்லுங்க?
எழுதுனது உண்மையா இல்ல நடக்குறது உண்மையா ?
இந்து மதமா ? தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களா ?
இந்து என்ற சொல் பற்றிய விளக்கம் !!!!
இந்துக்களுக்கு இந்து மதம் பற்றி நன்றாக தெரியம். உங்களுக்குத் தெரியவில்லை என்றால் இதிகாசங்களை புராணங்களை படியுங்கள். அப்போது இந்து என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். அனைவரையும் மனிதனாக மதித்தால் தலித் என்ற வேறுபாடு இருக்காது. உங்களைப் போன்றவர்கள் இந்து மதத்தில் வேறுபாடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். முதலில் உங்களிடம் உள்ள வேறுபாடுகளை கலையுங்கள்.உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களை ஒன்று படுத்தி அப்பாவி மக்களை கொல்லாமல் இருக்க செய்யுங்கள்.
என்ன விளக்கம் ? இந்திய துணை கண்டதில உள்ள முஸ்லிம்,கிறிஸ்டியன் ,யூத அல்லாத மக்கள் ஹிந்து மக்கள்.
அமா, தாழ்த்த பட்டவர்கள் ஹிந்துக்கள் தான்.
//அமா, தாழ்த்த பட்டவர்கள் ஹிந்துக்கள் தான்.//
இந்த ஸ்டேட்மெண்ட நம்பனும்னா அந்த ஓடுகாலி ஜெயேந்திரன தூக்கிட்டு ஒரு தாழ்த்தப்பட்டவாளை சங்கராச்சாரியரா உக்கார வையுங்கோ.
சங்கராச்சாரியார்களை யாரும் உட்கார வைப்பதில்லை!
அவர்கள் உருவாகிறார்கள் !
அல்லது உருவாக்கப்படுவார்கள்!
நீங்களும் நல்ல கோவிலை கட்டி இந்து மதத்திலுள்ள அனைத்து வேதங்களையும் இதிகாசங்களையும் புரானக்களையும் கற்று ஒரு மிகச்சிறந்த மாமனிதராக ஒரு சங்கராச்சாரியராக உருவாகலாம்.
மேல்மருவத்தூரில் ஒரு மகான உருவாகி அனைத்து மக்களுக்கும் தரிசனம் கொடுத்து வருகிறாரே! அவர் என்ன பிரமினரா?
இந்துமதம் யாரையும் நம்பி இல்லை.
பாதிரியார்கலாலோ முல்லாகலாலோ நிர்வகிக்கப்படுவதில்லை.
அந்த அந்த ஊர் மக்களேதான் நிர்வகித்துக்கொள்கிரார்கள்.
அதேபோல் நல்ல மனிதர்களை உங்கள் ஜாதியில் உருவாக்கி அனைத்தும் அறிந்து அனைவரின் அன்பையும் பெறுங்கள்.
யார் தடுத்தார்கள்?
“வினவு” போல் மனிதர்களிடம் சிக்காதீர்கள்.
இவர்கள் உங்களை மூளை சலவை செய்து நடாற்றில் விட்டு விடுவார்கள்.
இஸ்லாமிய உலகத்தைப்பற்றி உலக மக்கள் அனைவரும் அறிந்ததுதான்.
இது ஒரு அரசியல் கட்சி.
ஆன்மீக அமைப்பு அல்ல.
தினமும் பத்திரிகை செய்திகளை படியுங்கள்.
அப்போதுதான் இதன் வண்டவாளம் தெரியும்.
ஒரு சில இந்திய மக்கள் விரோதிகளால் நாம் அவமதிக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
இந்த சக்திகள் பணத்திற்காக இந்த நாட்டையும் நமது மக்களையும் காட்டிக்கொடுக்க தயங்க மாட்டார்கள்.
இந்திய பிரிவினையின் போது நவகாளியில் முஸ்லீம்கள் செய்த அட்டுலியங்கள் அளவிடமுடியாதது.
கணகிலடங்க்காத இந்துக்கள் வெட்டி கொல்லப்பட்டார்கள்.
இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.
மாகாத்மா காந்தி அங்கு சென்று மிகவும் வருத்தப்பட்டார்.
இந்து இளைஜர்களை அழைத்து அந்த பெண்களுக்கு வாழ்வளிக்க வேண்டினார். இப்படி ஏராளமான கொடுமைகள்!
ஐத்தராபாத்திலும் இதே போன்ற கொடுமை!
எச்சரிக்கை!!!!!!!!!
துறவி வாழ்க்ஹை வாழ, வேதங்கள் கற்க , ஆசதிக்க நெறியில் செல்ல, அத்வைத வேதாந்தத்தை பறை சாற்ற எவரெல்லாம் தயாராக உள்ளார்களோ அவர்கள் எல்லாம் மதகுருவாக மாறலாம்.
ஒரு உதாரணம், இந்த காஞ்சி மடம் என்பது ஸ்ரின்கேறி மடத்தில இருந்து பிரிந்து தனியாக உருவான ஒன்று.
அது போன்று நீங்களும் தனியாக மடம் ஆரம்பியுங்களேன்.
மக்களுக்கு உங்கள் பால் ஈர்ப்பு இருந்தால் இந்த காஞ்சி எல்லாம் காணாமல் பொய் விடும்.
இப்படி தான் கேரளாவில் நாராயண குரு துவக்கி வைத்தார், இப்பொழுது அந்த மக்கள் வளர்ச்சி அடைந்து முன்னேறி விட்டனர்.
ஏன் பார்பனர்கள், வேளாளர்கள் , மற்றும் பிற சாதியினர் எல்லாம் அவரவர்களுக்கென்று மடமும், வழிபாடு முறையும் வைத்துகொள்ளும் பொழுது நீங்களும் செய்யலாமே.
இப்பொழுது தலித் மக்களிடம் கல்வி அறிவு,வேலை வாய்ப்பு, அரசியல் பலம் எல்லாம் உள்ளது.
இந்த சின்ன விஷயத்தை செய்ய எவளவு நேரம் ஆகும்.
ஐயா, ஹரிகுமார்,
//ஏன் பார்பனர்கள், வேளாளர்கள் , மற்றும் பிற சாதியினர் எல்லாம் அவரவர்களுக்கென்று மடமும், வழிபாடு முறையும் வைத்துகொள்ளும் பொழுது நீங்களும் செய்யலாமே.// இதுதானய்யா பார்ப்பனியம்!.
உன்னால் மதுரை மீனாட்சி கோவிலிலோ, இல்லை ஸ்ரீரங்கம் ரங்கநாதனுக்கு பூசை செய்ய முடியவில்லையா, பரவாயில்லை நீயே ஒதுக்குப்புறமாக உனது சேரியில் ஒரு கோவிலை கட்டிக் கொண்டு நீயே பூசை செய்!
ஒரு தேநீர்க்கடையில் உனக்கு டம்ளருக்கு பதில் சிரட்டையில் தேநீர் கொடுத்து அவமதிக்கிறார்களா, கவலையை விடு, நீ அந்த தேநீர்க்கடைக்கு போகாதே, உனது சேரியில் நீயே ஒரு டீக்கடை போட்டு ஆசை தீர பருகு!
அக்ரஹாரத்திலும், ஆதிக்க சாதி தெருவிலும் நீ நடமாடத்தடை விதித்திருக்கிறார்கள் என்றால் அந்த பக்கம் போகாதே, சுற்று வழியென்றாலும் தனி வழி கண்டு மரியாதையைக் காப்பாற்றிக் கொள்!
பொதுக்குளத்தில் உனக்கு தண்ணீர் தரமறுக்கிறார்கள் என்றால் பயந்து விடாதே, நீயே சேரி மக்களை வைத்து ஒரு தனிக்குளம் கட்டி தேவையான நீரை எடுத்துக் கொள்!
ஆக, பார்ப்பனிய மதம் சாதியை வைத்து உருவாக்கியிருக்கும் அடிப்படையே இத்தகைய தனிக்குடியிருப்பு, தனி வழிபாடு, தனி வாழ்க்கைதான், மனித நேயர் ஹரிகுமாரும் அதே வழிமுறையைத்தான் சொல்கிறார். காலந்தோறும் பார்ப்பனியம்! கமெண்ட் தோறும் பார்ப்பனியம்!
வினவு
//ஒரு தேநீர்க்கடையில் உனக்கு டம்ளருக்கு பதில் சிரட்டையில் தேநீர் கொடுத்து அவமதிக்கிறார்களா, கவலையை விடு, நீ அந்த தேநீர்க்கடைக்கு போகாதே, உனது சேரியில் நீயே ஒரு டீக்கடை போட்டு ஆசை தீர பருகு!//
உண்ணும் உணவில் கூட ஹலால் பார்த்து முஸ்லிம்களின் கடைகளில் மட்டும் இறைச்சியை வாங்க மறைமுகமாக வட்புருத்தபடும் ஒரு மதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மாற்று வழியாக இருந்துவிட முடியாது.
ஏறத்தாள இஸ்லாம் அதைத்தான் செய்கிறது.
இசுலாம் மாற்றுவழியா இல்லையா, என்பதிருக்கட்டும். இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வழியில்லை என்பதை ஏற்கிறீர்களா?
யோவ் எழவு டாட் காம்,
இந்து மதத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் தாழ்த்தப்பட்ட சாதியாக இருந்த சாதி இன்று ஓ.பி.சி சாதியாக முடிகிறது. (நாடார் சமூகம்). கி.பி 300ல் தாழ்த்தப்பட்ட சாதியாக இருந்த சாதி நாடாண்டது (மௌரியர்).
தாழ்த்தப்பட்ட சாதிகள் வணங்கும் கடவுள்களையும் இந்து மதம் ஏற்கும். இஸ்லாத்திலோ, கிருத்தவத்திலோ ஏற்பார்களா ? ஆகவே இந்து மதத்தில் அனைவருக்கும் வழி உள்ளது.
உம்மைப் பொருத்தவரை இந்து என்றாலே தவறு தான். இஸ்லாம், கிருத்தவம் என்றால் அதில் தவறில்லை, அதை கடைபிடிப்பவர்கள் தவறு செய்கிறார்கள் என்று பசப்பு சொல்லிவிட்டு ஓடிவிடுவாய். உம்ம இந்த ரெட்டை டம்ளர் யோக்கிதை தான் உலகறிந்ததாச்சே!
உண்ணும் உணவில் ,”இதை உண்ணலாம் இதை உண்ணக்கூடாது இந்த முறையில்தான் உண்னவேண்டும்”என்று ஒரு சித்தாந்தம் அதை பின்பற்றும் மக்களுக்கு விதிக்கும் போதனையும்,”என்னோடு நீ அமர்ந்து உண்ணாதே, ஒரே உணவை உண்டாலும் உனக்கான பாத்திரம் வேறு எனக்கானது வேறு.நீ பிறப்பால் இழிந்தவன். என் அருகில் நீ இருந்தால் உன் இழிவு எனக்கு ஒட்டிக்கொள்ளும்.இந்த இழிவு என்பதும் தீட்டு என்பதும் இந்த பிறவியில் மாறக்கூடியது அல்ல.அருகில் வந்து விடாதே போ”என்ற சித்தாந்தமும் ஒன்றா? தமிழ்நாட்டின் பல முஸ்லிம் ஊர்களில் கல்யாணம் போன்ற விருந்து வைபவங்களில் “சகன்” சாப்பாடு என்ற ஒரு முறை இருக்கிறது.அதாவது ஒரு பெரிய தட்டு அதை தாளா என்றும் அழைப்போம்.அதில் நெய்சோறை கொட்டிவைத்து அதில் நடுவில் குழிபறித்து அதில் கறிஆனம் பருப்பு கத்திரிக்காய் ஊற்றி அந்த தட்டை சுற்றி நாங்கு பேர் அமர்ந்து, நடுவில் ஊற்றப்பட்டிருக்கும் ஆனத்தை கையால் மொண்டு சோற்றில் ஊற்றி ஒன்றாக உட் கார்ந்து உண்போம். அந்த நாங்கு பேர் யாராகவும் இருக்கலாம்.பெரும்பாலும் நண்பர்கள் இருப்பார்கள்.நண்பர்களாக அமையவில்லை என்றால் சாப்பிட காத்திருக்கும் வேறு நபர்களாகவும் இருக்கலாம். மிக தந்திரமாக கலால் பார்த்து முஸ்லிகள் உண்ணும் உணவை அங்குள்ள கொடிய தீண்டாமையோடு ஒப்பிட்டு அவர் சமன் படுத்துகிறாராம்.இந்த தந்திரமெல்லாம் எவ்வளவு நாளைக்கு நிற்கும்?
நான் தான் சொன்னனே. அந்த மடங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் நிறுவ பட்டவை.
அங்க நுழையிறதுக்கு பதில சொந்தமா மேடம் தொடங்கலாமே.
சிறுபான்மையினருக்கு காலேஜ் இருக்கு, அது மாதிரி தாழ்த்தப்பட்டவர்களும் கோயில் வெச்சிக்கலாமே.
எதுக்கு எல்லா விஷயதிளையும் சேரி செரின்னு திருப்பி திருப்பி சொல்றீங்க.
தலித் மக்கள் நகையே இருக்க வேண்டியவுங்களஆ இல்ல anppadi இருக்குற செரிகளிலே அவுங்களுக்குன்னு இப்போ கோயில் திருவிழா எல்லாம் தான் இல்லையா.
டீகடையில மரியாதை இல்லைனா வேற எடத்துல தான் பருகனும், ஆடோகறார் சவாரி மருகுராருன்ன இல்லை மீட்டருக்கு மேல அதிக தொகை கேக்குறாருன்னு ஆட்டோ காரர் சட்டயவ புடிபீங்க.
இப்போ யாரு ஆக்ராஹரதுளையும், ஆதிக்க தெருவுலயும் நுழைவு மறுக்குறாங்க அதெல்லாம் படிபடியா முடிஞ்சு போச்சு.
இருக்குற கொஞ்ச நஞ்சமும் முடிஞ்சு போய்டும்
ஒருத்தரு வீடுக்குள்ள அழைக்க மறுக்குராங்கன்ன நான் கதவ உடைச்சு உள்ள போவேன்னா என்ன அர்த்தம் ?
சரி இதெல்லாம் விட்ருங்க, நான் கிரிதவனாகி முஸ்லிமாகி இந்த அவமானத்தை போக்குவேன்ன அதையும் செய்யட்டும்.
ஆனா அங்கயும் நெலமை இது தான்னு இருக்குறது நாலா தான் துட்டு குடுத்த மதம் மாற்ற வேண்டிய நெலமை இனிக்கி இருக்கு.
இவளவு தான் மட்டேறு, அடுத்தவன் மடிகிரதில்லன்னு நாம கவலை பட முடியாது.
ஆனா வாழ்வாதரத்துக்கு தேவயனவைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அது கெடைச்சதுக்கு அப்புறம் தான் இந்த மேட்டர் எல்லாம்.
2012il உக்கார்ந்து கொண்டு குளம்,குட்டை,கோயில்ன்னு பழைய கதையே பேசிகிட்டு இருக்கீங்களே.
Vinavu
Many people writing here (including me) has similar thoughts – why don’t the dalit’s group start doing their things in THEIR OWN WAY. Thats the way to grow…not just blaming others. Even if you fight for 2 more centuries OTHERS will not change, its better dalits change their attitude of being SLAVES and work out their own way of living. And finally claim that upper caste folks are untouchable !! –
What is the problem You see in this approach of DALITs changing their way, rather fighting/waiting for others to change?
பார்ப்பனர்கள விட நீங்க பெரிய பித்தலாட்ட காரனுக போல இசுலாம் தெரியல பின்னாடியும் முன்னாடியும் பொத்திகிட்டு வெரும் உண்டியல மட்டும் குலுக்கனும் அத விட்டிட்டு பொய் பிராடு பித்தலாட்டம் பன்னி கட்டுரை எழுதி எப்பிடியும் எஸ் சி ய பூராம் இசுலாத்துக்கு மாத்திரலாமுனு கட்டுரை எல்லாம் எழுத குடாது
யாருப்பா இந்த கட்டுரைய எழுதினது,
வரிக்கு வரி பொய்களா நிரம்பி இருக்கே.
ஒரு சிலவற்றை மட்டும் பட்டியலிட்டு காரணம் கூறுகிறேன்.
//ஜகாத் என்பதன் பொருள் தன் இதயத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள முசுலீம் மக்கள் செலுத்தும் வரியாகும். முசுலீம் அல்லாதவரிடமும் இவ்வரி வசூலிக்கப்பட்டது.// ———ஜாகாத் முசல்மானுங்க கட்ட வேண்டிய வரிலே
//நாட்டின் நலிவடைந்த பிரிவினருக்குச் செலவழிப்பதற்காக இசுலாமிய அரசுகள் இவ்வரியைப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றனர். இந்தியாவின் மொகலாய மன்னர்கள் வசூலித்த ஜசியா வரியும் இத்தகையதே.//————-ஜிசியா மொகலாயனுங்க கண்டுபிடிச்சாதில்லவே. அத கண்டுபிடிச்சவன் முகமது தாம்லே. அந்த குரான இன்னொரு மொற படிச்சுப் பாருலே.
…தொடரும்
வினாவுக்கு இது போன்ற கட்டுரை அழகில்லலே.
எல்லாம் சரி தான் ஆனா செலுத்த வேண்டிய வரி ஒன்னு தான் என்னும் பொழுது வேறு வேறு பெயர் எதற்கு.
சகத், ஜிஸ்யா ன்னு ரெண்டு பெயர் எதற்கு?
ஹரிகுமார்
நல்ல கேள்வி கேட்டீக
அதுங்க சும்மா பேரு மட்டும் வேற வேற இல்ல. பல விஷயம் அதில அடங்கி இருக்கு.
ஜிஸ்ய வரி முசல்மானுங்க செலுத்த வேண்டியது. அதா எப்படி செலுத்துனும்னா அடங்கி ஒடுங்கி கட்டுனும். அது எப்படிய்யா ன்னு கேக்கிரீகளா, நீங்க வரிய கட்டுறப்போ குனிஞ்சி நின்னு வாய திறந்து காட்டனும். வரி வசூல் அதிகாரி உங்க வாயில கொஞ்சம் மனனப் போடுவாரு. அத பணிவா ஏத்துக்கணும். அந்த வரிதான் ஜிஸ்யா. முசல்மானல்லாதோருங்க தான் இந்த வரி கட்டோணும். சகாதுங்கர முசல்மான் வரி ரொம்ப கொரவான தொகை தான். அத அவங்க மசூதியில போயி கட்டிடுவாக. வாயில மண்ணையெல்லாம் வாங்கிக்கவேணாம். இப்ப புரிஞ்சிருக்குமே.
ஒரு திருத்தம்
//ஜிஸ்ய வரி முசல்மானுங்க அல்லாதவங்க செலுத்த வேண்டியது// என்பது //ஜிஸ்ய வரி முசல்மானுங்க அல்லாதவங்க செலுத்த வேண்டியது//ன்னு படிச்சுக்கோங்க.மன்னிக்கோணும். அவசரத்துல அப்படி ஆயிடுச்சு.
மறுபடியும் ஒரு திருத்தம். உங்களுக்கே புரிந்திருக்கும்.
சகாத் என்பது முஸ்லிகளுக்கான கட்டாய கடமைகளில் ஒன்று.அவர்கள் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்படாத நாடுகளில் இருந்தாலும் அது அவர்களுக்கு கடமை.பைத்துல்மால் என்று அழைக்கப்படுகிற சகாத்தை வசூலித்து வினியோகிக்கும் அமைப்பு அதற்க்கு பொறுப்பேற்க்கும்.ஜிஸ்யா என்பது இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் மாற்றுமத மக்கள் அந்த நாட்டுக்கு செலுத்தவேண்டிய வரி.சகாத்துக்கான நிர்ணயம் வேறு. அது விவசாயம் வியாபாரம் சொத்துக்கள் என்று சகாத்துக்கான நிலையை இஸ்லாம் வரையறுத்திருக்கின்றது.ஜிஸ்யா என்பது அப்படியல்ல.அது சகாத்தைவிட குறைந்த தொகையே வரும்.எல்லா நாடுகளிலும் இருப்பதைப்போல பொது மக்கள் செலுத்தும் வரியே ஜிஸ்யா.கண்டிப்பாக இந்தியா அரசாங்கம் எளிய மக்களிடம் வ்சூலிக்கின்றதே அதை விட மிகக்குறைந்த தொகையே ஜிஸ்யாவாக இருக்கும்.
வினவுக்கும் வினவு வாசகர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள்.
முசல்மானுங்களோட பொய்கள புரிஞ்சிக்கணும்ன அலி சினாவோட கட்டுரைகளைப் படியுங்கள்.
tamil.alisina.org
alisina.org
http://www.ndtv.com/article/cities/upper-caste-men-chopped-off-his-nose-for-riding-a-motorcycle-230425?pfrom=home-lateststories
After reading the above link answer my question.
Why shud Dalits remain in HINDUISM ???
dalits changing to christianity also face similar fate from the hands of OBC christians. OBC christian vanniyars won’t allow dalits to enter their church (it happened in TN). Dalit muslims don’t get grooms for their women from non dalit muslim communities.
Why should they convert ?
Dalits can fight it out with hindus.
s i do agree but the % of incidents is the one makes the difference.. Also let the dalits where shud they fight y u r worried ??? if the feel that in islam or christianity tey will find relief let them go y u are worried???
Let them go,we have no problems.But we wont give reservation on the basis of religion,if you are okay with that.
iam too against reservation based on religion..I agree with u
என்ன இந்த மாதிரி அக்க்ரமம் செய்யிற சாதி கொடூரங்களை தட்டி கேக்கவும் ஹிந்து மக்கள் இருக்காங்க,அதான் அது ஒரு செய்திய வெளி வந்திருக்கு.
ஹிந்துக்களுக்கு எதிராக எதை வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்! வழக்கம்போல் திட்டி தீர்க்கலாம்! யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் முஸ்லீம் மற்றும் கிருத்துவர்களை பற்றி எதிர்த்து எழுதினால் அவ்வளவுதான். மனித குண்டு வெடிக்கும்! ஜாக்கிரதை!!!
Facebookகில் ஒரு நண்பர் குறியது
ஏகத்துவம் என்ற பெயரைக் கொண்டு ஒரே கடவுள் ஒரே மதம் என்று கூறும் இஸ்லாத்தில் எத்தனை பிரிவுகள் என்று தகவல்கள் கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றன.
Among Muslims, Shia and Sunni kill each other in all the Muslim countries.
முஸ்லீம்களில் ஷன்னி, ஷியா என்று இரு பெரும் பிரிவுகள் உள்ளன. உலகெங்கிலும் ஒரே கடவுள் தான் என்று சொல்லிக்கொள்ளும் இந்த முஸ்லீம்கள் தம் சக மதத்தவரையே கொன்றுகுவித்து வருகிறார்கள். இன்றைக்கும் பாகிஸ்தானில் மசூதிகளில் குண்டு வெடிப்பதற்கு இதுவே காரணம்.
அநேக மதக்கலவரங்கள் பல முஸ்லீம் நாடுகளிலும் இந்த இரு பிரிவினருக்கு இடையில் தான் நடக்கிறது.
ஷியா முஸ்லீம் ஷன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்லமாட்டார்.
இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.
இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்
இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.
இப்படி முஸ்லீகளிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.
இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்கலாம். (ஆங்கிலத்தில்)
Ansari
Arain
Awan
Bohra
Dawoodi Bohra
Dekkani
Dudekula
Ehle-Hadith
Hanabali
Hanafi
Ismaili
Khoja
Labbai
Lebbai
Lodhi
Malik
Mapila
Maraicar
Memon
Mugal
Mughal
Pathan
Quresh
Qureshi
Rajput
Rowther
Salafi
Shafi
Sheikh
Shia
Siddiqui
Sunni Hanafi
Sunni Malik
Sunni Shafi
Syed
அனுமார்வால் பொன்று நீண்டிருக்கும் இத்தனை ஜாதிகளைக் கொண்ட முஸ்லீம்கள் வேறு ஜாதிகளில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள். அதிலும் மரைக்காயர் மற்றும் லெப்பைகள் போன்றோர் அரபு முஸ்லீம்கள் என்று கூறிக்கொள்வர். இவர்களைப் பொறுத்தவரை மற்றவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஜாதிகளும் அதில் மேல் கீழ் என்று பிரிவுகளும் முஸ்லீம்களிலும் உண்டு. பட்டாணி முஸ்லீம் பெண்மணியை நாசுவன் ஜாதி ஆணுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள்.
இல்லையென்றால் மேட்ரிமோனியல் தளங்கள் அவர்கள் வசதிக்காக இத்தைனைப் பிரிவுகளை உண்டாக்கி வியாபாரம் செய்ய முன்வருமா என்ன?
இத்தனைப் பிரிவுகளுக்குள்ளும் நிறைய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. மைனாரிட்டி என்பதால் வெளியே தெரிவதில்லை அல்லது வெளியே தெரிந்து அவர்களின் ஜாதி வெறி பிம்பங்கள் கலைய ஊடகங்கள் அனுமதிப்பதில்லை என்பதே உண்மை. இந்த சினிமாக்காரர்களும் இத்தகைய மதங்களில் நிகழும் வேற்றுமைகளை வெளிப்படுத்தும் வன்னம் படம் எடுத்து மக்களுக்குக் காட்டியதில்லை.
ஆனால் இவர்கள் வெளியே சொல்லிக் கொள்வதோ ஒரே இறைவன், ஒரே மதம், ஒன்றான மக்கள் என்றுதான். அப்பிரானி இந்தியர்களும் குறிப்பாக இந்துக்களும் இதை நம்பிவிடுகின்றனர். ஐயோ பாவம்!
Excellent! Any Muslim should answer to this!
பத்மனாபரே உம்முடைய இந்த பொய்யைத்தான் பல தொலைகாட்சி விவாதங்களில் பகிரங்கமாக உம்முடைய காவி சகோதரர்கள் வைப்பார்கள்.அதில் சிலர் அறியாமையால் சொல்வது.பலர் தெரிந்துகொண்டே சந்தடிசாக்கில் விட்டு அடிப்பது.வரிசையாக லிஸ்ட் அடுக்கி இருக்கிறீரே அதோடு சேர்த்து மாமன்னர் அக்பருடைய தீனேஇலாகி என்ற பிரிவையும் சேர்க்க வேMடியதுதானே.ஏனய்யா ஜாதி என்பது என்ன? நீங்கள் ஜாதி எம்பதை எப்படி கடைபிடிக்கிறீர்கள்? அது எப்படி மேலிருந்து கீழாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது?அது என்னமாதிரி விளைவை சமூகத்தில் ஏற்ப்படுத்திக்கொண்டிருக்கிறது?கம்யூனிஸம், மாவோ கம்யூனிஸம் மார்க் கம்யூனிஸம் ஸ்டாலின் கம்யூனிஸம் தமிழ்நாட்டில் சங்க்ரய்யா கம்னியூஸம் நல்லகண்ணு கம்னியூஸம்.இதில் வினவு கம்யூனிஸம் வேறு.இவையெல்லாம் ஜாதியா? புழுத்து சீழ் வடிந்து கொண்டிருக்கும் இந்து மத ஜாதியை மறைக்க இப்படி லிஸ்ட் அடுக்கி திசை திருப்புகிறிர்களோ!? இந்த பாச்சா இனி பலிக்காது. நாடு முழுக்க மக்கள் இந்த கொடுமையிலிருந்து விடுபட இஸ்லாத்திற்க்கு வர துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி பொய்யை வரைந்து, அனைவரையும் நம்பவைத்துவிடலாம் என்று உம்மைப்போல் உள்ளவர்கள் மனப்பால் குடித்து ஆறுதல் அடையுங்கள்.
அய்யோ இசுலாத்துக்கு வர துடிச்சிட்டு இருக்குற ஆளுகள் எல்லம் துடிச்சு துடிச்சி சாகுறதுக்குள்ள அவங்க தலைல குல்லாவ கவுத்திடுங்க பா பிலீஸ்
இந்தியாவில் சநாதன வர்ணாசிரம சாதிய முறையை ஏற்காமல் அதன் அழுத்தங்களுக்கு பணியாமல் எதிர்த்து நிற்கும் ஒரே மதம் இசுலாம்தான்.இந்த உண்மையை சகிக்க முடியாமல் இசுலாமிய மதத்தின் மீது சாதிய சேறு பூசும் கள்ளப்பரப்புரையின் ஒரு பகுதியே இது போன்ற வாதங்கள்.
\\ஷியா முஸ்லீம் ஷன்னி முஸ்லீம்களின் மசூதிக்குச் செல்லமாட்டார்.
இந்த இரு பிரிவினரும் அஹமதியா மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.
இந்த மூன்று பிரிவினரும் சுஃபி மசூதிக்குச் செல்லமாட்டார்கள்
இந்த நான்கு பிரிவினரும் முஜாஹிதீன் மசூதிக்குச் செல்லமாட்டார்கள்.
இப்படி முஸ்லீகளிலேயே 13 பிரிவுகள் இருக்கின்றன.//
ஆம்.உண்மைதான்.ஒருவர் மற்றவரின் மசூதிக்கு செல்ல மாட்டார்.அப்படியானால் என்ன பொருள்.அந்த வழிபாட்டு இடம் தாங்கள் வழிபாடு செய்ய தகுந்ததல்ல என கருதுகிறார்கள்.ஒரு முசுலிம் மாதா கோவிலுக்கு போய் வழிபட மாட்டார்.ஒரு கிருத்துவர் இந்து கோவிலுக்கு போய் வழிபட மாட்டார்.அந்த வகையில் மேற்காணும் பட்டியலில் உள்ளவற்றை இசுலாமிய மதத்தின் பிரிவுகள் என்று சொல்வதே தவறு.தனித்தனி மதங்கள் என்று சொல்வதே சரியானது.
இவர்களில் ஒருவர் மற்றவரின் கடவுளின் தூதர் கொள்கையை ஏற்பதில்லை. ஏன் மற்ற பிரிவினரை முசுலிம்கள் என்றே ஏற்பதில்லை.தாங்கள் மட்டுமே உண்மையான முசுலிம்கள் என்றே ஒவ்வொருவரும் கூறிக்கொள்கிறார்கள். உண்மை இவ்வாறிருக்க எல்லோரும் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டே சாதி பாராட்டும் சனாதன இந்து மதத்துடன் இசுலாமிய மதத்திலும் சாதி இருப்பதாக ஒப்புமை படுத்துவது தவறு.
\\இது மட்டுமா முஸ்லீம்களின் வேறுபல பிரிவினரையும் பார்க்கலாம்.//
ansar ல் ஆரம்பிக்கும் ”சாதிகளின்” பட்டியலில் இடம் பெற்றுள்ளவை வரலாற்றின் போக்கில் குறிப்பிட்ட முசுலிம் மக்கள் திரளை குறிக்கும் காரண பெயர் சொற்களே அன்றி சாதிகள் அல்ல.
எடுத்துக்காட்டாக mapila எனபது கேரள முசுலிம்களை குறிப்பது.கேரள பகுதியுடன் வணிக தொடர்பு கொண்டிருந்த அரபு வணிகர்களில் கணிசமானோர் அப்பகுதி பெண்களை மணமுடித்து அங்கேயே தங்கி விட்டனர். அதனால் அவர்களை மருமகன்கள் என பொருள்பட மாப்புளா என கேரள மக்கள் அழைத்தனர்.அதுவே நாளடைவில் முசுலிம்களை குறிக்கும் சொல்லானது.அதனால்தான் வெள்ளை ஏகாதிபத்தியத்தையும் நம்பூதிரிகளின் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மையையும் எதிர்த்து மலப்புரம் முசுலிம் விவசாயிகள் நடத்திய அரை நூற்றாண்டு கால வீரஞ்செறிந்த போராட்டத்தை ”மாப்பிளா யுத்தம்” என்றே வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
லப்பை என்பது தமிழை தாய் மொழியாக கொண்ட முசுலிம்களை குறிக்கும் சொல்.பார்க்க.தமிழக அரசு ஆணை எண் 28 பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை.நாள் 19-7-1994.வரிசை எண் 69.
மரக்காயர் எனபது மரக்கல உரிமையாளர்களை குறிக்க பயன்பட்ட சொல்.அதனால்தான் மரக்காயர் வீடுகளை கடற்கரையோர ஊர்களில் மட்டுமே காணமுடியும்.
இவை எதுவும் சாதிகள் அல்ல.இந்த குடும்பங்கள் இடையே திருமண உறவுக்கு தடையேதும் இல்லை.வர்க்கத்தை தவிர என்பதையும் மனசாட்சியுடன் இங்கு பதிவு செய்கிறேன்.
ஹா ஹா ஹா … ஏப்பைக்கு சாப்பை எள்ளுருண்டை புளியங்காய்… ஆப்பைக்கு தொப்பை ஆலமரத்து கோவக்காய்… லெப்பைக்கு ஞான ஸ்நானம் அரசானை போடும் அல்லக்கை… திப்பைக்கு தொப்பி மதம் பிப்பிபிபீபீபீபீ …
//ஆம்.உண்மைதான்.ஒருவர் மற்றவரின் மசூதிக்கு செல்ல மாட்டார்.அப்படியானால் என்ன பொருள்.அந்த வழிபாட்டு இடம் தாங்கள் வழிபாடு செய்ய தகுந்ததல்ல என கருதுகிறார்கள். தனித்தனி மதங்கள் என்று சொல்வதே சரியானது//
திருக்குறளுக்கு பொருளுரை எழுத ஆள் தேடுறாங்களாம் .. கலைஞர் பக்கத்து சீட்டு உங்களுக்குத்தான்…
//இவர்களில் ஒருவர் மற்றவரின் கடவுளின் தூதர் கொள்கையை ஏற்பதில்லை. ஏன் மற்ற பிரிவினரை முசுலிம்கள் என்றே ஏற்பதில்லை//
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை முஸ்லிம் என்று ஏற்பதில்லை!!!!… இதையே அமெரிக்க காரன் சொன்னா விமானத்தை கடத்தி போய் மோதுவீங்க?
//எல்லோரும் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டே சாதி பாராட்டும் சனாதன இந்து மதத்துடன் இசுலாமிய மதத்திலும் சாதி இருப்பதாக ஒப்புமை படுத்துவது தவறு.//
இந்து மத மக்கள் கூட இதே சாதி வெறியோடு கீழவர் கட்டி வணங்கும் கோயில்களுக்கு செல்வதில்லை.. அப்ப அங்கேயும் மதங்கள் இருக்குன்னு பொருளுரை எழுதுவாரோ… ?
\\அரபு வணிகர்களில் கணிசமானோர் அப்பகுதி பெண்களை மணமுடித்து அங்கேயே தங்கி விட்டனர்\\
காடுவெட்டி மட்டும் சம்பவ இடத்தில் இருந்திருந்தால்… என் நாட்டு மக்களை அபகரித்து மதம் மாற்றி திருமணம் செய்யும் அவனை வெட்டுடா குத்துடா என்று குதிசிருப்பாறு..
\\லப்பை என்பது தமிழை தாய் மொழியாக கொண்ட முசுலிம்களை குறிக்கும் சொல்\\
லப்பைக்கும் தமிழுக்கும் சம்பந்தம் தொப்பையில் தான் இருக்கு…
\\மரக்காயர் எனபது மரக்கல உரிமையாளர்களை குறிக்க பயன்பட்ட சொல்\\
இஸ்லாமியர் மட்டுமே மரக்கலங்களை உரிமையாக வைத்திருந்தனர், மாற்று மதத்தினர் கூலிகளே என்ற மெய்ப்பொருள் விளங்க செய்தமைக்கு நன்றி…
//இந்த குடும்பங்கள் இடையே திருமண உறவுக்கு தடையேதும் இல்லை.//
ஜமாத்தில கேட்டுக்கோங்க.. கல்யாணம் பண்ணி வைக்க வருவாங்களா.. இடம் தருவாங்களான்னு…
//இவை எதுவும் சாதிகள் அல்ல//
ஆகவே இதனால் தெரிவிப்பது என்னவெனில்.. இவை எதுவும் சாதிகள் அல்ல… மதங்கள் மதங்கள் மதங்கள்…
செந்தில் டு கவுண்டமணி : இதை பூ- நும் சொல்லலாம், புய்ப்பம் நும் சொல்லலாம்… நீங்க சொல்றபடியும் சொல்லலாம்…
\\திருக்குறளுக்கு பொருளுரை எழுத ஆள் தேடுறாங்களாம் .. கலைஞர் பக்கத்து சீட்டு உங்களுக்குத்தான்//
\\ஒருவர் மற்றவரின் மசூதிக்கு செல்ல மாட்டார்.அப்படியானால் என்ன பொருள்.அந்த வழிபாட்டு இடம் தாங்கள் வழிபாடு செய்ய தகுந்ததல்ல என கருதுகிறார்கள். தனித்தனி மதங்கள் என்று சொல்வதே சரியானது//
இக்கருத்துக்கு மறுப்பு என ஒரு வரி எழுத துப்பில்லை.இந்த அழகுல நையாண்டி எழுதுறாராம்.
எனக்கு கலைஞரின் பக்கத்து இருக்கை கிடைக்கிறதோ இல்லையோ உங்களுக்கு நிச்சயம் கீழ்பாக்கத்தில் இடம் கிடைக்கும்,இப்படியே ”புளியங்காய் கோவக்காய் பிப்பிபிபீபீபீபீ ” என உளறிக் கொண்டிருந்தால்.
\\ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை முஸ்லிம் என்று ஏற்பதில்லை!!!!… இதையே அமெரிக்க காரன் சொன்னா விமானத்தை கடத்தி போய் மோதுவீங்க?//
நான் என்ன எழுதி இருக்கிறேன்.நீங்க என்ன வாதம் வைக்கிறீங்க.சன்னி,சியா,அகமதியா முசுலிம்கள் ஒருவர் மசூதிக்கு மற்றவர் செல்ல மாட்டார் என பத்மநாபன் எழுதினார்.அதற்கு எனது பதில்.
\\ஆம்.உண்மைதான்.ஒருவர் மற்றவரின் மசூதிக்கு செல்ல மாட்டார்.அப்படியானால் என்ன பொருள்.அந்த வழிபாட்டு இடம் தாங்கள் வழிபாடு செய்ய தகுந்ததல்ல என கருதுகிறார்கள்.ஒரு முசுலிம் மாதா கோவிலுக்கு போய் வழிபட மாட்டார்.ஒரு கிருத்துவர் இந்து கோவிலுக்கு போய் வழிபட மாட்டார்.அந்த வகையில் மேற்காணும் பட்டியலில் உள்ளவற்றை இசுலாமிய மதத்தின் பிரிவுகள் என்று சொல்வதே தவறு.தனித்தனி மதங்கள் என்று சொல்வதே சரியானது.
இவர்களில் ஒருவர் மற்றவரின் கடவுளின் தூதர் கொள்கையை ஏற்பதில்லை. ஏன் மற்ற பிரிவினரை முசுலிம்கள் என்றே ஏற்பதில்லை.தாங்கள் மட்டுமே உண்மையான முசுலிம்கள் என்றே ஒவ்வொருவரும் கூறிக்கொள்கிறார்கள்.
இதை \\ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை முஸ்லிம் என்று ஏற்பதில்லை!// என பொழிப்புரை எழுதுவதே உங்கள் பித்தலாட்டத்தை காட்டுகிறது.
அப்புறம் இதை சொன்னதுக்காகத்தான் இரட்டை கோபுர தாக்குதல் நடந்ததாக சொல்லி இருக்கிறீர்கள்.நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.
\\இந்து மத மக்கள் கூட இதே சாதி வெறியோடு கீழவர் கட்டி வணங்கும் கோயில்களுக்கு செல்வதில்லை.. அப்ப அங்கேயும் மதங்கள் இருக்குன்னு பொருளுரை எழுதுவாரோ… ?//
ஒருத்தர் கோயிலுக்கு மற்றொருவர் செல்வதில்லை என்றாலும் ”அனைவரும் இந்துக்கள்தான்”. அந்த பாசாங்கு இசுலாமியர்களிடம் இல்லையே.ஆகவே \\எல்லோரும் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டே சாதி பாராட்டும் சனாதன இந்து மதத்துடன் இசுலாமிய மதத்திலும் சாதி இருப்பதாக ஒப்புமை படுத்துவது தவறு.// என நான் எழுதியது சரிதான்.
\\காடுவெட்டி மட்டும் சம்பவ இடத்தில் இருந்திருந்தால்… என் நாட்டு மக்களை அபகரித்து மதம் மாற்றி திருமணம் செய்யும் அவனை வெட்டுடா குத்துடா என்று குதிசிருப்பாறு..//
நடந்த வரலாற்றை சொன்னால் சினம் வருகிறதோ.நடந்தது நடந்ததுதான்.வரலாற்றை விரும்பியவாறு எல்லாம் திருத்தி எழுத முடியாது.வேண்டுமானால் ”பம்பாய்” திரைப்படம் எடுத்து கற்பனையாக பழி வாங்கி கொள்ளலாம்.மேலும் அந்த அரபு நாட்டு முசுலிம் வணிகர்கள் முறையாக திருமணம் முடித்தே வாழ்ந்திருக்கிறார்கள்.அதில் யாரும் அசிங்கப்பட ஏதுமில்லை.
\\லப்பைக்கும் தமிழுக்கும் சம்பந்தம் தொப்பையில் தான் இருக்கு//
வெறும் உளறல்.நான் ஆதாரத்தோடு பேசுகிகிறேன்.நீங்கள் ஆத்திரத்தோடு பேசுகிறீர்கள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.அதனால்தான் இந்த ஒரு வரியே வாதமாக உங்களுக்கு தெரிகிறது.
\\இஸ்லாமியர் மட்டுமே மரக்கலங்களை உரிமையாக வைத்திருந்தனர், மாற்று மதத்தினர் கூலிகளே என்ற மெய்ப்பொருள் விளங்க செய்தமைக்கு நன்றி//
விதண்டாவாதம்.
\\ஜமாத்தில கேட்டுக்கோங்க.. கல்யாணம் பண்ணி வைக்க வருவாங்களா.. இடம் தருவாங்களான்னு…//
தாராளமாக கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளலாம்.
திப்பு அவர்களே.. அப்படி என்றால் ஹிந்துக்களில் ஒவ்வொரு ஜாதியினரும் தான் மட்டுமே உண்மையான இந்து, மற்றவரெல்லாம் போலி ஹிந்து என்று அறிக்கை விட்டு விட்டால், பின் ஜாதியின் பெயரால் நடக்கும் அக்கிரமங்கள் நியாயப்படுத்தி விடலாம் இல்லையா?
Padhmanaban,very informative details.Thanks
There is a recent movie in Hindi called Gangs of Wasseypur,which shows this caste and ethnic differences between the Muslims clearly in Bihar and the fight is between Pathans & Qureshis.
//1947 பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான், பங்களாதேசம், இந்தோனேசியா போன்ற முசுலீம் நாடுகளில் ஆர்.எஸ்.எஸ் கூறுவதுபோல மாற்றுமத கோவில் இடிப்பு, மதமாற்றம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற ‘ஜிகாத் போர்’ எதுவும் நடக்கவில்லை.//
இதற்குப் பெயர் தான், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பது…
How can you write such a blatant lie? Anyone who just googles can get this list…Why go to Pakistan, Bangladesh and Indonesia? Just look at our backyard – Kashmir where violent Jihad kicked out Hindus from Kashmir….Or are you denying this also? Look at how many temples have been converted into Mosques in Kashmir post that…
Source: http://www.indiandefence.com forum
உங்களுக்கெல்லாம் எதற்கு ரோஷம் வருகிறது…?
சிறிதரு,
காஷ்மீரு இந்தியாவுக்கு சொந்தமில்லைன்னு சொல்ல வறீங்களா?
Raj:
I said //Just look at our backyard – Kashmir//. This means Kashmir is part of the country and within out own country we have examples.
Also, for Raj and other readers: Vinavu edited my post by taking away the BIG list i had given where Hindu temples were burnt and looted. Vinavu removed the list. So much for the Honesty that they boast. Atleast they could have mentioned while publishing my post that they edited the list. I am still hopeful, Vinavu will publish the list again.
Vinavu: Why dont you also write about the Bodh Gaya Blast? This is also because of JIHAD…Or are you worried that your sponsors will stop the funding?
Vinavu: Why dont you also write about the Bodh Gaya Blast? This is also because of JIHAD…Or are you worried that your sponsors will stop the funding?
// ‘ஜிகாத்’ எனப்படும் புனிதப்போர் மெக்காவில் ஒடுக்கு முறைகளுக்கு ஆளாகியிருந்த முசுலீம் மக்களை மீட்பதற்காக மதினாவிலிருந்து நபிகள் தலைமையில் முசுலீம்கள் சென்ற, நடத்திய தற்காப்புப் போரேயன்றி ஆக்கிரமிப்புச் சண்டையல்ல. //
சகோதரா, நீ இங்கே குறிப்பிட்டுள்ள வரிகள் தவறானவை. மெக்காவை ஆக்கிரமிப்பு செய்யவே தவிர அந்த சண்டைக்கு வேறு காரணம் கிடையாது. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே. கோடிக்கணக்கானோர் பின்பற்றினாலும் முகமது செய்தது குற்றம்தான்.
http://iraiyillaislam.blogspot.in/
http://senkodi.wordpress.com/
http://pagaduu.wordpress.com/
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளின் வழியாக சென்று முகமதின் உண்மை முகத்தைக் கண்டுகொள்.
இஸ்லாமின் பெயரால் உலகம் பூராகவும் நடத்தப்படும் வன்முறைகளுக்கும் ஜிகாத் என்ற சொல்லுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தாங்கள் செய்யும் வன்முறைகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் சொற்பதமே ஜிகாத். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் மற்றைய மதத்தைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படவில்லை என்பது ஓர் கற்பனையே. நீங்கள் இலங்கையைக் குறிப்பிட்டதால் ஒரு விடயத்தை இங்கே கூற விரும்புகிறேன். இலங்கையில் இஸ்லாமியர்களால் இந்து மதத்தலங்கள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளன. அவை வெளி உலகுக்கு வருவதில்லை. இதை போன்று பல சம்பவங்கள் வெளியே வராமலே போயிருக்க வாய்ப்புக்கள் உள்ளன.
//அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்த ஈரான்//
அமெரிக்கா ஈராக்கில் நுழைவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்ததே சதாம் உசேன் ஷியா முஸ்லீம்களின் மேல் நிகழ்த்திய கொடூரப் படுகொலைகளே. அதை அமெரிக்கா அழகாகப் பயன்படுத்திக் கொண்டது என்பதே உண்மை. அமெரிக்காவுக்கு எதிராகப் போராடிய பயங்கரவாதிகள் உண்மையிலேயே சதாம் உசேன் நிகழ்த்திய படுகொலைகளை நியாயப்படுத்திய கூட்டமே தவிர அவர்களுக்கு அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்ப்பது நோக்கமல்ல. அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிடுவது என்ற பெயரில் அவர்கள் ஷியா முஸ்லீம்களையே கொன்று குவித்தனர்.
ஜிகாத் என்பது மதமாற்றம் செய்யும் போராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தற்போது அந்த பெயரைப் பயன்படுத்திச் செய்யப்படும் போர்கள் அனைத்தும் கட்டாய மதமாற்றம் அல்லது மற்றைய மதத்தவர்களை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. ஐஸ் ஐஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத இயக்கங்களின் நோக்கம் இதுவே. ஐஸ் ஐஸ் சிரியாவில் எத்தனையோ பிற மதத்தவர்களின் சின்னங்களைத் தகர்த்தமையை நீங்கள் அறியவில்லை போலும். அதற்காக அனைத்து முஸ்லீம்களும் வன்முறையாளர்கள் எனக் கூறவரவில்லை. அதே போல அனைத்து இந்துக்களும் ஆர் எஸ் எஸ் இன் காட்டுமிராண்டித்தனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
கடைசியில வினவுக்கே குல்லா மாட்டியாச்சா !!!???
ஐயோ பாவமே
அப்ப சீனாவில் உய்குர் முச்லிம்கள் தனிநாடு கோரி நடத்தும் ” சுதந்திரபோராட்டத்தை” ஆதரிக்க வினவு தயாரா ?..
இஸ்லாமிய மதம் என்பது வேறு
வகாபியிசம் மத வெறி என்பது வேறு
முன்னதை அங்கீகரிக்கலாம்
ஆனால்
பின்னது ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதம்
உலகில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளின்
சர்வதேச செய்திகள் பகுதியில் தினமும் நாம் கான்பது
இந்த மதவெறி இயக்கங்களின் “தினசரி செயல்பாடுகள்” பற்றி தான்
முற்போக்கு முகமுடியுடன் வலம் வரும் வினவு
சர்வதேச பயஙரவாததை ஏற்பது கன்டிக்கத்தக்கது
இசுலாம் மதம் மாற்றும் புனித போரா போர் ல என்னடா புனிதம் இருக்கு வினவு தளத்து சிவப்பு துண்ட கழட்டிட்டி இசுலாமிய பிரச்சாரம் பன்ன போகலாமே ,/ஜிகாத் என்ற சொல்லுக்கு வேண்டுமானால் பலர் பலவித விளக்கங்கள் தரமுடியும்./அல்லா கேட்டா உங்கள ஆள விட்டு தீத்து கட்டிட போறாரு உங்க இசுட்டத்துக்கு விளக்கமெல்லாம் குடுக்கதிங்க நபிகள் நாயகம் சல்லுல்லாகி அலையும் சலம் என்ன சொல்லி இருக்கரோ அதான் ஜிகாத் அவரு என்ன சொன்னாரு யூதர்கள் கிறிஸ்தவர்கள் சிலை வணங்கிகள கொல்ல சொன்னாரு அல்லாவின் மார்க்கம் பூரணமாகுற வரை காபிர்கள் ஜகாத்ன்ற வரி குடுத்து அடங்கி இருக்கும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள் என்பதே ………
சாரி ஜிஸ்யா என்ற வரி என்று படிக்கவும்
>>இந்தியாவின் மொகலாய மன்னர்கள் வசூலித்த ஜசியா வரியும் இத்தகையதே.
என்னா முரட்டு முட்டால்ல இருக்கு. ஒரு முஸ்லீம் கூட இந்த அளவுக்கு முட்டு கொடுக்க முடியாது. Overall சம தமாசா இருக்குப்ப்பா…..
இது எல்லாமே ஒரே கூட்டம் சார்.
கிறிஸ்துவர்களுக்கு ஹிந்து மதத்தை அழித்து இந்தியாவை கிறிஸ்துவ நாடாக மாற்ற வேண்டும், இல்லை என்றால் இனவாதம் பிரிவினைவாதம் மூலம் தேசத்தை தனி தனி கூறுகளாக பிரித்து மதமாற்றம் செய்ய வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கும் இதே குறிக்கோள் தான், அவர்களும் கிறிஸ்துவர்களை போல் ஹிந்துக்களை அழிப்பதில் கொஞ்சமும் தயங்க போவதில்லை. இன்றைய காஷ்மீர், பாக்கிஸ்தான், ஆப்கான் எல்லாம் நமக்கு உதாரணமாக இருக்கின்றன.
கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரையில் அவர்களும் கிறிஸ்துவ இஸ்லாமியர்களை போன்ற குணம் உள்ளவர்கள் தான் அவர்களும் முதலில் ஹிந்து மதத்தை அழித்து பிறகு இஸ்லாம் கிறிஸ்துவத்தை அழித்து நாங்கள் மதம் மற்றும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்லி கம்யூனிச மூடநம்பிக்கையை இந்தியா முழுவதும் கொண்டு வர நினைப்பவர்கள்.
இவர்கள் மூவருக்கும் இருக்கும் ஒற்றுமை.
தேசப்பற்று இவர்கள் மூவருக்குமே கிடையாது
தேசத்தை விட தமது மதம் (கொள்கை) தான் இவர்களுக்கு முக்கியம் அதற்காக யாரை வேண்டுமானாலும் அழிப்பார்கள் தங்கள் மதத்திற்காக (கொள்கைக்காக) உயிரையும் இவர்கள் கொடுக்க தயங்குவது இல்லை (மற்றவர்கள் உயிரை எடுக்கவும் தயங்கியது இல்லை)
இவர்களின் மதத்திற்காக (கொள்கைக்காக) இந்தியாவை துண்டாக இந்த மூவரும் கொஞ்சம் கூட தயங்க போவதில்லை. காஷ்மீரில் நாங்கள் இஸ்லாம் அடிப்படையில் வாழ விருப்புகிறோம் என்று சொல்லி பிரிவினை, மிசோரம், நாகலாந்து போன்ற பகுதிகளில் கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையில் இயேசு தேசம் என்று சொல்லி பிரிவினை. மக்களின் விருப்பம் ஜனநாயகம் என்று சொல்லி கம்யூனிஸ்ட்கள் இந்த பிரிவினையை ஆதரிக்கிறார்கள்.
ஆனால் இதே கம்யூனிஸ்ட்கள் திபெத் பிரிவினையை பற்றி வாயே திறக்க மாட்டார்கள் காரணம் கம்யூனிஸ்ட்கள் நோக்கம் இந்தியாவை பலவீனப்படுத்தி தனித்தனி தேசமாக பிரித்தால் தான் பாக்கிஸ்தான் சீனாவிற்கு வசதியாக இருக்கும் என்று நினைப்பவர்கள்.
இந்த மூவரும் நாட்டின் மற்ற பகுதிகளில் பேசும் மதசார்பின்மை… இவர்களை பொறுத்தவரையில் காஷ்மீர் பாக்கிஸ்தான் நாகலாந்து மிசோரம் போன்ற பிரேதசங்கள் எல்லாம் இஸ்லாமிய கிறிஸ்துவ பகுதிகளாக இருப்பதில் எந்த தவறும் கிடையாது ஆனால் இந்தியா ஹிந்து நாடாக இருந்தால் அது பெரிய பாவம்.