Tuesday, December 10, 2024
முகப்புசமூகம்சாதி – மதம்மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?

மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 18

”நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக் கருவிகளுடனும் பாட்டுக்களுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகச் கடுங்கோபம் கொள்கின்றனர். இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு மௌனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா? சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்?”

ஆர்.எஸ்.எஸ்.-இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர், ‘ஞானகங்கைஇரண்டாம் பாகம்பக்.170.

மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சினை இல்லாமல் நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே – இல்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.

முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்து போக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

அதேசமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூறின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக் கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை. 1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான் இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியாகத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, ”துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு” போன்ற ‘இனிய இசை மொழிகளை’க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகள் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.

பம்பாய், ஹைதராபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும். பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன – இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.

மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என் கண்டதேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் சமீபத்திய சான்று.

______________________________________

தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

  1. ஹைதராபாதில் விநாயகர் ஊர்வலம் போன்றே குரங்கு ஜெயந்தி விழாவுக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களின் அழிச்சாட்டியம் தாங்க முடியாது. டோலி சௌக்கி, மேதி பட்டணம் ஏரியாக்களில் முக்கோணக் காவிக் கொடிகளுடன் வேண்டுமென்றே திரும்பத் திரும்ப ரௌண்ட் அடிக்கிற ஆர்.எஸ்.எஸ். காலிகளையும் பார்த்திருக்கிறேன். இரு சக்கர வாகனங்ள் மற்றும் டிப்பர் லாரிகளில் ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் தேவையே இல்லாமல் அவர்கள் செய்கிற அழிச்சாட்டியம் மிக அருவருப்பாக இருக்கும். இதில் வேதனைக்குரியது என்ன வென்றால் இசுலாமியர்களும் தங்களது பண்டிகை நாட்களில் பாதுகாப்பு கருதி இதே போன்று கூட்டம் கூட்டமாக இரு சக்கர வாகனங்களிலும் டிப்பர் லாரிகளிலும் தத்தமது பகுதிகளிலேயே கோஷமிட்டபடி போக வேண்டியிருப்பது தான்.

    • //பல நூறு முஸ்லீம்களை, மண்ணின் மைந்தர்களை //
      ssssssss கண்ண கட்டுதே! யாரப்பா இங்க மண்ணின் மைந்தர்கள்?
      இஸ்லாமியர்கள் எங்களின் சஹோதரர்களே, அனால் அவர்கள் தாய் மதத்திலிருந்து வாள் முனையில் மாற்ற பட்டவர்கள் என்பதை அறியும் போது!

      // குரங்கு ஜெயந்தி விழாவுக்கும் இந்த ஆர்.எஸ்.எஸ்.//

      மரியாத, மரியாத, ஒரு பொறு**யை தூதர் என்று கூறும் உங்கள் வாதத்தை நாங்கள் ஏதும் கூறாத போது, உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது எங்களின் இறை வடிவங்களை இகழ்ந்து பேச? ஏன் இறைவன் குரங்கு வடிவில் இருக்க கூடாதா?

      //ஆமாங்க இக்பால். எங்க ஊர்ல கூட ஒலிபெருக்கியில பாங்கு சொல்றது RSS பொறுக்கிகளுக்கு பிடிக்கலன்னு stay வாங்கி இருக்காங்க//

      பாகிஸ்தான பிரிச்சப்பவே எல்லா சோளியையும் முடிச்சிருந்தா இந்த பிரச்சனையை வராது, காஷ்மீரத்திலும் பாகிஸ்தானிலும் எங்கள் ரத்தங்கள் கண்ணீர் சிந்தும் கதை ஏன் உங்களுக்கு தெரியவில்லை? இங்கு நீங்கள் வாழ எல்லா வழியும் உண்டு, அனால் நீங்கள் நன்னடத்தையில் இருந்து தவறாத வரை! உலகம் முக்கால் வாசி அழிந்ததற்கு யார் காரணம்?

      //இசைகளை, மத இசைகளை பொது இடங்களில் அளவுக்கு மீறி ஒலிப்பதையும் தடை செய்துவிடலாம் .. இதில் இந்து, கிருத்தவம், இஸ்லாம், சீக்கியம் என அனைத்தையும் உட்படுத்தலாம் !!!//

      கடற்கரயில் மீட்டிங் போட்டு கத்தினப்பவே தோண்ட குழிய பிச்சி எறிஞ்சிருந்தா இவிங்களுக்கு இந்த தஹிரியம் வருமா? இந்த ஹிந்து தேசத்தின் மாண்பு இவர்களை காத்து நிற்கிறது! என்ன செய்ய? உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் வினவே இங்கு ஜாலியாய் இருக்கறப்போ பாவம் பணத்துக்கு மாரடிக்கற, இவங்கள என்ன சொல்ல?

      //விநாயகரை கட்டாயம் மசூதிப் பக்கம் கொண்டுபோய் நிறுத்தி அல்லாவுடன் லடாய் செய்ய வைத்தால்தான் இந்து மதம் வளருமா..?!!!//

      அம்பியின் ஆழமில்லா கருத்து!

      • சத்யன்,
        மதவெறி என்ற ஆழமான படுகுழியில் யார் விழுந்தாலும் மீட்பது மிகக் கடினம், தடுப்பதுதான் ஒரே வழி..

      • மிஸ்டர், ஹிந்து மதத்தின் மாண்பு என்ன என்று உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் பறைசாற்றுகிறது.
        ஹிந்து தேசமா.. அது எங்க இருக்கு?
        //குரங்கு ஜெயந்தி விழாவுக்கும் // – இதில் உங்கள் குரங்கு தெய்வத்தை எங்கும் இகழ்ந்து சொல்லவில்லை. உங்களுக்கே அவமானமாக இருக்கிறதோ என்னவோ..

        //பாகிஸ்தான பிரிச்சப்பவே எல்லா சோளியையும் முடிச்சிருந்தா இந்த பிரச்சனையை வராது, காஷ்மீரத்திலும் பாகிஸ்தானிலும் எங்கள் ரத்தங்கள் கண்ணீர் சிந்தும் கதை ஏன் உங்களுக்கு தெரியவில்லை?// – என்ன சொல்ல வர்ற? பாகிஸ்தான பிரிச்சப்பவே அங்க இருக்குற உன் ரத்தங்கள் சோளிய முடிச்சிருந்த இப்போ இந்த பிரச்சனையே வராதுன்னு சொல்றியா?

        முதலில் மத வெறி என்னும் போதையில் இருந்து வெளியில் வா? அப்புறமா ரத்தங்கள் பத்தி பேசலாம்… பக்கத்துக்கு வீட்டுகாரனின் தொண்டைக்குழியை பிய்த்து ஏறிய ஆசை படும் நீயெல்லாம் அடுத்தவருடைய அல்லது பாகிஸ்தான் ரத்தங்களின் பிரச்னை பற்றி கவலைப்படுவதாக யாரை ஏமாற்றுகிறாய்.

  2. இந்து முண்ணனி ஊர்வலங்களில் சாதிபேதமில்லை.கண்டதேவியில் உள்ள பிரச்சினையை அவர்கள் துவக்கி வைக்கவில்லை.முஸ்லீம்கள் இங்கு சிறுபான்மையினர்,பல உரிமைகளையும்,சலுகைகளையும் பெறுபவர்கள்.இதே போல் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் சிறுபான்மை இனங்கள்/மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு உரிமைகள் உள்ளனவா.இஸ்லாத்திற்கு மார்க்சியத்திற்கும் ஒத்து போகாது.இஸ்லாமியர்கள் இறை மறுப்பாளர்கள்/நாத்திகர்களை ஏற்கிறார்களா.நீங்கள் என்னதான் முஸ்லீம்களுக்கு ஜால்ரா போட்டாலும் அவர்கள் உங்களை ஏற்கப்போவதுமில்லை,ஆதரிக்கப் போவதுமில்லை.அப்புறம் எதற்கு இப்படி ஜால்ரா போடுகிறீர்கள்.இந்து முண்ணனிக்கும்,இஸ்லாமிய அமைப்புகளுக்கும் உள்ள பிரச்சினைகளிலிருந்து விலகி நில்லுங்கள்.

    • அல்லாரும் இந்துன்றாளே, அத்த அங்க போயீ ( கண்ட தேவியில்)சொல்றததுதானே….

    • உங்களுக்கு பொய்மட்டும்தான் பேச தெரியும்னு நினைக்கிறேன்…

      நீங்க வேறெங்கும் போகவேண்டாம் Sriranga-த்துக்கு வந்த பாருங்க இந்த பாப்பானுங்க பன்னும்வேலையை, பூநூல் போட்டவன் மட்டும்தான் தேர் இழுக்குரானுங்க,

      இவனுங்க செய்யும் சேட்டை இஸ்லாமியர்களுக்கு மட்டுமில்லை இந்து மதத்தில் இருக்குரவுங்களுக்கே முகம்சுழிக்கிறமாதிரி இருக்கும். இந்த நாட்டிலுல்ல எல்லா பார்பனர்களையும், இந்தி மதவெறிபிடிச்சவனையும் விரட்டியடிச்சா போதும் நாடு கொஞ்சமாவது நிம்மதியா இருக்கும்…

      • தேர் இழுக்குற அளவுக்கு அவனுகளுக்கு தெம்பு இருக்கா என்ன ? மற்றவங்கள பண்ண வச்சி வேடிக்கை மட்டும் தான “பார்ப்பானுங்க”.

  3. மத நம்பிக்கை – உணவு விஷயம் போன்றவை அவரவர் சொந்த விஷயம்.

    மத விஷயம் என்று கூறிக் கொண்டு ஒருவர் மற்றொருவருக்கு இடையூறு விளைவிக்கும்போதுதான் பிரச்னைகளும் எழுகின்றன.

    ஒருவர் தனக்கு விருப்பமான (உதாரணமாக: மாட்டிறைச்சி) உணவை உண்ணும்போது, அதை அடுத்தவர் தலையிட்டு தின்னாதே என்று தடுப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? அவ்வாறு தடுப்பவர் அவருக்கு விருப்பமானால் பன்றியின் இறைச்சியை தின்று விட்டுப் போகட்டுமே!!!

    ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள், தங்களது புனிதத்தலம் என்று கூறிக்கொள்ளும் இடத்தில் பாதி எரிந்தும் எரியாமலும் உள்ள மனித பிணத்தின் உடலை சாப்பிடும் காட்சிகளை, சில காலங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில்கூட காண்பித்தார்கள்.

    மனித உரிமை பற்றி பேசுபவர்கள்கூட அதனைப் பற்றி கேட்க முடிகிறதா??

  4. ஹி ஹி…கோவால்கரை விமர்சனம் செய்ற அளவுக்கு வினவு வளந்துடுச்சா : ) வாழ்த்துக்கள் !

    அதுவுமில்லாமல், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதை இன்றும் பிரச்சினைக்குரியது தாங்க…

    நீங்க சொல்லி இருக்க பல விஷயம் ஓவர் பில்ட் அப் கொடுத்து சிண்டு முடிச்சி விட ட்ரை பண்றீங்க……குரூப் குரூப்பா பிரிச்சா தான் அரசியல் பண்ண முடியும் என்பதை நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க…

    ஒருவர் ஒரு சமயம் கூறிய கருத்தை அவர் வாழ்ந்த காலத்தோடு ஒப்பிட்டு நோக்கினால் அது தான் அறிவார்ந்த அணுகுமுறை.

    எப்படியோ….நீங்க இப்படி பேசிப் பேசியே…சும்மா இருக்கவங்கள கூட உசுப்பேத்தி விடுறீங்க….

    • // விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் பாதை இன்றும் பிரச்சினைக்குரியது தாங்க… //

      விநாயகரை கட்டாயம் மசூதிப் பக்கம் கொண்டுபோய் நிறுத்தி அல்லாவுடன் லடாய் செய்ய வைத்தால்தான் இந்து மதம் வளருமா..?!!!

      • வாழ்த்துக்கள் அம்பி.என்னதான் பார்ப்பனியத்துக்கு ஆதரவாக எழுதி வந்தாலும் உங்களிடம் நியாய உணர்ச்சி செத்து போகவில்லை என உணர முடிகிறது. மசூதிகள் முன்பாக பிள்ளையார் ஊர்வலங்களை நடத்தி சென்று வம்பிழுக்கும் இந்து முன்னணி,ஆர்.எஸ்.எஸ். காலிகள் விரைவில் மக்களால் விரட்டியடிக்கப்படுவர்

        • // என்னதான் பார்ப்பனியத்துக்கு ஆதரவாக எழுதி வந்தாலும் //
          // உங்களிடம் நியாய உணர்ச்சி செத்து போகவில்லை //

          வாழ்த்துன்ற பேர்ல சாத்துறீங்களே..!!!

    • //ஹி ஹி…கோவால்கரை விமர்சனம் செய்ற அளவுக்கு வினவு வளந்துடுச்சா : ) வாழ்த்துக்கள் !//

      Here VINAVU have not criticzed Golwalkar… Its about the claims of RSS.. Also i believe Golwalkar is NOT worthy of criticized by VINAVU in decent language.. Also i strongly believe VINAVU should NOT do it since he do not WORTH it..

  5. துலுக்கன வெட்டு.. துலுக்கச்சிய கட்டுனு கோஷம் போட்டா அது மதவெறி.. பார்ப்பான வெட்டு.. பாப்பாத்திய கட்டுனு ஜிஹாத் செஞ்சா அது மத நல்லிணக்கம்.. சரியா வினவு?

    • \\பார்ப்பான வெட்டு.. பாப்பாத்திய கட்டுனு ஜிஹாத் செஞ்சா அது மத நல்லிணக்கம்//

      இந்த மாதிரி கோஷம் எங்கேயும் யாரும் போடுவதில்லை. துலுக்கன வெட்டு.. துலுக்கச்சிய கட்டுனு கோஷம் போடும் பார்ப்பனிய சனாதன இந்து மதவெறியர்களிடம் வெளிப்படும் இழிந்த புத்தி பார்ப்பன எதிர்ப்பாளர்களிடம் ஒருபோதும் இருந்ததில்லை.

      • எல்லோருக்கும் உங்கள் பண்பு இருக்குமா, அன்பு..

        // இந்த நாட்டிலுல்ல எல்லா பார்பனர்களையும், இந்தி மதவெறிபிடிச்சவனையும் விரட்டியடிச்சா போதும் நாடு கொஞ்சமாவது நிம்மதியா இருக்கும்… //

        மேலே 3.2 ல் பின்னுட்டமிட்ட பண்பாளரை ஏதாவது ஒரு ஊர்வலத்தில் அழைத்துச் சென்று வாயிலிருந்து என்னவெல்லாம் வருகிறது என்று கவனியுங்கள்..

        வக்கிரம், காழ்ப்புணர்ச்சி கொண்ட ஜொள்ளுப்பார்ட்டிகள் எல்லாத்தரப்பிலும் இருக்கிறார்கள். இவர்களை எங்கிருந்தாலும் வன்மையாகக் கண்டிப்பதில் தவறேயில்லை..

        • ஒரு மனிதனை தொட்டாலே தீட்டுனு சொல்லுரவனை விரட்டி அடிக்ககூடாது, அடிச்சு விரட்ட வேண்டும். நான் ஒரு emergency field-ல் வேலை செய்கிறேன், சாலையில் அடிபட்டுகிடப்பவர்களை எல்லாதரப்பிரரும் தூக்க உதவிசெய்வார்கள், ஆனால் இந்த பார்பனர்கள் மட்டும் தொடவே மாட்டார்கள்,

          மனிதரை மனிதராக பார்காதவனை என்ன செய்யலாம்?

          • தூக்க உதவும் எல்லாதரப்பினரிலும் பார்ப்பனர்கள் மட்டும் இல்லை என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்..?! 100 சதவீதப் பார்ப்பனரும் ஒதுங்கி நிற்கிறார்களா..?!

            பார்ப்பனர் அல்லாத சாதி/மதத்தினருள் 100 சதவீதனரும் தூக்க வருகிறார்களா..?!

            இரண்டு பார்ப்பான்களில் சட்டை போடாமல் பூணூல் தெரிய ஒதுங்கி நிற்கும் பார்ப்பானைப் பளிச்சென்று பார்க்க முடிவதுபோல், சட்டை போட்ட பார்ப்பான் தூக்குவதை/தூக்காததைப் பார்க்கவும் ஏதேனும் வழி கண்டுபிடித்து வைத்திருக்கிறீர்களா..?!

            அடிபட்டு விழுந்திருப்பது ஒரு பார்ப்பான் என்று தெரிந்தாலும் மற்ற பார்ப்பான் ஒதுங்கி நிற்கிறானா..?! ஆம் என்றால், காரணம் தீண்டாமையாய் இருக்கமுடியாதே..

            இந்தக் கேள்விகளை உங்களிடம் கேட்கும் காரணம் எந்த அடிப்படையில் பார்ப்பனர்களைப் பற்றிய முடிவுக்கு வந்தீர்கள் என்று அறிவதற்காக..

          • அம்பி,
            தனியொரு மனிதன் சொல்றதுக்கும் ஒரு அமைப்பின் சார்பில் நடத்தப்படும் ஊர்வலத்தில் போடும் கோஷங்களுக்கும் வித்தியாசம் இல்லையா. தம்பி திவா சற்றே உணர்ச்சிவசப் பட்ட நிலையில் ”எல்லா பார்ப்பனர்களையும்” என எழுதி விட்டார் என நினைக்கிறேன்.மற்றபடி இந்து மதவெறி பிடித்த ஜென்மங்களை விரட்டியடிக்காமல் நாட்டுக்கு நிம்மதி கிடைக்காது என அவர் எழுதியிருப்பது நூத்துக்கு நூறு உண்மை.இன்னொரு விசயத்தையும் நினைவில் வைக்கவேண்டும். ஆக பெரும்பான்மையான பார்ப்பனர்கள் இந்து மதவெறி அமைப்புகளை ஆதரிப்பவர்களாகவும் அவர்களின் பிரசார பீரங்கிகளாகவும் உள்ளனர்.

            .பார்ப்பனியத்தை எதிர்த்து போராடி வரும் எந்த ஒரு அமைப்பும் பார்ப்பனர்களை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என சொன்னதில்லை.அவர்கள் இந்த மண்ணில் சகல உரிமைகளுடன் தமிழ் மக்களுக்கு சமமாக வாழ உரிமை படைத்தவர்கள்.கவனிக்கவும் அனைவருடனும் சமமாக.அதே சமயம் இந்து மதவெறியர்களின் யோக்கியதை என்ன.பிற மதத்தவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.இங்கு வாழ்வதாக இருந்தால் இரண்டாந்தர குடி மக்களாக அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதையே கொளகையாக கொண்டவர்கள் அவர்கள்.

            அதிருக்கட்டும்.திவாவின் மீது கோப படும் நீங்கள் ”அய்யர்” வால் முளைத்த ராமசுப்ரமணி சொல்லும் பொய்க்கு கோபப்படாதது ஏன்.

            • அன்பு,

              // தனியொரு மனிதன் சொல்றதுக்கும் ஒரு அமைப்பின் சார்பில் நடத்தப்படும் ஊர்வலத்தில் போடும் கோஷங்களுக்கும் வித்தியாசம் இல்லையா. //

              தனிமனிதர்கள்தானே அன்பு கோசம் போடப்போகிறார்கள்.. தெளிவான சித்தாந்த வழிகாட்டுதலும், கட்டுப்பாடும் கொண்ட இடதுசாரி அமைப்புகளாலேயே ’உணர்ச்சிப் பெருக்கெடுத்தோடும்’ சமயங்களில் தனிநபர்களை கட்டுப்படுத்துவது கடினம்.. காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் இயங்கும் பல ’முற்போக்கு’, ’பிற்போக்கு’ அமைப்புகளைப் பற்றி சொல்லவா வேண்டும்..

  6. ஒவ்வொரு மதமும் ஒன்றை விட ஒன்று சளைத்தது இல்லை !!! மத ஊர்வலங்கள் அனைத்தையும் மொத்தமாக தடை செய்யப் படல் வேண்டும் !!!

    இசைகளை, மத இசைகளை பொது இடங்களில் அளவுக்கு மீறி ஒலிப்பதையும் தடை செய்துவிடலாம் .. இதில் இந்து, கிருத்தவம், இஸ்லாம், சீக்கியம் என அனைத்தையும் உட்படுத்தலாம் !!!

    • ஆமாங்க இக்பால். எங்க ஊர்ல கூட ஒலிபெருக்கியில பாங்கு சொல்றது RSS பொறுக்கிகளுக்கு பிடிக்கலன்னு stay வாங்கி இருக்காங்க. ஆனா பாங்கு சொல்றது மற்ற இந்துகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இது ஒரு அயோக்கிய தனமான தீர்ப்பு என்றாலும் முஸ்லீம்கள் அமைதி காத்து இப்போது ஒலி பெருக்கியில் சொல்வது இல்லை. ஆனால் இது போன்ற ஒரு தீர்ப்பு இந்து மத வழிபாட்டு தலத்திற்கு கிடைத்திருந்தால் இந்த காலிகளுடைய எதிர்வினை எப்படி இருக்கும். பல நூறு முஸ்லீம்களை, மண்ணின் மைந்தர்களை கொன்று அதற்கு தேசப்பற்று என்று பெயர்சூட்டி இந்த கொடுமைக்கு தலைமை தாங்குபவனை முதலமைச்சர் ஆக்கியிருப்பார்கள். இந்த விசயத்தில் RSS காலிகளுக்கும் சாதாரண இந்து என்று சொல்லப்படுபவனுக்கும், தீண்டதகாதவன் என்று முத்திரை குத்தப்பட்ட இந்துவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

      • ஒலிபெருக்கி விஷயம் ஒரு கடுப்பான ஒன்று. கோவில் மந்திரங்களும், மாரியம்மா பாடல்களும், மசூதியிலிருந்து காலையில் பாங்கு போட்டு எல்லோரையும் எழுப்புவதும் தடை செய்ய வேண்டும். சொக்க தங்கம் சார், எல்லா நாட்டிலும் வல்லவன் சொல்வது தான். நாம் அமெரிக்காவிலும், மற்ற தேசங்களிலும் மூடிக்கொண்டு இருப்போம், இங்கே எல்லாம் சவுண்டுதான்.

    • //ஒவ்வொரு மதமும் ஒன்றை விட ஒன்று சளைத்தது இல்லை !!! மத ஊர்வலங்கள் அனைத்தையும் மொத்தமாக தடை செய்யப் படல் வேண்டும் !!!//

      இக்பால் சார் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்யனும்னா முதலாளித்துவத்தையே தடை செய்ய வேண்டிய நிலைமை வரும் பரவாயில்லியா!

    • இக்பால், மத ஊர்வலங்களை மொத்தமாகத் தடை செய்தால் போதாது. அவர்களது எல்லா பிரச்சார சத்தங்களையும் தடைசெய்ய வேண்டும். அரசியல்வாதிகள் யாரும் மத விழாக்களுக்குப் போகக்கூடாது. அரசு அலுவலகங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களை இடித்து விட்டு அலுவலகங்களுக்கு ஏதேனும் தேவைகளுக்காக வருபவர்களுக்கு ஒண்ணுக்குப்போக இடமில்லாமல் தவிக்கிற நிலையை மாற்றலாம். இதைச் செய்யும் ஆன்மிகர்களைக கடவுள் கடாட்சிப்பான்.

  7. தமிழ்நாட்டில் மசூதிகளும் கோவில்களும் ஒரே தெருவில் அமைந்திருப்பதும், ஒருவர் விழாவிற்கு மற்றொருவர் உதவுவதும் தொந்தரவு செய்யாதிருப்பதும் மற்ற மாநிலங்களில் நடக்காத ஒன்று. இங்கு குழப்பங்கள் செய்யாமலிருந்தால் நலம்.

  8. இந்தியாவை இந்துநாடக மாற்றாநினைப்பாவர்களை நேப்பால்(இந்து நாடான)
    நாடுகாடத்தாபடவோன்டும் .இந்த நாட்டில் இந்தியருக்கு மட்டும் தான் இடம்

    • நேப்பாள் இந்து நாடா? சேவ் இந்தியா கொஞ்ச நாளா நீங்க ஊர்ல இல்லையா?

  9. என்னுடைய ஊரில் மசூதி முக்கிய ஊருக்கு போவதர்க்கான பிரதான சாலை மீது அமைந்துல்லது. அந்த் மசூதி பகுதியின் இரன்டு பக்கமும் காலகாலமாக இந்து சமுதாயத்தினர் இருந்து வருகின்ர்னர். பன்னெடு காலமாக அந்த பிரதான சாலை வழியாக திருமன ஊர்வலம் செல்வது வழக்கம். ஆனால் மூன்ரு வருடங்கு முன்பு அதை தடுத்தனர் நீங்க சொன்ன அப்பாவிகல். அந்த பிரதான சாலை வழியாகத்தான் எல்லா வாகனங்கல் செல்கின்ரன / சென்ரன. இன்னும் செல்ல போகின்ரன. போய் எந்த ஒன்னும் தெரியாதவன்ட ஒன்ங்க அப்பாவிகலை எடுத்து சோல்லுங்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க