கண்ணை மறைக்கும் காவிப் புழுதி
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 21
”பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்து விட்டோம். பாகிஸ்தான் ஒரு புதிய தந்திரம் பண்ணியது. பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் இருந்த முசுலீம்களைப் பசி, பட்டினி போன்ற காரணங்களைக் காட்டி ‘எங்கள் நாட்டில் வறுமை, பிழைக்க வழியில்லை’ என்று சொல்ல வைத்து பாரதத்திற்குள் ஊடுருவிய அந்த அந்நியர்கள் சுமார் இரண்டரை கோடிப் பேர் பாரதத்தில் உள்ளார்கள். ஏற்கெனவே இருக்கிற தலைவலி போதாது என்பது போல் வெளியிலிருந்து இறக்குமதி செய்கின்ற இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
உலகில் ஒவ்வொரு நாடுமே தங்கள் நாட்டிற்குள் அதிகப்படியாக மற்ற நாட்டின் குடிமக்களை அனுமதிப்பதில்லை. எல்லா நாடுகளும் இப்படி கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் போது நமது நாடு மட்டும் என்ன சத்திரமா? எவர் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை மிகக் கொடுமையானது.”
– இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?” – இந்து முன்னணி, வெளியீடு, பக்கம் – 26.
முதலில் பொய்களைக் கவனிப்போம். இரண்டரைக் கோடிப் பேர் அகதிகளாக வந்தார்கள் என்பது எந்தவித ஆதாரமும் அடிப்படையும் இல்லாத வடி கட்டிய பொய். அடுத்து பாகிஸ்தானிலிருந்து அகதிகள் வருகிறார்கள் என்பதும் முழுப் பொய்தான். காசுமீர் பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பேயே, பாகிஸ்தானுடன் நடந்த மூன்று போர்களையொட்டி எல்லையைக் கடுமையாகக் கவனித்து வருகிறது இந்திய அரசு. சாதாரண வாழ்க்கைத் தேவைகளுக்காக எல்லை மாறும் இருநாட்டு எல்லையோர கிராம மக்கள் பலர் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனால் பல கிராமங்கள் வருடத்தில் பாதி நாட்கள் காலியாகத்தான் இருக்கின்றன.
எனில் இந்தியாவில் அகதிகள் என்ற நிலையில் இருப்பவர்கள் யார்?
இங்கே அரசின் சட்டபூர்வ பாதுகாப்பைப் பெற்ற அகதிகளும், பெறமுடியாத பரிதாபமான அகதிகளும் இருக்கின்றனர். இந்திய அரசின் பிராந்திய வல்லரசு என்ற நலனக்கேற்ப அகதிகளைக் கவனிக்கும் முறை வேறுபடுகிறது.
வங்க தேசத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த ‘சக்மா’ எனும் பழங்குடியினர் இருக்கின்றனர். இவர்களது நிலத்தையும், வாழ்வையும் பறித்துக்கொண்ட வங்கதேச அரசு இராணுவத்தின் மூலம் தொடர்ந்து அடக்கியும் வருகிறது. அதனால் வேறு வழியின்றி மேற்கு வங்கத்திற்கும், அஸ்ஸாமிற்கும் சில ஆயிரம் பேர் அகதிகளாக வந்தனர். இவர்கள் மூலம் அரசியல் ஆதாயம் ஏதும் இல்லையென்பதால், கணிசமான சக்மா பழங்குடியினரை மீண்டும் வங்க தேசத்திற்கே விரட்டி வருகிறது இந்திய அரசு.
சீனாவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் திபெத் பீடபூமியில், கடந்த சில நூற்றாண்டுகளாக லாமா எனப்படும் பௌத்தத் ‘துறவி’ நிலப்பிரபுக்கள் பெரும்பான்மை திபெத்தியர்களை ஒடுக்கி வந்தனர். 1949-இல் முடிவடைந்த சீனப் புரட்சி, இந்தக் கொடுங்கோன்மையான, பௌத்த நிலப்பிரபுக்களின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதிகாரத்தை இழந்த லாமாக்கள் தலாய்லாமா தலைமையில் 60-களில் இந்தியாவிற்கு ஓடி வந்தனர். இமாச்சல பிரதேசத்தின் தர்மஸ்தலாவிலும், ஏனைய வடஇந்திய நகரங்களிலும் பரவிக்கிடக்கும் சில ஆயிரம் திபெத்தியர்களை இந்திய அரசு தொடர்ந்து சீராட்டி வருகிறது. தலாய்லாமா கும்பலைத் தனி அரசாக அங்கீகரித்ததோடு அவர்களையம் உலக அரங்கில் ‘சுதந்திர திபெத் நாடு’ என்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதியும் ஆதரவும் அளித்து வருகிறது. இந்திய அரசின் அமெரிக்க ஆதரவு – சீன எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக இந்த ‘திபெத் அகதிகள்’ நட்சத்திர அந்தஸ்துடன் வாழ்கின்றனர்.
காலனிய ஆட்சிக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே பாரசீகத்தைச் (ஈரான், ஈராக்) சேர்ந்த பார்ஸிகள் மேற்கு இந்தியாவிற்கு வந்தனர். குஜராத்திலும், பம்பாயிலும் வாழும் இப் பார்ஸிகளும், இவர்களது தரகு முதலாளிகளும் இந்து மத வெறியர்களுக்கு ஆதரவான சமூகப் பிரிவாகவே இருக்கின்றனர். எனவேதான் வெளிநாட்டுப் பின்னணியும், வேற்று மதச் சடங்குகளும் கொண்ட பார்ஸிகளை இந்து மதவெறியர்கள் முசுலீம்களைப் போல் எதிர்ப்புணர்ச்சி கொண்டு நடத்துவதில்லை.
தமது தாயகத்திலிருந்து துரத்தப்பட்ட யூதர்கள் உலகெங்கும் சிதறியபோது ஒரு சிலர் இந்தியாவிற்கும் வந்தனர். இஸ்ரேல் உருவான பிறகு பெரும்பான்மை யூதர்கள் அங்கே சென்றுவிட்டாலும் சிறு எண்ணிக்கையிலான யூதர்கள் இங்கே இருக்கின்றனர். அமெரிக்க ஆதரவு, முசுலீம் எதிர்ப்புக் கொள்கையிலிருக்கும் இஸ்ரேலிய அரசு இந்து மதவெறியர்களுக்கும், இந்திய அரசுக்கும் நெருக்கமாக இருப்பதால், இந்திய யூதர்களும் பிரச்சினையின்றி நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இமயத்தின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் நேபாளம் இந்தியாவின் பிராந்தியத் துணை வல்லரசு ஆதிக்கத்திற்கு அடங்கி வாழ்ந்துவரும் நாடாகும். தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நேபாள மக்களை இந்திய அரசு தனது தேவைகளுக்கேற்பப் பயன்படுத்திச் சுரண்டி வருகிறது. அதனாலேயே இந்தியாவிலிருக்கும் நேபாள மக்களைக் கண்டும் காணாமலும் நடத்தி வருகிறது. இந்திய இராணுவத்தின் தீவிரப் போரிடும் பிரிவான ‘கூர்க்கா ரெஜிமண்ட்’டில் பல ஆயிரம் நேபாள வீரர்கள் இருக்கின்றனர். பம்பாய் விபச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான நேபாளச் சிறுமிகள் ஆண்டுதோறும் விற்கப்படுகின்றனர். இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆசியுடன் இந்திய மாஃபியா கும்பல்கள் நேபாளத்தை மையமாக வைத்து போதைப் பொருள் வியாபாரத்தையும் வளமாகச் செய்து வருகின்றனர். இப்படி இராணுவத்தில் குறைந்த கூலி கொடுத்துப் பலியிடவும், பம்பாய் விபச்சாரத்தில் பணத்தை அள்ளவும் பயன்படும் நேபாள மக்களை, இந்த மதவெறியர்கள் அகதிகளாகக் கருதாமல் இருப்பதன் மர்மம் இதுதான்.
சோவியத் ஆதரவுடன் ஆப்கானில் ஆட்சி நடத்திய நஜிபுல்லா அரசு, இந்திய அரசாலும் ஆதரிக்கப்பட்டது. இது பாக். எதிர்ப்பு மற்றும் சோவியத் ஆதரவு கொண்டிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கேற்ப தீர்மானிக்கப்பட்டதாகும். பின்னர் அமெரிக்க – பாக். ஆதரவு முஜாஹிதீன்களும், தாலிபான்களும் நஜிபுல்லா அரசை வீழ்த்தினர். அப்போது இந்தியாவிற்கு ஓடிவந்த ஆயிரக்கணக்கான நஜிபுல்லா ஆதரவு ஆப்கானியர்களை இந்திய அரசு வரவேற்று இன்று வரை பராமரித்து வருகிறது. இவர்களும் முசுலீம்கள்தான் என்றாலும் ஆர்.எஸ்.எஸ்.கும்பல் வாய் திறவாமல் இருக்கக் காரணம் பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியல்.
அடுத்து நமக்கு நெருக்கமான ஈழ அகதிகள் பிரச்சினையைப் பார்ப்போம். ஈழத்திலிருந்து வெளியேறி உலகமெங்கும் சிதறிக் கிடக்கும் அகதிகளில் சரிபாதிப் பேர், பல்லாயிரக்கணக்கானோர், இந்தியாவில் – தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். நேபாளத்தைப் போல இலங்கையும் இந்தியாவுடன் பல்வேறு உறவுகளில் பிணைக்கப்பட்டிருக்கும் நாடுதான். இந்திய பிராந்தியத் துணை வல்லரசுக் கொள்கையின் முக்கியமான அங்கமாக இலங்கை இருப்பதும், ஈழவிடுதலைப் போராட்டம் காரணமாக, அக்கொள்கை இன்னும் முக்கியத்துவம் பெறுவதும் நாம் அறிந்ததே. 1983 ஜுலை படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த ஈழ அகதிகள் ஆரவாரத்துடன் மைய அரசினால் வரவேற்கப்பட்டனர். ஈழப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும், பணமும், பயிற்சியும் தடையின்றித் தரப்பட்டன. காரணம், இலங்கையில் தன் தலையீட்டையும், ஆதிக்கத்தையும் ஏற்படுத்துவதற்கும், உறுதி செய்வதற்கும், இந்திய அரசு அகதிகளையும், போராளிகளையும வரவேற்று உபசரித்தது.
இன்றோ தமிழகத்தின் ஈழ அகதிகள் முகாம்கள் அனைத்தும் சிறைக் கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. சிங்கள அரசால் ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கூட இங்கே அகதிகளுக்குக் கிடையாது என்பதே உண்மை. முன்பு ஈழ அகதிகளுக்கு கலங்கரை விளக்காகத் திகழ்ந்த இராமேசுவரம், இன்று மரணப் பள்ளத்தாக்காக மாறிவிட்டது. தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு பாதி வழியில் கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டும், மீறி வந்தால் ஐந்தாம் மணற்திட்டில் இறங்கி பசி – வெயில் – குளிரில் பரிதவித்தும் வாடுவதே அவர்களின் தலைவிதியாகிவிட்டது. பத்தாண்டுகளுக்குள் நடந்த இந்தத் தலைகீழ் மாற்றம், அகதிகள் பிரச்சினையில் அரசியல் நலனுக்கேற்ப இந்திய அரசு போடும் இரட்டை வேடத்தைப் பளிச்செனப் புரிய வைக்கும். அவ்வகையில் இந்து மதவெறியர்களும் ஈழ அகதிகளை ஒடுக்குவதையே விரும்புகின்றனர்.
இனி ஆர்.எஸ். கும்பல் விரட்டத் துடிக்கும் வங்கதேச அகதிகளைப் பார்க்கலாம். 80-களில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு என்ன நேர்ந்ததோ அதுதான் 70-களில் வங்கதேச அகதிகளுக்கும் நடந்தது. பாகிஸ்தானைப் பிளப்பதற்குத் தருணம் பார்த்திருந்த இந்திய அரசுக்கு வங்கதேசம் ஒரு கருவியாக வாய்த்தது. இந்திரா காலத்தில் பாகிஸ்தானுடன் இதற்காக நடந்த 1971 போரின்போது வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகள் வரவேற்கப்பட்டார்கள். பாகிஸ்தானை எதிர்த்த வங்கதேசத்து சேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவால் வளர்க்கப்பட்டார். அவரது ‘முக்தி வாஹனி’ இயக்கத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் இந்திய அரசால் அளிக்கப்பட்டன. போரில் பாகிஸ்தான் தோல்வியடைந்து, வங்கதேசம் பிரிந்தபோது அகதிகளின் வாழ்வும் முடிவுக்கு வந்தது.
சேக் முஜிபூர் ரஹ்மானுக்குப் பிறகு வந்த இராணுவ மற்றும் ஜனநாயக ஆட்சியாளர்கள் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து வருவதால், இங்கிருக்கும் வங்கதேச ஏழைகளை விரட்டுவதற்கு இந்திய அரசும், இந்து மதவெறியர்களும் தீவிரம் காட்டுகின்றனர். இன்றைய வங்கதேசமும் (பங்களாதேஷ்) இங்கிருக்கும் மேற்கு வங்க மாநிலமும், மொழியால், இனத்தால், பண்பாட்டால் ஒரே மக்கள் வாழும் பிராந்தியமாகும். மேற்கு வங்கத்தில் இந்துக்களும், கிழக்கு வங்கத்தில் முசுலீம்களும் பெரும்பான்மையாக இருந்தாலும், இரு மதத்தைச் சேர்ந்தோரும் கணிசமான அளவில் இரு பகுதிகளிலும் வாழ்கின்றனர். வங்கதேசிய இனம் இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஒருசில தேசிய இனங்களில் ஒன்றாகும். அதனால் இம்மக்களது நெருக்கமான உறவு பற்றி அதிகம் விளக்காமலேயே புரிந்து கொள்ள முடியும்.
காலனிய ஆட்சியின்போது 1905-இல் கர்சன் பிரபு என்ற ஆங்கிலேய வைசிராய் வங்கத்தை மேற்கு, கிழக்கு என மதத்தை அடிப்படையாக வைத்துப் பிரித்தான். ஆயினும் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை அன்றைய வங்கத்து மக்கள் தீரத்துடன் போரிட்டு முறியடித்தார்கள். மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு வங்காளிகள் என்ற முறையில் அவர்களால் நடத்தப்பட்ட இப்போராட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஆயினும் அதன்பிறகு நாட்டு விடுதலைப் போராட்டம் இந்து மதச்சார்பை எடுத்ததும் அதை வெள்ளையர்கள் ஆதரித்ததும், எதிர் விளைவாக முசுலீம் லீக் தோற்றமும் இறுதியில் வங்கம் மதத்தால் பிளவுண்டு போகக் காரணமாய் அமைந்தன.
கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தானின் ஒடுக்கு முறையிலிருந்து பிரிந்து வந்தாலும், வறுமையிலிருந்து விடுதலையடையவில்லை. இந்தியாவைவிடப் பின்தங்கியிருக்கும் வங்கதேசம் எவ்விதப் பொருளாதார முன்னேற்றமும் இல்லாத ஒரு வறிய நாடாகும். ஏற்கனவே துணைக் கண்டத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த வங்கத்து மக்களில் ஆகக் கடையரான ஏழைகள் பஞ்சம் பிழைக்க கல்கத்தா, டெல்லி, பம்பாய் நகரங்களுக்கு வருகின்றனர். இப்படி இந்தியாவின் வறிய பகுதிகளிலிலிருந்து பிழைப்புத் தேடி பெரு நகரங்களுக்குக் குடிபெயர்வது என்பது இந்நூற்றாண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். வங்க தேசத்திலிருந்து இந்தியா வந்து ரூ.20, ரூ.30 என கூலிக்கு வேலை செய்யும் இந்த ஏழைகளை முசுலீம்கள் என்ற ஒரே காரணத்தினால், விரட்டி அடிக்க வேண்டும் என்று இந்து மத வெறியர்கள் கூப்பாடு போடுகின்றனர்.
அகதிகள் பிரச்சினை என்பது ஆர்.எஸ்.எஸ். கூறுவது போல உலக அதிசயமல்ல. காலனிய நாடுகளை அடக்கி ஆளும் ஏதாதிபத்தியம் தோன்றியதிலிருந்து, நாடுவிட்டு நாடு போகும் அகதிகள் பிரச்சினையும் துவங்கிவிட்டது. அரசியல், பொருளாதார, மத, பண்பாட்டுக் காரணங்களினால் தன் நாட்டில் வாழ வழியின்றி அடைக்கலம் தேடி ஓடுவது என்பது இன்றைய உலகமாயக்கத்தின் வளர்ந்து வரும் பிரச்சினையாகும். இதற்குக் காரணமான வல்லரசு நாடுகளே இதற்குத் தீர்வு சொல்ல முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து மலேசியா-சிங்கப்பூருக்கும், வளைகுடாவிற்கும் விசா இல்லாமல் போவது, மத்திய – தென் அமெரிக்கா நாடுகளிலிருந்து, அமெரிக்க – ஐக்கிய நாட்டிற்குப் (யு.எஸ்.) போவது, மத்திய தரைக்கடல் – ஆப்பிரிக்க ஏழை நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குப் போவது, தெற்காசிய நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் செல்வது, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்வது என வேலை – வாழ்க்கை தேடி ஓடும் ‘சட்ட விரோத அகதிகளின்’ இடமாற்றம் உலகெங்கும் நடந்து வருவதுதான்.
இன்னும் போஸ்னியா, குர்திஸ்தான், செசன்யா, கிழக்கு திமோர், ஆப்கான், ஈழம், காசுமீர் போன்ற அரசியல் அகதிகள் பிரச்சினையும் உலகெங்கும் உள்ளதுதான். இப்படி நாடு விட்டு நாடு போகும் இத்தகைய அகதிகளை அந்தந்த நாட்டு முதலாளிகள் குறைந்த கூலி கொடுத்து சக்கையாய்ப் பிழிந்து சுரண்டியும் வருகின்றனர். இத்தகைய மலிவான உழைப்புச் சுரண்டலுக்காக பல நாடுகள் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கண்டும் காணாமல் அனுமதிக்கின்றனர்.
அதேசயம் இந்த அகதிகள் அரசியல் ரீதியாக ஒன்று சேர்வதைத் தடுத்து மிரட்டுவதற்காக உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அகதிகளைக் காரணம் காட்டி அந்நாட்டு இளைஞர்களை உசுப்பி விடுவது என்ற தந்திரத்தை இந்நாட்டு அரசுகள் பின்பற்றி வருகின்றன. பிரிட்டனில் ஆசிய நாட்டவரைத் தாக்குவது – அல்ஜீரியர்களை பிரான்சில் தாக்குவது, தென் அமெரிக்கர்களை மிரட்டுவது, ஈழ அகதிகளை ஜெர்மனியில் அடிப்பது, ஆஸ்திரேலியாவில் தெற்காசியைரைத் தாக்குவது, இவை சில எடுத்துக்காட்டுக்கள். இந்நிகழ்ச்சிப் போக்கிலிருந்தே உலகெங்கும் பாசிச இனவெறிக் குழுக்கள் தோன்றியுள்ளன. உலகளாவிய இந்த பாசிசக் கூட்டணியின் இந்தியப் பிரதிநிதிகளான ஆர்.எஸ்.எஸ்.கூட்டம் வங்கதேச அகதிகளை அடித்து விரட்டுகிறது.
எனவே அகதிகளுக்காகக் கண்ணீர் விடுவதும், அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதும், அவர்களை அடித்து விரட்டுவதும் , ஏகாதிபத்தியத்தின் இரட்டை முகங்ககளாகும். ஐ.நா.சபையின் மனித உரிமை சாசனம் வகுத்திருக்கும் அகதிகளின் உரிமைகள் உண்மையில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டன. வல்லரசு நாடுகளின் அரசியல் ஆதாயத்துக்காகப் பந்தாடப்படும் அகதிகளின் அவலம இக்கணம்வரை அதிகரித்தே வருகிறது. இந்தியாவிலும் அப்படித்தான்.
அமெரிக்க – ஐரோப்பிய, ஜப்பான் நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் இந்தியாவைக் கூறுபோடடு விற்கும் பா.ஜ.க., இந்து மத வெறிக் கும்பல், ரிக்ஷா இழுத்தும் மூட்டை தூக்கியும் தெருவில் வாழும் வங்கதேசத்து ஏழைகளை தேச விரோதிகள் என்று கூசாமல் கூறுகிறது. முசுலீம் மக்களை ஐ.எஸ்.ஐ ஏஜெண்டு – அகதி என்று மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டுதான் இந்த அகதி பிரச்சாரம்.
– தொடரும்
_________________________இதுவரை …………………………………………..
- பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
- பாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?
- பாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
- பாகம் 4 – தீண்டாமையை ஏற்றுக்கொள்! இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்!!
- பாகம் 5 – கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்!
- பாகம் 6 – வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?
- பாகம் 7 – ஆண்டவனின் வறுமையா? ஆலயக் கொள்ளைக்கு உரிமையா?
- பாகம் 8 – கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி!
- பாகம் 9 – ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!
- பாகம் 10- வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்?
- பாகம் 11 – ‘இந்து கடையிலேயே வாங்கு’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு?
- பாகம் 12 – சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?
- பாகம் 13 – சிறுபான்மையினர் கமிசனைக் கலைக்கக் கோரும் ‘மனித உரிமை’ப் பற்றாளர்கள்!
- பாகம் 14 – கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா?
- பாகம் 15 – ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா?
- பாகம் 16 – ‘நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’!
- பாகம் 17 – உருது முஸ்லிம்களின் மொழியா?
- பாகம் 18 – மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?
- பாகம் 19 – உயர்பதவிகளில் முஸ்லிம்கள் – பார்ப்பனியத்தின் கருணையா?
- பாகம் 20- பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?
தொடர்புடைய பதிவுகள்
- அமெரிக்க சொர்க்கத்தில் ஆசிய அடிமைகள்!
- மலேசியாவில் தமிழ் அடிமைகள்! நேரடி ரிப்போர்ட்!!
- சௌதி எனும் நரகத்தீயில் பெண் தொழிலாளர்கள்!!
- வளைகுடா ஷேக்குகளிடம் வதைபடும் தொழிலாளர்கள் ! நேரடி ரிப்போர்ட் !!
- தங்கம் தின்று, கடலைக் குடித்து, அடிமைகளின் உழைப்பில்….துபாய்!
- “அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்!
- தமிழ்நாட்டில் கரையேறினேன்… அகதியாய்…!
- தமிழக அகதி முகாமில் தத்தளிக்கும் ஈழத்து வாழ்க்கை!
- கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!
வினவுடன் இணையுங்கள்
Hey ….
When I start reading this site.. i thought this guys are doing good work and I hope the trying to show the truth behind all matter. But now gradually they are doing every think for their own motto. I don’t know why they are trying to support one community.
Also they are trying to accuse only one side on may matters like hindus migration from pakistan etc..
People like me lost hope on vinavu… Because vinavu also started to do like normal money oriented sites.
Blatant lies:
1.Lamas are land lords: Lamas are religious leaders of Tibet,still greatly respected and revered by the Tibetan people all around the world.
2. Bangladeshi people have been moving into India since a very longtime but the Congress in order to sue them as a votebank,purposefully gave them voter id cards & ration cards and gave them citixzenship illegally.Places on the border like silchar are full of Bangladeshi Muslims who do not belong to India.
Bangaldeshi muslims voted for muslim league and in favour of partition by a great majority in 1947 and often hindus of bengal were massacred in large numbers to satisfy their greed.
The real reason why India should drive away all bangaldeshi muslims back to Bangladesh is because they are muslims,they multiply like rabbits,they are uneducated,not civil and they have no right to enter and exploit a country illegally which they voted against in 1947.
Thats all.
So in Malaysia they can attack Hindus and send them back to India?? They have citizenship over there..they are spreading like rabbits over there….Harikumar ,to understand the real cause we need broad mind.. What ever media vomits simply should accept…use the brain and act as a human nt as a rabbit..
I have Assamese friends myself and i very well know the nature of such immigration and the idea behind it.Hindus in Malaysia also have problems,they are also a suppressed minority and not to forget they contribute usefully to the society and are an educated lot who are well to do,just like in Srilanka.
They also do not multiply like rabbits and thats why they get respect in Malaysia and full rights.Moreover,the day they start behaving like this,they ll also get attacked.
You try to understand the reality and dont hide behind random universal brotehrhood and causes and all.there is no cause bigger than livelihood and we do not need those people from bangladesh and nor should give them money from our budget.
டியர் Mr. இந்தியன் and ஹரிகுமார் ,
நேபாளத்திலிருந்து , இலங்கையிலிருந்து அகதிகள் இந்தியாவுக்கு வரும்பொழுது பங்களாதேஷிலிருந்து மட்டும் ஏன் வரக்கூடாது ? என்பதை இந்த கட்டுரை தெளிவாக விளக்குகிறது. உள்ளூர் காரன் அமேரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் ன்னு வேலைக்காக போனாலும் அவனும் அகதி தான்.
அதனால அவன் இங்கு வருவதிலும் நாம ‘ அப்ப்ரூவ்டு அகதி’ யா போவதிலும் எந்த தப்பும் இல்ல.
India vendam,Bangaldesh thaan venumnnu vote potta yaarum inga varakoodathu.Avlo thaan.
யார் வேண்டுமானாலும் எந்தநாட்டுக்கும் போய் அகதியாகப் பிழைக்கலாம் தவறே இல்லை..உலகமெங்கும்நம் தமிழ் மக்கள் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் அவன்நாட்டுக்கே போய் அவனயே அடித்து விரட்டநினைத்தால் அது தவறு..இதைத்தான் வங்கது முஸ்லீம்கள் செய்துகொண்டிருக்கின்றனர்…
தினமணியின் இன்றைய தலையங்கம் பாகிஸ்தானிலிருந்தும் , வங்கத்திலிருந்தும் வரும் இந்துக்களை வரவேற்க்கவேண்டும் என்று எழுதி இருக்கிறது. முஸ்லிம்கள் என்றால் வரக்கூடாது , அதுவே இந்துவாக இருந்தால் வரலாம்…என்ன நியதி இது. இந்திய ஒன்னும் இந்துக்களுக்கு சொந்தமில்லை என்பதை எப்படி இவர்களுக்கு புரிய வைப்பது?..இந்தியா என்ற ஒரு நாடே முகலாயர்களின் ஆட்சியில்தான் வரையறுக்க பட்டது . ஒவ்வரு குறுநில மன்னர்களும் இந்தியாவை பங்கு போட்டு ஆட்சிசெய்து கொண்டிருந்தார்கள் அதை ஒரு கொடையின் கீழ் கொண்டுவந்தவர்கள் முகலாயர்கள் . நேற்றைய இந்து பத்திரிக்கையில் ஒருவர் அமெரிக்காவில் சீக்கிய மக்கள் கொல்லபடுவதை பற்றி ஒரு மட்டமான கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார்.. ஒரு எட்டு சென்று படித்து பாருங்கள். அங்கே சீக்கியர்கள் முஸ்லிம்களின் தோற்றத்தில் இருப்பதினால் தான் தாக்க படுகிறார்கள் …ஆகவே சீக்கியர்கள் அவர்களை அடையாள படுத்திக்கொள்ள வேண்டும், முஸ்லிம்களில் இருந்து நாங்கள் தோற்றத்தில் வேறு பட்டவர்கள் என்பதை அமெரிக்க சமூகத்தில் பரவ செய்ய வேண்டும் அப்போதுதான் அவர்கள் முஸ்லிம்கள் என்று நினைத்து சீக்கியர்களை கொள்ள மாட்டார்கள் என்று எழுதி இருக்கிறார். அவருடைய கட்டுரையின் சாராம்சம் என்ன வென்றால் முஸ்லிம்கள் என்றால் சுடு ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் சீக்கியர்களை கொல்லாதே,சுடாதே என்பது தான். இவர்களை நாம் எப்படி மனிதன் என்று சொல்வது…இவருடைய கட்டுரையை படித்து விட்டு எத்தனை பேர் இந்தியாவில் முஸ்லிம்களை சுடுவான் ..யோசித்து பார்க்க வேண்டியவிஷயம். மனிதன் மனிதனை மனிதனாக பார்க்க விட்டால் அவன் மிருகமே …
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=645111&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=
http://www.thehindu.com/opinion/letters/article3765844.ece
அது சரி! முஸ்லீம்களால் கொல்லப்பட்ட அமெரிக்கர்கள் எல்லாம் மனுஷங்க இல்லையா? சீக்கியர்கள் தாக்கப்படுவதற்கு காரணம் அவர்கள் முஸ்லீம்கள் என்னும் தோற்றத்தில் இருப்பது தான். அதனால், நாங்கள் முஸ்லீம்கள் இல்லை என்கிறார்கள்.
ஆனால் முஸ்லீம்கள் செய்யவேண்டியது, நாங்களும் தீவிரவாதிகளும் ஒன்றில்லை என்று புரிய வைப்பது தான். ஆனால், அதை செய்கிறார்களா முஸ்லீம்கள்? அதை விட அவர்களுக்கு முக்கியம் தகர்க்கப்பட்ட உலகவர்த்தக கட்டிடத்தின் அருகில் மசூதி கட்டப்பட வேண்டும் என்பது தான்.
இதுல முஸ்லீம்கள் மீது பாசம் பொழிய வேண்டும் என்கிறீர்கள். முஸ்லீம்களின் பிரச்சினையை பத்தி அவர்களுக்கே அக்கறை இல்லை. இன்னும் ஒசாமா பத்தி பெருமைப்படுறவங்க தானே அவங்க…
அமெரிக்கா வால் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் மனிதர்கள் இல்லியா..?
அதாவது, வர்த்தக மைய கட்டிடத்தை இடித்ததால் அமெரிக்கர்களின் பழிவாங்கும் நடவடிக்கை தான் முஸ்லீம் தோற்றத்தில் இருப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று நியாயப் படுத்துகுறீர்கள்.
அப்பாவி இராக்கியர்கள், மற்றும் குழந்தைகள் படுகொலைதான் பத்து ஆண்டுகள் கழித்து அமெரிக்க வர்த்தக மைய கட்டிட பழிவாங்கல் என்று ஏன் நியாய படுத்த முடியாது.
முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் மகிழ்ச்சியும் அமெரிக்க மக்கள் கொல்லப்பட்டால் நீலிக்கண்ணீரும் வடிக்கும் உங்களைப் போன்றவர்கள் குஜராத் அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்ட போது குதூகலித்ததை மறுக்க முடியுமா?
ஒசாமா பற்றி பொறுமை படுவதில் எந்த தவறும் இல்லை. சொந்த நாட்டு மக்களின் உரிமைக்காக, அவர்களின் சுதந்திரத்திற்காக அமெரிக்க ஓநாய்களிடம் போராடி வீர மரணம் அடைந்த மாவீரன்.
ஆனால் சொந்த நாட்டு அப்பாவி முஸ்லீம்களை கொன்று குவித்த அயோக்கியன் மோடியை பற்றி பெருமைப்படும் யோக்கியர்கள் தானே நீங்கள். சிறைக் கொட்டடிகளில் கிடக்க வேண்டிய அவன் முதல்வராக நீடிக்க என்ன அருகதை இருக்கிறது. கேட்டால் குஜராத்தை தூக்கி நிறுத்தினான் என்பீர்கள்.. தூ…
//ஒசாமா பற்றி பொறுமை படுவதில் எந்த தவறும் இல்லை. சொந்த நாட்டு மக்களின் உரிமைக்காக, அவர்களின் சுதந்திரத்திற்காக அமெரிக்க ஓநாய்களிடம் போராடி வீர மரணம் அடைந்த மாவீரன்.//
அப்படி போடு சபாஸு…இதையேத்தான் நானும் சொல்றேன்… :))))))))
நன்றி.. மோடி ஒரு அயோக்கியன் தான்னு சீனு ஒத்துகிட்டதுக்கு..
அதான…கேட்ட கேள்விக்கு பதில் வந்துட்டா மட்டும்…
//ஒசாமா பற்றி பொறுமை படுவதில் எந்த தவறும் இல்லை. சொந்த நாட்டு மக்களின் உரிமைக்காக, அவர்களின் சுதந்திரத்திற்காக அமெரிக்க ஓநாய்களிடம் போராடி வீர மரணம் அடைந்த மாவீரன். //
ஒசாமா மாவீரனா?? ஆகாகா அவனாநீ???
///ஒசாமா பற்றி பொறுமை படுவதில் எந்த தவறும் இல்லை. சொந்த நாட்டு மக்களின் உரிமைக்காக, அவர்களின் சுதந்திரத்திற்காக அமெரிக்க ஓநாய்களிடம் போராடி வீர மரணம் அடைந்த மாவீரன்.
ஆனால் சொந்த நாட்டு அப்பாவி முஸ்லீம்களை கொன்று குவித்த அயோக்கியன் மோடியை பற்றி பெருமைப்படும் யோக்கியர்கள் தானே நீங்கள். சிறைக் கொட்டடிகளில் கிடக்க வேண்டிய அவன் முதல்வராக நீடிக்க என்ன அருகதை இருக்கிறது.
///
Indias (Assam) people killed bangaladesh people, why mumbai musilims (indians) killed hindus (indian)? It is purely because of religion. If pakistan asked this guys to kill indian, they will do because of the same religion. where the “சொந்த நாட்டு” concept came here?
மதம் சார்ந்து சொன்ன கருத்து அல்ல சூழ்நிலை காரணமாக சொல்லப்பட்டது பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற இடங்களில் ஹிந்துக்கள் தாக்க பட்டால் அவர்கள் இந்தியாவை விட எங்கே போக முடியும் அப்படி வருபவர்களுக்கு வேண்டிய உதவி கேட்பது தவறு அல்ல சீக்கியர்களுக்கான ஆலோசனை தவறு செய்யாமல் பாதிப்பை அவர்கள் அடைவதை தடுக்க செய்யும் முயட்சி தான் இஸ்லாமிய தீவிர வாதத்தால் பாதிப்பு வரும் போது பின் பாதிக்க பட்டவர்களால் சீக்கியர்கள் பாதிக்கபடாமல் இருக்க சொன்ன அறிவுரையில் தவறு இருப்பதாக தெரிய வில்லை
Yeah it is true, Muslims voted for partition and went to Pakistan and Bangladesh,thats why there was so much bloodshed in both Pakistan and Bangaldesh.
Moreover,this secular congress party did nothing to help the hindus stuck in either countries,it was only RSS and Hindu Mahasabha which helped people arrive safely and also find their relatives in Delhi & Calcutta.
These people who caused so much bloodshed and also recieved rich agricultural lands of West and East pakistan then,killing hindus and sikhs in Multan/Lyallpur/Lahore like crazy and also in Noakhali in Bangladesh.
Now these guys cannot manage their country/economy and now they want to move to assam for livelihood.How nice is that? Hindu endral emanthavan,ivanungala ellam varaverkanum.Avan Bussa koluthuvan,policeaa pottu thalluvan,aana namma Mak solraarunnu naanga ellam vellai kodi kaatikittu nikkanum.Athu than unga vaadham?
Venumna unga veeta pakkathu veetukaaranukku ezhuthu vechittu,sathrathula poi thangikkunga,Inga vandhu sari thappunnu olaradheenga.
அழகான கருத்து, நாமே ஒழுங்கில்லை, நாம் பங்களாதேஷிகளை என்ன சொல்ல அருகதை? அமெரிக்காவில் நான் பல வருடம் இருந்ததால் அங்கு வாழும் இந்தியர்கள் எவ்வளவு விசா ஏமாற்று வேலை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். ஆர். எஸ். எஸ். -ஐ வெளுத்து வாங்கும் அதே வேலையில், பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் கொஞ்சம் திட்டி இருக்கலாம். மதத்தால் பிரிந்த நாடுகளில் இந்தியாவில் மட்டும் மதசார்பின்மையை எதிர் பார்ப்பது என்னை பொறுத்த வரையில் நடக்காத காரியம். இதை நல்லது என்று சொல்லவில்லை. எப்பொழுதும் ஒரு புது பரிமாணத்தை கொண்டு வரும் வினாவுக்கு நன்றி.
//அமெரிக்காவில் நான் பல வருடம் இருந்ததால் அங்கு வாழும் இந்தியர்கள் எவ்வளவு விசா ஏமாற்று வேலை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்//
நீங்க சொல்றது ஏமாற்று வேலை இல்லை. தனக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்துவது பற்றி.
பொதுவாக இந்தியாவில் இருந்து விசாவில் வருபவர்களும், அவர்கள் செய்யும் குறுக்கு வழிகளும் அமெரிக்கர்கள் சரியாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
இரண்டும் ஒன்று தான் சார். அமெரிக்காவை திட்டுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், நாம் அந்த ஊரு மத்திய வர்க்கத்தை அழிப்பதை பற்றிய வெப்சைட் இது. check out techinsurgent.com.
Hey dude…dunno what is money oriented in this article!! Is Vinavu getting lot of advertisements because of this? If so can you point it out?
Also could you please state what is untrue about this article??
அதான இன்னும் வினவு தன்னுடைய கச்சேரிய ஆரம்பிக்கலையேன்னு நெனச்சேன், வங்கதேசத்திலிருந்து இங்க ஊடுருவி தொழில் பன்னுவது தவறில்லை…உலகம் முழுவதும் நம் தமிழ் மக்க்ள செய்வதும் இதுதான்….ஆனால் இங்கு என்ன பிரச்சனை என்று தெளிவாகத்தெரிந்திருந்தும் ஆனால் வழக்கம் போல் கதையினைத் திரித்து ஒரு கட்டுக் கதை எழுதுவதை என்ன சொல்ல???
http://tamil.oneindia.in/news/2012/08/16/india-one-killed-as-violence-erupts-assam-again-159733.html
அசாமில் நிகழ்ந்துள்ள மோதலானது இந்துக்களும் முஸ்லிம்களுக்கும் இடையேயான மோதலோ அல்லது பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினருக்கு இடையேயான மோதலோ அல்ல.மிகப் பெரிய அளவில் வங்கதேசத்தில் இருந்து எல்லைதாண்டி வந்து குடியேறுவதால்தான் பிரச்சனை வெடித்திருகிறது.
கொடுத்திட்டோம், கொடுக்கின்றோம், தருகிறோம்னு சொல்லுறாய்களே, இந்தியாவ என்ன RSSகு பட்டா போட்டா கொடுத்திருக்காங்க இல்ல இந்தையா RSSன் அப்பன் வீட்டு சொத்தா.
THuuu…
யூதர்கள், பார்சிகள்,நஜிபுல்லாக்கள் அதிக அளவில் இந்தியா வந்து ஒரு சில மாவட்டங்களில் பெரும்பான்மை ஆகிவிட்டால், அவர்களுக்கு எதிரான உணர்வு மக்கள் மத்தியில் வளரும். வன்முறையாகவும் அது மாறும். குறிப்பாக அவர்களால் சிறுபான்மையாக மாறிவிட்ட உள்ளூர் மக்களால் வன்முறை வெடிக்கலாம். இதில் ஜாதி, மதம் என்ற பிரிவினை இல்லை.
நல்ல ஆய்வு கட்டுரை வரவேற்கிறோன் நடுநிலைக்கு வாழ்த்துகள் தன் இயலாமையால் பிழைப்பு தேடுப்பவர்களே அகற்றுவது என்பது அயோக்கியத்தனம் ஆகும் இந்த பிஜேபி என்ற மதகட்சி மக்களே மதத்தல் பிரிப்பது தான் குறிக்கோள இருக்கிறது இவர்கள் கூறியவற்றுக்கு ஆதரத்தை காட்ட வேணடும்
இந்தியாவில் அகதிகள் என்று எவ்வளவு இருக்கிறார்கள் பிஜேபி முஸ்லிமகளே மட்டும் குறிவைப்பது முஸ்லிமக்ளே கண்டு தொடை நடுங்குவது ஏன்
நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் நக்கேதான் குடிக்கும் .அதுபோல பிஜேபியை ஒட்டு போட்டு மத சார்பற்ற நாடாக மாத்தனும் நெனச்சாலும் அது மதம்கொண்டு கடிக்கத்தான் செய்யும் …அதன் குனம் அதான்,,,லொல்…லொல்…லொல்.
சமூக நல் இண்க்கமே முக்கியம்.இறை நம்பிக்கையும், இறை வழிபாடும் இரண்டாம் பட்சமே என்பதை முஸ்லிம்கள் ஒத்துக்கொள்ளாதவரை அவரகளுக்கு செருப்படிதான்,ஆபத்துதான். உயிரோடு இருந்தால்தான் இறை வழிபாடு.
அதெப்படி ஒரு கையால் ஓசை வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நல்லிணக்கத்திற்கு நாமும் கை கொடுக்க வேண்டுமல்லவா? நாமும் இறைவனை தூக்கி அப்புறம் வைத்து விட்டு மனிதனாக நடந்து கொள்ள முயலுவோம் கோபாலா.
கோவில்கள்,திருவிழாக்கள்,வழிபாடு இவை எல்லாம் இந்து மதத்த்தின் பால பாடங்கள். உச்சமான அதவைதம் ஒவ்வொரு மனிதனையும் இறைவனாகவே அறிவிக்கிறது. முஸ்லிம்கள்போல், இந்துக்கள் இறை நம்பிக்கை விஷயத்தில் தீவிரமாக இருந்திருந்தால் (அப்படி இருந்தால் அவன் இந்து என்று கூறமுடியாது) ராமர் சிலையை அவமதித்த தமிழக பகுத்தறிவு —— எவனும் உயிரோடு இருந்திருக்கமுடியாது.
உண்மை. இந்துக்கள் இறை நம்பிக்கை விஷயத்தில் தீவிரமாக இருந்திருந்தால், எந்த ஒரு சிறுபான்மை இனமும் நம்நாட்டில் இருக்க முடியாது. இன்று வரை எல்லா சிறுபான்மை மக்கள் தமது புன்னிய தலத்த்க்கு செல்ல பண உதவி தருவது நாம் தான்…
இது போல உதவி எந்தநாடும் தருவது இல்லை
Dear sir, please understand between the people, because you have lot of confusion, you should investigate the matter why this quarral happening in the north east region, after that u can present your judgement. First of all i am also working in foreign country, but i cannot purchase land or business, even i cannot work without approval of embassy. But in india there is no formalities followed for eastern bengalis. They are easily coming to india doing their business and take their money to their country without paying taxes. I also tell one more problem the labours from east bengaladesh working for low salary but they are destroying their indian labours markets. I am not against the muslims or christian but the real problem should be understood by vinavu thalam. I understand that assamease not like a tamil people. But they are having some valid reasons. so people who illegally got indian citizenship would be sent back to bangaladesh.