Saturday, August 20, 2022
முகப்பு சமூகம் சாதி – மதம் பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்?

பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்?

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 23

இந்நாட்டில் ஏசு கிறிஸ்து, முகமது நபி பிறந்த தினங்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாரதத்தின் தேசிய புருஷர்களான ஸ்ரீராமர் (ராம நவமி), ஸ்ரீகிருஷ்ணர் (கோகுலாஷ்டமி) பிறந்த தினங்களுக்கு விடுமுறை அளிக்க அரசு மறுக்கிறது.

இந்து முன்னணியின் இந்துக்களுக்கான கோரிக்கைகளில் ஒன்று.

காவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இரண்டிற்கு மட்டும் விடுமுறை கோருகிறார்கள். கல்கி அவதாரம் எப்போது பிறக்கும் என்பது தெரியாததால், ஏனைய ஏழு அவதாரங்கள், அப்புறம் சிவன்,  பிரம்மா அவர்கள் மனைவிமார்கள் – வைப்பாட்டிகள், நேரடிக் குழந்தைகள் – கள்ளக் குழந்தைகள், அவர்களின் பேரன் – பேத்திகள், மொத்தத்தில் முப்பது முக்கோடி தேவர்களையும் தேசிய புருஷர்களெனக் கருதினால், விடுமுறை அளிக்க 365 நாட்கள் போதாது. போதும் என்று வைத்துக்கொண்டால் வருடம் முழுவதும் கொழுக்கட்டை, அப்பம், பணியாரம், வடை, முறுக்கு, சுண்டல், அவல், பொரி, கடலை, பூசை – புனஸ்காரங்கள் என்று குஷாலாகக் காலம் தள்ளலாம். தற்சமயம் அவாளின் ஆட்சி நடைபெறுவதால் உடனே இதை அமலுக்குக் கொண்டு வர என்ன தடை?

மைய அரசின் விடுமுறைகளில் முசுலீம்களுக்கு ரம்சான், பக்ரித், மொகரம், மிலாது நபி நான்கும், கிறிஸ்தவர்களுக்க கிறிஸ்துமஸ், புனிதவெள்ளி என இரண்டும் மட்டும்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய விடுமுறைகளில் பெரும்பங்கு இந்து மதப் பண்டிகைகளுக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கிறது. மகர சங்கராந்தி, சித்திரை – யுகாதி வருடப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி – ஆயுத பூசை, விஜய தசமி, தீபாவளி,  கார்த்திகை போன்றவை மைய அளவிலும், இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, ஓணம், ஹோலி, ரக்ஷாபந்தன், பொங்கல், சூரசம்ஹாரம், ஆடிவெள்ளி, புரட்டாசி சனி, பங்குனி உத்திரம், கும்பமேளா, குடமுழுக்கு, மகாமகம், தேரோட்டங்கள் போன்றவை மாநில, உள்ளூர் அளவிலும் விடுமுறை நாட்களாக இருக்கின்றன.

எனவே எல்லா மாநிலங்களிலும் உள்ள இந்துப் பண்டிகை விடுமுறை தினங்கள் இருபதுக்கும் மேல் வருகிறது. இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி இரண்டும் ‘விருப்பப்பூர்வ விடுமுறை தினங்கள்’ என்ற பட்டியலில்  மறைமுகமாக மைய விடுமுறை தினங்களாக உள்ளன. பார்ப்பன மேல்சாதியினர்தான் இந்தப் பண்டிகை விடுமுறைகளைக் கொண்டாடுகின்றனர். இத்தகைய இந்துப் பண்டிகைகளில் தீபாவளி, பொங்கலைத் தவிர வேறு எதையும் பெரும்பான்மை இந்துக்கள் (சூத்திரர்கள், பஞ்சமர்கள்) கொண்டாடுவதில்ல. அவர்கள் கொண்டாடுகின்ற சுடலைமாடன், மதுரை வீரன், முனியாண்டி, இசக்கியம்மன் விழாக்களுக்கு விடுமுறை இல்லை. காரணம் அவை பார்ப்பன எதிர்ப்பு வரலாறுகள்.

புராணக் கடவுளர்களான இராமனையும், கிருஷ்ணனையும் ‘தேசிய புருஷர்கள்’ என்று பொருள் மாற்றி நாட்டு மக்களது தலைவர்களாகச் சித்தரிப்பது இந்து மதவெறியாளர்களின் சதியாகும். இருவரும் கோவில்களில் கும்பிடப்படும் கற்பனை உருவக் கடவுள்கள்தான். மேலும் இவ்விருவரையும் புராணப் புரட்டுக்களின் படி ‘உண்மையான’ அரசர்கள் என வைத்துக் கொண்டாலும் அவர்கள் சாதாரண அரசர்களேயன்றி முன்னுதாரணமான பண்புகளைக் கொண்ட தேசிய நாயகர்களல்லர்.

இதுபோக பார்ப்பனப் பண்டிகைகளின் ‘வரலாற்றுக் கதை’களைப் பாருங்கள். அனைத்தும் தேசிய, இன, பழங்குடி, மொழி, சாதி, பெண்கள் மீதான அடக்குமுறையைத்தான் கொண்டிருக்கின்றது. திராவிட ‘அசுரர்களை’க் கொன்றதைக் கொண்டாடத் தீபாவளியும், விஜயதசமி பழங்குடி மக்களை கொன்றதற்காகவும், ரக்ஷாபந்தன் பெண்கள் சாகும் வரை அடிமையாக இருப்பதற்கும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் பார்ப்பனியத்தின் ஆகப் பெரும்பான்மையான பண்டிகைகளை (பொங்கல் போன்றவை தவிர) கொண்டாடவே கூடாது என்கிறோம். மாறாக பார்ப்பன இந்துமத எதிர்ப்பு முன்னோடிகளான புத்தர், சித்தர், நந்தன், ஏகலைவன் இன்னபிற தலைவர்களைக் கொண்டாடலாம்.

அதேபோன்று காலனிய, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டச் சம்பவங்களான 1857 சுதந்திரப் போர், ஜாலியன் வாலாபாக், 1905 வங்கப் பிரிவினை, 1942 மக்கள் போராட்டம், தெலுங்கானா – கீழ்த்தஞ்சை விவசாயப் போராட்டங்கள் போன்றவற்றையும், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் நாட்களையும் கொண்டாட வேண்டும். அதேபோன்று தாழ்த்தப்பட்ட, முசுலீம் மக்கள் மீதான படுகொலைகள் நினைவு கூறப்பட வேண்டும்.

மனிதகுல வரலாற்றில் அந்தந்தக் கால பிற்போக்கு விஷயங்களைத் தளராத ஆற்றலுடன் போராடி வென்ற மக்களின் போராட்டங்களையும், தலைவர்களையும் மனிதகுலப் பண்பாட்டின் மைல் கற்களாக நினைவு கூறுவதுதான் சரி. அவ்வகையில் பார்ப்பனப் புராணப் புரட்டு, அடிமைத்தனப் பண்டிகைகளையும் மொத்தத்தில் எல்லா மதப் பண்டிகைகளையும்  – அவற்றுக்கான விடுமுறைகளையும் இரத்து செய்வதே சரி.

– தொடரும்

__________இதுவரை____________

 1. “பார்ப்பனப் புராணப் புரட்டு, அடிமைத்தனப் பண்டிகைகளையும் மொத்தத்தில் எல்லா மதப் பண்டிகைகளையும் – அவற்றுக்கான விடுமுறைகளையும் இரத்து செய்வதே சரி.”

  இதே போன்று கட்சித் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் (?) போன்றோர்களின் நினைவு நாட்களையும் அனுமதிக்கக கூடாது

 2. இது வினவா தி.க தளமா??
  எது எப்படியோ…கூட்டி கழித்து வருடத்திற்க்கு 12 – 13 நாள் தான் இத்தகைய விடுமுறை…

  நீங்கள் பார்ப்பனரல்லாதவரெல்லாற்றையும் சூத்திரர் என்று அரை வேக்காட்டுத்தனமாக எழுதுகிறீர்கள்…

  அப்போ யாதவர் ஏன் கிருஷ்னரை வழிபடுகின்றனர்?

  எதோ ஒரு பண்டிகை…வருசத்திற்கு 12-13நாள் லீவு…நாமும் தான் அனுபவிப்போமே….என்னவோ முதலாளி மாதிரி துடிக்கிறீர்கள்

  • /////நீங்கள் பார்ப்பனரல்லாதவரெல்லாற்றையும் சூத்திரர் என்று அரை வேக்காட்டுத்தனமாக எழுதுகிறீர்கள்…////

   சரி .. கோவில் கருவறைக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி உண்டா ?.. (நீங்கள் பார்ப்பனர் இல்லாத பட்சத்தில்) ..

   ////அப்போ யாதவர் ஏன் கிருஷ்னரை வழிபடுகின்றனர்?////

   கிருஸ்ணனை நாடாரும், செட்டியாரும் எப்படி வழிபட ஆரம்பித்தனரோ அதே போல் தான்…

   /////எதோ ஒரு பண்டிகை…வருசத்திற்கு 12-13நாள் லீவு…நாமும் தான் அனுபவிப்போமே….என்னவோ முதலாளி மாதிரி துடிக்கிறீர்கள்////

   சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க … உங்க தாத்தாவோட தாத்தா வுக்கும் அவரோட பக்கத்து வீட்டுக்காரனுக்கும் ஏதோ வாய்க்கால் தகராறு ஏற்பட்டு, பக்கத்து வீட்டுக் காரன் அந்தக் காலத்தில் உங்கள் தாத்தாவோட தாத்தாவை கொலை செய்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். கொலைகாரனின் சந்ததியினர் வருடாவருடம் பட்டாசு வெடித்து அந்நாளைக் கொண்டாடுகையில் நீங்களும் கொண்டாடுவீர்களா ?..
   விடுமுறை வேண்டும் என்பதற்காக அவமானச் சின்னங்களை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.

   • //சரி .. கோவில் கருவறைக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி உண்டா ?.. (நீங்கள் பார்ப்பனர் இல்லாத பட்சத்தில்) .. //

    பூசாரிக்கு மட்டும் தான் அனுமதி…எல்லா மதத்திலும் இப்படிப்பட்ட சடங்குகள் உண்டு….இதற்குநாத்திகவாதியாக மாறினால் போதும்….

    //கிருஸ்ணனை நாடாரும், செட்டியாரும் எப்படி வழிபட ஆரம்பித்தனரோ அதே போல் தான்… //
    இது திராவிட புரட்டு…வால்மீகி என்ன சாதி என்று பாருங்கள்…

    என் பாட்டனார்கள் இருக்கட்டும்,நீங்கள் அசுரகுல வாரிசா? எப்படிக்கண்டுபிடிதீர்கள்? டீ என் ஏ டெஸ்ட் எடுத்தா?
    புராணமே ஒரு புரட்டு…
    அதற்குப்பதிலாக ‘திராவிடர்கள்’ வைத்த புரட்டு இது….
    ஆறிவுகெட்ட வாதத்திற்க்குப் ‘பகுத்தறிவு’ என்று உட்டாலக்கிடி அடித்தவர்கள் இவர்கள்…
    புரட்டிற்க்கு பதலாக இன்னோரு புருடா விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

    • “பூசாரிக்கு மட்டும் தான் அனுமதி…எல்லா மதத்திலும் இப்படிப்பட்ட சடங்குகள் உண்டு….இதற்குநாத்திகவாதியாக மாறினால் போதும்….”
     அப்படியாண்ணே பார்ப்பனர்கள் தவிர எத்தனை கோயில்ல இப்படி பார்ப்பனர்கள் இல்லாதவங்க பூஜாரியா இருக்காங்க…..நீங்க சொன்ன மாதிரி எல்லா சடங்கு வைக்கவும் படித்துவிட்டு பூஜாரியா ஆக விடாததால அர்ச்சகர்கள் சங்கம் வைத்தே போராடுறாங்க தெரியுமா…? உங்க்கிட்ட அனுப்பினா குறைந்தபட்சம் சின்ன கோயில்லயாவது அய்யிரா சேர்ப்பீங்களா…? பூணூல் உங்க ஆளுங்க மட்டும் போடும் ரகசியமென்னனு சொல்லுங்களேன்….உங்களின் இந்தப் படமெல்லாம் எப்பவோ பிளால் ஆயிடுச்சு…..

     • எனக்கு இதில் உடன்பாடில்லை…ஆதலால் கோவிலுக்குச்செல்வதில்லை….

      //உங்க்கிட்ட அனுப்பினா குறைந்தபட்சம் சின்ன கோயில்லயாவது அய்யிரா சேர்ப்பீங்களா…? பூணூல் உங்க ஆளுங்க மட்டும் போடும் ரகசியமென்னனு சொல்லுங்களேன்….//

      நானே கோவிலுக்குச்செல்வதில்லை…எங்கிட்ட வந்து பூசாரிக்கு அட்மிஷன் கெட்டால் என்ன செய்ய முடியும் நண்பரே…
      பூணூல் நான் அனிவதில்லை….செருப்பு, உடை போன்று அதற்கு உபயோகம் என்ன என்று எனக்குப்புரியாததால் மாட்டிக்கொள்ளவில்லை…
      ஆனால் நான் பல போலி ‘பகுத்தறிவாளர்’ போல் துண்டு போட்டு கோவிலுக்குச்சென்று வெளியுலகில்நாத்திகம் பேசவில்லை…

      என்னைப்பொறுத்தவரை, கடவுள் இருந்தாலும் / இல்லவிடிலும் தம்மால் இயன்ற வரைக்கும் தனி மனித ஒழுக்கத்தோடிருந்தால் போதும்…

     • கருப்பன்,

      நீங்க நேரா இஸ்கான் போய் சேந்துடுங்க… அப்படி இல்லைன்னா…. நீங்களே ஒரு கோயில கட்டி பூஜை பண்ணுங்க,,,

      இருக்கவே இருக்காரு பெரியார்…

      தமிழை காட்டிமிராண்டி பாஷை என்று சொன்ன கருணையே போற்றி

      தமிழனை முட்டாள் என்று சொன்ன முற்போக்கே போற்றி என்று சொல்லுங்கள் யார் வேண்டாம் என்று சொன்னது…

      முக்கியமான விசயம்…. பார்பண மதத்தில் பார்ப்பணன் பூஜை செய்கிறான். அதில் மத்தவனுக்கு என்ன வேலை… அதுவே பார்பணன் கோயில்….. மத மாறி… இல்ல நாத்திகவாதியா மாறி சட்டுபுட்டுன்னு அடுத்த வேலையை பாப்போமா அத விட்டுட்டு… பாப்பான் மதத்தில்… பாப்பர்பானோட தெய்வத்த அடுத்தவன் பூசாரி அகனும்னு நெனைக்கிறீங்க
      என்னமோ போங்க… எனக்கு ஒன்னுமே புரியல

 3. வினவின் புரட்டு இந்தக்கட்டுரை….

  தபால் இலாகா விடுமுறைகளைப்பாருங்கள்…

  எவ்வளவு இந்துப்பண்டிகை, மற்ற மதப்பண்டிகை என்று பார்த்துக்கொள்ளுங்கள்…

  http://www.indiapost.gov.in/Holidays.aspx

  • உருது பாகிஸ்தான் என்பது எப்படி இருக்கிறது?சர்வதேசிய வாதம் பேசும் வினவு இந்திய விடுமுறைகள் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் செயல்படலாமோ?

 4. இது இந்தியாவில் மட்டும் அல்லாது… உலகின் எல்லா நாட்டிலும் உள்ளது தான்…. என்னமோ இந்தியாவில் மட்டுமே நடப்பது மாதிரி எழுதுவது கேவலமான நக்சல்பாரித்தனம்.. எல்லா மதத்திலும் உட்பிரிவும், ஜாதி மோதல்களும் உண்டு, என்னமோ இந்து மதம் மட்டும் காட்டுமிராண்டித்தனமான மதம் போல சித்தரிப்பது நல்லதல்ல… தைரியம் இருந்தால் இந்து மதத்தை கண்டித்து உங்க தோழர்கள கொண்டு ஒரு போராட்டம் நடத்திப்பாரும்….இது இந்துக்கள் நாடு… அதை யாராலும் மாற்ற முடியாது….

  • //தைரியம் இருந்தால் இந்து மதத்தை கண்டித்து உங்க தோழர்கள கொண்டு ஒரு போராட்டம் நடத்திப்பாரும்…//

   அடடே அம்மணக்கட்ட .இந்தியா …..

   சிதம்பரத்துலயும் , ஸ்ரீரங்கத்துலயும் போயி கேட்டுப் பாரு .. உன் பொந்து மதம் அயன் பக்ஸால் பொசுக்கப்பட வரலாறு தெரியும்.

   ////இது இந்துக்கள் நாடு… அதை யாராலும் மாற்ற முடியாது….///

   ஆம்… 2 சதவீத இந்துக்கள் வாழும் நாடு.
   இவ்வுண்மை பரந்துபட்ட மக்களுக்குத் தெரியும் போது 2 என்பது 0 ஆகும்.

  • ///இது இந்துக்கள் நாடு… அதை யாராலும் மாற்ற முடியாது…./////

   திரு.இந்தியன்,

   Are you an Indian?

   I felt shame to explain this to an Indian..

   India is a secular country (42 Amendment), do u the meaning for secular?(மதச் சார்பின்மை)..

   In world, Nepal is the only Hindu country..

   Don’t speak Stupidly..

 5. //மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இரண்டிற்கு மட்டும் விடுமுறை கோருகிறார்கள். கல்கி அவதாரம் எப்போது பிறக்கும் என்பது தெரியாததால், ஏனைய ஏழு அவதாரங்கள், அப்புறம் சிவன், பிரம்மா அவர்கள் மனைவிமார்கள் – வைப்பாட்டிகள், நேரடிக் குழந்தைகள் – கள்ளக் குழந்தைகள், அவர்களின் பேரன் – பேத்திகள்//

  வாழ்க ஆர்.எஸ்.எஸ்.

 6. eppadi leave vidurathunu theriyama inkha UKla bank holidaynu viduranuva.. leave vittalum sukamava ooru poi serome.. omni bus kollai irctc tatkal nankha padarah kastam iruke…

 7. சர்வதேசிய வாதம் பேசும் வினவு இந்திய விடுமுறைகள் இந்திய பிரச்சனை இந்திய கலவரம் என சோ அர்னாப் அம்பிகள் போல தேசியவாதம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் செயல்படலாமோ?

  • அது சரி ரானா அம்பி! …

   சர்வதேசிய அளவுல இந்தியாவப் பாத்து எல்லாரும் காறித் துப்புறதால தான் உன்ன மாதிரி குடிமிகளை கொஞ்சம் செதுக்கி விட்டு, பூனூலையும் கொஞ்சம் அறுத்து விடலாம்னு இந்திய வாதத்துக்கு வந்திருக்காங்க போல இருக்கு..

 8. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் – இவற்றைப் பொது விடுமுறைகளாக வைத்துக்கொண்டு, இவை தவிர ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்த எந்த 5 பண்டிகை தினமானாலும் (எந்த மதத்தைச் சார்ந்ததாக இருந்தாலும்) விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்க வேண்டும்.

 9. இட்கு பொன்ற கட்டுரைகள் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக இருக்கும் என்பதில் மாற்றுகருத்து சொல்ல இயலாது….நல்ல கருத்துகளையும், கட்டுரைகளையும் பதிவு செய்யும் உங்கள் தளத்தை கெடுக்காதிர்கள்..

   • ஆமாமா மத நல்லிணக்க்க்க்க வாதிகள் சொல்றாங்க…..ராம்னுக்கு கோயில். ர்ர்ர்ராமன் பால்லம் இதெல்லாம் சமத்துவம்…..ச்ச்ச்சூப்பர்….

 10. //எதோ ஒரு பண்டிகை…வருசத்திற்கு 12-13நாள் லீவு…நாமும் தான் அனுபவிப்போமே….என்னவோ முதலாளி மாதிரி துடிக்கிறீர்கள்//
  அது தானே!!

 11. //மாறாக பார்ப்பன இந்துமத எதிர்ப்பு முன்னோடிகளான புத்தர், சித்தர், நந்தன், ஏகலைவன் இன்னபிற தலைவர்களைக் கொண்டாடலாம்//

  சபாஷ்… எதிரிக்கு எதிரி நண்பன்… குறுகிய கண்ணோட்டம்.

  //புராணக் கடவுளர்களான இராமனையும், கிருஷ்ணனையும் ‘தேசிய புருஷர்கள்’ என்று பொருள் மாற்றி நாட்டு மக்களது தலைவர்களாகச் சித்தரிப்பது இந்து மதவெறியாளர்களின் சதியாகும். இருவரும் கோவில்களில் கும்பிடப்படும் கற்பனை உருவக் கடவுள்கள்தான். மேலும் இவ்விருவரையும் புராணப் புரட்டுக்களின் படி ‘உண்மையான’ அரசர்கள் என வைத்துக் கொண்டாலும் அவர்கள் சாதாரண அரசர்களேயன்றி முன்னுதாரணமான பண்புகளைக் கொண்ட தேசிய நாயகர்களல்லர்//

  ஏசுவும் நபிகளும் மனிதர்களன்றோ..!!!!

  • // ஏசுவும் நபிகளும் மனிதர்களன்றோ..!!!! //

   எவ்வளவு பேசினாலும் அனுசரித்து போகக்கூடிய மதமாக இருப்பதால் தான் இப்படி….எங்கே சரியான ஆம்பளையா இருந்தால் தன் உண்மையான முகவரியும் படமும் சேர்த்து போஸ்ட் போட்டு, இஸ்லாமியரையும், கிருத்துவர்களையும் இது போல திட்டி, அவர்களின் கடவுள்கள் எல்லாம் வெறும் கற்பனையே என்று கூற முடியுமா ?

 12. இந்து மதவாத அமைப்புகளின் சிறுபான்மையினர் மீதான அவதூறுக்கு மிகச் சரியான பதிலடி. ரசித்துப் படித்தேன்.

  புராணக் கதைகளை நாம் மறந்தாலும் இனி ஊடகங்களும் பெரும் வியாபாரிகளும் முதலாளிகளும் நம்மைவிடப் போவதில்லை. நம் கோவணத்தையும் உருவி அவர்கள் கோடிகளைச் சுருட்ட பண்டிகைகளை நம்மீது திணத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

  தீபாவளிக்குப் பிறகு –
  முதலாளி கணக்குப் பார்ப்பான் – லாபம் எவ்வளவு என்று!
  உழைப்பாளியும் கணக்குப் பார்ப்பான் – இழந்தது எவ்வளவு என்று!

  தித்திக்கும் தீபாவளி! யாருக்கு?
  http://www.hooraan.blogspot.com/2012/11/blog-post_12.html

  • விடுமுறை நாட்கள் என அரசு அரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.தேசிய விடுமுறைகளை மட்டும் பொதுவாக்கிவிட்டு
   அனைத்து பண்டிகை நாட்களையும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும்.20 நாட்களக தற்செயல் விடுப்பாக அரசு கொடுத்தால் போதும் அவனவன் பண்டிகைக்கு லீவு எடுத்துக்கிட்டு போய் கொண்டாடிட்டுப்போறாங்க.இதுல மதம் என்ன பண்னப்போவுது. எல்லா திருவிழாவுக்கும் போகட்டுமே.
   மணிதர்களாக வாழ்வோம்.சாதியென்ன மதமென்ன.
   Jesu

   • உங்க approach எனக்கு பிடிச்சுருக்கு…. உண்மையான மதச்சார்பற்ற நாட்டில், மதம் சார்ந்த பண்டிகைக்கான விடுமுறை எதற்கு?

 13. மதச்சார்பற்ற நாடாம்.
  ஒவ்வொரு festival யும் காரணம் காட்டி முன்னும் பின்னும் லீவு நாட்களாக இருந்தாலும்,இல்லாவிட்டாலும் அரசு அலுவலகங்களை முடக்கும் அயோக்கியத்தனம் எனக்கு பிடிக்கவில்லை.அவனவன் பண்டிகைகளை அவனவன் லீவு எடுத்துகிட்டு போய் சந்தோசமாக இருக்கலாமேன்னுதான் எழுதினேன்.20 நாளுக்கு மேல் 25 நாளாக லீவு allot பண்னாலாம்.

 14. ஒளங்கல் மததில் உல்ல குரைகலை எடிதுரைதல்ல்நபி முன்பு 1 20000நபி வந்ததாக சொல்லபடுது அப்பொ அத்தனைநபி பிரந்த தினதுக்கு விடுமுரை விட்டால் சந்தொசமா அதெ மாதிரிதன் இதுவும் ராமர் க்ரிஷ்னர் ஜயந்திக்க்கு எல்லாரரும் கொன்டாடுகிரார்கல் மானில அரசு விடுமுரை கொடுக்கிரது
  உஙல் மததில் உல்லது மாதிரிதன் தேவர்கல் என்பது உஙல் மததில் ஜுப்ரல் என்ட்ரு சொல்லுகிர்ர்கல்நாஙகல் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிரொம் என்ரு பாருனங்கல் முதலில் தன் தவருகலை திருத்தி விட்டு மட்ரவர்கலை குரை சொல்லலாம் அடுதத மதத்தவரை புன் படுத்தாதிர் என்ட்ரு உஙல் மதத்தில் சொல்லப்பட்டுலது எனவே இது உங்கலக்கு அலகு அல்ல அன்புல்ல இசுலாமிய சகோதரர்க்கு இதை தெரிவித்துக்கொல்கிரேன் நன்ட்ரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க