பி.எஸ்.என்.எல். – க்கு மூடுவிழா ! மோடி அரசின் சதிகள் !
தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின்படி அரசுத்துறைகள் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பதால், அரசு தொலைபேசித்துறையின் சந்தையைத் திட்டமிட்டுப் பிடுங்கித் தனியாருக்கு தரப்பட்டது.
ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !
16,000 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜெட் ஏர்வேஸைக் கைதூக்கிவிட்டாராம் மோடி! அதாவது ஜெட் ஏர்வேஸின் கடனை பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டியிருக்கிறது மோடி கும்பல்.
நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !
இந்து மதவெறி பாசிசக் கும்பல் விசாரணை அமைப்புகளையும், நீதிமன்றங்களையும் தமது காலாட்படையாக மாற்றி வருவதை அசீமானந்தா விடுதலை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது.
தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !
தேர்தல் தேதி அறிவிப்பு, பக்கச்சார்பு, சின்னம் ஒதுக்குவதில் அழுகுணி ஆட்டம் என தனது ஒவ்வொரு செயலிலும் தேர்தல் ஆணையம், பா.ஜ.க.வின் ஜி-டீம் (G Team - Government Team) ஆகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
உணவு மானியம் : வாரி வழங்குகிறதா இந்திய அரசு ?
விவசாயத்திற்கும் ரேஷனுக்கும் மானியத்தை வாரி வழங்குவதாக இந்தியா மீது உ.வ.க.வில் புகார் கொடுத்திருக்கிறது, அமெரிக்கா. ஆனால், உண்மையோ அதற்கு நேரெதிர் திசையில் பயணிக்கிறது.
சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !
பார்ப்பனிய தந்தை வழி ஆதிக்கம் எனக் கூறுவது வன்முறை அல்ல. அதுவொரு உண்மை விவரம். இவ்வாறு கூறுவதைத் தனிப்பட்ட பார்ப்பனர்கள் மீதான தாக்குதலாகத் திரிக்கிறது பார்ப்பனக் கும்பல்.
உண்மையிலேயே மோடி மாயை முடிந்துவிட்டதா ?
பார்ப்பன பாசிச அரசியலும், கருத்தியலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்து, மெல்ல மெல்ல அவை அங்கீகரிக்கப்படும் நிலைக்கும், புதிய எதார்த்தம் என்ற நிலைக்கும் உயர்ந்திருக்கின்றன.
பார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் !
ஆணாதிக்கத்துக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து வழங்கப்படும் தீர்ப்புகள் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.
உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
கூட்டல் கணக்கைத் தப்பாகப் போட்டு ஜெயாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்தார் என்றால், இலக்கணப் பிழைகளின் வழியாக மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
எதைத் தின்றால் பித்து தெளியும் என்பது போல, எந்தச் சலுகையை அளித்தால் விவசாயிகளின் ஓட்டுக்களைப் பெறமுடியும் என அல்லாடி நிற்கிறது, பா.ஜ.க.
வல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் !
அடிக்கட்டுமானத் துறையின் வளர்ச்சி நாட்டை எங்கோ கொண்டுபோய்விடும் என ஆலுங்கும்பல் வாதிட்டு வருவது மிகப்பெரும் மோசடி என்பதை நிரூபிக்கிறது ஐ.எல். அண்ட் எஃப்.எஸ் (I.L.&F.S.) நிறுவனத்தின் திவால் நிலை.
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஏப்ரல் 13, 1919 - இரத்தம் தோய்ந்த கருப்பு தினம். அது ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த நாள். அந்த ஈடுஇணையற்ற தியாகத்தின் நூற்றாண்டு இது.
நரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் !
2ஜி அலைக்கற்றை விற்பனையில் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நட்டத்தை ஊழல் எனக் குற்றஞ்சுமத்தலாம் என்றால், வாராக் கடன் தள்ளுபடியால் பொதுத்துறை வங்கிகள் அடைந்துவரும் நட்டத்தையும் ஊழல் என்றுதான் குற்றஞ்சுமத்த முடியும்.
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !
நிதி ஆயோக் கடந்த 2017-இல் மத்திய அரசிற்கு வழங்கிய பரிந்துரையில் தர தன்னாட்சி பட்டியலில் முதலாம், இரண்டாம் நிலைகளில் வராத கல்லூரி / பல்கலைக்கழகங்களை மூடிவிட வேண்டும் எனக் கூறியுள்ளது.
சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்
சமூக அரங்கில் மட்டுமின்றி, அரசியல் அரங்கிலும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை விளங்கிக் கொள்வது அவசியம்.