Sunday, July 6, 2025

டெல்லி: கல்லூரி முதல்வரின் சங்கித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்த மாணவர்கள்!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ரோனாக் காத்ரி மாணவர்களுடன் சென்று முதல்வர் அலுவலக அறையின் சுவரில் மாட்டுச் சாணத்தைப் பூசி முதல்வரின் சங்கித்தனத்திற்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.

குஜராத்: தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள்

"குஜராத்தைப் பொருத்தவரை நாளுக்கு நாள் சாதிக் கொடுமைகள், அடக்குமுறைகள், எல்லாம் அதிகரித்துக் கொண்டுதான் போகின்றன. எங்கள் மீது தாக்கூர்கள் எல்லா விதத்திலும் அதிகாரம் செலுத்துகிறார்கள்"

உத்தரப் பிரதேசம்: இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையில் மதவெறிக்கு பலியிடப்படும் சிறுவர்கள்!

“ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட மறுப்பு தெரிவித்ததால் மதவெறி பிடித்த சிறுவர்களில் ஒருவன் பாட்டிலை உடைத்து அதன் கண்ணாடியைக் கொண்டு சிறுவனின் இடது காலில் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளான்.

“மாற்று” பற்றிய திட்டம்: லெனினியத்தின் சிறப்புகளில் ஒன்று!

பாசிச சக்திகளையோ அல்லது அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்துராஷ்டிரத்தையோ முறியடிக்க வேண்டுமெனில், இந்த அரசியல் - பொருளாதார - சமூகக் கட்டமைப்புக்கு மாற்றான, ஓர் அரசியல் பொருளாதார சமூகத் திட்டம் - மாற்றுத் திட்டம் வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் சிந்தித்துச் செயல்படுபவர்களால் மட்டுமே, பாசிச சக்திகளை வீழ்த்த முடியும்.

ஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் காவி கும்பல்!

எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டுவதற்காக பஜ்ரங் தளம் மற்றும் வி.எச்.பி-யைச் சேர்ந்த காவிக் குண்டர் படையைச் சேர்ந்த கும்பல் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் தொடுக்க முயன்றுள்ளது

இந்துராஷ்டிர அபாயம்: உத்தரகாண்டில் விரட்டியடிக்கப்படும் முஸ்லீம் மக்கள்

முஸ்லீம் குடும்பங்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க முடியாது என்று போலீசு கைவிரித்தது. உயர்நீதிமன்றம், முஸ்லீம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டது. ஆனால் பெரும்பாலான முஸ்லீம் குடும்பங்கள் பயத்தின் காரணமாக நந்தா நகருக்குச் செல்வதைத் தவிர்த்து விட்டனர்.

‘தேச விரோதியின்’ இந்த போராட்டம் இன்னும் முடியவில்லை | பிரகாஷ் ராஜ்

இறந்த மீன்கள் நீரோட்டத்தின் போக்கில் சென்றுவிடும். நீரோட்டத்திற்கு எதிராக நீந்த வேண்டுமெனில், மீன்கள் உமர் காலித் போல் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். பொய் மற்றும் வெறுப்பு பிரச்சாரம் என்ற வெள்ளத்திற்கு எதிராக அவர் அச்சமின்றி நீந்துகிறார்.

சிதிலமடைந்து வரும் குஜராத்தின் கல்வி கட்டமைப்பு!

தாய்மொழி குஜராத்திலேயே 96,000 மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது அம்மாநில அரசின் கல்வி கட்டமைப்பு எந்த அளவிற்குச் சீர்குலைந்துள்ளது என்பதை அம்பலப்படுத்துகிறது.

இராம நவமி: பாசிஸ்டுகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியான திரிணாமுல் காங்கிரசு

மேற்கு வங்க மரபிற்கும், இராமநவமிக்கும் எந்த ஒரு வரலாற்றுத் தொடர்பும் இல்லையென்றபோதும், பாசிச கும்பல் தனது அரசியல் நோக்கத்தை ஈடேற்றும் வகையில் இராம நவமி கொண்டாட்டங்களை மக்களிடம் திணித்து, மேற்கு வங்கத்தில் நடத்தி முடித்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.

மீண்டும் மாருதி தொழிலாளர்கள் போராட்டம் – நிர்வாகத்துடன் ஒன்றிய, மாநில பா.ஜ.க அரசுகள் கள்ளக் கூட்டு

தொழிலாளர்களை பல வர்க்க அடுக்கினாராகப் பிரித்து வைத்து, ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி பிரித்தாண்டு வந்தது மாருதி தொழிற்சாலை நிர்வாகம். அதனை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வு பெற்று வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

பெண்களையே குற்றவாளியாக்கும் நீதிமன்ற தீர்ப்புகள்!

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்தி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது சமீப ஆண்டுகளாகவே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

காடுகளைக் காப்பாற்ற களத்தில் இறங்கிய ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள்!

நிலத்தின் உரிமை பல்கலைக்கழகத்திடம் இல்லை என்றாலும் இத்தனை வருடங்களாக நீடித்து வந்த பாரம்பரிய, சுற்றுச்சூழல் வளமிக்க தளம், வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாணவர்கள் உறுதியாக உள்ளனர்.‌

ஜோதிபா பூலே 198-வது பிறந்தநாள்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை தடை செய்ய உறுதியேற்போம்!

ஜோதிபா பூலே விவசாயிகளின் நிலை குறித்து கடிதம் எழுதி 150 ஆண்டுகளைக் கடந்த பிறகும் மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!

“பதிவுகள் இல்லாததைப் பயன்படுத்தி வக்ஃப் சொத்துகளை அரசாங்கம் எளிதாக உரிமை கோரும் என்று நாங்கள் கருதுவதால், இந்த மசோதாவிற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம். இது வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும்”

பி.எஸ்.என்.எல் மீது ஒட்டுண்ணியாக வளரும் ஜியோ – அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி அறிக்கை

ஜியோவிற்கு விளம்பரம் செய்த கார்ப்பரேட்டுகளின் காவலனான மோடி, மக்களுக்குரிய பொதுத்துறையின் சேவைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அம்பானியை அனுமதித்ததில் வியப்பேதுமில்லை.

அண்மை பதிவுகள்