தொடரும் மலக்குழி மரணங்கள்: சாதிய அரசின் மௌனப் படுகொலைகள்!
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் எந்த தேர்தல் கட்சியும் இதுவரை "மலக்குழி மரணங்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவோம்" என்ற வாக்குறுதியைப் பெயரளவில்கூட அறிவிக்கவில்லை. ஏனெனில், அவர்களுக்கு அது குறித்து எந்தவித அக்கறையும் இல்லை.
வளர்ச்சியின் முழக்கங்களுக்கு இடையே புதைந்து போகும் மலக்குழி மரணங்களின் அவலக்குரல்
சட்டங்கள் வருகின்றன, உத்தரவுகள் வருகின்றன, இழப்பீடுகள் அதிகரிக்கின்றன - ஆனால் மரணங்கள் நின்றபாடில்லை. இது காயத்தைக் குணப்படுத்துவதற்குப் பதிலாக, தொடர்ந்து கட்டுகளை மாற்றுவதைப் போன்றது.
பாசிச பா.ஜ.க அரசே! ஒடிசாவில் நடத்திவரும் நரவேட்டையை உடனே நிறுத்து!
பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களை கொன்றொழித்து விட்டு தமிழ்நாட்டில் 13 பேரின் உயிரைக் குடித்த வேதாந்தா நிறுவனத்திற்காக நாடு முழுவதும் மலைகளையும் காடுகளையும் தாரைவார்க்கத் துடிக்கும் பாசிச பா.ஜ.க-விற்கு எதிராகக் களத்தில் ஒன்றிணைவோம்.
வேதாந்தாவின் ‘பாக்ஸைட்’ வெறியும் சிதைக்கப்படும் ஒடிசா பூர்வகுடி மக்களின் வாழ்வும்!
கார்ப்பரேட்டுகளுக்குச் சேவை செய்யும் பாசிச பா.ஜ.க அரசின் ஏவல் நாய்களாகச் செயல்படும் இந்தக் போலீசின் துப்பாக்கித் தோட்டாக்களும், அதிகார அடக்குமுறைகளும் நிலத்துக்காகப் போராடும் பூர்வகுடி மக்களின் உறுதியை ஒருபோதும் குலைத்துவிடாது.
“எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”: மலக்குழி மரணங்களுக்கு எதிரான போராட்டம்
புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் கூடிய தூய்மைப் பணியாளர்கள், “எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”, “சாக்கடைகளிலும், மலக்குழிகளிலும் ஏற்படுகின்ற மரணங்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்”, “பிரதமரே, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்” போன்ற முழக்கங்களை முன்வைத்துப் போராடினர்.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு கிடைக்காமலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்பப்பட்டு வருகின்றனர். ஆனால் பாசிச மோடி அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை மறைத்து வருகிறது; தேவையான கையிருப்பு உள்ளதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மக்களைப் பட்டினி போட்டும் வறுமைக்குள் தள்ளியும் வருகிறது.
கர்நாடகாவை உலுக்கிய கர்ப்பிணிப் பெண் மான்யா ஆணவப் படுகொலை
மான்யா ஆணவப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவில் தலித் அமைப்புகளும் லிங்காயத்து அமைப்புகளும் மிகப்பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மான்யா சட்டம் என்ற பெயரில் ஆணவப் படுகொலை தடுப்புச் சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்துதான் கர்நாடக காங்கிரசு அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம், 2025: மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாசிச நடவடிக்கை!
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் நிதிச்சுமையைக் காரணம் காட்டிப் பொறுப்பைத் தட்டிக்கழித்த மோடி அரசு, தற்போது சட்டத்தை வளைத்து நீதிமன்றத்தை மக்கள் நாடுவதற்கான வழியை அடைத்துள்ளது.இந்தப் புதிய சட்டத்திருத்தம் ‘நிவாரணம்’ என்பதை மக்களின் அடிப்படை “உரிமை” என்ற உயர்ந்த இடத்திலிருந்து, “பிச்சை” என்ற இழிநிலைக்குக் கீழிறக்குகிறது.
குஜராத்: தீவிரமடையும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு!
பாசிச கும்பலினால் ‘வளர்ச்சி மாடல்’, ‘டபுள் இஞ்சின்’ அரசு என்று ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத்தில் 40 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதில் பழங்குடியினக் குழந்தைகள் அதிகமான அளவில் உள்ளதும் பேரவலமாகும்.
செயற்பாட்டாளர்களை கடத்தி வன்கொடுமைக்கு உள்ளாக்கிய டெல்லி போலீசு
கடந்த மார்ச் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்து சமூக செயற்பாட்டாளர்களை டெல்லி சிறப்பு போலீசு கடத்தி சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளது. அவர்களை பாலியல் ரீதியாகவும் சாதி ரீதியாகவும் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது.
‘டிஜிட்டல் இந்தியா’வில் தொடரும் மலக்குழி மரணங்கள்!
2017 ஆம் ஆண்டு முதல் ஒன்பது ஆண்டுகளில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளில் சுத்தம் செய்யும் போது 622 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 25 பேரின் குடும்பங்களுக்கு பாதி இழப்பீடும், 52 பேரின் குடும்பங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை.
ஒடிசா: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 12 நோயாளிகள் பலி – பா.ஜ.க-வின் மற்றொரு “மருத்துவமனைப் படுகொலை”
இது ஏதோ எதிர்பாராத விபத்து என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனைக் கட்டமைப்பின் பாதுகாப்பு அமைப்பின் அப்பட்டமான தோல்வியே 12 உயிர்களை காவு வாங்கியுள்ளது.
குஜராத்: சாதிய வன்கொடுமையால் எய்ம்ஸ் மாணவர் தற்கொலை! | இ-போஸ்டர்
குஜராத்: சாதிய வன்கொடுமையால் எய்ம்ஸ் மாணவர் தற்கொலை!
குஜராத்தின் ராஜ்கோட் எய்ம்ஸ் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் படித்துவந்த ரத்தன் குமார் மேக்வால் (26) எனும் தலித் மாணவர் சக மாணவர்களின் சாதிய வன்கொடுமையால் மார்ச்...
சுங்கக் கட்டண உயர்வல்ல, மோடி அரசின் வழிப்பறிக் கொள்ளை!
ஏற்கெனவே மக்கள் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாயம் உள்ளது. இவ்வாறு மக்கள் கடும் பொருளாதாரச் சுமையில் திணறிக் கொண்டிருக்கின்ற சூழலில், துளியும் அது குறித்து அக்கறையின்றிச் சுங்கக் கட்டணத்தை உயர்த்தித் தனது பாசிச முகத்தை வெளிக்காட்டியுள்ளது மோடி அரசு.
சிலிண்டர் தட்டுப்பாடு: ஈரான் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்
சிலிண்டர் தட்டுப்பாடு: ஈரான் போரும் மோடி அரசின் அடிமைத்தனமும்
https://youtu.be/xbHHn8nZm8A
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads
























