Thursday, July 30, 2026

ஒழித்துக்கட்டப்பட்ட நூறு நாள் வேலைத் திட்டம்: நாடு முழுவதும் விவசாயிகள் – தொழிலாளர்கள் போராட்டம்!

பழைய சட்டத்தை ரத்து செய்ததைக் கண்டித்தும், புதிய சட்டத்திற்கு எதிராகவும், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் மே 15 அன்று வீதிகளில் இறங்கி வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரா சாதிப் பஞ்சாயத்து: பெண் அரை நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்!

0
வெளிப்படையாக, தங்களின் கண்முன்னே நடைபெற்ற இக்கொடூரத்தை யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர் என்பதே மிகப்பெரிய வேதனையாகும். அதிலும் அதனை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளனர். அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனித நேயத்தையும், மனித உணர்வுகளையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

கோழிப் பண்ணை விவசாயிகள்: அரசியல் மற்றும் தீர்வுக்கான திசைவழி | பாகம் 3

கோழிப்பண்ணை விவசாயிகள் பிரச்சினை என்பது இந்தியாவின் வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி சார்ந்த அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய பிரச்சினையாகும். கறிக்கோழி உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றியமைக்காமல், வெறுமனே கூலி உயர்வு போராட்டம் மட்டும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை.

அமெரிக்காவிடம் சரணடைந்த அதானி – அடகு வைக்கப்பட்ட நாட்டு நலன்

அதானி குழுமம் அமெரிக்காவில் செய்ய ஒப்புக்கொண்டுள்ள 10 பில்லியன் டாலர் முதலீடு என்பது, பெயரளவில் அவர்களுடையதாக இருந்தாலும், உண்மையில் அது இந்தியப் பொதுமக்களின் சேமிப்பையும், நாட்டின் பொருளாதார இறையாண்மையையும் உறிஞ்சி அங்கே கொண்டு சேர்க்கப்படும் மக்கள் பணமே ஆகும்.

உ.பி.: பொதுக் குழாயில் நீர் அருந்தியதற்காக தலித் சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல்

சிறுவன் குழாயில் தண்ணீர் குடித்ததையும், அருகிலிருந்த வாளியைத் தொட்டதையும் கண்டு சாதிவெறித் தலைக்கேறிய சஞ்சய் ராஜ்புத், அவனது சகோதரன் தீபக் மற்றும் கூட்டாளிகளான சாகர் குமார், பாட்டியா குமார் ஆகியோருடன் இணைந்து, சிறுவனின் ஆடைகளைக் களைந்து கொடூரமாகத் தாக்கியுள்ளான்.

கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் பாசிச மோடி அரசு!

10.25 சதவிகிதம் சர்க்கரைச் சத்து கொண்ட ஒரு டன் கரும்புக்கான சாகுபடி செலவு ரூ.1,820 என்று ஒன்றிய அரசு கணக்கிட்டுள்ளது. ஆனால், ஒரு டன் கரும்பு சாகுபடி செய்ய உண்மையில் ஏறக்குறைய ரூ.3,500 வரை செலவாகிறது என்பதை கரும்பு விவசாயிகளும் உழவர் சங்கங்களும் அம்பலப்படுத்துகின்றன. இம்மோசடியின் மூலம் மோடி அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்குகிறது.

உ.பி: 111 உயிர்களைக் காவு வாங்கிய கனமழை, சூறைக்காற்று

இக்கோரப் பேரிடரால் 26 மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உடல் நசுங்கியும் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்; 72 பேர் காயமடைந்துள்ளனர்; 227க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன; 179 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா” | தோழர் அமிர்தா

டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா” | தோழர் அமிர்தா https://youtu.be/_JlnAWGKUHg காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads

டெல்லியில் மீண்டும் ஒரு “நிர்பயா”: ஓடும் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரமாக டெல்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க கும்பல் ஆட்சியைக் கைப்பற்றும் மாநிலங்கள் அனைத்திலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தீவிரமடைவது ஒரு தொடர் போக்காகவே உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு! பாசிச மோடி அரசின் கையாலாகத்தனத்தை மக்கள் தலையில் சுமத்தும் நடவடிக்கையே!

கடந்த நான்கு ஆண்டுகளாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருந்த போதெல்லாம் விலையைக் குறைக்காத கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளை அடித்தன. தற்பொழுது கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டது என்று சொல்லி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது இந்த நாட்டு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் தலையில் இடியை இறக்கிய பாசிச மோடி அரசு!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது அதன் பலனை மக்களுக்குக் கடத்தாத இந்த அரசு, விலை உயரும் போது மட்டும் அந்தச் சுமையை உடனடியாக மக்கள் தலைமீது சுமத்துவது எந்த விதத்தில் நியாயம்?

குற்ற கும்பலின் பிடியில் நீட் தேர்வு!

மே 1ஆம் தேதியே ராஜஸ்தானின் சிகார் பகுதியில் இந்த வினாத்தாள் சுழற்சிக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது மாணவர்களிடம் 25,000 ரூபாய் முதல் 40 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 720 மதிப்பெண்களில், 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் தேர்வுக்கு முன்னரே கசிந்துள்ளன.

தொடரும் ஈரான் போர் – அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை

போக்குவரத்திற்கான செலவுகள் அதிகரிப்பதாலும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும் உரத்தின் விலை பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்த போர் மேலும் நீடித்து வந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

லடாக் மாவட்ட மறுசீரமைப்பு: இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் பாசிச நடவடிக்கை!

“மாவட்ட பிரிப்பு என்பது நிதி மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்கும் நோக்கம் கொண்டது என்று சொல்லப்பட்டாலும், யூனியன் பிரதேச அமைப்பில் நிதி மற்றும் வளங்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதனால் அதிகாரம் டெல்லியில்தான் குவியுமே தவிர, பரவலாக்கப்படாது.”

பாசிச மோடி ஆட்சியில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!

0
இந்தியப் பிரதமர் பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்துவதில்லை. அவரது ஆட்சிக்குச் சாதகமாகப் பேசும் ஊடகங்களுக்கே பேட்டி அளிக்கிறார். ஆட்சிக்கு எதிராக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் பா.ஜ.க இணையதள குண்டர்களால் மிரட்டல்களுக்கும், கைது மற்றும் நேரடி தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அண்மை பதிவுகள்