ஜெயேந்திரன் – நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !
இனி இந்து மத சாமியார்கள் எவரும் கொலையோ சல்லாபமோ செய்தால் எந்தப் பிரச்சினையுமில்லை என்பதாக இந்த இரண்டு கேடிகளும் முன்னுதாரணமாகி விட்டனர்.
அப்சல் குரு தூக்கு : கண்டன ஆர்ப்பாட்டம் !
அப்சல் குருவின் தூக்கு - சாட்சியமே இல்லாத போதும் இந்திய தேசியவெறி 'மனசாட்சிக்கு' உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் உயிர் பலி
மராத்தா சாதி வெறியர்களால் 3 தலித் இளைஞர்கள் படுகொலை !
ஒரு துப்புரவுப் பணியாளர் தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததை பொறுக்க முடியாமல் இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கின்றனர் சாதி வெறியர்கள்.
அப்சல் குரு தூக்கு : இந்திய அரசின் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் !
அப்பாவி அப்சல் குருவை படுகொலை செய்த இந்திய அரசின் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் இந்த அநீதியை கண்டிக்க வேண்டுமென கோருகிறோம்.
தற்கொலையை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கி !
செயற்கைக் கோளை விழுந்து விடாமல் பூமியின் ஈர்ப்புக்கு வெளியில் செலுத்தத் தெரிந்த ஏழுமலையானுக்கு 100 அடி உயரத்திலிருந்து விழுந்து உடல் சிதறி தம் உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்த பக்தர்களை கீழே விழாமல் காப்பாற்ற வக்கில்லை.
மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக – திருச்சியில் ஆர்ப்பாட்டம் !
பயங்கரவாதத்திலேயே மிகக்கொடூரமானது முதலாளித்துவ பயங்கரமே என்பதோடு இது உலகம் முழுவதும் உழைப்பாளி மக்களின் உயிரையும், உடமைகளையும் சூறையாடி வருகிறது.
ரோகிணி : ஒரு கனவு கருகிய கதை !
அரசின் கல்விக் கொள்கை, வறட்டுத்தனமான சமூகச் சூழல், ஊழல் படிந்த போலீஸ், நீதித்துறை இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சிறுமியின் வாழ்க்கையை கருக்கி விட்டிருக்கின்றன.
முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக 15 மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் !
மாருதி சுசுகி நிர்வாகம், தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை கண்டித்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
போஸ்கோ நிலப்பறிப்பு – மக்கள் எதிர்ப்பு !
நம் நாட்டு இரும்புத் தாது வளங்களை கைப்பற்றி, கிராமங்களை அழித்து, போஸ்கோ லாபம் சம்பாதிப்பதற்காக தனது சொந்தக் குழுவின் முடிவுகளையும், மக்கள் எதிர்ப்பையும் புறக்கணித்து நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றது அரசு.
மாருதி தொழிலாளர்களுக்காக நாடு தழுவிய போராட்டம்!
உரிமை கேட்டுப் போராடியதற்காக 150 மாருதி தொழிலாளர்கள் பொய் வழக்கில் 6 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தூலே இந்துமதவெறி : தலித் பேராசிரியருக்கு அடி , 6 முசுலீம்கள் கொலை !
மகராஷ்டிராவின் தூலே நகரில் போலீஸ் பலத்துடன் நடத்தப்பட்ட இந்து மத வெறியர்களின் கலவரங்கள்
பாமக ராமதாசுக்கு எதிர்ப்பு : தென் மாவட்டங்களில் செருப்படி!
ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் அரசியலில் பிழைப்பதற்காக ஆதிக்க சாதி வெறியை தூண்டி விட முயற்சிக்கும் ராமதாசுக்கு செல்லுமிடமெல்லாம் செருப்படி வழங்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
டீசல் விலைஉயர்வு : நாடெங்கும் மீனவர்கள் வேலை நிறுத்தம் !
விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் அழிப்பு, விவசாயிகள் தற்கொலை, மீனவர்களின் தொழில் நிறுத்தம், மின்வெட்டால் சிறுதொழில்கள் அழிப்பு என்று நாட்டை சுடுகாடாக்கி மலிவு விலையில் விற்று விடுவதுதான் புதிய பொருளாதார கொள்கை.
ஆமா துட்டு வாங்க்கிணுதான் நியூஸ் போட்றோம் , இன்னான்ற ?
காசு கொடுப்பவர்களுக்கு சாதகமான செய்தி வெளியிடும் பத்திரிகைகளுக்கு பிரஸ் கவுன்சிலின் கண்டனம் மட்டுமே தண்டனை.
பிரேசில் கேளிக்கை விடுதி தீ விபத்து !
பிரேசிலில் உள்ள சான்டா மரியா எனும் ஊரில் உள்ள ‘கிஸ்’ இரவு விடுதியில் ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27, 2012) அதிகாலை நடந்த தீ விபத்தில் 230க்கும் அதிகமான பேர் மரணமடைந்தார்கள்; 169 பேர் காயமடைந்தார்கள்