தில்லைக் கோயில் மீட்போம் – கோவையில் அரங்கக் கூட்டம்

0

“தில்லைக் கோயில் மக்கள் சொத்தா, மணி ஆட்ட வந்த தீட்சிதன் சொத்தா?” என்கிற தலைப்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கடந்த 09.01.2014 தேதியன்று மக்கள் கலை இலக்கிய கழகம் (மகஇக), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ( புஜதொமு) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவல்துறை 147,447,294(B),324,506(ii) IPC ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 50 தோழர்களை சிறையில் அடைத்தனர். 12 நாட்களுக்கு பிறகு 50 தோழர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

50 தோழர்கள் போராடி சிறைக்கு சென்றபோதும், அதற்குப் பின்னரும் தொடர்ந்து புஜதொமு, மகஇக , மற்றும் ஆதரவாளர்கள் , மாணவர்களை அணிதிரட்டி கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.

கடந்த 23.02.2014 தேதியன்று

  • பார்ப்பன பயங்கரவாதத்தை வேர அறுப்போம்  !
  • உச்சிக் குடுமி மன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்போம்!
  • தாய்மொழிக்கு ஏற்பட்ட இழிவை துடைப்போம்!

என்கிற தலைப்பில் அரங்கு கூட்டம் நடைபெற்றது.

தோழர். விளவை ராமசாமி அவர்களின் தலமையில் நடைபெற்ற கூட்டதில் தோழர். துரைசண்முகம் (ம.க.இ.க தமிழ் நாடு) தோழர் சிறப்புரை ஆற்றினார். புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை பகுதி

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க