மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.
முசுலீமை அடிச்சிக் கொன்னா மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா மாலை போடுவாரு !
பசுக்காவலர்கள் என்ற பெயரில் முசுலீம்களுக்கு எதிராக கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்தும் சங்க பரிவாரக் கும்பலுக்கு, பாஜகவின் ஆதரவு என்றும் உண்டு என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் ஒரு மத்திய அமைச்சர்.
பூவிருந்தவல்லி தூசான் ஆலை தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய சதி ! || பு.ஜ.தொ.மு
அநீதியை தட்டிக்கேட்டு விடக்கூடாது என்பதற்காக தனது பேச்சைக் கேட்கும் டம்மி சங்கத்தை வைத்து தொழிலாளர்களை ஒருவருடன் ஒருவரை மோதவிடுவது, பிளவுபடுத்துவது, மிரட்டுவது, பொய்க் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்வது என பேயாட்டம் போட்டது, நிர்வாகம்.
பல்லவி ஜோஷி விலகல், வியாபம் ஊழல் படுகொலைகள்
தமிழ் சினிமாக்களில் வீரம் பேசும் நடிகர்களோ, இல்லை முற்போக்கு பேசும் இயக்குநர்களோ, அவர்களின் சங்கங்களோ யாரும் கல்வி, கலைகளை காவி மயமாக்கும் பா.ஜ.கவிற்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
தெருவில் சூத்திர அர்ச்சகர்கள் : தமிழக அரசின் ” பிராமணாள் ஒன்லி ” பாடசாலை !
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வழி செய்யும் அரசாணையை கொல்லைப்புறத்தின் வழியாக பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராகும் வகையில் புதிய அரசாணை பிறப்பித்திருக்கிறார் ஜெயா. அதனை நடைமுறைப்படுத்துகிறது எடப்பாடி அரசு
உ.பி: அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்
கோட்வாலி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 13 வயது சிறுமியை, அதே பள்ளியில் உதவியாளராகப் பணியாற்றும் பங்கஜ் மற்றும் அமித் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அனிதாவுக்கு நீதி கிடைக்க நீட் தேர்வை ரத்து செய் ! – தொடரும் மாணவர் போராட்டங்கள் !
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும், கோவூர் செயிண்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களும் விருதை கொளஞ்சியப்பர் கல்லூரி மாணவர்களும், விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் !
ஆன்லைன் கல்வி : 71% சாலையோரம் வசிக்கும் மாணவர்கள் பாதிப்பு
கொரோனா காலத்து ஆன்லைன் கல்வி நடைமுறையைத்தான் இந்தியா முழுவதும் அமல்படுத்தத் துடிக்கிறது புதிய (தேசிய) கல்விக் கொள்கை. கொரோனா காலக் கல்வி நிலைமையிலிருந்தே இக்கொள்கையின் யோக்கியதையை புரிந்துகொள்ளலாம்.
காஷ்மீர் மக்களை கொன்ற இராணுவ அதிகாரி ! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம் !
இராணுவம் அப்பாவி மக்களை கொலை செய்யலாம் அதை கேள்விக்குட்படுத்தவோ விசாரிப்பதோ அநீதி என்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்.
திருப்பூர் : டாலர் நகரத்தை குப்பை நகரமாக்கும் அரசு !
அரசு மருத்துவமனைகளில் வரும் நோயளிகளின் எண்ணிக்கையையும், இறப்பு விகிதத்தையும் குறைத்துக் கூறி டெங்குவை ஒழித்து விட்டோம் என கூசாமல் பொய் பேசுகிறது எடப்பாடி - ஓபிஎஸ் கும்பல்.
மே 15, மதுரையில் மாநாடு – தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம்!
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அதானி - அம்பானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் வருகிற மே 15-ஆம் தேதியன்று மதுரை மாவட்டம் பழங்காநத்தம்...
நவம்பர் புரட்சி! – சென்னை கூட்டம் – Live
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து பெருந்திரளானோர் வந்துள்ளனர். இந்தக் கூட்டத்தின் நேரலை ஒளிபரப்பை இந்தப் பதிவில் உங்களுக்காக இங்கே கொடுக்கிறோம்.
அம்பேத்கர் நினைவு நாள் : பார்ப்பன பாசிஸ்டுகளை விரட்ட உறுதி ஏற்போம் !
மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக சேத்துப்பட்டு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கும், தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி 06.12.2017 அன்று நடைபெற்றது.
போராடும் தமிழகமே பிரேசில் மக்களைப் பார் ! படக் கட்டுரை
தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களை பிரேசில் அரசு கொண்டு வருவதை எதிர்த்து அங்கே பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
காஷ்மீர் 100-ம் நாள் இணையம் தடை | பத்திரிகையாளர் போராட்டம் !
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதிலிருந்து இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. இணைய தொடர்புக்கான தடை தொடர்ந்து 100 நாட்களாக நீடிக்கிறது.

























