தர்மபுரி : அறிவாளிகளின் போங்காட்டம்!
தரும்புரி தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அடிக்கடி பலவிதமான கூட்டங்கள் பலவிதமான இயக்க சேர்க்கைகளுடன் நடக்கின்றன. உண்மையில் இந்தக் கூட்டங்களில் குறிப்பாக வன்னிய சாதிவெறி, பா.ம.க, ராமதாசை மறந்தும் கூட குறிப்பிடுவதில்லை.
2ஜி ஏலம் : காங்கிரசு – கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவாணித்தனம் !
தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையைவிட, அதிகாரத் தாழ்வாரங்களில் நடந்துவரும் ஊழலும் அதிகாரமுறைகேடுகளும்தான் நாட்டைப் பிடித்திருக்கும் அபாயம் என்பதாக நடுத்தர வர்க்கம் நம்பிக் கொண்டிருக்கிறது.
பிளேடு பக்கிரி முதலாளிகளுக்கு இந்திய அரசு சலுகை!
வசூலிக்க முடியாது என்று அரசு கைகழுவி விட்ட வரி நிலுவைத் தொகை என்பது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் ஏற்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படும் வருவாய் இழப்பைக் காட்டிலும் அதிகமானது.
சட்டிஸ்கர் பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு !
வறிய நிலையில் வாழும் பழங்குடியினரின் உயிர்களைப் புழு-பூச்சிகளைவிட அற்பமாகக் கருதும் திமிர்த்தனமும், இவர்களைக் கொன்றால் யார் கேள்வி கேட்கமுடியும் என்ற ஆணவமும் அரசு பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளன.
மரணப் படுக்கையில் ஒரு அருவி!
கண்டதாரா மலைத்தொடர் ஆதிவாசிகள் போராடுவது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல, மனித இனத்தின் மாட்சிமை பொருந்திய மரபுச் செல்வங்கள் அனைத்தின் பாதுகாவலர்களாகவும் களத்தில் இறங்கத் தயாராகி வருகிறார்கள்.
இனி காவிரி படுகை அம்பானி கையில்!
காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுத்து அடாவடி செய்யும் கர்நாடகாவையும் அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டிக்கும் தமிழின ஆர்வலர்கள் காவிரி படுகையை கொள்ளையடிக்கும் ரிலையன்சை குறி வைத்தும் எதிர்ப்பார்களா?
பாட்ஷா பாபாவான கதை!
கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் டாங்கு டக்கரடொய் என்ற பாடிக் கொண்டிருந்தவரை வீடு தேடிச் சென்று இழுத்து வந்தனர் சோவும், மூப்பனாரும், அ.தி.மு.க விலிருந்து உதிர்ந்த ரோமங்களும்
அரியானா : நாட்டின் அவமானச் சின்னம் !
அரியானாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது ஆதிக்க சாதிவெறிக் கும்பல் ஏவிவிடும் பாலியல் வல்லுறவுத் தாக்குதல்களைப் பத்தோடு பதினொன்றாக நீர்த்துப் போகச் செய்ய காங். அரசு முயலுகிறது.
பாராளுமன்றம்: எதிர்க்கிற கைதான் ஆதரிக்கும்!
பாரதிய ஜனதா, காங்கிரசு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளுமே கொள்கையளவில் பொருளாதார சீர்திருத்தங்களையும் காட் ஒப்பந்தத்தையும் அதன் ஷரத்துகளையும் முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ள கட்சிகள் தாம்
உச்ச நீதிமன்றம்: கார்ப்பரேட் கொள்ளையர்களின் காவல்காரன்!
தனியார்மயம் - தாராளமயம் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற அரசின், ஆளும் வர்க்கத்தின் மறுகாலனியாதிக்கக் கொள்கையை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, அதற்குத் தக்கபடிதான் சட்டத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விளக்கங்களை வழங்கி வருகிறது.
முதலாளியை அடித்தால் இந்திய அரசுக்கு வலிக்கும்!
'மாலத்தீவு இப்படி நடந்து கொண்டால் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும், எதிர்காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் மாலத்தீவுக்கு வர மாட்டார்கள்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் மிரட்டியிருக்கிறார்.
மக்களின் சேமிப்புக்கு வந்தது ஆபத்து!
ஈமு கோழிப்பண்ணை மோசடிகள் போன்று 1950-களில் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களின் மோசடிகள் புழுத்துப் பெருகியதால்தான் காப்பீடு துறையை அரசே தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
ஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்!
ஊழலின் தோற்றுவாய், அடிப்படையைப் பற்றி பேசாமல் அதைத் தடுப்பதற்கான, தகர்ப்பதற்கான வழிமுறைகளைத் தேடாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் எதிர்ப்பு-ஒழிப்பு முயற்சிகளை மேற்கொள்வதாக நிழல் யுத்தம் நடத்துகிறார்கள்.
“இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது……!”
இலக்கு இமயம் என்றால், பயணம் வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும். போச் சேர நாளாகும் என்பதால், பரங்கிமலையை இமயமாகச் சித்தரிப்பதும், பரங்கிமலை செல்வதே காரியசாத்தியமானது என்று பேசுவதும் பித்தலாட்டம்.
குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?
அடுத்த குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடியே வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த கலவரத்தின் நாயகன் மீண்டும் வெற்றி பெறக் காரணம் என்ன?