மக்களுக்கு கட்டண உயர்வு! முதலாளிகளுக்கு வரி விலக்கு!!
மக்களுக்கு புத்தாண்டு பரிசாக ரயில் கட்டண உயர்வை அளித்த மத்திய அரசு அன்னிய முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிகளை ஏய்ப்பதற்கான அனுமதியை வழங்கியிருக்கிறது.
ரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் !
பட்டினியோடு மக்களும், சத்தான உணவில்லாத கர்ப்பிணிகளும், நோஞ்சான் குழந்தைகளும் நிறைந்திருக்கும் நாட்டில், உணவுப் பாதுகாப்பை வழங்காமல், பணத்தை வீசியெறிந்து சந்தைச் சூதாட்டத்தில் சிக்க வைப்பது எத்துணை பயங்கரமானது?
ரஜினி – கமலுக்கு ரேசன் அரிசி வழங்கு !
அரிதாரம் பூசிய நட்சத்திரங்கள் தங்களது தேவைக்காக ஏதோ கால் டாக்சி புக் செய்வது போல ப.சிதம்பரத்திடம் பேசி தீர்த்து விடுகிறார்கள் என்றால் இங்கே யாருக்கு ஜனநாயகம் இருக்கிறது?
செட்டிநாட்டு சிதம்பரம் வெட்கப்படுகிறார்!
கருத்த பனையின் உரித்த தோலென, அறுத்த முலையுடன் கிடந்த ஈழப்பெண்களைப் பார்த்து துடிக்காத சோனியாவும், இருளர் பெண்களை துகிலுரிந்த போலீசுக்கு ஆசி வழங்கும் ஜெயலலிதாவும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறார்களாம்
விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மின்திட்டங்கள்!
ஒரிசாவிலும் சட்டிஸ்கரிலும் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு கனிமவளங்களைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள், விதர்பாவில் விவசாயிகளின் அவலத்தை மூலதனமாகக் கொண்டு கேள்விமுறையின்றிக் கொள்ளையடித்து வருகின்றனர்.
தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி!
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைச் செல்லாக்காசாக்கிவிட்டு , ஏகபோக முதலாளிகளின் கொள்ளைக்கும் சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் அரசியலமைப்புமுறை வேகமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அம்பானியின் சேவையில் மன்மோகன் அரசு!
தணிக்கை அறிக்கையில், ரிலையன்ஸ் நிறுவனம், முரளி தியோரா, சிபல் ஆகிய மூவரும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்பட்டு வந்திருப்பது தக்க ஆதாரங்களோடு அம்பலமாகியிருக்கிறது.
தர்மபுரி : அறிவாளிகளின் போங்காட்டம்!
தரும்புரி தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அடிக்கடி பலவிதமான கூட்டங்கள் பலவிதமான இயக்க சேர்க்கைகளுடன் நடக்கின்றன. உண்மையில் இந்தக் கூட்டங்களில் குறிப்பாக வன்னிய சாதிவெறி, பா.ம.க, ராமதாசை மறந்தும் கூட குறிப்பிடுவதில்லை.
2ஜி ஏலம் : காங்கிரசு – கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவாணித்தனம் !
தனியார்மயம்-தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையைவிட, அதிகாரத் தாழ்வாரங்களில் நடந்துவரும் ஊழலும் அதிகாரமுறைகேடுகளும்தான் நாட்டைப் பிடித்திருக்கும் அபாயம் என்பதாக நடுத்தர வர்க்கம் நம்பிக் கொண்டிருக்கிறது.
பிளேடு பக்கிரி முதலாளிகளுக்கு இந்திய அரசு சலுகை!
வசூலிக்க முடியாது என்று அரசு கைகழுவி விட்ட வரி நிலுவைத் தொகை என்பது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் ஏற்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படும் வருவாய் இழப்பைக் காட்டிலும் அதிகமானது.
சட்டிஸ்கர் பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு !
வறிய நிலையில் வாழும் பழங்குடியினரின் உயிர்களைப் புழு-பூச்சிகளைவிட அற்பமாகக் கருதும் திமிர்த்தனமும், இவர்களைக் கொன்றால் யார் கேள்வி கேட்கமுடியும் என்ற ஆணவமும் அரசு பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ளன.
மரணப் படுக்கையில் ஒரு அருவி!
கண்டதாரா மலைத்தொடர் ஆதிவாசிகள் போராடுவது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமல்ல, மனித இனத்தின் மாட்சிமை பொருந்திய மரபுச் செல்வங்கள் அனைத்தின் பாதுகாவலர்களாகவும் களத்தில் இறங்கத் தயாராகி வருகிறார்கள்.
இனி காவிரி படுகை அம்பானி கையில்!
காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுத்து அடாவடி செய்யும் கர்நாடகாவையும் அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டிக்கும் தமிழின ஆர்வலர்கள் காவிரி படுகையை கொள்ளையடிக்கும் ரிலையன்சை குறி வைத்தும் எதிர்ப்பார்களா?
பாட்ஷா பாபாவான கதை!
கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் டாங்கு டக்கரடொய் என்ற பாடிக் கொண்டிருந்தவரை வீடு தேடிச் சென்று இழுத்து வந்தனர் சோவும், மூப்பனாரும், அ.தி.மு.க விலிருந்து உதிர்ந்த ரோமங்களும்
அரியானா : நாட்டின் அவமானச் சின்னம் !
அரியானாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது ஆதிக்க சாதிவெறிக் கும்பல் ஏவிவிடும் பாலியல் வல்லுறவுத் தாக்குதல்களைப் பத்தோடு பதினொன்றாக நீர்த்துப் போகச் செய்ய காங். அரசு முயலுகிறது.



















