Saturday, April 17, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் இனி காவிரி படுகை அம்பானி கையில்!

இனி காவிரி படுகை அம்பானி கையில்!

-

லைக்காவிரி கர்நாடாக கையில் சிக்கிவிட்டதைப் போல காவிரியின் படுகை அம்பானி கையில் போய்விட்டது. காவிரி-பாலாறு படுகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய்-எரிவாயு இருப்பை மதிப்பிடும் பணியை பெட்ரோலிய அமைச்சகம் ரிலையன்சிடம் கொடுத்திருக்கிறது.

இது தொடர்பான ஒப்புதல் கடிதத்தை பெட்ரோலிய அமைச்சகம் சென்ற வெள்ளிக் கிழமை (டிசம்பர் 7, 2012) ரிலையன்ஸூக்கு அனுப்பியிருக்கிறது. இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் காவிரி பாலாறு படுகையில் எண்ணெய் கண்டுபிடிப்பை மதிப்பிட்டு, உற்பத்திக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை சமர்ப்பிக்கும்.

8,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான இந்த எண்ணெய் வளப் பகுதி 2003ம் ஆண்டு அப்போதைய பாஜக அரசினால் ரிலையன்சுக்கு குத்தகை விடப்பட்டது. ரிலையன்சின் கூட்டு நிறுவனம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் இந்த முயற்சியில் 30 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

காவிரி-பாலாறு படுகையில் 100 பில்லியன் பேரல்கள் இலகு ரக கச்ச எண்ணெயும் 3 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று ரிலையன்ஸ் இந்தக்  கண்டுபிடிப்பை அறிவித்தது.

ஏற்கனவே தன் பொறுப்பில் விடப்பட்ட கிருஷ்ணா கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயு உற்பத்தியை முடக்கி, ஒரு நாளைக்கு திட்டமிட்ட உற்பத்தியான 8 கோடி கனமீட்டருக்குப் பதிலாக இப்போது 2.3 கோடி கனமீட்டர் மட்டும் உற்பத்தி செய்கிறது ரிலையன்ஸ். இதன் மூலம் 12,000 மெகாவாட் மின் உற்பத்தி இழப்பும், இரசாயன உர உற்பத்தி தடையும் ஏற்பட்டுள்ளன. 2010ல் 6.2 கோடி கனமீட்டர் வாயு உற்பத்தி செய்யப்பட்டது.

கிருஷ்ணா கோதாவரி படுகையில் எரிவாயு உற்பத்திக்கான மூலதனச் செலவை இரண்டு மடங்காக்கி, எரிவாயுவின் விற்பனை விலையை யூனிட்டுக்கு ரூ 124லிருந்து ரூ 226க்கு உயர்த்திக் கொண்டது ரிலையன்ஸ். இதன் மூலம் ரிலையன்ஸூக்கு ரூ 30,000 கோடி லாபமும், தேசிய அனல் மின் கழகத்துக்கு ரூ 24,000 கோடி நஷ்டமும் ஏற்பட்டன.

இப்போது விலையை ரூ 756ஆக உயர்த்த வேண்டும் என்று அடாவடி செய்து வருகிறது. இல்லா விடில் 2013ல் உற்பத்தி 1.8 கோடி கனமீட்டராக குறைந்து விடும் என்று மிரட்டியிருக்கிறது.

2011-12ல் எரிவாயு உற்பத்தி குறைவுக்காக ரிலையன்ஸை கண்டித்து $1 பில்லியன் (சுமார் ரூ 5,500 கோடி) அபராதம் விதித்த அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டியை மாற்றி விட்டு  வீரப்ப மொய்லியை அமைச்சராக்கினார் மன்மோகன் சிங். 2012-13 நிதியாண்டில் $1.72  பில்லியனும், 2013-14ல் $2.1 பில்லியனும் அபராதம் விதிக்க வேண்டும் என்று ஜெய்பால் ரெட்டி பரிந்துரைத்திருந்தார்.

இப்போது ரிலையன்ஸ்-பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூட்டாளிகள் கொள்ளையடிப்பதற்கு மேலும் வாய்ப்புகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது வீரப்ப மொய்லி தலைமையிலான பெட்ரோலிய அமைச்சகம். ரிலையன்ஸ் ஆண்டைகளுக்கு சேவை செய்வதற்காக தனக்கு அளிக்கப்பட்ட பணியை பெட்ரோலிய அமைச்சகம் செவ்வனே நிறைவேற்றுகிறது.

காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுத்து அடாவடி செய்யும் கர்நாடகாவையும் அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டிக்கும் தமிழின ஆர்வலர்கள் காவிரி படுகையை கொள்ளையடிக்கும் ரிலையன்சை குறி வைத்தும் எதிர்ப்பார்களா?

படிக்க:

 1. தமிழகப் பெட்ரோலிய வளங்களை அம்பானி குடும்பம் கைப்பற்றியது

  8600 ச.கி.மீ பரப்புள்ள காவிரி-பாலாற்றுப் படுகையை முகேஷ் அம்பானியின் ரிலையன்சு இந்தியா கம்பெனிக்கு தாரை வார்த்துள்ளது இந்திய அரசு. இப்பகுதியில் அதிக அளவில் இயற்கை எரிவளியும் கச்சா எண்ணெயும் இருப்பதைக் கண்டறிந்துள்ள ரிலையன்சு இங்குள்ள பெட்ரோல் வளத்தை எடுக்கும் உரிமையை 100 விழுக்காடு தன்னிடமே வைத்துள்ளது.

  பெட்ரோலிய வளங்கொழிக்கும் தமிழ் மண்ணான இப்பகுதிக்கு துருபாய்-53 என தன் தந்தையின் பெயரைச் சூட்டி மகிழ்கிறார் மார்வாடி முகேஷ் அம்பானி. இதற்கான ஆய்வுகள் பலமுறை செய்ததில் இப்பகுதியில் இயற்கை எரிவளியும், கச்சா எண்ணெய்யும் பெருமளவில் இருப்பது உறுதியானது.

  மாடுலர் டைனமிக் டெஸ்டிங் எனும் ஆய்வு செய்தபோது 37 மில்லியன் ஸ்டாண்டர்ட் கன அடி எரிவளியும் (அதாவது 3 கோடியே 70 இலட்சம் ஸ்டாண்டர்ட் கனஅடி எரிவளி) 1100 பாரல்(1 இலட்சத்து 74 ஆயிரத்து தொள்ளாயிரம் லிட்டர்) கச்சா எண்ணெய்யும் 56/64 அங்குலம் அளவுள்ள குழாய் மூலம் ஒரு நாளைக்கு கிடைத்தது என்றால் இப்பகுதி பெட்ரோலிய வளத்தை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

  தமிழினம் காவிரி, பாலாற்று நீரை மட்டும் இழக்கவில்லை, இவ்வாற்றுப்படுகைகளின் பெட்ரோலிய வளத்தையும் இழந்து நிற்கிறது. தமிழகத்துக்குத் தேவையான பெட்ரோலியப் பொருட்கள் தமிழ் மண்ணில் கிடைத்தும் தில்லியை விட அதிக விலை கொடுத்து வாங்கும் நிலையில் தமிழர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

  தில்லிக்காரன் படைகொண்டு தமிழன் வளங்களைக் கைப்பற்றவில்லை. நம் கையில் வாக்குச்சீட்டைக் கொடுத்து அமைதியான முறையிலேயே நம் வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்கிறான். தில்லி அரசும், வடநாட்டுப் பெருமுதலாளிகளும் இணைந்து இக்கொள்ளையில் ஈடுபடுகின்றனர்

  http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14842:2011-05-27-14-40-49&catid=1325:162011&Itemid=148

  நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்

 2. //தில்லிக்காரன் படைகொண்டு தமிழன் வளங்களைக் கைப்பற்றவில்லை. நம் கையில் வாக்குச்சீட்டைக் கொடுத்து அமைதியான முறையிலேயே நம் வளங்களைக் கொள்ளை அடித்துச் செல்கிறான்.//

  தமிழன் நம் வாக்குச் சீட்டைக் கொடுத்து கொள்ளை அடிப்பது? கிரானைட், ஆற்று மணல், ஆற்றுத் தண்ணீர் கொள்ளை அடிக்கும் தமிழர்களை என்ன செய்வது?

  //தில்லி அரசும், வடநாட்டுப் பெருமுதலாளிகளும் இணைந்து இக்கொள்ளையில் ஈடுபடுகின்றனர்//
  சென்னை அரசும், தமிழ்நாட்டுப் பெருமுதலாளிகளும் இணைந்து இக்கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்றால் ஏத்துக்குவீங்களா?

 3. தங்களுக்குத் தரவேண்டியதை தந்துவிட்டால் ஏன் எதிர்க்கப்போகிறார்கள்

 4. தமிழ்னாட்டில் ஏது பெரு முதலாளிகள்? எல்லாம் வடனாட்டு டாடா , அம்பானி முதலிய RSS சார்ந்த முதலாளிகளின் ஏஜன்டுகள் தானெ!

 5. இந்திய பொருளாதாரமே இந்து முச்லிம் என கூறுபட்டு நிற்கின்றன!நடுநிலையாளர்கள் சிறு வணிகராகவே இருக்கின்றனர்!

 6. //காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுத்து அடாவடி செய்யும் கர்நாடகாவையும் அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டிக்கும் தமிழின ஆர்வலர்கள் காவிரி படுகையை கொள்ளையடிக்கும் ரிலையன்சை குறி வைத்தும் எதிர்ப்பார்களா?

  //

 7. இந்த பஜனையெல்லாம் நம்ம தமிழ்நாட்டு அசடுகளிடம்தான் செல்லுபடியாகும்….இந்த மார்வாடிகளையும்,அரசியல்வாதிகளையும் கேரளா,கன்னடாவிடம் அனுகச்சொல்லுங்கள் பார்ப்போம்!!!!தமிழ்நாடு இவ்வளவு கேவலமாகப்போவதற்க்கு மொழிப்பற்றும்,தேசப்பற்றும் இல்லாத க்ராஸ்பெல்ட்டுகளே காரணம்!!

 8. @Thayinmanikodi,

  1.Every government in TN state,local,municipal and the whole sentiment is grossly,overwhelmingly dominated by people who are heavily against brahmins,you want the whole race of brahmins annihilated and you have blood rage and feud against them,you have the government with you since 1967 and 2013 will mark the 46th year in power.

  After all these many years of corruption,poor governance,big crisis,water bodies and natural resources grossly ravaged,river sand plundered,rivers dried up but even after all this,you think those very brahmins whom you claim to be immigrants are responsible for this.

  I think you are a loser,self pitying scumbag,this is what you are good for,complaining and whining.

  You are bound to embrace this mediocrity forever.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க