பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை அல்ல, கொலையே! – பு.மா.இ.மு
பு.மா.இ.மு இந்த மரணத்தை தனியார் கல்லூரிகளின் லாபவெறிக்கு தீனிபோடும் படுகொலையாகவே கருதுகிறது. அடிப்படை உரிமையான கல்வி பெறுவதற்காக கல்விக்கடன் வாங்கும்படி அரசால் தள்ளப்பட்ட மாணவர்கள் கல்விக்கடனைத் திருப்பி செலுத்த வேண்டாம் என அறைகூவல் விடுக்கிறது.
மாணவர் லெனின் தற்கொலை – ரிலையன்சின் நரபலி ஆரம்பம் !
தமிழக மாணவர்கள் ரிலையன்ஸின் உடை, காய்கறி, மளிகை, செல்பேசி, தொலைக்காட்சி என அனைத்து நிறுவனங்களையும் முற்றுகையிட வேண்டும். லெனினின் மரணத்திற்கு நியாம் கேட்க வேண்டும்.
அபாயம் : அரசு பள்ளிகளில் RSS ஆசிரியர்கள் !
அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வகுப்பெடுக்க மத்திய பிரதேச பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. இதன் மூலம் அம்மாநில ஆரம்ப பள்ளிகள் இனி அதிகாரபூர்வ ஷாகாக்களாக மாற்றப்படும்.
கோவை, விருதை, திண்டிவனம் களச் செய்திகள் – 15/07/2016
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக கோவை தொழிலாளர்கள், திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு பு.மா.இ.மு வரவேற்பு, அ.தி.மு.க அலுவலகமாக மாறிய விருதை அரசு கலைக் கல்லூரி - செய்திகள், படங்கள்.
மதன் ‘காணாமல்’ போனார் ! பச்சமுத்துவுக்கு அரசு பாதுகாப்பு !!
இந்திய ஜனநாயகக் கட்சி பிகாரில் போட்டியிடுவதற்கும், தமிழகத்தில் பா.ஜ.க. மாநாட்டை பாரி வேந்தர் நடத்திக் கொடுத்ததற்கும் எங்கிருந்து பணம் வந்தது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.
கல்வியுரிமை மாநாடு – சம்ஸ்கிருத எதிர்ப்பு – பச்சையப்பன் போராட்டம்
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு உரைகள், மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.
கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?
என்னை டார்ச்சர் செய்கிறார்கள். கெட்ட வார்த்தைகளால் ஏசுகிறார்கள். கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், என்னையும் எனது குடும்பத்தினரையும் கைது செய்து டார்ச்சர் செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்.
போக்கத்த போலீசு வேலைக்கு போட்டி போடும் பொறியியலாளர்கள்
போக்கிடமற்ற இளைஞர்கள் இறுதியில் தாம் படித்துப் பெற்ற உயர் கல்விப் பட்டங்களை பரணில் போட்டு விட்டு இது போன்ற வேலைகளுக்குப் போட்டியிடுகின்றனர்.
அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ? – புதிய கலாச்சாரம் ஜுலை 2016
படிப்பதற்கு நடுத்தர வர்க்கம் தனது ஆயுள் சேமிப்பை கொட்டி கனவு கண்டாலும் படித்து முடித்தவருக்கு வேலை இல்லை. இறுதியில் படிப்பதற்கே ஆளில்லை. கடைசியில் ஆள்பிடிப்பதற்கு அரசே பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன் கொடுத்தது.
அரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் மக்கள் மாநாடு – செய்தி படங்கள்
அரசுப் பள்ளியே நமது பள்ளி ! கல்வி ஒரு சேவையே! வணிகமல்ல!! கல்வி வியாபாரத்தை புறக்கணிப்போம்!
மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை விரட்டுவோம் – செய்தி – படங்கள்
சமஸ்கிருதம்தான் தேவ பாஷை, அதனை பார்ப்பனர்கள் மட்டும்தான் கற்க வேண்டும். மற்றவர்கள் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் பேசினால் நாக்கை வெட்டி தண்டனை என்றும் கொடுத்தான். இன்று அதனை படிக்கக் கொடுப்பதும் பாசிஸ்டுகளின் தந்திரமே.
தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு
இளைஞர்களும், மாணவர்களும், உழைக்கும் மக்களும் பெரியாரின் கொள்கைகளை நெஞ்சிலேந்தி வீதியில் இறங்கி போராடி, மதவாத கும்பல்களை விரட்டி அடிக்க வேண்டிய நேரம்.
மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை முறியடிப்போம் !
சமஸ்கிருத திணிப்பின் மூலம் பலதேசிய இனங்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களை அழித்து, இந்தி - இந்து - இந்தியா என்ற இந்துத்துவா கொள்கையை நிறுவத் துடிக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.
அரசுப் பள்ளிகளில் மாணவரை சேர்ப்போம் – மினி மாரத்தான் ஓட்டம்
"மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பெற்றோர்கள் பள்ளிகளை கண்காணித்தால் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்கும்"
விருதை கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு – வாருங்கள் !
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு 2016 மினி மாரத்தான் ஜூன் 19, காலை 6 மணி சித்தூர் புறவழிச்சாலை பேரணி, மாநாடு, தப்பாட்டம், புரட்சிகர கலைநிகழ்ச்சி ஜூன் 25, சனி மாலை 5 மணி வானொலித் திடல், விருத்தாசலம்