நீட்டை ரத்து செய் – தமிழகம் முழுவதும் தொடரும் மாணவர் போராட்டங்கள் !
மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மோடி மற்றும் எடப்பாடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடத்துவங்கியுள்ளனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. தமிழகம் மீண்டும் ஒரு டெல்லிக்கட்டை நடத்திவருகிறது!
கும்பகோணம் – திருச்சியில் – தொடரும் மாணவர் போராட்டம் !
மாணவி அனிதாவின் படுகொலையைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மானவர்கள் இன்று (05.09.2017) மீண்டும் தங்களது போராட்டங்களைத் துவக்கியுள்ளனர்.
அனிதா படுகொலை – நெல்லை, கும்பகோணம் மாணவர்கள் போராட்டம் !
அனிதாவுக்கு நீதி கேட்டு கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி, திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் - படங்கள்!
நீட்டை எதிர்த்து மாணவர் எழுச்சி : திருச்சி அரசு கலை கல்லூரி – பாலிடெக்னிக் கல்லூரி
திருச்சி அரசு பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்துசெய்ய கோரியும், அனிதாவின் படுகொலையை கண்டித்தும் 04/08/2017 இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அனிதா துவங்கிய போரை முடிப்போம் ! திருச்சி ஈ.வே.ரா கல்லூரி மாணவர் போராட்டம் !
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் ,அனிதா படுகொலையை கண்டித்தும் திருச்சியில் உள்ள ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
அனிதா படுகொலை : விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரி மாணவர் போராட்டம்
நீட்டை ரத்து செய்யக் கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் விழுப்புரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு.
மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் அதிகாரம் – படங்கள்
மாணவி அனிதா படுகொலைக்கு நீதி வேண்டும், பாஜக-அதிமுக கொலைகார அரசுகள் நீடிக்க அனுமதிக்ககூடாது என முழக்கங்கள் வைத்து மக்கள் அதிகாரம் மாணவி அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது.
கேரளா : கடவுளின் தேசத்தில் அம்பேல் ஆகும் மருத்துவப் படிப்பு !
இலாபம் நிறையக் கிடைத்தால் தான் தனியார்கள் ஆர்வத்தோடு கல்லூரி தொடங்க முன் வருவார்கள்; எனவே தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தில் அரசு தலையிடக் கூடாது என நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
இனி நிமோனியா வந்தால் நமது குழந்தைகள் சாக வேண்டியதுதான் !
உலக அளவில் நிமோனியா காய்ச்சலுக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 10,00,000 குழந்தைகள் பலியாகின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 2,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகின்றன.
கோராக்பூர் குழந்தைகள் படுகொலை – மரணத்தின் நிறம் காவி
நடந்த படுகொலைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாக இருந்தாலும் சரி மூளை அழற்சி நோய் காரணமாக இருந்தாலும் சரி – பொறுப்பேற்க வேண்டியது மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கங்கள் தான்.
கேரளா – செவிலியர்களின் போராட்டம் வெற்றி !
செவிலியர்களின் இடைவிடாத, உறுதியான போராட்டத்தின் மூலம், தற்போது கேரளாவில் இருக்கும் 1282 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 80,000 செவிலியர்கள் பயனடைவர்.
நீட் தேர்வு : போராட்டம் வீறு கொண்டு எழ வேண்டாமா ?
தமிழகம் முழுவதும் மாணவர்கள் தங்கள் மருத்துவக் கனவு கலைந்து விட்டதை எண்ணி அனுதினமும் பேசுகிறார்கள். பெற்றோர்களுடன் இணைந்து இந்த அரசை எதிர்த்து முடிந்த அளவு போராடி வருகிறார்கள். தங்களது ரத்தத்தில் கடிதம் எழுதுகிறார்கள்.
வல்லரசு இந்தியாவின் சாதனை : உலகளவில் புதிய தொழு நோயாளிகளில் 60% இந்தியர்கள் !
தொழுநோய், மலேரியா, அம்மை போன்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்த வாய்ப்புள்ள நோய்களையே கூட கட்டுப்படுத்த வக்கற்ற அரசு தான் வல்லரசு கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
எடப்பாடி ஆட்சியில் கொசுக்களின் ராஜ்ஜியம் ! தமிழகத்தில் பரவும் டெங்கு !
தமிழகத்தில் கடந்த ஆண்டு 2,531 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். நடப்பாண்டில் மே 31-ம் தேதி வரை 3,251 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் இரத்த வங்கியை கண்டுபிடித்த கனடிய கம்யூனிஸ்ட் மருத்துவர்
பெதியூனின் குருதி மாற்றுச் சிகிச்சை காரணமாக, ஏராளமான சீனர்கள் உயிர்ப் பிழைத்தனர். 12 நவம்பர் 1939ல், பெதியூன் சீனாவில் காலமானார்.
























