Sunday, May 4, 2025
திசையற்ற வர்க்கத்தின் திசையாக மார்க்சியம்! விழியற்ற வர்க்கத்தின் விழியாக லெனின்! விசையற்ற இதயத்தின் விசையாக ஸ்டாலின்! உலகின் கிழக்கை விடிய வைத்த கம்யூனிசம்!
ஒரு கேலிச்சித்திரத்தை முடிக்கும் முன்பே அடுத்த கேலிக்குரியதை படைத்துவிடுகிறது அரசு. நாட்டில் நீங்கள் நடத்தும் ஆபாசத்தை கோட்டில் வரையும் அளவுக்கு கூசாத இதயம் எங்களுக்கு இல்லை.
இயங்காத வைப்பர்கள் எடுபடாத விளக்குகள் பிடி கொடுக்காத பிரேக்குகள் சரிப்படாத கியர் பாக்சுகள் உருப்படாத டயர்கள் இத்தனையோடும் போராடி மக்களை காத்தவர்கள் அதிகாரவர்க்கத்துடன் போராடி தன்னை இழந்திருக்கிறார்கள்.
எங்கிருந்தோ வரும் தேவர்கள் எனது கதிராமங்கலத்தை துளையிடுவதை எதிர்த்துக் கேட்டால் நான் நரகாசுரன். மூலதன கூர்ம அவதாரங்கள் எனது நெடுவாசலை பாயாய் சுருட்டிக் கொண்டு ஓட வருகையில் வீதிக்கு வந்து விரட்டினால் நான் நரகாசுரன்.
சுதை, கோயில், கோபுரம் ஏன் சாமி சிலையில் கூட நம் சக்தி இருக்கும் போது நாம் தொட்டு பூசை செய்தால் மட்டும் சாமி தீட்டாகிவிடுமாம் இந்த அயோக்கியத்தனத்திற்கு பெயர் ஆகமமாம்.
எத்தனை படைகளைக் குவித்தாலும் மெரினாவின் அலைகள் ஓயாது ! தமுக்கத்தின் ஈரம் காயாது ! வ.உ.சி. திடல் சாயாது ! உரிமையின் மூச்சு அடங்காது!
தேசப்பற்றுக்கு திரையரங்கில் ஜனகனமன, தோசை சட்னிக்கு உணவகத்தில் ஜிஎஸ்டி ! மாடு விற்க ஐந்து ஆவணம், மாட்டிகிட்ட கண்டெய்னருக்கு மூன்றுமாத திரைக்கதையில் மக்கள் காதில் மலர் ஆரணம் !
நெற்கதிர்களை நேர்த்தியாக அறுப்பதில் அப்பா லாவகமானவர் ஏதோ ஒரு சிந்தனையில் கதிர்களை இழுத்து அறுத்தபோது விரல்களையும் சேர்த்து அறுத்துக்கொண்டார் அன்று - அறுவடை நிலத்தில் சிந்திய அந்த குருதித்துளிகள் மண்ணுக்கு உரமாகிப்போனது.
சுதந்திரமாய் வாழ முடியாதது மட்டுமல்ல என்னால் சுதந்திரமாக சாகவும் முடியாது ஆதார் இருந்தால்தான் நான் சட்டப்படி சவம்!
பொது மருத்துவமனையை எட்டிப்பார்ப்பதற்கே ஆதித்யநாத் காவிக்கு இருபது குளிர்சாதனப் பெட்டி! உயிர் பிழைக்க ஒரு ஆக்ஜிஜன் சிலிண்டரின்றி உ.பி. குழந்தைகளுக்கு சவப்பெட்டி.
ஊர் என்று சொல்ல ஒரு காக்கை குருவி இல்லை உறவென்று சொல்ல ஒரு புழு, பூச்சி இல்லை யார் என்று கேட்க குரல் ஒன்றுமில்லை...
அரசரே நேற்று நீங்கள் என்னை வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள் இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்!
விவசாயம் பொய்த்துப் போய் சென்னை நகர ஏடிஎம்-களில் காவலாளிகளாக இருக்கும் விவசாயிகளின் கதை தோழர் துரை சண்முகத்தின் கவிதையாக.....
அவர்களின் குரல் இந்த நகரத்தில் யாருக்கும் கேட்பதில்லை, ஆனால் ஒரு பிரபலமான குசுவின் சப்தம் நம் காதையே செவிடாக்குகிறது.
கையில் பதாகையுடன் நின்றிருந்தஒரு இளம்பெண்ணை ஒரு போலீஸ்காரன் தலைமுடியையைப் பிடித்து கீழே தள்ளுகிறான் பிறகு அவள் நக்சலைட் என்று அழைக்கப்படுகிறாள்

அண்மை பதிவுகள்